முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உதவிக்கரம்

இறந்தும் தொடரும்  உதவி செய்ய வாரீர்! ராசரியாக ஒரு மனிதன் இவ்வுலகில் வாழும் காலம் சுமார் 60 வருடங்கள் என நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். இவ்வுலகிலும் மறு உலகிலும் நிரந்தரமாக வாழ வேண்டும் என்ற அவா ஒவ்வொரு முஸ்லிமின் அடிமனதிலும் இருக்கும். மறு உலகில் நிரந்தரமாக வாழ்வதற்குப் பல வழிகள் உள்ளன. அது சாத்தியமும் கூட. ஆனால் இவ்வுலகில் நிரந்தரமாக வாழ முடியுமா? முடியும்.

ஆம், இஸ்லாம் முடியும் என கூறுகின்றது. மட்டுமல்ல, அது எவ்வாறு என அதற்கான வழிகளையும் பட்டியலிடுகின்றது. ஒருவன் மரணித்து விட்டால் பின்னர் இவ்வுலகோடு அவனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை - அவன் விட்டுச் சென்ற மூன்றைத் தவிர:

1. பயனுள்ள கல்வி

2. நிலையான தர்மம்

3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் பிள்ளைகள்.

ஒருவன் செய்யும் இச்செயல்கள் இவ்வுலகம் அழியும் நாள்வரை அவன் இவ்வுலகில் மரணித்த பின்னரும் வாழ்வதற்குப் போதுமானவை. அத்தகைய சதக்கத்துல் ஜாரியாவைச் செய்து அறுபடாத நன்மைகளை அள்ளிக் கொள்ள ஒவ்வொரு முஸ்லிமும் முன்வரவேண்டும்.

இதோ அத்தகைய சதக்கத்துல் ஜாரியாவை எதிர்பார்த்து ஒரு சகோதரி.

தஞ்சை மாவட்டத்திலுள்ள பேராவூரணியை அடுத்த முடச்சிக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சகோதரியின் பெயர் ஸாஜிதா பேகம். சிறு வயதிலேயே தந்தையை இழந்தத் தனது மகளை வீடுகளில் ஏறி இறங்கி துணிகளை விற்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு வரை படிக்க வைத்திருக்கின்றார் இவரின் தாயார். குடும்பம் வறுமையில் வாடியபோதும் தனது படிப்பில் எவ்வித வெறுமையைக் காண்பிக்காமல் நன்றாகப் படித்து மேல்நிலை இரண்டாம் ஆண்டில் 1200க்கு 1080 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் சகோதரி ஸாஜிதா.

பேராவூரணி அரசு பள்ளியிலேயே பயின்று வந்த இந்தச் சகோதரி, 6ஆம் வகுப்பிலிருந்து வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது. கணிணிப் பொறியாளராக வேண்டும் என்ற கனவு கொண்ட இச்சகோதரிக்கு உரிய உதவியைச் செய்ய, வீடுகளில் சென்று துணி விற்றுப் பிழைக்கும் இவரின் தாயார் சாராம்மாளால் முடியக்கூடிய காரியமல்ல. பணவசதியிருந்தும் படிக்காமல் போவது விதி. ஆனால், படிக்கக்கூடிய எண்ணமும் அறிவும் இருந்தும் வசதியின்மையால் படிக்க முடியாமல் போவதை விதி எனப் புறந்தள்ள முடியாது. இதற்கானப் பொறுப்பைச் சமுதாயம்தான் ஏற்க வேண்டும்.

6ஆம் வகுப்பிலிருந்தே முதல் மாணவியாகத் திகழ்ந்த இச்சகோதரி சமுதாயத்தால் அப்பொழுதே அடையாளம் காணப்பட்டு உரிய உதவிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். வீட்டை நிர்வகிக்க வேண்டிய ஆணின் துணையின்றி, தனியாளாக ஒரு தாய் கஷ்டப்பட்டுத் தனது மகளை மேல்நிலை வரை கொண்டு வந்திருப்பதே மெச்சத்தக்க, போற்றத்தக்க விஷயமாகும். இனிமேலும் அத்தாய் தனது மகளின் எதிர்காலத்திற்காகத் தனியாகக் கடுஞ்சுமை சுமக்கலாகாது. அதற்கான அனைத்து உத்தரவாதங்களையும் ஏற்க வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.

