முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

உதவிக்கரம்

பெயர்: ஜெகந்நாதன்

த.பெயர்: தொப்லோடு

தாயார் : தனலட்சுமி

மனைவி : சரஸ்வதி

ஊர் : மாயனூர் கிராமம்

திருப்பூர் போஸ்ட்,

உளுந்தூர் பேட்டை தாலுகா.

மேற்கண்ட விவரங்களுடன் கூடிய படத்தில் காணப்படும் சகோதரர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரியாத் சுமெசி பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவராக கேட்பாரற்றுக் கிடந்தார். அப்பகுதியிலுள்ள மலையாள சகோதரர்கள் இதனைக் கவனித்து அவரைத் தங்கள் பாதுகாப்பில் வைத்திருந்தனர். நமக்குத் தகவல் கிடைத்து நாம் சென்று பார்த்தோம். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக உடலில் பல பகுதிகளிலும் காயங்களுடன் காணப்பட்டார். நாம் அவருடன் பேசிய வகையில் அவரின் பெயர் உட்பட சில தகவல்களைப் பெற முடிந்தது. அவர் சவுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் வேலை செய்துள்ளார். அவரின் முதலாளியின் பெயரையோ எந்த இடத்தில் வேலை செய்தார் என்பதையோ சொல்ல மறுக்கிறார். அவரிடம் சவுதியில் பணிபுரிவதற்கான அடையாள அட்டை இல்லை. மேலும் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அவரை ஒப்படைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் யாரும் இருந்தால் கீழ்கண்ட கைப்பேசிக்குத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:

RIYADH INDIA FRATERNITY FORUM
+966 502112308

தகவல்: முதுவை ஹிதாயத்

Comments   
மஸ்தூக்கா
0 #1 மஸ்தூக்கா -0001-11-30 05:21
'சத்தியமார்கம்' இணைய தளம் மேற்கொண்டுள்ள மனித நேயப்பணிகளில் மனதைப் பறிகொடுத்தவர்க ள் சத்தியமார்ககம் இஸ்லாத்தின் மகத்தவத்தைப் புரிந்துக் கொள்வார்கள். இத்தகவலைப் படிக்கும் 'சத்தியமார்க்கம ்' ரியாத் வாழ் வாசகர்கள் உடனடியாக இச்சகோதரரை தாயகம் அனுப்பி வைக்க தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டால் மனித நேயத்திற்காகப் பாடுபட்டதற்கு இறைவனின் பாராட்டைப் பெறலாம்.
தகவல் தந்த முதுவை ஹிதாயத் அவர்களுக்கு நன்றி.
மனித நேயத்தை மனதிற்கொண்டு எமது 'தமிழ் இஸ்லாம் அரங்கம்'வலைப்பத ிவிலும் மீள்பதிவு செய்துள்ளோம்.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்