முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

ஏடு-இட்டோர்-இயல்

லகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.”

- M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978, pp. 33).

அரசியல், ஆன்மிகம், இராணுவம், மக்கள் நலன் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்து, உலக வரலாற்றில் இன்றுவரை விதந்து பேசப்படுகின்றவரும் உலக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவருமான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி இஸ்லாத்தின் எதிரிகள் அவ்வப்போது சரடுகள் அவிழ்த்துவிடுவதுண்டு.

அவை அத்தனையும் தக்க சான்றுகளுடன் முஸ்லிம்களால் எதிர்கொள்ளப்பட்டு, முனைமழுங்கிப் போயின என்பது வரலாறு.

அந்த வரிசையில் தினமணி நாளேட்டின் சிறுவர் மணிக்கான 15.02.2014 நாளிட்ட இதழின் பக்கம் 31இல்

"இயேசு சிலுவையில் அறையப்பட்டது, முகமது நபி கற்கள் வீசப்பட்டுக் கொல்லப்பட்டது, சாக்ரடீஸ் விஷம் தரப்பட்டு மாண்டது, அண்ணல் காந்தி, ஆப்ரகாம் லிங்கன், ஜான்கென்னடி ஆகியோர் கொல்லப்பட்டது - அனைத்தும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று!" என்று சி. பன்னீர்செல்வன் என்பவர் எழுதியது வெளியாகி இருந்தது.

ஒரு வரலாற்றுத் தகவலை எழுதுவதற்கு முன்னர் அத்தகவலை நன்றாக உறுதி செய்துகொண்டு எழுதுவதே நல்ல எழுத்தாளர்களின் அடிப்படைப் பண்பு. உலகளாவிய சமயத் தலைவர் ஒருவரைப் பற்றிய தகவல் எனில், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உறுதியான தகவலை எழுத்தில் வடிப்பது அதை எழுதுபவரின் கடமையாகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இயற்கை மரணம் அடைந்தார்கள் எனபதும் அவர்கள் மரணமடைந்தது ஒரு திங்கட்கிழமையில் என்பதும் மிகவும் எளிதாகப் பெறக்கூடிய தகவல்களே [http://en.wikipedia.org/wiki/Prophet_Mohamed#Death_and_tomb].


இவற்றுள் எதையும் கருத்தில் கொள்ளாமல் மனம் போன போக்கில் எழுதுவது கழிசடை ஊடகங்களின் வழக்கம். அதையே தினமணியும் செய்தது.

அந்தச் செய்தியைப் படித்த வாசகர்கள் பலர், தினமணிக்குத் தம் கண்டனங்களை மின்னஞ்சல் வழியாகப் பதிவு செய்ததோடு, அடுத்த இதழில் திருத்தம் வெளியிடுமாறு வேண்டுகோளும் விடுத்தனர்.

அறியாமல் ஏற்பட்டிருந்த பிழையாக இருந்தால், பிழையைச் சுட்டிக்காட்டிய தன் வாசகர்களுக்கு நன்றியையும் வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று, வருத்தமும் திருத்தமும் தினமணி வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டு ஊடக தர்மத்தை நிலைநாட்டுவதற்கு தினமணியின் தன்மானம் இடம்தரவில்லை.  ஆனால், ஆன்லைன் பதிப்பில் மட்டும்,
"இயேசு சிலுவையில் அறையப்பட்டது, முகமது நபி கொல்லப்பட்டது, சாக்ரடீஸ் விஷம் தரப்பட்டு மாண்டது, அண்ணல் காந்தி, ஆப்ரகாம் லிங்கன், ஜான்கென்னடி ஆகியோர் கொல்லப்பட்டது - அனைத்தும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று!" என்று அரைகுறையாகத் திருத்தம் செய்திருக்கிறது.
 
தினமணி ஆசிரியர் குழுவினரின் வரலாற்று அறிவு எத்துணை மோசமானது என்பதைத் தமிழ் வாசக உலகிற்குக் காட்டியதோடு, காழ்ப்புணர்வும் குரோதம் கொப்பளிக்கும் ஒரு சிலர் மீடியாவில் இருந்தால் அதன் வெளிப்பாடுகள் எப்படி இருக்கும் என்பதற்கும் சிறந்த உதாரணமாக அமைந்திருந்தது அந்தப் பதிவு.
 
