முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

கல்வி வழிகாட்டி

திருச்சியிலிருந்து செயல்படும் M.V.R.C.TRUST (Muslim voluntary Religious Charitable Trust) ஒவ்வொரு வருடமும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.


அதன்படி இவ்வருடமும், 10 ஆம் வகுப்பில் தேறிய அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் அவரவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ரூ.1000 முதல் ரூ.3000 வரை ஊக்கத் தொகை வழங்க உள்ளது.

மதிப்பெண்கள் வரையறை கல்வி ஊக்கத்தொகை
480 மற்றும் அதற்கு மேல் ரூ.3,000
460-479 ரூ.2,500
400-459 ரூ.2,000
300-399 ரூ.1,500
299 அல்லது அதற்கு கீழ் ரூ.1,000

இந்த அறக்கட்டளை மூலம் ஊக்கத் தொகை பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்கள், 31.05.2013 அன்று காலை 10:00 மணி முதல் விண்ணப்பிக்கத் துவங்கலாம்.

கவனிக்கவும்: விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 03.06.2013 மாலை 4 மணி

 

 

கூடுதல் விபரங்களுக்கு http://mvrc.miet.edu/ என்ற இணைய தளத்தைக் காண்க.

தகவல்: ஜாஃபர்

Comments   
Muhammad
+4 #1 Muhammad 2013-06-01 13:41
இஸ்லாமிய வளர்ச்சி வங்கி, முஸ்லிம் ஸ்காலர்ஷிப், வட்டியில்லா கடன் என்று பல நிறுவனங்கள் அறிவித்தாலும், அவர்களை நெருங்கினால் முன்னுக்கு பின் முரணாகவோ அல்லது அவர்கள் சொல்லும் குடும்ப தலைவரின் வருமானம் பாபர் ஆட்சி காலத்தில் நிர்ணயிக்கப்பட் டதன் அடிப்படையிலோ இருக்கிறது. மெரிட்டும் இருக்கனும் பஞ்சபரதேசியாகவு ம் இருக்கனும் என்று சொல்கிறார்கள்.

இது போன்ற முஸ்லிம் சேவை பெயரால் தங்களது பிழைப்பை ஓட்டும் கும்பலுக்கு மத்தியில், மெரிட் அடிப்படையில் தகுதியுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கு ம் ஊக்க பரிசு என்று அறிவித்திருக்கு ம் MVRC நிறுவனத்தின் இந்த நற்செயல் மிகவும் பாராட்டுக்குரியது.

பிரைவேட் மெடிக்கல் காலேஜில் அரசாங்க கோட்டாவில் மெரிட் கட் ஆஃப் 92/93 சதவீதத்தில் முடிகிறது. அப்படியே கஷ்டப்பட்டு இடம் வாங்கினாலும், குறைந்த பட்சம் வருடத்துக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகிறது. அசையா சொத்துக்கு கியாரண்டியாக வட்டியில்லா கடன் கொடுங்கள், 6 வருடங்களுக்குள் கடனை அடைத்துவிடுகிறோ ம் இல்லாவிட்டால் சொத்தை விற்று கடனை எடுத்துக்கொள்ளு ங்கள் என்று சொன்னால் அனைத்து முஸ்லிம் வளர்ச்சி வங்கிகளும் மாயமாய் மறைந்துவிடுகின்றன.

மெரிட்டில் வா, பத்து பைசா டொனேஷன் வேண்டாம், உனக்கு வங்கி மூலமாக கடன் வாங்கி தருகிறேன், முதல் 5 ரான்க் வாங்கினால் உனக்கு வருட ட்யூஷன் ஃபீஸ் கிடையாது என்று வெளிப்படையாக சொல்பவர் ஒரு சில பிராமின்ஸ் கல்வி நிறுவனங்கள் மட்டுமே என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
Quote | Report to administrator
Thawfeeq
+3 #2 Thawfeeq 2013-06-01 18:21
சரியாச் சொன்னீங்க சகோதரர் முஹம்மது.

சமீபத்தில் , சாதாரண வருவாய் கொண்ட குடும்பத்தினர் +2 வில் நல்ல மார்க் பெற்ற தம் மகனுக்காக சென்னை க்ரசெண்ட் காலேஜை அணுகியிருக்கிறா ர். மெக்கானிக்கல் பிரிவு தான் வேண்டும் என்று மாணவன் விரும்பியதைப் புரிந்து கொண்டு, "மற்ற பிரிவுன்னா மூணு, மெக்கானிக்கல் பிரிவு எனில் டொனோஷன் நாலு லச்சம் ஆகுமே பரவாயில்லீங்களா சகோதரரே" என்று சமூக வாஞ்சையுடன் கூறியதைக் கேட்டு வெறுத்துப் போய் வந்திருக்கிறது அடிமட்ட நிலையில் உள்ள அந்த குடும்பம்.

