முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

உதவிக்கரம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ஜமால் முகமது. இவரது மகன் அஸ்பர் அகமது(17). இவர் சிறு வயதாக இருக்கும் போதே தந்தை ஜமால் முகமது இறந்து விட்டார். தாய் நர்கிஸ்ராணி கூலி வேலை செய்து படிக்க வைத்தார். இவரும் கடந்த சில மாதங்களாக உடல் சரியில்லாமல் உள்ளார். மாணவர் அஸ்ஃபர் அகமது அருகிலுள்ள இரும்புக்கடையில் கூலி வேலை செய்து தாயையும் கவனித்து, மேல்நிலை படிப்பையும் முடித்தார்.

 

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த இவர் 1034 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.பொறியியல் படிக்க விரும்பிய மாணவர் அஸ்ஃபர் அகமது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார். ஜூலை 21ம் தேதி சென்னையில் நடைபெறும் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள இவருக்கு அழைப்பு வந்துள்ளது. வறுமையின் காரணமாக கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். இதுகுறித்து மாணவர் அஸ்பர் அகமது கூறுகை யில், “எனது குடும்பம் ஏழ்மை யான குடும்பம். எனது சிறு வயதில் அப்பா இறந்து விட்டார். நானும், அம்மாவும் வறுமையில் உள்ளோம். அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. நான் இரும்புக்கடையில் வேலை பார்த்து வருகிறேன். இதில் கிடைக் கும் வருமானம் மூலம் எனது அம்மாவை கவ னித்து வருகிறேன். கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டு மேல்நிலை கல்வியை முடித்தேன்.பொறியியல் படிக்க விரும்பி விண்ணப்பம் செய்தேன். சென்னைக்கு ஜூலை 21ம் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. இதற்கு ரூ.5 ஆயிரம் பணம் தேவை. பண வசதி இல்லாததால் என்னால் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனக்கு யாரேனும் உதவி செய்தால் படித்து நல்ல நிலைக்கு வந்து சமுதாயப் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உதவி புரிய விரும்புவோர் இந்தியாவின் 99651-84826 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.நன்றி:  தினகரன் நாளிதழ்

Comments   
பரக்கத்துல்லாஹ்
0 #1 பரக்கத்துல்லாஹ் 2009-07-17 09:32
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்களுடைய இந்தபணியை மனதாரப்பாராட்டு கிறேன் மேற்குறிப்பிட்ட சகோதரருக்கு நீங்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவருடைய முகவரி, வங்கி கணக்கு எண் முதலியவற்றை சேர்த்து பிரசுரித்து இருந்தால் இதை படிப்பவர்கள் அனைவர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் நன்றி.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்