எனவே சமுதாய சிந்தனை கொண்ட உயர்ந்த உள்ளங்களே, உங்களின் கடமையைச் செய்ய ஓடோடி வாருங்கள். தனியொருவனின் நலனிலேயே சமுதாயத்தின் வளர்ச்சி அடங்கியுள்ளதை மறந்துவிட வேண்டாம்.

இஸ்லாம் இவ்வுலகில் நிரந்தரமாக வாழக் காண்பித்துத் தரும் வழியில் செல்லத் தக்கதொரு தருணம் இது. வசதியற்ற, நன்றாகப்படிக்கக் கூடியவர்களின் உயர்கல்விக்காக உதவுதல் மூலம் பயனுள்ள கல்வி இவ்வுலகில் உங்கள் மூலம் பரவ வழி செய்கின்றீர்கள். அழியாத கல்விக்கான உதவியின் மூலம் நிலையான தர்மத்தைச் செய்கின்றீர்கள்.

ஒரே உதவியில் இஸ்லாம் காண்பித்த மூன்று வழிகளில் இரண்டை அடைந்து கொள்ளத் தக்க இவ்வரிய வாய்ப்பைத் தவற விடாமல் உடனடியாக இச்சகோதரிக்கு நமது உதவிகளைச் சேர்த்து வைப்போம்.

நன்மை செய்வோம்; நன்மை கொள்வோம்!

சகோதரியின் முகவரி:

எம். ஸாஜிதா பேகம்,

தாயார் பெயர்: சாராம்மாள்,

98/495, முஸ்லிம் தெரு,

பள்ளிவாசல் அருகில்,

முடச்சிக்காடு,

பேராவூரணி - 614804.

தஞ்சை மாவட்டம்.

Comments   

ஜமீல்
0 #1 ஜமீல் -0001-11-30 05:21
தகுதியறிந்து கல்விக்காகச் செய்யும் உதவிகளைச் செய்ய நம் சமுதாயம் ஒருபோதும் தயங்கியதில்லை.

எனது பங்களிப்பை இங்கு உறுதி செய்கிறேன்.

நம் நல்லறங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!
Quote | Report to administrator
Sathick
0 #2 Sathick -0001-11-30 05:21
இந்த சகோதரியின் வங்கி விபரம் இருந்தால் பணம் அனுப்ப ஏதுவாக இருக்கும். சாதிக் USA
Quote | Report to administrator
AbdulHameed
0 #3 AbdulHameed -0001-11-30 05:21
நெகிழ்ச்சியான விஷயம் இது. இன்ஷா அல்லாஹ் இச்சகோதரிக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்ய நாடுகிறேன். இதனைச் சத்தியமார்க்கம் தளத்திற்கு அனுப்பவேண்டுமா அல்லது இச்சகோதரி முகவரிக்கா என்பதை தெரிவியுங்கள்.
Quote | Report to administrator
abdul azeez
0 #4 abdul azeez -0001-11-30 05:21
சத்யமார்க்கம் இணையதலமே தாங்கள் ஒவ்வொன்றையும் அருமையாக போடுகிறீர்கள். இதை தான் எதிர்ப்பார்க்கி றேன். அதே வேளையில் உயர்கல்வி பயில உதவியை எதிர்பார்க்கும் மாணவி சகோதரி ஷாஜிதாவின் மேற்படிப்பிற்கா க வாழ்த்துகிறேன். அவரின் வீட்டு முகவரியை போட்ட நீங்கள் பேங்க் அக்கௌண்ட் நம்பர் போன்ற விபரங்களை எழுதினால் வெளிநாட்டில் உள்ளவர்கள் நேரடியாக சகோதரியின் கைக்கு கிடைப்பது மாதிரி கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ அனுப்பிவைக்க. வசதியாக இருக்கும் அல்லவா ?
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #5 சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
கல்லூரியில் சேரவேண்டிய காலம் மிகக் குறுகியதாக இருப்பதால் மணியார்டர் மூலமாகவோ நேரடியாகவோ உதவி செய்ய விரும்புவோர் செய்யலாம் என்ற நல்லெண்ணத்தில் செய்தியை மட்டும் பதித்தோம்.