சமுதாயச் சேவை செய்வதாகச் சொல்லி ஆரம்பிக்கப் பட்ட பல கல்வி நிலையங்களின் நிலை இது தான். முஸ்லிமா நான்-முஸ்லிமா என்பதெல்லாம் அப்புறம். NRI ஆ லோக்கலா என்று தான் முதலில் பார்க்கிறார்கள்.

அந்த வகையில் திருச்சி M.V.R.C. TRUST பாராட்டுதலுக்கு ரியவர்கள். செய்தியை சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்த சத்தியமார்கம் தளத்தினருக்கு நன்றிகள்.
Quote | Report to administrator
Muhammad
+4 #3 Muhammad 2013-06-02 11:21
Quoting Thawfeeq:

சமீபத்தில் , சாதாரண வருவாய் கொண்ட குடும்பத்தினர் +2 வில் நல்ல மார்க் பெற்ற தம் மகனுக்காக சென்னை க்ரசெண்ட் காலேஜை அணுகியிருக்கிறார். மெக்கானிக்கல் பிரிவு தான் வேண்டும் என்று மாணவன் விரும்பியதைப் புரிந்து கொண்டு, "மற்ற பிரிவுன்னா மூணு, மெக்கானிக்கல் பிரிவு எனில் டொனோஷன் நாலு லச்சம் ஆகுமே பரவாயில்லீங்களா சகோதரரே" என்று சமூக வாஞ்சையுடன் கூறியதைக் கேட்டு வெறுத்துப் போய் வந்திருக்கிறது அடிமட்ட நிலையில் உள்ள அந்த குடும்பம்.
.


எனது மனதில் இருந்ததை சொல்லிவிட்டீர்க ள். முஸ்லிம் மைனாரிட்டி இன்ஸ்டிட்யுஷன் எனும் பெயரில் பல சலுகைகள் பெற்று "ஆரியக்கூத்தாடி னாலும் தாண்டவக்கோனே காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே" என்று பணப்பெட்டியை ரொப்புவதில்தான் குறியாக இருக்கிறார்கள்.

எனது நன்பரின் மகன் AIEEE தேர்வில் நல்ல ரான்க் வாங்கியிருந்தார ். முஸ்லிம் சகோதர உணர்ச்சி பீரிட்டு இவர்களிடம் போனார். 3/4 லச்சம் கேட்டார்கள். மெரிட் அடிப்படையில் தரமாட்டீர்களா என்று நன்பர் கேட்டபோது "நாங்க தருமத்துக்கா நடத்தறோம்?" என்று ஒரு போடு போட்டார்கள்.

உடனே சாஸ்த்ரா கல்வி நிறுவனத்தை அனுகினார். அவர்கள் மெரிட் அடிப்படையில் பத்து பைசா கூட வாங்காமல் இடம் தந்தது மட்டுமில்லாமல் ட்யூஷன் ஃபீஸில் சலுகையும் தந்தனர். எனது நன்பர் இரண்டு ரக்காத் தொழுது "யா அல்லாஹ் இவர்களை நல்லபடியா வை" என்று அங்கேயே துஆ செய்தார். அதை பார்த்த ஒரு பிராமின் பெரியவர் கண்கலங்கி நன்பரை கட்டி தழுவிக்கொண்டார்.

இன்று நல்ல மதிப்பெண் பெற்ற எந்த முஸ்லிமை சந்தித்தாலும் "சாஸ்த்ராவுக்கு போங்க" என்று சொல்கிறார்.

மெரிட் என்றால் என்னவென்றே தெரியாத ஜடங்கள், தாடியும் தொப்பியும் வைத்துக்கொண்டு வக்ப் போர்டிலும் முஸ்லிம் மைனாரிட்டி எனும் பெயரிலும் ஒளிந்துகொண்டு சுருட்டுகிறார்க ள் என்பதுதான் உண்மை. நமது அவலநிலைக்கு எப்போழுது பார்த்தாலும் பிறரை குற்றம் சொல்வதைவிட்டு நமது வீட்டை முதலில் சுத்தம் செய்ய முயற்சி செய்வோம்.

முஸ்லிம் வக்ப் போர்டு ஊழல், மைனாரிட்டி கமிஷன்வாதிகளின் சுருட்டல்களுக்க ு எதிராக மீடியா மூலம் முஸ்லிம்கள் ஒரு ஜிஹாத் செய்தால்தான் முஸ்லிம் சமுதாயம் உருப்படும்.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்