1932இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழைத் துவங்கிய பி. வரதராஜுலு நாயுடு, கடந்த செப்டம்பர் 11, 1934இல் தினமணியை துவங்கினார்.

தினமணியின் நிறுவனரான வரதராஜுலு நாய்டு கடந்த July 23, 1957இல் தெருநாய்கள் கடித்து வலி தாங்காமல் நாக்குத் தள்ள தூக்கு மாட்டி, தற்கொலை செய்துகொண்டு செத்துப் போனார் என்று எஸ். ஸ்ரீராம் என்ற பெயரில் ஒரு வாசகர் கட்டுரை ஒன்றை எழுதி ஊடகங்கள் வெளியிட்டிருந்தால் தினமணி குழுமத்தின் மனநிலை எப்படி இருக்கும்? எதிர்வினை என்னவாக இருக்கும்?
 
ஒரு நாளிதழின் நிறுவனரைப் பற்றித் தவறான தகவல் தந்தால் சகித்துக் கொள்வார்களா? இஸ்லாம் எனும் உலகளாவிய சமயத்திற்குப் புத்துயிரளித்த சீர்திருத்தவாதியை, உலக முஸ்லிம்கள் தம் உயிரினும் மேலாக மதித்துப் போற்றும் தலைவரைப் பற்றிய தவறான, எதிர்மறைத் தகவலைப் பதிந்ததுமல்லாமல் தவற்றைச் சுட்டிக் காட்டிய பின்னும் திருத்தம் வெளியிடாததற்குக் காழ்ப்பைத் தவிர வேறு காரணமில்லை.

