ரமளான் சிந்தனைகள்-1

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் அருள் நிறைந்த ரமளான் மாதம் துவங்கி விட்டது. ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு, இறை வணக்கங்கள் பெருகும் உள்ளக் கிளர்ச்சியுடன் உலகெங்கும் விழாக்கோலம் பூண்டிருக்கும் இந்த வேளையில், சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக தினசரி ஐந்து இறைமறை வசனங்களைப் பதிக்கவிருக்கிறோம்.

பல்வேறு சமயங்களில் இதே இறைவசனங்கள் நம் கண்களில் தென்பட்டிருக்கலாம். நம்மில் சிலர் மனனம் செய்திருக்கலாம். இருப்பினும், முமீன்கள் ஒருவருக்கொருவர் நினைவுறுத்திக் கொள்வது நம்மனைவர் மீதும் கடமையாக இருப்பதால் அளப்பரிய இந்த மாதத்தில், இவ்வசனங்களை பொருளுணர்ந்து ஆத்மார்த்தமாக வாசிப்பதோடு, இயன்றவரையில் மனனம் செய்து கொள்ள முயற்சிப்போம்.

சூரத்துல் ஃபாத்திஹா

அல் குர்ஆன் (ஆடியோ)

سُورَة الفَاتِحَه
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0010011.mp3{/saudioplayer} بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
1-1 அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0010021.mp3{/saudioplayer} الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

1-2 (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0010031.mp3{/saudioplayer} الرَّحْمَنِ الرَّحِيمِ
1-3 (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0010041.mp3{/saudioplayer} مَالِكِ يَوْمِ الدِّينِ
1-4 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0010051.mp3{/saudioplayer} إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
1-5 நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0010061.mp3{/saudioplayer} اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
1-6 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

1-7 (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

{saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0010071.mp3{/saudioplayer} صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