முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உதவிக்கரம்

உதவிக்கரம் நீட்டுவோம்!கடந்த ஜூன் 9ஆம் தேதி, "உயர்கல்வி பயில உதவியை எதிர்பார்க்கும் மாணவி" என்ற தலைப்பிட்டு அப்போது நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சகோதரி ஸாஜிதாவைப் பற்றிய செய்தி வெளியிட்டிருந்தோம்.

நமது சத்தியமார்க்கம்.காம் தளத்தில் அச்செய்தி வெளியானவுடன் பல சகோதரர்கள் பொருளுதவி செய்வதற்கு முன்வந்து வங்கிக் கணக்கு விபரம் கேட்டு, பின்னூட்டம் இட்டிருந்தனர்.

செய்தி வெளியிட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல், சகோதரி ஸாஜிதாவின் குடும்பச் சூழல், தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்கள், உதவி செய்யப் படுவதற்குத் தகுதி, பொருளதவி செய்யவதற்கான (வங்கி) வழி ஆகியன குறித்து நேரில் கண்டு / கேட்டறிவதற்காக நமது பிரதிநிதியைச் சகோதரியின் ஊரான முடச்சிக்காட்டுக்கு அனுப்பி இருந்தோம்.

நமது பிரதிநிதி நேரில் விசாரித்து அறிந்த வகையில், சகோதரி ஸாஜிதா உதவி பெறுவதற்கு முற்றிலும் தகுதி உடையவர் என்பது தெரிய வந்தது.

அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம்:

 

பாடம்

மதிப்பெண்கள்

தமிழ் (Tamil)

171

ஆங்கிலம் (English)

153

இயற்பியல் (Physics)

142+50 = 192

வேதியியல் (Chemistry)

135+50 = 185

உயிரியல் (Biology)

138+50 = 188

கணிதம் (Mathematics)

191

மொத்தம் (Total Marks)

1080

தேர்வுப் பதிவெண் (Register No.)

463563

 

இதனிடையில், கடந்த 15.06.2008 நாளிட்ட ஜூனியர் விகடன் இதழில் 'ஒளி 116' என்ற தலைப்பிட்டு, கல்வி உதவிச் சேவைகள் பற்றி ஒரு செய்தி வெளியானது:

 

ஜூனியர் விகடன் (15.06.2008) வெளியிட்டச் செய்தி!

 

சாஸிதாவுக்குத் தீர்வு!

பேராவூரணியில் இருந்து சாஸிதா என்ற மாணவி நம்மைத் தொடர்பு கொண்டார்.

''நாங்க ரொம்ப வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவங்கண்ணே. அப்பா கிடையாது. அம்மா துணிமணிகளை வாங்கி நடந்து போய் வியாபாரம் பண்றவங்க. இவ்வளவு வறுமையிலும் 1080 மார்க் வாங்கினேன். மேற்கொண்டு படிக்கிறது எப்படின்னு தெரியலை. அண்ணா யுனிவர் சிட்டிக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எப்படியும் ஃப்ரீ ஸீட் கிடைச்சிடும். ஆனா, இதர செலவுகளைப் பெரிய மனசுள்ள யாராவது ஏத்துக்கிட்டா புண்ணியமா போகும்'' என சோகத்தோடு சொன்னார் சாஸிதா.

கும்பகோணத்தில் இருக்கும் ஹலிமா எஜுகேஷனல் அறக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்து விஷயத்தைச் சொன்னோம்.

''சாஸிதாவின் படிப்பு செலவுகளையும் இதர செலவுகளையம் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இனி சாஸிதா எங்கள் குழந்தை!'' எனப் பெருமனதோடு சொன்னார்கள் ஹலிமா அறக்கட்டளை நிர்வாகிகள்.

சகோதரி ஸாஜிதாவைப் பற்றிய மேற்கண்ட செய்தியைக் கண்ணுற்ற நமது வாசகச் சகோதரர் ஜியாவுத்தீன் அவர்கள் "சாஸிதாவுக்குத் தீர்வு!" என்ற தலைப்பிட்டு அதனைப் பின்னூட்டமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தில் இட்டிருந்தார்.

