கொடூர கலவர நினைவலைகள் மறைய நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கியுள்ள சிறார்கள்

{mosimage}ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்துத்துவ ஆட்சியாளர்களின் துணையுடன் இந்துத்துவ வெறியர்களால் கடும் கலவரத்துக்குள்ளாகி சின்னாபின்னப்படுத்தப்பட்ட குஜராத் முஸ்லிம் சிறார்கள் அந்த கொடூர நினைவு இன்னும் நினைவுகளில் அலைபாய நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்நோக்கி உள்ளார்கள்.

இந்தக் கலவரத்தில் 2500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொலைசெய்யப்பட்டனர்; 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தங்கள் ஊரைவிட்டு விரட்டப்பட்டனர்; 400 முஸ்லிம் குழந்தைகள் ஆதரவற்ற அனாதையானார்கள். இந்தக் குழந்தைகளில் பலர் சில தன்னார்வல அமைப்புகள் நடத்திய முகாம்களில் பாதுகாப்புக்காகத் தஞ்சம் அடைந்தனர்.

இவர்களில் 132 குழந்தைகள் கலவர வெறியர்களால் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதையும், மானபங்கப்படுத்தப்பட்டதையும், துண்டுதுண்டாக வெட்டப்பட்டதையும், உயிரோடு எரிக்கப்பட்டதையும் நேரடியாகக் கண்டவர்கள். கடும் அச்சம் மேலிட சில சிறார்கள் பேசச் செயலிழந்து போயுள்ளனர்.

இவர்களுக்குத் தற்போது இருக்கும் ஒரே ஆதரவான மறுவாழ்வு முகாம்கள் ஜமாஅத்துல் உலமா ஹிந்த் எனப்படும் முஸ்லிம் அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தக் குழந்தைகள் விளையாட்டு மற்றும் கலந்தாலோசனை (Counselling) முறைகள் மூலம் இயல்பு நிலைக்கு மெதுவாகத் திரும்புகின்றனர் என்று இம்முகாமை நடத்தும் ஹக்கிமுத்தீன் காசிமி தெரிவித்தார்.

இருப்பினும் சிலர் பேரதிர்ச்சியால் இறுகிப் போய் வாய்பேசாது இருக்கின்றனர் என்றும் சிலர் உறங்கத்திலும் கடும் பயத்தில் அழுது அரற்றுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தகவல்: இப்னு ஹமீது, நன்றி: ராய்ட்டர்ஸ்