அறிவுப்போட்டி – 6 : விடைகளும் வெற்றியாளர்களும்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள்வாரியாக இங்குக் காணவும்.

அறிவுப் போட்டி ஆறில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்முறை பங்கேற்றவர்களில் எவரும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடை அளிக்கவில்லை. அதிகபட்சமாக கீழ்க்காணும்14 பேர் 9 கேள்விகளுக்கு மட்டுமே சரியான விடையளித்திருந்தனர்:

1) சந்தோஷ்  – aarokki…@gmail.com

2) மர்யம் பீவி  – mariamaad…@yahoo.com

3) அஸ்மா – msasmaa2…@yahoo.com

4) சாஜிதா – mrsnij…@gmail.com

5) ஆயிஷா – aysj…@gmail.com

6) ஸஹ்லா ஜாவிதா – hafe…@gmail.com

7) ஹிஷாம் – hoorrun…@gmail.com

8) ஸாலிஹா – ssalih…@gmail.com

9) ஃபைஸல் – mohdfai…@hotmail.com

10) அஹ்மத் – allam1…@rediff.com

11) மொய்தீன் – mbe…@gmail.com

12) ஸாலிஹா – mi_sh…@yahoo.com

13) ஷாம் அப்துல் பாசித் – basit…@gmail.com

14) முஹம்மத் அஸ்கர்தீன் – askar_…@yahoo.co.in

மேற்காணும் பட்டியலில் உள்ள பதினான்கு பேர்களில் மிகக் குறைந்த நேரத்தில் பதிலளித்தவர்கள் முதல் மூன்று வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!:

(1) சகோதரர் ஹிஷாம்hoorru…@gmail.com முதல் பரிசு ((45 வினாடிகள்).

(2) சகோதரி ஸாலிஹாmi_sh…@yahoo.com இரண்டாம் பரிசு (49 வினாடிகள்).

(3) சகோதரி ஸஹ்லா ஜாவிதாhafe…@gmail.com மூன்றாம் பரிசு ((51 வினாடிகள்).

 

அறிவுப்போட்டி6க்கானசரியானவிடைகள்:

வினா-1: இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தோழர் யார்?

விடை:காலித் பின் வலீத் (ரலி)

வினா-2: மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன?

விடை:உலகின் ஆயிரம் ஆண்டுகள்

வினா-3: அல்குர்-ஆனின் 18 –வது அத்தியாயத்தில் கூறப்படும் குகைவாசிகளுடன் தங்கியிருந்த மிருகம் எது?

விடை: நாய்

வினா-4: நபி யூசுஃப்(அலை)அவர்களின் உடன் பிறந்த சகோதரர்கள் எத்தனை பேர்?

விடை: 1(ஒருவர்-புன்யாமீன்)

வினா-5: தாவூத்(அலை) அவர்களுக்கு வழங்கப் பட்ட வேதம் எது?

விடை: ஜபூர்

வினா-6:விதைவையாக இருந்த கதீஜா(ரழி) அவர்களுக்கு நபி(ஸல்) எத்தனையாவது கணவர்?

விடை: மூன்றாவது

வினா-7: “பஅல்” என்னும் சிலையை வணங்கிய சமூகத்தாருக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?

விடை: இல்யாஸ்(அலை)

வினா-8:அபிசீனியா சென்ற முதல் குழுவில் இடம் பெற்றவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

விடை: 16

வினா-9:ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு பரிந்துரைக்கப் பட்டுள்ளது?

விடை: 10 சதவீதம்

வினா-10:இந்தியா சுதந்திரம் அடைந்த போது கஷ்மீரின் நிலை என்ன?

விடை: இருநாட்டிலும்சேராததனியானநிலப்பரப்பு

 

மதிப்பெண்இல்லாஉபரிகேள்வி:

இன்றைய சூழலின் படி, கீழ்க்கண்ட படத்தில் “மதப்பற்று மிக்க உடை” மற்றும் “பெண் அடிமைத்தனம்” என்று காரணம் கற்பித்து துன்புறுத்தப் படாத உடை எது

விடை: சிலுவைஅணிந்தபெண்ணின்உடை

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 6-ல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோ. ஹிஷாம், சகோதரிஸாலிஹா, சகோதரி ஸஹ்லாஜாவிதா ஆகியோருக்கும் அதிகபட்ச கேள்விகளுக்கு சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை ( admin@satyamargam.com ) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதரர்களுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பிய அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.