சகோதரி ஸாஜிதாவின் தாயாரைத் தொடர்பு கொண்டு நேரில் நாம் விசாரித்த வகையில் அவ்விருவருக்கும் ஜூனியர் விகடனில் வெளியான செய்தியைப் பற்றியோ கும்பகோணம் ஹலீமா கல்வி அறக்கட்டளை பற்றியோ ஏதும் தெரிந்திருக்கவில்லை.

எனவே, சகோதரிக்குத் தங்கள் பொருளுவிகளை அனுப்புவதை நிறுத்த வேண்டாம் என்று தயாள குணம் படைத்த வாசகச் சகோதர சகோதரியரைக் கேட்டுக் கொள்வதோடு, அனுப்ப வேண்டிய விபரங்களையும் இங்குத் தருகிறோம்.

சகோதரி ஸாஜிதாவின் தாயாரின் வங்கிக் கணக்கு:

 

M. Sarammal

SB A/C - 11199629553 State Bank of India, Peravurani.

 

வீட்டு முகவரி:

எம். ஸாஜிதா பேகம்,

தாயார் பெயர்: சாராம்மாள்,

(புதுக்கோட்டயார் வீடு)

98/495, முஸ்லிம் தெரு,

பள்ளிவாசல் அருகில்,

முடச்சிக்காடு,

பேராவூரணி - 614804.

தஞ்சை மாவட்டம்.

 

கும்பகோணம் ஹலீமா அறக்கட்டளையையும் ஜூனியர் விகடனையும் விசாரிக்கத் தொடங்கியுள்ளோம். விபரங்கள் இன்ஷா அல்லாஹ் இங்குப் பதிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments   

abdul azeez
0 #1 abdul azeez -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும் சத்யமார்க்கம் இணையதள நிர்வாகிகளுக்கு ம் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கு ம். அகௌண்ட் நம்பர் வாங்கி போட்டீர்கள் என்றாலும் ரொம்ப தாமதமாக தான் போட்டீர்கள். இருக்கட்டும் அந்த சகோதரி குடும்பத்திற்கு அனுப்பும் சகோதரர்கள் தாமதமின்றி கிடைப்பது போல் அனுப்பிவைக்க கேட்டுகொள்கிறேன ். ஐக்கிய அரப் அமீரகத்தில் உள்ளவர்கள் மூன்று நாட்களில் கிடைப்பது மாதிரி அல் பர்தான் மணி எக்ச்சாஞ்சோ மற்றும் எது வசதியாக உங்களுக்கு படுமோ அந்த இடத்தில் அனுப்பலாம். மற்ற நாட்டில் உள்ளவர்கள் எப்படி என்று தெரியவில்லை. அகௌண்ட் எண்ணுக்கு அனுப்பாமல் உடனே கிடைப்பதை மட்டும் கருத்தில் கொண்டு அந்த சகோதரியை அழைக்கழிக்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன ்.போஸ்ட் ஆபீஸில் அனுப்பினால் அனுப்பினவர்கள் பெயர் கேட்பார்கள் சீக்ரெட் நம்பர் கேட்பார்கள். மறுபடி அவர் அனுப்பினவருக்கு போன் செய்து சிரமத்துல்லாக்கவேண்டம்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
இறை நேசன்
0 #2 இறை நேசன் -0001-11-30 05:21
//பேராவூரணியில் இருந்து சாஸிதா என்ற மாணவி நம்மைத் தொடர்பு கொண்டார்.// - ஜூனியர் விகடன்.

//சகோதரி ஸாஜிதாவின் தாயாரைத் தொடர்பு கொண்டு நேரில் நாம் விசாரித்த வகையில் அவ்விருவருக்கும ் ஜூனியர் விகடனில் வெளியான செய்தியைப் பற்றியோ கும்பகோணம் ஹலீமா கல்வி அறக்கட்டளை பற்றியோ ஏதும் தெரிந்திருக்கவி ல்லை.// - சத்தியமார்க்கம்.காம்

ஒருவேளை ஜூனியர் விகடனைத் தொடர்பு கொண்ட ஸாஜிதா வேறொருவராக இருக்கும்!!!!!

என்னடா உலகம் இது?

