தமிழகத்தின் புதிய தலையெழுத்து!

தமிழகத்தில் 2006 ஆண்டின் சட்டப்பேரவைக்கான தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திரு. கருணாநிதி ஐந்தாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.

கூட்டணி ஆட்சியே அமையும் சாத்தியக்கூறு இருந்தாலும், கூட்டணிக்கட்சிகள் ஆட்சியில் பங்கேற்காமல், வெளியிலிருந்து ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளதால், திமுக தனித்தே இம்முறை ஆட்சி அமைத்துள்ளது.

காழ்ப்புணர்ச்சியில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது எவ்விதப் பழிவாங்கல் நடவடிக்கையில்லாமல் இந்த ஆட்சி செயல்படும் என அவர் செய்தியாளர்களிடம் கூறினார். முதல்வராகப் பொறுப்பேற்றபின், நியாயவிலைக்கடைகளில் கிலோ 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். ஜூன் 3ஆம் தேதிமுதல் இந்த ஆணை செயல்படுத்தப்படும் என தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
 

தகவல்: அபூஷைமா