முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

ஏடு-இட்டோர்-இயல்

அமெரிக்கத் திரைப்படத் துறையினால் அறியப்படாதவனும் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அமெரிக்காவின் புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ.யின் ஏஜெண்டாகப் பணியாற்றிக்கொண்டு கலிஃபோர்னியாவில் வாழ்ந்து வருபவனுமான சாம் பேஸிலி (Sam Bacile) (எ) நகூலா பேஸிலி நகூலா (Nakoula Basseley Nakoula) என்பவனும், அல்குர்ஆனை இழிவு படுத்துவதாக எண்ணிக் கொண்டு அதன் பிரதிகளை எரித்துச் சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த அடிமுட்டாள் டெர்ரி ஜோன்ஸ் என்பவனும் இணைந்து Innocence of Muslims என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இதற்கான ட்ரெய்லர் ஒன்றினைக் கடந்த ஜூலை 2ந்தேதி யூட்யூப் தளத்தில் வெளியிட்டனர். இதனைக் கண்ணுற்றவர்கள் துவக்கத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், அதனுடைய அரபுப் பதிப்பை எகிப்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்று வாழும் மொரீஸ் ஸதெக் என்பவன் (இவனும் அமெரிக்க ஏஜெண்டாக இருக்கக்கூடும்) இம்மாதம் 8ஆம் தேதி யூட்யூபில் வெளியிட்டான். அது பிற சமூக வலைத் தளங்கள் மூலம் லிபியா, எகிப்து மற்றும் எமனில் காட்டுத் தீயாய்ப் பரவியது. பின்னர் மெல்ல மெல்லக் கொழுந்து விட்டெரிந்து, லிபியாவின் பென்காஸியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது. அமெரிக்கத் தூதரக வீரர்கள்(!) தம் தலைவரைப் புகை மூட்டத்தில் தவிக்கவிட்டுத் தங்களின் உயிர் பிழைக்க ஓடிப்போனதில் உயிருடனிருந்த அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸும் தூதரக அதிகாரிகள் மூவரும் மூச்சுத் திணறி இறந்து போயினர்.

இந்தளவு களேபரத்தை ஏற்படுத்திய அந்தப் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களிடம்கூட, "2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து வந்த எகிப்தியர் மாஸ்டர் ஜார்ஜ் என்பவரைப் பற்றிய படம்" என்றும் படத்தின் பெயர் "பாலைவன வீரர்கள்" என்றும் பொய் சொல்லியே இப்படம் தயாரிக்கப் பட்டிருக்கிறது. இஸ்லாத்தைப் பற்றியும் முஹம்மது (ஸல்) பற்றியும் பேசப்படும் குரல்கள் அனைத்தும் Voice Over டப்பிங் முறையில் Post production இல் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் முஹம்மது(ஸல்) அவர்களாகவும், அன்னை கதீஜா(ரலி), அன்னை ஆயிஷா(ரலி) ஆகியோராகவும் உருவகிக்கப்பட்டு, பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து இப்படத்தில் நடித்த சிண்டி லீ் கார்சியா மற்றும் அன்னா குர்ஜி உட்பட கதாபாத்திரங்கள் பெரும்பாலானோர், இப்படத்தை இயக்கிய சாம் பேஸிலியின்மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்திருப்பதும் டைரக்டரின் "நேர்மை"யை வெளிப்படுத்துகின்றன.

வரலாற்றுக்கு நேர்மாறான குப்பைகள் பேஸிலியின் படத்தில் குவிந்திருப்பது ஒரு பக்கம் என்றால் - ஆடியோ, வீடியோ, எடிட்டிங் - ஏன் - நடிப்பில்கூட துளியும் தரம் இல்லாமல், மிகக் குறைந்த செலவில் ஒரு அறைக்குள்ளாகவே நடிகர்களை நிறுத்தி ஒரு நீலப்படத்திற்குச் சமமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது இதன் ட்ரெய்லர். இந்த நாலாந்தரப் படத்தை எடுப்பதற்காகத் தன்னை யூதன் எனக் கூறி 5 மில்லியன் டாலரை இஸ்ரேலிய 'நண்பர்'களிடமிருந்து நன்கொடையாகப் பெற்றதாகப் பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறான் அப்பனையே மாற்றிக்கொண்ட பேஸிலி.