-இறை நேசன்
Quote | Report to administrator
haneefm
0 #3 haneefm -0001-11-30 05:21
وَبَشِّرِ الَّذِين آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ كُلَّمَا رُزِقُواْ مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقاً قَالُواْ هَـذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ وَأُتُواْ بِهِ مُتَشَابِهاً وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ

(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக ்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் போதெல்லாம் 'இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டி ருக்கிறது' என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டி ருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (2:25)
சகோதரி ஸாஜிதாவின் மேல் படிப்பு கல்விக்கு உதவமுன்வரும் அனைத்து கருனையுள்ளம் உள்ளவர்கலுக்கு அல்லாஹ் மேன்மேலும் எல்லாவகையிலும் அருள் புரியவேண்டும்/இ ன்னும்சகோதரி ஸாஜிதா இந்த வாய்பினை நல்லமுரையில் பயன் படுத்தி இஸ்லாத்தின் வழி பின் பற்றி மேன் மேலும் உயர அல்லாஹ் அதிக திரனை தந்து அருளட்டும் ஆமின்/ இன்னும் இந்த சத்தியமார்க்கம் நம் சமுதயா பனியில் உதவிக்கரம் நீளட்டும்//
ஆமீன்
ஹனிஃப்-குவைத்
Quote | Report to administrator
abdul azeez
0 #4 abdul azeez -0001-11-30 05:21
Assalaamu alaikkum for all muslims brothers. i inform to you the new site that is called wadja.com it will allow you free sms for world wide. and sister shajidha's mobile or telephone number if you summit it would be very helpful for senders to conform that transfer money. please satyamargam.
maa salaam.
abdul azeez.
Quote | Report to administrator
அப்துல் சலாம்
0 #5 அப்துல் சலாம் -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்

நமது முஸ்லிம் சமுதாயம் இது போன்ற திறமையுள்ள ஆர்வமுள்ள ஆனால் வசதியற்ற ஏழை மாணவர்களுக்கு உதவுவது முக்கிய கடமை என்றும் ஒரு மார்க்க அறிஞர் கூறினார்.

உதாரணமாக ஒரு ஊரில் பெண் மருத்துவர் இல்லாத போது பெண்கள் பிரசவ வைத்தியம் பார்க்கவும் கூட ஆண் டாக்டர்களிடம் காட்ட நேரிடும் அவல நிலை ஹராம் என்று பேசுவது மட்டும் போதாது.

முஸ்லிம்கள் தமது பெண் குழந்தைகளை டாக்டர்களாக்க வேண்டும் அல்லது திறமையிருந்தும் வசதியற்றவர்கள் இருக்கும் போது அவர்களுக்கு எல்லோரும் சேர்ந்து உதவி அவர்களை டாக்டர் ஆக்குவது ஒரு பர்ள் (பர்ளே கிஃபாயா) எனும் நிலைக்கு உள்ள கடமை என்றும் மவ்லவி அவர்கள் கூறினார்கள்.

இதற்கு அல்லாஹ்விடம் பதில் சொல்ல நேரிடும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

முஸ்லிம் சமுதாயம் இதை கவனத்தில் கொண்டு தமது இக்கடமையை முறையாக நிறைவேற்ற முன்வரவேண்டும்.

அல்லாஹுத் தஃலா நமக்கு தவ்பீஃக் செய்வானாக.
ஆமீன்.

