முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

கல்வி வழிகாட்டி

அஸ்ஸலாமு அலைக்கும்.

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன்', உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி ரூபாயை 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது.

நூறு விழுக்காடு கல்வி உதவித் தொகையான இதைப் பெறத் தக்க மாணவர்களின் தகுதிகள்:

  1. மார்க்கப் பற்றாளராகவும் கடமைகளில் பேணுதல் உடையவராகவும் இருக்க வேண்டும்.
  2. உயர்கல்வி பயில்வதற்குப் பணம் செலுத்திப் படிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும்.
  3. கல்வியில் மிக்க ஆர்வம் உடையவராகவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  4. உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும்.

மேற்காணும் தலையாய தகுதிகள் பெற்ற, மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் உதவித் தொகை வேண்டி, http://www.irf.net/iis/scholarship.pdf எனும் சுட்டியிலிருந்து விண்ணப்பத்தைத் தரவிறக்கி, நிரப்பி அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 29.5.2011இல் மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், அவ்ரங்காபாத், அகோலா மற்றும் மலேகோன் ஆகிய நகர்களில் எழுத்துத் தேர்வு இருக்கும். அத்தேர்வில் 75 விழுக்காடு வினாக்கள் இறைமறை குர் ஆனின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

எழுத்துத் தேர்வில் தேறிய மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, உதவி வழங்கப்படுவர், இன்ஷா அல்லாஹ். கூடுதல் விபரங்களுக்கு :

சத்தியமார்க்கம்.காமின் கோரிக்கை: தேவையுள்ளோர் பயன்பெற உதவிடும் ஒரு பாலமாக, நீங்கள் அறிந்த ஏழை மாணவர்களுக்கு, நண்பர்களுக்கு இப்பக்கத்தினை அச்செடுத்து விநியோகம் செய்யுங்கள் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். இப்பக்கத்திற்கான சுட்டி: http://www.satyamargam.com/1700

Comments   

சத்தியமார்க்கம்.காம்
0 #1 சத்தியமார்க்கம்.காம் 2011-05-05 14:37
அஸ்ஸலாமு அலைக்கும்.

நம் தளத்தில் இணைக்கப்பட்டிரு க்கும் சுட்டியிலுள்ள PDF விண்ணப்பப் படிவத்தில், "கல்வி உதவிகள் அனைத்தும் மகாராஷ்டிர மாநில முஸ்லிம்களுக்கு மட்டும்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்குமாறு IRFக்கு மடல் எழுதியுள்ளோம். பதில் கிடைத்ததும் இங்குப் பதிப்போம், இன்ஷா அல்லாஹ்.
Quote | Report to administrator
அபூ நஸீஹா
0 #2 அபூ நஸீஹா 2011-05-08 12:08
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

அன்புள்ள சத்யமார்க்கம் சகோதரர்களுக்கு,
//நம் தளத்தில் இணைக்கப்பட்டிரு க்கும் சுட்டியிலுள்ள PDF விண்ணப்பப் படிவத்தில், "கல்வி உதவிகள் அனைத்தும் மகாராஷ்டிர மாநில முஸ்லிம்களுக்கு மட்டும்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது. //
அவ்வாறு குறிப்பிடப்படவி ல்லை, only english medium students from other states of india என்றே உள்ளது.

இது தொடர்பாக UIF IRF க்கு நான் மும்பை தொலைபேசியில் விசாரித்தபோது அங்குள்ள சகோதரர் இது ஆங்கிலம் வழி கல்வி பயிலும் அணைத்து இந்திய முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் பொதுவானது என்று விளக்கமளித்தார்.

மேலும் வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் எனவும் அருள்மறை குர்ஆனின் ஆங்கில மொழியாக்கம் இத்தேர்வுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் கூறினார்.

இது குறித்து தக்க நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டு வழிகாட்டியதற்க் கு ஜஸாகல்லாஹு க்ஹைரா.

ஒரு வேண்டுகோள் : சகோதரி ஸாஜிதா பேகம்அவர்களுக்க ு இச்செய்தியை எட்டுமாறு அன்புடன் கோருகிறேன். satyamargam.com/932

அன்புடன்
அபூ நஸீஹா
Quote | Report to administrator
Ferozkhan
0 #3 Ferozkhan 2011-05-09 18:30
Assalamu alaikum in their pamphlet itself it clearly states it applicable for English / Urdu medium students from Maharashtra and for other states students should study in english medium
Quote | Report to administrator
saharudeen
0 #4 saharudeen 2011-05-21 17:43
Assalamu alaikum,
i need to know the location of interview, in chennai

thanking you
Saharudeen
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்