'தினமணி என்பது தரமான நடுநிலை நாளிதழ்' என்ற ஒரு தவறான பிம்பம் தமிழ் முஸ்லிம்களிடையே பதிந்து இருந்தது. அந்த பிம்பம் இனி உடைந்து போகும்!
Comments   
Mohamed Ali Jinnah
+1 #1 Mohamed Ali Jinnah 2014-02-24 11:13
தேர்தல் நேரம் இந்த தரம்கெட்ட செய்தித்தாள் போன்றவைகளுக்கு ஒரு வாய்ப்பு .முஸ்லிம்கள் ஆதரவு இல்லாது இந்த பத்திரிக்கை இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது .நன்றி கெட்டதும் அல்லாமல் நாச வேலையில் தனது குல குணத்தை காட்ட ஆரம்பித்து விட்டது ,
செய்தியை மாற்றி தருவது செய்தித்தாள் அல்ல, அது மக்களை கெடுக்கும் தாள்.
செய்தித்தாள்கள் படிப்பதை மக்கள் குறைத்துக் கொண்டதால் இப்படி மட்டமான பொய்களை சொல்லி விற்பனையை நாடுகிறது .நமெக்கென ஒரு செய்தித்தாள்,தொ லைகாட்சி இல்லாமையே இவர்களை இவ்விதம் செயலபடுத்தச் செய்கிறது
Quote | Report to administrator
Ebrahim Ansari
+2 #2 Ebrahim Ansari 2014-02-24 11:25
தெரிந்த உணமைகளைக்கூட தெரியாத மாதிரி எழுதுவதற்குப் பெயர் குடுமிக் குசும்பு. மக்கள் மொழியில் பார்ப்பனக் குசும்பு.
Quote | Report to administrator
Mohideen Abdul Kade
+1 #3 Mohideen Abdul Kade 2014-02-24 11:42
தினமனியும் காவி கயவர களின் வசம்
ஆகிவிட்டது எந்பது இதன் முலம் தெரி
வருகின்றது
Quote | Report to administrator
ABDUL AZEEZ
+1 #4 ABDUL AZEEZ 2014-02-24 14:07
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே இந்த பத்திரிக்கைகாரன ் பல வருஷமா இப்படி மட்ட ரகமா தான் தகவல் தருவான் காரணம் பக்கஙகளை பத்திகளை நிரப்புவதர்க்கா க. இப்படி எதையாவது எழுதி போட்டு வாசகர்களை முட்டாலாக்குவான ். செருப்பு மாலையே போட்டாலும் சொரணை இல்லாதவன்
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
shakul hameed
+2 #5 shakul hameed 2014-02-24 19:52
இது தினமணியின் அயோகிய தனமே தவிர வேரில்லை !
Quote | Report to administrator
Mohammed Sharfuddin
+1 #6 Mohammed Sharfuddin 2014-02-25 00:41
This is absolutely nonsence. We should drag the dhinamani news paper management to the court demanding to prove their statement, then only the people will understand the real standard of the newspaper ??
Quote | Report to administrator
Rafi
0 #7 Rafi 2014-02-25 08:50
I had a very good opinion on DHINA MANI, But ............... ..... Can't accept.
Quote | Report to administrator
அபுஅப்து
0 #8 அபுஅப்து 2014-02-25 16:43
இச் செய்தி சம்பந்தமான மற்றொரு மறுப்பு செய்தி வெளியிடப்பட்டுள ்ளது.
தொடர் கண்டனங்களால் இது சாத்தியப்பட்டது எனலாம். தவறுகளை காணும்போது அதனை முகநூலில் பதிவிடுவதோடு தனது கடமை முடிந்துவிட்டது என்றும் அந்த முகநூலிலேயே கடிந்தும் தன்னுடைய எதிர்ப்பை பதிவுசெய்வதையும ே கடமையென கொள்கின்றனர். மாறாக சம்பந்தப்பட்ட பத்திரிகை செய்தியின் பின்னூட்டத்திலு ம் அப்பத்திரிகைக்க ும் முறையாக தகவல் தெரிவிக்கும் போதுமே நம்முடைய கண்டனங்கள் போய்ச்சேரும். அபுஅப்து.
Quote | Report to administrator
selvam
+1 #9 selvam 2014-02-25 19:34
தினமணியின் நிறுவனரான வரதராஜுலு நாய்டு கடந்த July 23, 1957இல் தெருநாய்கள் கடித்து வலி தாங்காமல் நாக்குத் தள்ள தூக்கு மாட்டி, தற்கொலை செய்துகொண்டு செத்துப் போனார் என்று எஸ். ஸ்ரீராம் என்ற பெயரில் ஒரு வாசகர் கட்டுரை ஒன்றை எழுதி ஊடகங்கள் வெளியிட்டிருந்த ால் தினமணி குழுமத்தின் மனநிலை எப்படி இருக்கும்? எதிர்வினை என்னவாக இருக்கும்
Quote | Report to administrator
முஹம்மத் ஆஷிக்
+3 #10 முஹம்மத் ஆஷிக் 2014-02-25 22:25
சாக்ரடீஸ் கொல்லப்பட்டது கிமு 399 என்று மட்டுமே உலகுக்கு தெரியும். எந்த மாதம் எந்த நாள் எந்த கிழமை என்று ஏதும் செய்தி இல்லை.

அப்புறம்...

ஈசா நபி அலை... நம்மை பொறுத்த மட்டில் சிலுவையில் அறையப்படவும் இல்லை; கொல்லப்படவும் இல்லை.

ஆனால்... கிறிஸ்துவர்களின ் பைபிளின் நம்பிக்கை படிக்கூட ஜீசஸ் கிரைஸ்ட் சிலுவையில் அறியப்பட்டது புதன் கிழமை தானே அன்றி... வெள்ளிக்கிழமை இல்லை.

எவ்வளவு தவறுகள் பாருங்கள்..!

தின்னமன்னி :
இதெல்லாம் தமிழில் ஒரு முன்னணி பத்திரிக்கையாம் ..! ச்சீ... த்தூ...!
Quote | Report to administrator
Muhammad M
0 #11 Muhammad M 2014-02-25 23:40
Dear Brother Jeeva Giridharan.

Thanks for your feed back with concern and advise for necessary possibble legal advise.

Hope you will advise to initiate and guide to proceed on a legal action though the legal sysyem is bias and procastinating on things that should not be ruled out.