சகோதரியின் படிப்புக்கான பொருளாதார உதவிகளை அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விபரங்களைக் கேட்டு மடல் அனுப்பி இருக்கிறோம்.

பதில் வந்தவுடன் இங்குப் பிரசுரிக்கப் படும், இன்ஷா அல்லாஹ்.
Quote | Report to administrator
அல் அமீன்
0 #6 அல் அமீன் -0001-11-30 05:21
அல்ஹம்துலில்லாஹ்.

மிக நல்லதொரு முன்மாதிரியைக் காண்பிக்கின்றீர ்கள். கிடைக்கும் நேரங்களில் சகச் சகோதரர்களின் குறை ஆய்ந்து மாமிசம் உண்டு வாழும் இக்கால 'சமுதாயத் தலைவர்கள்/இயக்க ங்கள்/அமைப்புகள ுக்கு' இடையில், சமுதாயத்திற்கு எதைச் செய்ய வேண்டும் என்பதை அவ்வபொழுது சரியாக செயல்பாட்டின் மூலம் சுட்டிக் காண்பிக்கின்றீர ்கள். இதை அவர்கள் உணர்கின்றார்களோ இல்லையோ, சமுதாய அங்கங்கள் நல்லமுறையில் புரிந்து கொள்கின்றனர் என்பதை இங்கு வந்துள்ள பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன. தொடரட்டும் உங்கள் சமூக நலப்பணி.

என்னால் இயன்ற உதவியைச் செய்யவும் நாடியுள்ளேன். அதனை இந்தச் சத்தியமார்க்கம் மூலமாக செய்யலாம் என்ற ஆவல் உள்ளது. உங்களுக்கு எவ்விதம் பணம் அனுப்பித் தருவது என்பதைத் தெரிவித்தால் இன்ஷா அல்லாஹ் எனது பங்களிப்பைச் செய்கின்றேன்.

எனது மடல் முகவரி:

-அல் அமீன்.
Quote | Report to administrator
ஜியாவுதீன்
0 #7 ஜியாவுதீன் -0001-11-30 05:21
சாஸிதாவுக்குத் தீர்வு!

பேராவூரணியில் இருந்து சாஸிதா என்ற மாணவி நம்மைத் தொடர்பு கொண் டார்.

''நாங்க ரொம்ப வறுமையான குடும் பத்தைச் சேர்ந்தவங்கண்ணே . அப்பா கிடையாது. அம்மா துணிமணிகளை வாங்கி நடந்து போய் வியாபாரம் பண்றவங்க. இவ்வளவு வறுமையிலும் 1080 மார்க் வாங்கினேன். மேற்கொண்டு படிக்கிறது எப்படின்னு தெரியலை. அண்ணா யுனிவர் சிட்டிக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எப்படியும் ஃப்ரீ ஸீட் கிடைச்சிடும். ஆனா, இதர செலவுகளைப் பெரிய மனசுள்ள யாராவது ஏத்துக்கிட்டா புண்ணியமா போகும்'' என சோகத்தோடு சொன்னார் சாஸிதா.

கும்பகோணத்தில் இருக்கும் ஹலிமா எஜுகேஷனல் அறக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்து விஷயத்தைச் சொன்னோம்.