ஐந்தாண்டுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இப்படம் மூலம் சாம் பேஸிலி எதிர்பார்த்த மலிவு விளம்பரம், அதிக அளவிலான ஹிட்ஸ், முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் எனும் "கதை"யை மீள்கருத்துருவாக்கும் முயற்சி, அதன் மூலம் இஸ்லாத்தை நெருங்க எத்தனிப்பவர்களைத் தடுத்து,  "இஸ்லாமோஃபோபியா"வை [http://www.satyamargam.com/530] ஊட்டுவது எனப் பல எதிர்பார்ப்புகள் நிறைவேறி சாம் பேஸிலி குழுவினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. இதுபோன்ற பாசாங்குத் தந்திரத்துக்கு முஸ்லிம்கள் இரையாகிவிடக் கூடாது என்று "இஸ்லாமோஃபோபியா" தொடரில் சத்தியமார்க்கம்.காம் எச்சரித்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். அதிலும், தங்களின் தலைவர் நபி(ஸல்) அவர்களைக் கொச்சைப்படுத்துவதைச் சகித்துக் கொள்ளாமல் பொங்கிவிடுவர் என்பதே இந்த சாம் மற்றும் பாதிரியார் டெர்ரி கூட்டணியின் கணிப்பு. அந்தக் கணிப்பைப் பொய்யாக்கிட முஸ்லிம்கள் முன்வரவில்லை. ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, லெபனான், லிபியா, மொராக்கோ, இந்தியா, இராக், ஈரான், சூடான், கத்தர், பாகிஸ்தான், துருக்கி, எமென் ஆகிய முஸ்லிம்கள் கணிசமாக வாழக்கூடிய நாடுகளில் மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளிலும் முஸ்லிம்களின் எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்துள்ளது.

இந்தக் கழிசடைப் படத்தை எடுத்த கயவன் சாம் பேஸில் நகூலா என்பவனின் போலிப் பெயர்கள்:

 1. Sam Bacile,
 2. Mark Basseley Youssef,
 3. Yousseff M. Basseley,
 4. Nicola Bacily,
 5. Robert Bacily,
 6. Erwin Salameh,
 7. Thomas J. Tanas,
 8. Matthew Nekola,
 9. Ahmad Hamdy,
 10. Amal Nada,
 11. Daniel K. Caresman,
 12. Sobhi Bushra,
 13. Kritbag Difrat,
 14. PJ Tobacco,
 15. Malid Ahlaw

ஆகியன.

 • லட்சக்கணக்கான டாலரில் வங்கி மோசடிகள்,
 • வரி மோசடிகள்,
 • ச்செக் மோசடிகள்,
 • ஆபாச சினிமா படமெடுத்தல்,
 • போதைப் பொருள் தயாரிப்பு,
 • பெயர்/ஆள் மாறாட்டம்

போன்ற பல்வேறு குற்றப் பின்னணிகள் கொண்டவன்தான் பேஸிலி.

இவன் செய்த அடுக்கடுக்கான குற்றங்களுக்காக இவனுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை திடீரென்று தளர்த்தப்பட்டது. சிறிது காலம் சென்றவுடன் விடுதலை செய்யப்பட்டான் பேஸிலி. காரணத்தை அவனே சொல்கிறான் : Nakoula stated, “I decided to cooperate with the government to retrieve some of these mistakes or damage happened ..."

