தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தில் ‘மதம்’ எனும் பகுதியில் ‘முஸ்லிம்’ என்று குறிப்பிட்டால் மட்டும், “பிறவி முஸ்லிமா, மதம் மாறிய புது முஸ்லிமா?” எனும் துணைக் கேள்வி தோன்றுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் பணி என்பது, பிற பணியாளர்களைக் கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி,
முஸ்லிம்களை மட்டும் சமயம் சார்ந்து, அதுவும் “பிறப்பால் முஸ்லிமா, மதம் மாற்றத்தால் முஸ்லிமா?” என்ற இத்தனை காலம் இல்லாத புதிய கேள்வியைப் புகுத்தியதன் மூலம் மதம் மாறிய முஸ்லிம்களின் கணக்கெடுப்பைப் பின்வாசல் வழியாக நடத்தும் புதிய உத்தியைப் பணியாளர் தேர்வில் வைத்த சங்கி/கள் யார்/யாவர்? எனும் முஸ்லிம்களின் நியாயமான கேள்விக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் தமிழக சமூகநீதி அரசும் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளன.
நன்றி ஜீவா!