அப்துல் சலாம்
Quote | Report to administrator
abdul azeez
0 #6 abdul azeez -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கு ம். ஒரு நற்செய்தி சகோதரி ஷாஜிதாவிர்க்கு திருச்சி அண்ணா உநிவர்சிட்டி ப்ரீசீட் கிடைத்திருக்கிற து. இருந்தாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போன்ற பழங்சொல்லுக்கு தகுந்தாற்போல் ஏழைக்கு இது எப்பவும் பொருத்தமாகவே ! அமைகிறது. நான் சுயமாய் இந்த சகோதரி குடும்பத்திற்கு போன் செய்து விசாரித்த வகையில் சென்னை அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட பவுண்டசின் ஓர் அளவு ஐந்து ஆயிரம் உதவி செய்துள்ளது. அது போன பதினெட்டாம் தேதி கவுன்சலிங் போன்ற காரணங்களுக்காக உபயோகம் செய்யப்பட்டது. ஆக இன்னும் நான்கு நாட்களில் கல்லூரியில் சேர்ந்துவிடனும் என்று சொல்லியுள்ளார்க ளாம். அட்மிஷன் பீஸ் முப்பத்திமூன்று ஆயிரம் கட்டணுமாம். நான் என் சக நண்பர்கள் மூலம் அனுப்பிய தொகை பதிமூன்றாயிரம் மட்டுமே ஆனது. இன்னும் ஒரு பதினெட்டாயிரம் இருந்தால் அந்த சகோதரி மேற்படிப்பை இன்பமாக தொடர்வார். இல்லை என்றால் கனவை தான் நினவு என்று நினைத்து கழிக்க நேரிடும். வெறுமனே சமுதாய மேன்பாடு பெண்கள் கல்வி பற்றி உயர்வாக பேசும் நம் சமுதாய சகோதரர்களே ! இயக்கங்களே ! கழகங்களே ! அமைப்புகளே ! ஒரு சகோதரர் ஒரு ருபாய் உதவினால் கூட அந்தப்பெண்ணின் கல்வி கிடைத்துவிடும். கடனாக கொடுத்தால் கூட அதற்க்கு நான் பொறுப்பாவேன். அவர்களால் திரும்ப கொடுக்க முடியவில்லை என்றால் அதை நான் தருகிறேன். உதவுவீர்களாக.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #7 சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
அன்புச் சகோதரர் அப்துல் அசீஸ்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்கள் விடாமுயற்சியும் கொடையுள்ளமும் வாழ்த்துதற்குரி யது. சகோதரிக்கு உதவிய தங்களுக்கும் தங்களின் நண்பர்களுக்கும் உரிய கூலியை அல்லாஹ் அருள்வானாக!

சத்தியமார்க்கம்.காம் தன் பிரதிநிதி மூலமாக நேரடியாக ஒருமுறையும் மூன்று தடவை தொலைபேசி வழியாகவும் சகோதரியிடம் தொடர்பு கொண்டது; உதவிக்காகத் தொடர்பில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சகோதரி ஸாஜிதா உயர்கல்வி வாய்ப்பை இழக்க மாட்டார், இன்ஷா அல்லாஹ்!

சகோ. அப்துல் அசீஸைப் போலவே உயர்கல்விக்குப் பொருளுதவி செய்து அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று வாசகர்களை வேண்டுகிறோம்.
Quote | Report to administrator
ஜமீல்
0 #8 ஜமீல் -0001-11-30 05:21
அன்புச் சகோதரர் அப்துல் அசீஸ்,

'உயர்கல்வி பயில உதவியை எதிர் பார்க்கும் மாணவி' என்ற தலைப்பில் www.satyamargam.com/.../ என்ற சுட்டியோடு சத்திய மார்க்கம் செய்தி வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தியில் முதலாவதாக ஒரு பின்னூட்டத்தை நான் இட்டு, அந்தச் சகோதரிக்கு என்னாலானதை உதவத் தயார் என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், அதற்குப் பின்னர் ஜியாவுதீன் என்ற சகோதரர் ஜூனியர் விகடன் செய்தியை அங்குப் பதிந்தார். அதனால் என்னைப் போன்றவர்கள் 'சகோதரியின் படிப்புப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விட்டது' என்று நம்பியே சும்மா இருந்து விட்டோம்.

இப்போது சத்திய மார்க்கம் காரர்கள் தந்திருக்கும் தகவல்களின்படி சகோதரிக்கு இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

நீங்கள் பேங்க் டூ பேங்க் அனுப்பிய 13,000 ரூபாய்தான் சகோதரிக்கு அட்மிஷன் கிடைப்பதற்கு உதவியது என்பதைத் தெரிந்து கொண்டேன். அல்லாஹ் உங்களுக்கும் உங்களோடு துணை நின்ற சகோதரர்களுக்கும ் நல்லருள் புரிவானாக.

சத்திய மார்க்கம் காரர்களுக்கு வேண்டுகோள்:
என்னைப் போன்ற வாசகர்களிடம் நிதி பெற்று, சகோதரிக்கு நீங்களாக முழுப் பொறுப்பெடுத்துக ் கொண்டு படிப்புக்கு உதவி செய்தால் என்ன?

தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பதை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

நன்றி.
Quote | Report to administrator
இப்னு ஹமீது
0 #9 இப்னு ஹமீது -0001-11-30 05:21
அதிரை வாசகர் சகோதரரே

37000 ரூபாய் உண்மையில் சகோதரிக்குக் கிடைத்திருக்கும ானால் அது மகிழ்ச்சியே! பிறர் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் எல்லோரும் சும்மா இருந்து விடும் அபாய நிலையை அடையும் முன் உதவி செய்தாக வேண்டும். தாங்கள் இன்னொரு முறை சிரமம் பாராமல் அதிரை பைத்துல்மாலைச் சேர்ந்தவர்கள் உரியவர்களிடம் தான் ஒப்படைத்தார்களா என உறுதி செய்ய முடியுமா?
Quote | Report to administrator
abdul azeez
0 #10 abdul azeez -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து முஸ்லிம்களுக்கு ம். சகோதரர் இறை நேசன் அவர்களே ! பின்னூட்டங்களை வரிசை பிரகாரம் படித்தால் குழப்பன் தான் மிஞ்சும். காரணம் சகோதரியிடம் ஆரம்பம் கால கட்டத்தில் என் நண்பர் விசாரித்த சமயம் அப்துல் ரஹ்மான் அறக்கட்டளை வசம் விண்ணப்பம் அனுப்பியுள்ளது. மட்டும் போட்டுளேன். பிறகு போன் செய்து அடிக்கடி இப்ப என்ன ? ஆனது ஏதாவது பதில் வந்ததா ? என்று சகோ ஷாஜிதாவிடம் விசாரிக்கும் சமயம் டிராப்ட் அனுப்பியுள்ளார் கள். என்று சொன்னார். இன்னும் வந்து கிடைக்கலை என்றார். பிறகு ஒரு வாரம் கழித்து கேட்ட பொழுது கிடைத்து விட்டது என்றார். இது எல்லாம் தொடர்ந்து சொந்த சகோதரியிடம் எப்படி அக்கறையுடன் நடந்து கொள்வோமோ ! அந்த மாதிரி கேட்டு தெரிந்து கொண்டேன்.

// சகோதரி ஷாஜிதாவுக்கு அப்துல் ரஹ்மான் பவுண்டேசன் கவுன்சிலிங்கிற் கு 5000 கொடுத்தது - சகோ. அப்துல் அஸீஸ். //
ஆக இது உண்மை.

// சகோதரி ஷாஜிதாவுக்கு சகோதரர் அப்துல் அஸீஸ் அனுப்பிய 13000 அட்மின்சன் கிடைக்க உதவியது. - சகோ. ஜமீல் //

நான் அனுப்பினதற்கு பில் இருக்கிறது. நான் அனுப்பிய தொகையை இங்கு பதியவேண்டும் என்ற அவசியம் இல்லை தான். இருந்தாலும் சகோதரியின் படிப்பு வீணாக கூடாது என்ற ஒரே ! காரணத்திற்காக தான் July 28, 2008 நேரம்: 18:17 என்ற பின்னூட்டம் போடவேண்டிய கட்டாயம் எனக்கு நேரிட்டது.

// சகோதரி ஷாஜிதாவுக்கான படிப்பின் முழு பொறுப்பை ஹலீமா அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது - சகோ. ஜியாவுதீன். //

இந்த ஹலிமா அறக்கட்டளை நிர்வாகிக்கும். நான் போன் செய்து கேட்ட வகையில் அந்த பெண் எங்கள் பொறுப்பில் இல்லை. என்றார் அவர் பெயர் ஜாகிர் போன் +௯௧௯௯௯௪௩௭௪௪௭௨ அதிராம்பட்டினம் ஜமாஅத் பொருபேற்றுள்ளது என்றார். அதன் பிறகு தான் நான் என் நண்பரை அனுப்பி நேரடி விசாரணை, விண்ணப்பம் அனுப்பிய சம்பவம் எல்லாவற்றையும் சொன்னார்.அதை சம்பந்தம் இல்லாத ஆக்கத்தில் அவசரத்தில் பதிந்துள்ளேன்.

சகோதரியின் இதர பணம் எப்படி பெற்றார் என்ன ? என்பது அல்லாஹ்வுக்கு தான் தெரியும். வேண்டும் என்றால் அதையும் போன் செய்து கேட்டு எழுதுகிறேன்.அந் த காலேட்சில் சேர்ந்துவிட்டால ் நான்கு வருடத்திற்கு அப்துல் ரஹ்மான் அறக்கட்டளை உதவுவதாக சகோதரியின் தாய் மாமா சொன்னார் பிறகு அவரே ! இல்லை ஆரு மாசத்திற்கு செய்வார்கள். அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியலை என்றார். இப்ப அந்த ஆரு மாதமும் என்ன ? என்ற கேள்வி குறியாக உள்ளது. யார் பணத்திலோ சேர்ந்துவிட்டார ். அல்ஹம்துலில்லாஹ ் .