Also this is not just the responsibility of Muslims but all just minded individuals like you who should unite and raise voice against such acts to malign and tarnish people respected based on hatred arrogance and ignorance of a religion and faith.
Quote | Report to administrator
jeevagiridharan
0 #12 jeevagiridharan 2014-02-26 13:41
Dear Mr.Muhammed... I'm ready to help professionally. But I need somebody to meet me with the copy of the concerned magazine. They can contact me after calling me over phone and fixing the meeting time and date. My mobile no. Is 9444114208... I'm at your service with pleasure...
Quote | Report to administrator
முபாரக்
0 #13 முபாரக் 2014-02-26 16:32
ஸாரி தினமணி...

இத்தனை வருடங்களாக எங்கள் குடும்பங்கள் உங்களுக்கு வாசகர்களாக தினசரியை காசு கொடுத்து வாங்கி படித்ததை எண்ணி வருந்துகிறோம்.

இன்று முதல் அந்த வருத்தம் இருக்காது.
Quote | Report to administrator
செல்வ குமார்
+1 #14 செல்வ குமார் 2014-02-26 16:35
அடிப்படை வரலாறு தெரியாத அளவிற்கு இவ்வளவு முட்டாளாகவா தினமணி ஆசிரியர் குழு இருக்கும்?

அது இல்லை என்றால் திட்டமிட்ட காழ்ப்புணர்ச்சி . முத்திப்போன மதவெறி.

இரண்டில் எதுவென்று தினமணி இங்கே கூறினால் நல்லது.

(மறுப்பையாவது இன்னும் வெளியிட்டார்களா இல்லையா?)
Quote | Report to administrator
Krish
+1 #15 Krish 2014-02-26 16:46
இப்படியொரு ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு வேறு எந்த தொழிலையாவது செய்யலாமே தினமணி?

இவ்வளவு அட்டூழியம் செஞ்சுண்டே, நிமிர்ந்த நன்னடை பார்க்கறீங்க பாருங்கோ .. அங்க தான் ஓய் நிக்கறேள்!
Quote | Report to administrator
Muhammad M
0 #16 Muhammad M 2014-02-26 23:40
Thanks Brother Jeeva Giridharan,for your prompt response and readiness to be "at service with pleasure " is highly appreciated.

Some one from us will contact you asap.
Quote | Report to administrator
M Muhammad
0 #17 M Muhammad 2014-02-28 16:30
இக்காலகட்டத்தில ், தனிமனிதர்கள் / முஸ்லிம் அமைப்புகள் இயக்கம் சாராத பொதுவானதோரு சட்டப்பாதுகாப்ப ு குழுவை அமைக்க முஸ்லிம்கள் முயல வேண்டும்.
Quote | Report to administrator
இராஜகிரியார்
0 #18 இராஜகிரியார் 2014-03-10 12:24
Quoting Mohamed Ali Jinnah:
நமெக்கென ஒரு செய்தித்தாள்,தொலைகாட்சி இல்லாமையே இவர்களை இவ்விதம் செயலபடுத்தச் செய்கிறது


சலாம் சகோ. எத்தனை நாளைக்கு தான் இதையே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்? ஏன் நம்மிலிருந்து எவரும் இதற்காக எவ்வித முயற்சியும் செய்வதில்லை என்பது எனக்கு புதியாத புதிராக இருக்கிறது.

இதற்கான முயற்சியில் தாங்களோ அல்லது சத்தியமார்க்கம் சகோதரர்களோ அல்லது சமுதாய அக்கறை கொண்ட வேறு யாருமோ முயற்சி எடுத்தால் மிகச் சிறிய அளவிலேனும் என்னை போன்றவர்கள் அதில் பங்களிக்க தயாராக உள்ளோம்.
Quote | Report to administrator
J.M. Sirajuddin
0 #19 J.M. Sirajuddin 2014-05-04 21:59
இதுவரை தினமணியை நடுநிலை நாளிதழ் என நினைத்து ஏமாந்தது தான் மிச்சம். இனியும் நாங்கள் ஏமாற மாட்டோம்.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்