முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உதவிக்கரம்

கால் ஊனமுற்ற ஏழை பெண்ணுக்கு கல்வி உதவி செய்ய இயலுமா? என்று சிங்கப்பூரைச் சேர்ந்த சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மன்றம் பகுதியில் கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க சத்தியமார்க்கம் தளக்குழுவினர் இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த சில சகோதரர்களின் உதவியுடன் விபரங்கள் சேகரித்தனர். இச்சகோதரியின் குடும்பத்தினருடன் உரையாடிதன் மூலம், கிடைத்த தகவல் உண்மை என்ற அடிப்படையில் இச்சகோதரிக்கு உதவ சமுதாயத்திடம் சத்தியமார்க்கம்.காம் வேண்டுகோள் வைக்கிறது.

சகோதரி J. உமர்கனி

ஊனம் என்பது உடலில் மட்டுமே உள்ளத்தில் இல்லை என்பதை உலகிற்குப் பறைசாற்றும் விதத்தில், கடுமையான உழைப்பின் மூலம் பயோ டெக்னாலஜி(Bio Technology) பிரிவில் முதுநிலைப்பட்டம் (Master) பெற்றுள்ள இவர் ஸ்டெம்செல்லைக் குறித்து முனைவர் (Phd) தகுதிக்கு தற்போது தயாராகிக் கொண்டு இருக்கிறார். இதற்கான மேற்படிப்பிற்கு இவருக்கு பிரபல ரஷ்ய பல்கலைகழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது.

சமுதாயம் கல்வி விஷயத்தில் மிகவும் பினதங்கி இருக்கும் பொழுது கால் ஊனமுற்ற நிலையிலும், மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இச்சகோதரி ஆவலுடன் படிப்பை விடாது தொடர்ந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரிய செய்தியாகும்.

"கல்வி என்பது என் சமுதாயத்திற்கு காணாமல் போன ஒட்டகத்தைப் போன்றதாகும். அதனை எங்கு காண்பினும் முயன்று பெற்றுக் கொள்ளுங்கள்" என எம்பெருமானார் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்திச் சென்றுள்ளார்கள்.

கல்வியில் சமுதாயம் அதிக அக்கறை காட்டாததன் விளைவை இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம் சமூகம் அனுபவித்துக் கொண்டு வருகிறது. இவ்வேளையில் சமுதாய வருங்காலத்தை மனதில் கொண்டு கல்வியில் அதிக அக்கறை காட்ட முன் வரவேண்டும்.

பயோ டெக்னாலஜி என்பது உயிரியல் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் படிப்பாகும். எதிர்காலத்தில் இத்துறை கணினித் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படும் உடலியல் சார்ந்த பிரிவாகும். சமுதாயத்தில் இத்துறை சார்ந்து இளம் சமுதாயத்தினர் முன்னேறுவது சமுதாயத்திற்கு எதிர்காலத்தில் மிகவும் நன்மை பயக்கும் ஒன்றாகும். (இதனைப் பற்றிய விரிவான ஆய்வரிக்கையை சத்தியமார்க்கம்.காம் விரைவில் வெளியிடும் இன்ஷா அல்லாஹ்)

ரஷ்ய பல்கலைக்கழகம் கொடுத்திருக்கும் கால அளவு முடிய இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் நம்பிக்கை இழந்து விடாமல் இறைவனின் கருணையின் மீது நாட்டம் வைத்து இச்சகோதரி காத்திருக்கிறார்.

ஒருவர் இறந்த பின்னும் அவர் நன்மைக்கான தட்டின் கனம் கூடிக்கொண்டே இருப்பதற்கான ஓர் எளிய வழியாக பயன் தரும் கல்வியை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அடையாளம் காட்டி தந்திருக்கின்றார்கள். இச்சகோதரி பெறவிருக்கும் கல்வியின் மூலம் இவ்வுலகிற்கு ஓர் பயன் விளையுமாயின் அதற்குரிய கூலி இவ்வுலகம் அழியும் வரை அதற்காக உதவியவருக்கும் கிடைக்கும்.

எனவே இறைவழியில் செலவழித்து இறந்த பின்னரும் தங்களது நன்மையின் பக்கத்தை அதிகரிக்க விரும்புபவர்கள் இச்சகோதரிக்கு உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

உதவ வேண்டிய முகவரி :

 

J. உமர் கனி,

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

சுவாமிமலை.