சேர்ந்து விட்டது பெரிது கிடையாது. அடுத்தமாதம் சிலவுக்கு பணம் இல்லை என்ற காரணத்தால் தலையை தொங்கவிட்டுக்கொ ண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். என்ற சம்பவம் நடக்ககூடாது என்பதற்காக தான் இந்த அடுத்த கட்ட நடவடிக்கை இந்த தளத்திற்கு வரும் உங்களை போன்ற நல்லென்னம் கொண்ட சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து நாம் அனைவரும் இன்ஷா அல்லாஹ் அந்த சகோதரிக்கு ஒன்று கூடி அனுப்புவோமாக. இதற்கு அனைத்து சகோதரர்களும் ஒத்துழையுங்கள்.
மாதம் ஐந்நூறு ரூபாய் வீதம் செய்தாலே ! பத்து நபர் பணம் போதும் என்று நினைக்கிறேன். முன் வாருங்கள் சகோதரர்களே !
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
இறை நேசன்
0 #11 இறை நேசன் -0001-11-30 05:21
சகோதரி ஷாஜிதாவுக்கான படிப்பின் முழு பொறுப்பை ஹலீமா அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது - சகோ. ஜியாவுதீன்.

சகோதரி ஷாஜிதாவுக்கு அப்துல் ரஹ்மான் பவுண்டேசன் கவுன்சிலிங்கிற் கு 5000 கொடுத்தது - சகோ. அப்துல் அஸீஸ்.

சகோதரி ஷாஜிதாவுக்கு சகோதரர் அப்துல் அஸீஸ் அனுப்பிய 13000 அட்மின்சன் கிடைக்க உதவியது. - சகோ. ஜமீல்.

அப்துல் ரஹ்மான் ஜகாத் அரக்கட்டளையின் உதவியால் 5000+32000 கிடைக்கப்பெற்று அந்த சகோதரி திருச்சியில் கல்லூரியில் சேர்ந்தார் - சகோ. அதிரை வாசகன்.

இதில் எது தான் உண்மை?.

இந்தச் சகோதரியின் முழு படிப்புச் செலவு அதிகபட்சம் ஒன்றரை இலட்சம் ஆகுமா? 1080 மதிப்பெண் பெற்ற, தந்தை இல்லாத, சிறுபான்மையினரா ன ஏழை மாணவிக்கு உயர் கல்வியை இலவசமாக வழங்க அரசு முன் வராதது ஏன்?. அதற்கான தகுதி இவருக்கு இல்லையா? சமுதாயத்திற்காக ப் போராடும் சமுதாய இயக்கங்கள் எங்கே சென்றன?. இத்தகைய அனைத்துத் தகுதிகளும் உடைய ஏழை மாணவியின் உதவிக்கு முன்வரமால், வேறு யாருக்காகத் தான் இந்த இயக்கங்கள் போராடுகின்றன?. ஒரு ஏழை மாணவிக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் செலவு செய்வதற்கு இந்த ஏலம் ஏன்?

ஆளாளுக்கு உறுதிபடுத்தாத செய்திகளைப் பரப்புவது - முக்கியமாக சகோ. ஜியாவுதீன் மற்றும் சகோதரர் அதிரை வாசகன் - அந்த ஏழை மாணவியின் கல்வியைத் தான் பாதிக்கும் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். இயன்றால் தங்களால் முடிந்ததை அந்த மாணவிக்குச் செய்யுங்கள். அல்லாமல் அவர் பொறுப்பெடுத்துக ் கொண்டார், இவர் செய்து விட்டார் என்று மற்றவர்கள் செய்ததை/செய்யாத தை விளம்பரப்படுத்த ி அம்மாணவியின் எதிர்காலத்தை ஏலம் போட வேண்டாம்.

