ரத்த வெறிப் பிடித்து அலையும் ஊடகங்கள்!

Share this:

நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும், முதலில் ஊடகங்கள் அங்கே ரத்தக் கறை இருக்கிறதா என்றுதான் தேடி அலைகின்றன. மும்பையில் நடந்த குண்டுவெடிப்பின்போது, தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக காட்டப்பட்ட ரத்தக்கறை இன்னமும் அப்படியே மனதில் நிற்கிறது.

இப்போது சென்னையில், குறிப்பாக தந்தி தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ரத்தம் படிந்த தரையை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஊடக தர்மம் என்பது என்ன? மக்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவதற்கு பதிலாக, தொடர்ச்சியாக அச்சத்தையே உண்டு பண்ணுகிறது இவர்களின் காட்சியமைப்புகள். உடனடியாக தந்தி தொலைக்காட்சி இதனை நிறுத்த வேண்டும். தவிர, இன்னமும் குண்டு வெடிப்பிற்கான காரணமோ, யார் செய்திருப்பார்கள் என்கிற தகவலோ தெரியாமல், தொடர்ச்சியாக யார் செய்திருக்க கூடும் என்கிற கணிப்பை அழுத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு, பா.ஜ.க தமிழ்நாடு தலைவர், பொன். ராதாக்ருஷ்ணன் நேராக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு மட்டும், அமைதியாக இருந்தால் எப்படி? தமிழ்நாட்டில்தான், இந்த அளவிற்கு மோடி எதிர்ப்பலை வீசுகிறது, உடனே அந்த எதிர்ப்பை ஒரு குறிப்பிட்ட மதத்தினரை நோக்கி திருப்பிவிடும் போக்கைத்தான், ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஊடகங்கள் ஆற்றும் பணி முக்கியமானது. அதனை கொஞ்சம் பொறுப்புணர்வுடன் செய்தால், காலம் அவர்களை கனிவுடன் நோக்கும்.

தமிழ் ஸ்டுடியோ அருண்

 


துரையில் சில வாரங்களுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பில் கைதானது – மூன்று இந்துக்கள்! ஆனால், எந்த நாளிதழும் எந்த செய்தித் தொலைக்காட்சியும் “மூன்று இந்து தீவிரவாதிகள்” கைது என்று சொல்லவேயில்லை! இதுவே கைதாயிருந்தது ஒரே ஒரு முஸ்லீம் நபராக இருந்திருந்தால் கூட “முஸ்லீம் தீவிரவாதி கைது செய்யப்பட்டார்” என்று செய்தி வரும் இந்நாட்டில்!

எங்கு குண்டு வெடித்தாலும் உடனே காவல்துறையினர், அப்பாவி முஸ்லீம் சகோதரர்களை விசாரணை என்ற பெயரில் மிகுந்த துன்பத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாக்குகின்றனர்! ஒரு குண்டு வெடித்தால் உடனே “யாரோ முஸ்லீம் தீவிரவாதி குண்டு வச்சுட்டான்” என்று பொத்தம் பொதுவாய் எதுவுமே தெரியாமல் பொது மக்களை நம்ப வைத்திருப்பது தான் இந்துத்தவ மற்றும் காவித் தீவிரவாதிகளின் வெற்றி! அனைத்து ஊடகங்களும் இப்போது இதற்கு சிறிதும் கூச்சமே இன்றி உடன் போகின்றன!

“முஸ்லீம் என்றாலே அவர்கள் ஏதோ அரேபியா நாட்டில் இருந்து வந்தவர்கள்; இந்நாட்டை சேர்ந்தவர்களே இல்லை என்றும் அவர்கள் அனைவரையுமே தீவிரவாதிகள்” என்று பார்க்கும் குறுகிய மனப்பான்மை தான் இங்கு பெரும்பாலானோருக்கு இருக்கிறது!