வங்கி கணக்கு எண்: 16272

குறிப்பு :

1. இச்சகோதரிக்கு உதவ விரும்புபவர்கள் நேரடியாக மேற்கண்ட வங்கிக் கணக்கில் தங்களது பணத்தை அனுப்பிஉதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சத்தியமார்க்கம்.காம் இவ்விஷயத்தில் ஓர் இணைப்புப் பாலமே அன்றி இது தொடர்பான கணக்கு வழக்குகளுக்கு பொறுப்பாகாது என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

2. அவ்வாறு அனுப்புபவர்கள் தாங்கள் அனுப்பும் பணத்தின் விபரத்தை சத்தியமார்க்கம்.காம் மன்றம் பகுதியில் தெரிவித்தால், அச்சகோதரியின் மேற்படிப்பு எந்நிலையில் உள்ளது என்பதை மற்றவர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வதோடு, தேவையான உதவியை சமுதாய அக்கறை உள்ளவர்கள் மேன்மேலும் செய்வதற்கும் ஓர் வாய்ப்பாக இருக்கும்.

3. இவ்விஷயமாக மேற்கொண்டு ஏதாவது ஆலோசனைகளோ, சந்தேகங்களோ இருப்பின் சத்தியமார்க்கம்.காம் தளத்தினை தொடர்பு கொள்ளுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Comments   

Mohamed Sultan
0 #1 Mohamed Sultan -0001-11-30 05:21
ரஷ்யாவில் இச்சகோதரியின் படிப்பு இத்தனைக் காலம். அதற்கு இவ்வளவு தேவை என்ற விபரங்களும் இருந்தால் உதவ நினைப்பவர்களுக் கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.
Quote | Report to administrator
நிர்வாகி சத்தியமார்க்கம்.காம்
0 #2 நிர்வாகி சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்கள் ஆர்வத்திற்கு நன்றி சகோதரர் முஹம்மத் சுல்தான் அவர்களே,

இச்சகோதரியுடன் தொலைபேசியில் பேசியதில் ரஷ்யா சென்று படிக்க ஆகும் செலவு குறைந்தது ரூ.10 லட்சம் எனவும் இப்படிப்பிற்கான கால அளவு 4 ஆண்டுகள் எனவும் தெரியப்படுத்தினார்.

-நிர்வாகி (சத்தியமார்க்கம ்.காம்)
Quote | Report to administrator
MOHAMED ALI JINNAH
0 #3 MOHAMED ALI JINNAH -0001-11-30 05:21
ASSALAMU ALAIKKUM W.R.B.
DEAR WEB MASTER,

KINDLY PUBLISH UMAR GANI'S CONTACT TEL. No.
IT WILL BE HELPFUL TO THE DONORS
TO CONTACT UMARGANI TO INFORM THEIR
CONTRIBUTION TO MAKE SURE IT HAS REACHED HER.
BANKS ARE KNOWN TO HAVE DELAYS / MISTAKES DUE TO HUMAN ERRORS
( SOMETIMES INTENTLY )

I AM GRATEFUL TO YOU FOR JOINING HANDS
IN THIS GOOD CAUSE. YOU TOO WILL BE REWARDED IN AAKHIRA FOR YOUR PART.INSHA ALLAH AMEEN.

I PLEAD WITH ALL THE READERS TO BE
KIND ENOUGH AND DONATE WHAT THEY
CAN AFFORD - AS TIME IS GETTING SHORT.

REGARDS AND SALAAMS TO ALL.

mohamed ali jinnah.
singapore.
Quote | Report to administrator
நிர்வாகி சத்தியமார்க்கம்.காம்
0 #4 நிர்வாகி சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
சகோதரர் முஹம்மத் அலி ஜின்னா, அச்சகோதரியின் முகவரி கேட்டு எழுதியிருந்தமைக ்கு, முகவரியை நாம் ஏற்கனவே அறிந்திருந்தும் , இணையம் என்பது பொது இடமாதலால் அக்குடும்பத்தின ருக்குச் சில தேவையில்லாதவர்க ள் தரும் சிரமங்களைத் தவிர்க்கவே அவர்களின் முகவரி மற்றும் தொடர்பு எண் போன்றவற்றை இத்தளத்தில் பகிரங்கமாக வெளியிடுவதைத் தவிர்க்கிறோம்.

இறைவனிடமிருந்து நற்கூலியை மட்டும் எதிர்பார்த்து இச்சகோதரிக்கு உதவ விரும்புபவர்கள் , அவர்களின் முழு முகவரியை சத்தியமார்க்கம் தளத்தினருக்குத் தனி மடலில் (admin-at-satya margam.com) தெரிவித்தால் இச்சகோதரியின் குடும்பத்தினருக ்கான தொடர்பு எண்ணை, கேட்டவருக்குத் தனி மடல் வழியே தெரிவிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறோம ்.

மேலும் உதவி அனுப்பிய தேதியைக் குறிப்பிட்டு சத்தியமார்க்கம் தளத்திற்குத் தெரியப்படுத்தின ால் நாமே இச்சகோதரியின் குடும்பத்தினரைத ் தொடர்பு கொண்டு பணம் கிடைத்ததை உறுதி செய்து மீண்டும் பதில் தருவோம்.