ஒருவேளை பலர் அந்த மாணவிக்கு உதவி செய்வதாகவே இருக்கட்டுமே..? தந்தை இல்லாத, ஒரு தாயின் உழைப்பில் முன்னேறியிருக்க ும் இம்மாணவியின் குடும்பத்திற்கு அவை இனிவரும் காலத்திற்கு உதவியாக இருக்கட்டுமே. உரிய பாதுகாவலர் இல்லாத இக்குடும்பத்தைத ் தத்தெடுத்து முழு செலவையும் கவனிக்க வேண்டியது இந்தச் சமுதாயத்தின் பொறுப்பில்லையா? எனது எல்லைக்குள் ஒரு நாய், குடிக்க நீரின்றி தாகத்தால் இறப்பினும் அதற்கு நானே பதில் கூற வேண்டும் என பயந்தத் தலைவரைக் கொண்ட இச்சமுதாயம், குடும்பத்தைக் கவனிக்கத் தந்தையில்லாமல் வளர்ந்த இச்சகோதரியின் இனி வரும் எதிர்கால அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கக் கடமைபட்டதில்லைய ா? எனவே அவர் செய்து விட்டார், இவர் கொடுத்து விட்டார் என்பது போன்ற ஏலம் போடல் அனைத்தையும் விட்டுத் தள்ளி விட்டு, அவரவரால் இயன்றதை இச்சகோதரிக்கு அனுப்பிக் கொடுங்கள். அது தான் தற்போதைய தேவை.
-இறை நேசன்.
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #12 சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
அன்புச் சகோதரர் இறை நேசன்,

தங்களது பின்னூட்டத்தில் சில சொற்கள் நீக்கப் பட்டுள்ளன.

புரிதலுக்கு நன்றி!

சுட்டிக் காட்டிய சகோதரர்களுக்கும ் நன்றி!
Quote | Report to administrator
மு முஹம்மத்
0 #13 மு முஹம்மத் -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே

அல்ஹம்துலில்லாஹ் வ ஜஸாக்கல்லாஹு கைர்

//அவரவரால் இயன்றதை இச்சகோதரிக்கு அனுப்பிக் கொடுங்கள். அது தான் தற்போதைய தேவை.//

இன்ஷா அல்லாஹ் வழி மொழிந்து என்னால் ஆனதை அந்த பாங்க் கணக்கில் கொடுத்துதவ உறுதி செய்கிரேன்.

அல்லாஹ் உதவி புரிவானாக.

மு முஹம்மத்.
Quote | Report to administrator
அதிரை வாசகன்
0 #14 அதிரை வாசகன் -0001-11-30 05:21
//ஒருவேளை பலர் அந்த மாணவிக்கு உதவி செய்வதாகவே இருக்கட்டுமே..? தந்தை இல்லாத, ஒரு தாயின் உழைப்பில் முன்னேறியிருக்க ும் இம்மாணவியின் குடும்பத்திற்கு அவை இனிவரும் காலத்திற்கு உதவியாக இருக்கட்டுமே. உரிய பாதுகாவலர் இல்லாத இக்குடும்பத்தைத ் தத்தெடுத்து முழு செலவையும் கவனிக்க வேண்டியது இந்தச் சமுதாயத்தின் பொறுப்பில்லையா?//

சகோதரர் இறைநேசனின் கோபம் நியாயமானதே. கல்வியில் பின்தங்கியுள்ள சமூகத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அம்மாணவிக்கு எவ்வளவு பரிசுகள் கொடுத்தாலும் தகும்.

அதேசமயம் நேரிடையாக சந்தித்து கிடைத்த தகவலின் அடிப்படையிலே அந்த பின்னூட்த்தை இட்டேன்.


இது தொடர்பாக மேலும் உறுதிப்படுத்திக ்கொள்ள எண்ணி இந்த உதவியில் நேரிடையாக ஈடுபட்டிருந்த நபரை தொலைபேசியில் (பின்னர் நேரிடையாக) தொடர்பு கொண்டேன்.

அவருடைய செய்தியின் படி, ரூ 5000/- முதற்கட்டமாக ஆற்Dஆ என்கிற அமைப்பின் மூலம் கவுன்சிலிங்கிற் காக கொடுக்கப்பட்டது . (இதே தொகை மேலும் இருவருக்கும் கொடுக்கப்பட்டது)

பின்னர், சகோ. அஹ்மத் (அறக்கட்டளை மூலமாக அல்ல) மூலம் மூவருக்கும் ரூ 31,215 *3 பேருக்கான கல்வி உதவியை ஆற்Dஆ பெற்றுக்கொடுத்த ு கல்லூரியில் சேர்த்திருக்கிறார்கள்.

