முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உதவிக்கரம்

சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் வசதிக் குறைவான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவிகளை செய்ய இளவரசர் அல் வலீத் பின் தலால் முன் வந்துள்ளார்.

சவுதி அரேபிய அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் அல் வலீத்.  பெரும் செல்வந்தரான இவர் உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார்.  இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி, சிகிச்சை உதவி ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

WAMY எனப்படும் 'உலக முஸ்லிம் இளையர் அமைப்பு', சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் வழங்கப்படும்.

இந்த நிதியுதவியைப் பெறும் தேவையுடையவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் ரியாத் நகரில் உள்ள WAMY தலமையகத்தைத் தொடர்பு கொள்ளலாம். 

சகோ. ஹமாத் அல் அசிம்,

WAMY தலைமையகம்,

கிங் ஃபஹத் சாலை,

உவைஸ் மார்க்கெட் எதிரில்,

ரியாத் - சவுதி அரேபியா

தொலைபேசி எண்- 2050000

Mr Hamad Al Asim

WAMY Head Quarters,

King Fahd Road,

Opposite Owais Market.

Riyadh- Saudi Arabia.

(Phone No: 2050000)

Comments   

முஸ்லிம்
0 #1 முஸ்லிம் -0001-11-30 05:21
நல்ல சேதி!

சவூதியில் பணி செய்து வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உடல் நலக்குறைவில் சவூதி அரசு ஒரு சதவிதமும் அக்கறைக் காட்டுவதில்லை. மருத்துவ விஷயத்தில் வெளிநாட்டினரை மனிதர்களாக் கூடக் கருதாமல் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார ்கள். இந்நிலை மாறவேண்டும்.

மருத்துவ உதவி என்பது வெறும் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷத்து உதவுவதில்லை. மாறாக உயிருக்கு அபாயத்தை விளைவிக்கும் நோய்க்கு உடனடி உதவி செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

//WAMY எனப்படும் 'உலக முஸ்லிம் இளையர் அமைப்பு', சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும் . அதன் பேரில் உதவிகள் வழங்கப்படும் //

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய ஒருவருக்கு பரிந்துரை பேரில் உதவி எதிர்பார்த்திரு ந்தால் அவர் பரலோகம் போய் சேர்ந்த பின்பே உதவி வந்து சேரும். ஏனென்றால் பரிந்துரை பேரில் கிடைக்கும் அரசு உதவிகளெல்லாம் உடனுக்குடன் கிடைப்பதில்லை, இதுவும் மாற்றப்பட வேண்டும்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்