பல விஷயங்களில் நாம் முன்னெச்சரிக்கை யாக இருக்க வேண்டி உள்ளதால் தொடர்பு எண்ணை இப்பொது இடத்தில் வைப்பது உசிதமாகப் படவில்லை.

சகோதரர் முஹம்மத் அலி ஜின்னா அவர்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறோம்.

(இதற்குடையில் சகோதரர் ஒருவர் இங்கு பின்னூட்டத்தில் இட்டிருந்த முகவரியை மேற்கூறிய காரணங்களினால் நீக்கியுள்ளோம். இதன் மூலம் எவருக்கேனும் சிரமங்களேதும் ஏற்பட்டிருப்பின ், வருந்துகிறோம்)

-நிர்வாகி (சத்தியமார்க்கம ்.காம்)
Quote | Report to administrator
hameedfarook abdulzabbar
0 #5 hameedfarook abdulzabbar -0001-11-30 05:21
assalamu alaikkum
by the grace of allah
i have a quick question . is the available account and bank information enough to send the money, cos i feel there should be some more in details like the pin code, people like me choose western union requires some specific details,
co-operation is highly appreciated
inshahallah.... ....
Quote | Report to administrator
நிர்வாகி சத்தியமார்க்கம்.காம்
0 #6 நிர்வாகி சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...

அன்புச் சகோதரர் ஹமீத் ஃபாரூக் அப்துல் ஜப்பார் அவர்களே, தங்களின் நல்ல உள்ளத்துக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக.

தங்களுக்கு என்னென்ன விபரங்கள் தேவை எனக் கூறினால் உடன் அதனை தர முயல்கிறோம் இன்ஷா அல்லாஹ். அத்தோடு தங்களின் முழு முகவரியும் தொடர்பு எண்ணும் சேர்த்து நிர்வாகிக்கு அனுப்பவும்.

ஜஸாக்கல்லாஹூ கைரா!

- நிர்வாகி (admin-at-satyamargam.com)
____________________________________________
Quote | Report to administrator
அஹமது நிஸார்
0 #7 அஹமது நிஸார் -0001-11-30 05:21
இச்சகோதரியைக் குறித்த மேலும் விரிவான தகவல்கள் த.மு.மு.க வின் தளத்தில் உள்ளன.

tmmkonline.org/.../109704.htm
Quote | Report to administrator
MuSa
0 #8 MuSa -0001-11-30 05:21
சத்தியமார்க்கம் .காமைத் தொடர்ந்து ஆனந்த விகடனிலும் சில வாரங்களுக்கு முன் இச்சகோதரி பற்றிய செய்திக்குறிப்ப ு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-MuSa
Quote | Report to administrator
umargani
0 #9 umargani 2013-07-01 08:01
I am umargani jamal mohamed, i read an article about me, with out my knowledge who is publish this article?.
Quote | Report to administrator
Akbar Ali
0 #10 Akbar Ali 2013-07-02 02:14
மேலே கருத்திட்டுள்ளவ ர், இந்த பதிவில் உள்ள அதே சகோதரிதானா இல்லை அவர் பெயரில் விளையாடும் போலி நபரா?

ஏன் கேட்கிறேன் என்றால்...

Quote:
இச்சகோதரியின் குடும்பத்தினருடன் உரையாடிதன் மூலம், கிடைத்த தகவல் உண்மை என்ற அடிப்படையில் இச்சகோதரிக்கு உதவ சமுதாயத்திடம் சத்தியமார்க்கம்.காம் வேண்டுகோள் வைக்கிறது.
இந்த தளத்தினர் இப்படிக் கூறியுள்ள நிலையில், இவ்வாறு அழகான முறையில் அறிவிப்பு செய்து உதவித் தொகையை வசூல் செய்ய உதவி செய்த இந்த தளத்தினருக்கு சகோதரி உமர் கனி நன்றி கூறி துஆ செய்வாரே தவிர, இவ்வாறு எடுத்தெறிந்து எழுத மாட்டார்.
Quote | Report to administrator
PR-Satyamargam
0 #11 PR-Satyamargam 2013-07-02 02:40
Quoting umargani:
I am umargani jamal mohamed, i read an article about me, with out my knowledge who is publish this article?.

அன்புச் சகோதரி உமர்கனி,
அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களுடைய குடும்பத்தாருடன ் தொடர்பு கொண்டு, தகவல்கள் பெற்றுப் பின்னரே பதிந்தோம்.
தங்களுடைய தொடர்பு எண்ணைக் குறிப்பிட்டு என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் தொடர்பு கொண்டு பேசுவோம்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்