அத்துடன் அந்த மூன்று மாணவிகளுக்குமான விடுதி(மெஸ்) கட்டணம் ரூ12000 *3 பாக்கி இருப்பதாகவும் (இதுதொடர்பாக டோனார்ஸை அனுகி இருப்பதாக மேற்கண்ட நபர் சொன்னார்)

சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்திற்கு,

இதுபோன்ற அத்தியாவசிய உதவிகளை நேரிடையாக நீங்களே முன்னின்று செய்யலாமே? இதனால் தேவையுடைய ஏழை மாணாக்கர்கள் பலர் பயனடைவதுடன், உதவிகளை தக்க சமயத்தில் பெற்றுக்கொண்டனர ா என்பதை அறிய முடிவதுடன் வழிகாட்டவும் முடியுமே. (நேரிடையான களப்பணி முக்கியம்)

(இதுபோன்ற ஒன்றிரண்டு காரியங்களில் நேரிடையாக ஈடுபட்ட அனுபவம். அதில் ஒன்று பிரசுரித்தது. பின்னர் ஏமாற்று பேர்வழி என்று தெரிய வந்தது. அதனாலேயே நேரிடையாக பங்கு பெற வேண்டுகோள். இனி வரும் காலங்களில் நேரிடையான வங்கி முகவரிகள் வேண்டாமே. இது இந்த மாணவியை கொச்சைபடுத்துவத ாக எண்ணவேண்டாம்.)

பிற்சேர்க்கை:

1. கல்லூரி மெஸ் பீஸ் (ரூ 1200௧300 வரை மாதம் ஒன்றிற்கு ) ஒரு வருடத்திற்கான கையிருப்பு தேவை. (மூவருக்குமாக செய்யலாம்)

(இவருடைய மாமா இதற்காக வங்கியில் கடன் பெற இருப்பதாக கூறியதாக அறிய முடிகிறது. அதே சமயம் மேற்கண்ட உதவிகளை பெற்றுத்தந்தவர் களே மற்ற செலவினங்களுக்கு ம் முயல்வதாக தெரிகிறது. )

2. பத்தாவதில் 493 மதிப்பெண்கள் பெற்ற சகோதரி ரிபாயா பேகம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர். தந்தை சாதாரன மளிகைக்கடை வைத்திருக்கிறார ், (அம்மாபட்டிணம் பூர்வீகம்) வசிப்பது தாமரங்கோட்டை கிராமம் (அதிரை 3கிமீ) மாவட்ட முதல், மாநில அளவில் 3வது (என்று நினைக்கிறேன்). கருணாநிதி 5000 கொடுத்ததாகவும், (தஞ்சை கலெக்டரை சந்திக்ககூட பஸ்ஸிற்கு கூட வசதியற்ற நிலையில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.) தற்போது பட்டுக்கோட்டை பள்ளி ஒன்றில் சேர்ந்திருக்கிறார்.

இவருக்கும் சாஜிதா பானுக்கும் (BBஆ) உதவிகள் தேவைப்படுகிறது.

அதிரை வாசகன்
Quote | Report to administrator
அதிரை வாசகன்
0 #15 அதிரை வாசகன் -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரி சாஜிதாவை அதிரை பைத்துல்மால் நேரிடையாக சந்தித்து அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்து பி.எஸ் அப்துற்றஹ்மான் ஜகாத் அறக்கட்டளைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிரை அர்டா அமைப்பினர் மூலம் அனுப்பியிருந்தனர்.

பின்னர் மேற்கண்ட ஜகாத் அரக்கட்டளையின் உதவியால் 5000+32000 கிடைக்கப்பெற்று அந்த சகோதரி திருச்சியில் கல்லூரியில் சேர்ந்ததை அறிகிறேன். அவருடைய தாய்மாமா அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடம் கல்லூரி விடுதி கட்டணம் போன்ற இதர செலவுகளுக்கு பணம் தேவை என்றும் வங்கியில் லோன் எடுக்கயிருப்பதா கவும் சொன்னாராம்
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #16 சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
அன்புச் சகோதரர் அதிரை வாசகன்,

தங்கள் வேண்டுகோளுக்கிண ங்க தங்களது முதலாவது் பின்னூட்டம் திருத்தப் பட்டுள்ளது.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்