''சாஸிதாவின் படிப்பு செலவுகளை யும் இதர செலவுகளையம் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோ ம். இனி சாஸிதா எங்கள் குழந்தை!'' எனப் பெருமனதோடு சொன்னார்கள் ஹலிமா அறக்கட்டளை நிர்வாகிகள்

நன்றி: ஜுனியர் விகடன்
Quote | Report to administrator
abdul azeez
0 #8 abdul azeez -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கு ம். சகோதரர் ஜியாவுதீன் அவர்களின் பின்னூட்டம் சகோதரி சாஜிதாவுக்கு தீர்வாகிவிட்டது என்று போட்டதை. இந்த தளத்திற்கு பின்னூட்டம் போடும் அனைத்து சகோதரர்களும் நினைத்து விடவேண்டாம். ஏன் ? என்றால் ஹலிமா எஜுகேஷனல் அறக்கட்டளை இச்சகோதரிக்கு பொறுப்பேற்றது அநாதைக்கு ஏற்றது போல் என் பார்வையில் தோற்றம் அளிக்கிறது.. ஆரம்பத்திலிருந் து யார் துணையும் இல்லாமல் தாயாரே ! இவ்வளவு தூரம் கொண்டுவந்தபிறகு . முடியாத பட்சதிற்க்கு சகோதரர்களான நாமேன் அந்த சகோதரிக்கு பிறருக்கு பாரமில்லாமல் சுயசெளவில் தான் இன்றுவரை படிக்கின்றார் என்ற கவுரவத்தை கொடுத்துவிடலாமே ! நாம் என்ன அனாதை இல்லமா ? வைத்து நடத்துகிறோம்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #9 சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
அன்புச் சகோதரர்களுக்கு,

சகோதரி ஸாஜிதாவுக்கு இன்னும் முழுமையான வழி பிறக்கவில்லை.

சகோதரர் அப்துல் அஜீஸின் கருத்து உண்மையாகிப் போனது.

மற்றவர் அரிசி போடட்டும் என்ற நல்ல(!) எண்ணத்தில் எல்லாரும் வெறும்கையை உலைப் பானையில் காட்டி விட்டுப் போனதால் கடைசியில் சோற்றுக்குப் பதிலாக வெந்நீரை மட்டும் கண்ட கதையாகச் சகோதரி ஸாஜிதாவின் நிலை இருக்கிறது என்பதைச் சத்தியமார்க்கம் .காம் விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு க் கொண்டு வந்திருக்கிறது என்பதை இங்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் முழு விபரமும் தீர்வும் இங்கு பகுதியில் இடம் பெறும்.
Quote | Report to administrator
abdul azeez
0 #10 abdul azeez -0001-11-30 05:21
Government of India
Ministry of Minority Affairs
Home Page | Search | Site Map | Feedback

What's New?
Press Releases
Proposal Notices
Tender Notices
Employment Advertisements
Communication to States
Schemes/Program mes
S/W Merit-cum-Means
PM 15 Points Programme
Sachar Committee Report
Right to Information
Subject Allocated
Legislations
Minister
Organization Setup
Administrative Setup
Linked Organizations
Annual Report
Other Reports
Budget & Accounts
CCA UCs/Grants-in-a id
Parliament Q&As
Disclaimer
Contact Us
GoI DirectoryProgramme and Guidelines for Preparation of Multi-sectoral District Development Plans for Minority Concentration Districts.DISCLAIMER

All efforts have been made to make the information as accurate as possible, Ministry of Minority Affairs (MoMA) or National Informatics Centre (NIC), shall not be responsible for any loss to any person caused by inaccuracy in the information available on this Website. Any discrepancy found may be brought to the notice of MoMA or NIC.

This site is best viewed at 800x600 resolution
Contents provided & Maintained by Ministry of Minority Affairs, Govt. of India, New Delhi
Site Designed & Hosted by Minority Affairs Informatics Division of
National Informatics Centre (HQRS), GoI, New Delhi


