பா.ஜ.க., பிரமுகர் கொலையில், மூன்று இந்துக்கள் கைது (தினமலர்)

Share this:

சேலம்: சேலத்தில், பா.ஜ.க., பிரமுகர் கொலையில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம், கன்னங்குறிச்சி, சின்னமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம், மகன் முருகன், 45. பா.ஜ.க., பிரமுகர். இவருக்கும், இவரது உறவினரான, வீராணம் ஆலப்பட்டி புது ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 55, என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

முருகன், அவரது உறவினர்கள் சிலருடன், வீராணம் புது ஏரி பகுதிக்கு சென்றுள்ளார். அந்த வழியாக ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர்கள் சிலர், அந்த வழியாக வந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இரு தரப்பினரும், அரிவாள், கத்தி ஆகிய ஆயுதங்களால், சரமாரியாக வெட்டிக் கொண்டனர். முருகன், அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தார்.

இதில், ஆறுமுகம், ஜெயராம், கணேசன், சீனிவாசன், ஆகியோர் காயங்களுடன், அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

வீராணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். சேலம் மாவட்ட எஸ்.பி., சக்திவேல், ஏ.டிஎஸ்.பி, சரோஜ்குமார் தாகூர் ஆகியோரின் உத்தரவின் பேரில், இரும்பாலை இன்ஸ்பெக்டர் சுப்ரமணி, எஸ்.ஐ., செந்தில்குமார் ஆகியோர், கொண்ட தனிப்படை போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொலை வழக்கில், ராஜா, செல்வராஜ், அங்காயி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம், போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆறுமுகம், ஜெயராமன், ஆகியோர் சிகிச்சையில் இருப்பதால், சிகிச்சைக்கு பிறகு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

நன்றி: தினமலர் ஆகஸ்ட்-03, 2013 http://www.dinamalar.com/district_detail.asp?id=772665

கொலையுண்டவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கொலையாளிகள் எந்த மதத்தினராக இருந்தாலும் தயவு தாட்சணயமின்றி தண்டிக்கப் பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. பாஜகவின் பிரமுகர்கள் நிலத்தகராறு, கந்து வட்டி, முன் விரோதம், கள்ளத்தொடர்பு என்று பல்வேறு காரணங்களால் கொல்லப்படும் சூழலில், ஹிந்த்துவாவினர் (மேற்கண்ட செய்தியில் இடம்பெற்ற, கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் முருகன் உட்பட) தமிழகத்தில் மதவெறியைத் தூண்டப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.