ஒரு குண்டு வெடித்தால் பள்ளி – கல்லூரிகளில் உடன் பயிலும் முஸ்லீம் மாணவர்களை ஏளனமாக கேலி பேசுவது; அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் முஸ்லீம் சகோதரர்களை மனம் நோகும் வகையில் பகடி செய்வது – இதில் எல்லாம் பல பார்ப்பன நாய்களுக்கும் மேல்தட்டு மேல்சாதி வெறி பிடித்த மிருகங்களுக்கும் இந்துத்வா வெறி பிடித்த காட்டுமிராண்டிகளுக்கும் அப்படி ஒரு பேரானந்தம்!

ஆனால், ரம்ஜான் பக்ரீத் பண்டிகைகள் அன்று மட்டும் சிறிதும் வெட்கமே இன்றி “பாய், பிரியாணி கொண்டு வாங்க” என்று பல் இளித்துக் கொண்டு கேட்பது, தெரியாதவராய் இருந்தாலும் “முஸ்லீம் கல்யாணத்துல பிரியாணி நல்லாயிருக்கும்” என்று அற்பமாய் அலைவது – இது தான் இந்த இந்து மத வெறி பிடித்த கொள்கைவாதிகளின் லட்சணம்!

இந்த நாட்டில் உங்களைப் போன்ற ஆரிய வந்தேறிகளும், இந்து மத வெறி பிடித்த ரத்தக் காட்டேரிகளும் இருக்க எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதை விட பல மடங்கு இந்நாட்டின் மைந்தர்கள் தான் இஸ்லாமியர்களும்! நீங்கள் வைக்கும் குண்டுகளுக்கும் நீங்கள் செய்யும் பயங்கரவாத செயல்களுக்கும் எத்தனையோ அப்பாவி இஸ்லாமியர்கள் பலி ஆகியுள்ளனர்; இன்னமும் ஆகின்றனர்! உங்கள் குடுமியை இப்படியே வளர விட்டுக் கொண்டு எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்!

தீவிரவாதம் என்ற ஒன்று உருவாவதே அந்த அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் தான்! அரசாங்கத்தின் மேல் அதிருப்தி வருவதால் தான்; நாட்டின் கொடுமைகள், அநீதிகளுக்கு நியாயம் கிடைக்காத போது தான் எந்த ஒரு தீவிரவாதமும் உருவாகிறது! தீவிரவாதம் என்பதற்கும் பயங்கரவாதம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது!

இந்த நாட்டின் பன்முகத்தன்மையை குலைக்க முற்படாமல் இந்துத்வா வெறியை காட்டாமல் இருந்தால் எந்த தீவிரவாதமும் வெளியே வரவே வராது! பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்னால் இந்நாட்டில் குண்டுகள் வெடித்தது இல்லையே, ஏன்?! சிந்திக்க வேண்டாமா?!

காவித் தீவிரவாதிகளின் ஊடக பயங்கரவாதமும், காவிக் கறை படிந்த காவல்துறையும், காவித் துணியால் கண்களை மூடிய நீதி தேவதையும் மேலும் மேலும் ஒரு சில ஆரிய வெறியர்களின் இந்துத்வா கொள்கைகளுக்காக அப்பாவி இஸ்லாமியர்களை வதைத்து வந்தால், காவித் தீவிரவாதத்தை மறைத்து இஸ்லாமியத் தீவிரவாதம் என்று மறைத்துக் கொண்டே வந்தால் என்னைப் போல் இந்நாட்டின் பன்முகத்தன்மை மேலும் மனித நேயம் மேலும் மனிதம் மேலும் பற்றும் நேசமும் கொண்டவர்கள் நிச்சயம் பெரும் திரளாக கிளம்பி பெரும் புரட்சி வெடிக்கும்; அது தான் இந்நாட்டை திருத்த தேவை என்றால்!

எங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் எழுத்தே ஆயுதம்; எங்கள் சொல்லே போர்வாள்; எங்கள் செயல்களே பெரும் புரட்சியாய் வெடிக்கும்!

நீதி தேவதை மீண்டும் சாதி,மத,இன,மொழி பாராமல் கருப்புத் துணி கட்டிக் கொண்டு இந்நாட்டில் நீதி வழங்கும் வரை ஓயமாட்டோம்!

– குமரகுருபாலன் சந்திரன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.