www.minorityaffairs.gov.in

அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து முஸ்லிம்களுக்கு ம். எனக்கு சகோதரர் ஜமீல் என்பவர் நேற்று போன் செய்து சகோ ஷாஜிதா மேற்படிப்பை அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கேட்டார்.அனைவரு ம் கைவிட்டதாக சொன்னார் ஆரம்ப அட்மிசின் மட்டும் கொஞ்சம் சிரமம். அது முடிந்தால் பிறகு சுலபமாக அமையும். ஆனால் யாரும் முன்வரவில்லை என்பது கவலையாக உள்ளது. அப்துல் ரஹ்மான் ஜகாத் அறக்கட்டளை ஐந்து ஆயிரம் உதவியது போன்றவை இந்த சகோதரர்க்கு சொன்னேன். இப்ப அவர்களும் கை விரித்துவிட்டதா க சொன்னார். சத்தியமார்க்கம் இணைய தளமும் இச்சகோதரரும் என்னையும் சேர்ந்து உதவும் பட்சத்தில் ஆலோசனை கேட்டார். நான் சாதாரண க்ளீனர் மாதம் ஆயிரம். சம்பளம் பெறுகிறேன். வாடகை வீடு. என் சக்திக்கு முடிந்ததை என்னால் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். இன்னும் ஐந்து மாதத்தில் எங்கள் கம்பனி காண்ட்ராக்ட் டெண்டர் நோட்டீஸ் வருமாம். காண்ட்ராக்ட் கிடைக்குமா ? அல்லது கிடைக்காதா என்பதும் சந்தேகமே ! மேலும் சத்யமார்க்கம் இணையம் உங்கள் அடுத்த கட்ட முயற்சி என்ன ? இதில் மைனாரிட்டி அபைர்ஸ் என்ற உதவும் சைட் இணைத்துள்ளேன் அவர்களிடம் அணுகும் முறையுடன் அணுகி உதவி செய்து கொடுங்கள். சகோ.ஜமீளுக்கு நான் சொன்ன கத்தார் அறக்கட்டளை தேடி பார்த்தவரை கூகிளில் கிடைக்கவில்லை.உ ங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
R.Thoufeek
0 #11 R.Thoufeek -0001-11-30 05:21
salam.
now what hapend about this girl
now she was join r not.where is she studying now.sendm pls
masalam
Quote | Report to administrator
abdul azeez
0 #12 abdul azeez -0001-11-30 05:21
சகோதரர் தொவ்பீக் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரி சாஜிதா அவர்கள் திருச்சி அண்ணா யுனிவெர்சிட்டி இல் சேர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறார். இந்த நோன்பு பெருனாளுக்காக இரண்டு நாள் விடுமுறையில் அவர் வீட்டிற்கு வந்தாராம். அவர் தாயாரிடம் போன் செய்து விசாரித்தேன். அவர்களிடம் மொபைலோ அல்லது டெலிபோன் வசதியோ கிடையாது. நேர் எதிர்வீட்டுக்கு போன் செய்து அவர்கள் வீட்டில் கொடுக்க சொல்லி பேசுவேன். இன்னொரு விஷயம். அந்த எதிர்வீட்டுக்கா ரர்கள். வேற இடம் மாரிபோகிறார்கள் . இப்பொழுது சாஜிதா வீட்டிலிருந்த ஒரு மைல் தூரம் இருக்குமாம். எந்த செய்தியானாலும் சொல்லுங்கள் நான் போய் சொல்லிவிடுகிறேன ். என்கின்றார் சொந்தமாக ஒரு மொபைல் வாங்கிக்க சொல்லியும் சொன்னாராம் அதுவே ! அவர்களுக்கு சிரமம் தான் ஆனால் யாரும் உதவுவதாக முன்வரவில்லை. எந்த நேரமும் பள்ளியை விட்டு விலக நேரிடும். கூடுமானவரை என்னால் ஆனதை அல்லாவிற்காக அர்ப்பணிக்கிறேன்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
ஜமீல்
0 #13 ஜமீல் -0001-11-30 05:21
அன்புச் சகோதரர் தவ்ஃபீக்,

சகோதரி ஸாஜிதா (ஜாஜிதா) தற்போது திருச்சியிலுள்ள கல்லூரி ஒன்றில் கணினி-தகவல் தொழில் நுட்பப் பிரிவில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார ். நுழைவுக் கட்டணத்திற்கான பண உதவியைச் சகோ. அப்துல் அசீஸும் அவர் போன்ற நல்லுள்ளம் கொண்ட சில சகோதரர்களும்் செய்தனர்.

முதலாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம், அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை நிர்வாகச் சகோதரர் ஒருவர் மூலமாகச் செலுத்தப் பட்டது.

இரண்டாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம், ஹாஸ்டல் செலவு எல்லாம் சேர்த்து ரூபாய் 60,000ஐப் பெயர் வெளியிட விரும்பாத, சத்தியமார்க்கம் .காம் வாசகர் ஒருவர் அண்மையில் அனுப்பி இருக்கிறார்.

மேற்கொண்டு உதவ விருப்பமுள்ள சகோதரர்கள்,
Jajitha begam
Indian Overseas Bank,
SB Account No. 7375
Pookkollai 749

என்ற பெயருக்கு பேங்க் டூ பேங்க் வழியாக அனுப்பலாம்.

ட்ராஃப்ட் அனுப்ப விரும்புகிறவர்கள்,
www.satyamargam.com/.../ என்ற சுட்டியில் கொடுக்கப் பட்டுள்ள முகவரியைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

நன்றி!
Quote | Report to administrator
abdul azeez
0 #14 abdul azeez -0001-11-30 05:21
அனைத்து முஸ்லிம்களுக்கு ம் அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் ஜமீல் நீங்கள் அண்மையில் உதவியதாக போட்டுள்ள ஷிஃபா மருத்துவமனை நிர்வாகச் சகோதரர் அவர்களுக்கும் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம், ஹாஸ்டல் செலவு எல்லாம் சேர்த்து ரூபாய் 60,000ஐப் பெயர் வெளியிட விரும்பாத, சத்தியமார்க்கம் .காம் வாசகர் ஒருவர் அண்மையில் அனுப்பி இருக்கிறார். இவருக்கும் அல்லாஹ்விடத்தில ் துஆ செய்கிறேன்.

நீங்கள் புதிதாக ஒரு அக்கௌன்ட் நம்பர் போட்டுள்ளீர்கள் இது சத்யமார்கதில் வெளியிடாத ஒன்று அந்த சகோதரியின் பெயரிலேயே ! உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம் அந்த பெயரில் மட்டும் தான். எழுத்து பிழையா ? அல்லது அப்படியே ! தானா ?

Jajitha begam or shajidha begum alladhu sajidha begum


நன்றாக விவரிக்கவும் சிறு பிழையாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர ்களிடம் கிடைப்பது சிரமமாகிவிடும்.

மா சலாம்.

அப்துல் அசீஸ்
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #15 சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
அன்புச் சகோதரர் அப்துல் அசீஸ்,

சத்தியமார்க்கம்.காம் தளத்தின் சிறப்புப் பிரதிநிதி பெருநாள் விடுமுறையின்போத ு முடச்சிக்காட்டு க்கு நேரடியாகச் சென்றபோது சகோதரியிடமிருந் து பெற்ற அவரது சொந்த வங்கி விபரப்படி Jajitha Begam என்றே வங்கிக் கணக்கு உள்ளது. முழு விபரம்:
Jajitha Begam
Indian Overseas Bank,
SB Account No. 7375
Pookkollai 749
Peravurani TK
Thanjavur DT
Tamilnadu
India.


இந்தக் கணக்கு நாம் செய்தி வெளியிட்ட பிறகு தொடங்கியதாகும்.

www.satyamargam.com/.../ என்ற சுட்டியில் நாம் கொடுத்திருந்தது சகோதரியின் தாயாருடைய வங்கிக் கணக்கு விபரங்களும் வீட்டு முகவரியுமாகும்.

பெயர் வெளியிட விரும்பாத சகோதரர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சகோதரியின் புதிய அக்கவுண்ட் விபரங்களை நாம்தான் அவருக்குக் கொடுத்தோம்.

கொடையுள்ளமும் கொடுத்துதவும் நற்பண்பும் நிறையப் பெற்ற சகோதரர்களுக்கு அல்லாஹ் அதிகமதிகம் அருள் புரிவானாக.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்