எதிர்பார்த்தபடி உலக முஸ்லிம்களின் எதிர்ப்புக்குரலைக் கேட்டவுடன் இந்தக் கயவனை ஒளித்து வைத்துக்கொண்டு, அவனுடைய குடும்பத்தாரைத் தகுந்த பாதுகாப்புடன் அவனிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு, "பேஸிலி எங்கிருக்கிறான் என்று சொல்லமுடியாது" என்று உலக போலீஸ் அமெரிக்கா திமிராகப் பேசுகிறது. அதற்கு, "பரவாயில்லை, நாங்கள் கண்டுபிடிப்போம்" என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

உணர்ச்சிகளைக் கிளறிவிட்டு, "இஸ்லாமிய பயங்கரவாதம்", "முஸ்லிம் தீவிரவாதி" ஆகிய பட்டங்களைப் புதுப்பிப்பதற்காக எஃப்.பி.ஐ, பேஸில் மற்றும் டெர்ரி ஜோன்ஸ் கூட்டணி விரித்த வலையில் உலக முஸ்லிம்கள் விழுந்துவிட்டனர்; கொந்தளித்துவிட்டனர்.

இதற்குப் பிறகும் ஒருவர் கொந்தளிக்கவில்லை எனில் அவர் முஸ்லிமே இல்லை. ஆனால், இஸ்லாம் துளியும் காட்டித் தராத வன்முறையில் இறங்கி, பொதுச்சொத்துகளை, உடைமைகளை, உயிர்களைச் சேதப்படுத்துவதும், மறியல், ஆர்ப்பாட்டம், பேரணியில் செருப்பால் அடிப்பது, கொடியை எரிப்பது, சாணியைக் கரைப்பது, விளக்குமாறில் வீரம் காட்டுவது, கொடும்பாவியைக் கொளுத்துவது போன்ற இஸ்லாம் காட்டித் தராத பண்பற்ற அரசியலுக்கு மட்டுமே உதவும் அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவது முஸ்லிம்களுக்கு அழகல்ல. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகி விடாது என்பதை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும். நம் உணர்ச்சிகளைக் காட்டவேண்டும்; ஆனால், அது நமக்கு இடர் தராத மக்களுக்கு இடைஞ்சலாகக் கூடாது.

முஸ்லிம்களின் அறிவார்ந்த எதிர்வினை எவ்வாறு இருக்க வேண்டும்? {youtube}
62xHNvvGsFU{/youtube}

இந்தக் கழிசடைப் படத்தின் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், தாங்கள் எப்படிப் பாதிப்பட்டுள்ளோம் என்பதைப் பிற மதச் சகோதரர்களுக்கும், மதத்தை ஏற்காத நல்ல மனிதர்களுக்கும் உணர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம், தன்னையோ தன் பெற்றோரையோ, தன் குடும்பத்தினரையோ பிறர் எள்ளி நகையாடுவதையும் இழிவுபடுத்துவதையுங்கூட சகித்துக் கொள்வான். ஆனால், தன் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஏளனம் செய்யப்படுவதைப் பொறுத்துக் கொள்ளமாட்டான். ஏனெனில் அவர் இவனுடைய உயிரினும் மேலானவர் என்பதை அவர் காட்டித் தந்த வழிமுறையோடு எதிர்வினையாற்ற வேண்டும். திட்டமிட்ட எதிர்வினை, இனியொரு முறை எதிரிகள் விஷமம் செய்ய எத்தனிக்கையில், ஒரு கோடி முறை யோசிக்க வைக்கும்.

பிற மதத்தவர்களிடம், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வீரியமுடன் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை அதன் சரியான வடிவில் எடுத்துச் சொல்ல வேண்டும். "நான் முஸ்லிம்" என்று வாயால் மட்டும் சொல்லாமல் "நான் முஸ்லிம்" என்பாதை வாழ்வால் காட்டுவதற்கு நாம் முன்வரவேண்டும். இது ஏதோ ஆடியோ, வீடியோ, டிவிடி, புத்தகங்கள், இணைய தளங்கள் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும்,  நபியவர்கள் போதித்த நெறியைத் தமது வாழ்க்கையாகவே ஆக்கிக் கொள்ளல் வேண்டும்.  ஒரு முஸ்லிமின் சொல், செயல் அனைத்திலும் ஒரு நறுமணம் போல சுகந்தமாய் இஸ்லாம் வெளிப்படுமாறு "தஃவா" வெளிப்படல் வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்த மெசேஜ் போன்ற சிறந்த திரைப்படங்கள் தயாரிக்கப்படல் வேண்டும். இதற்கு வணிக நிறுவனங்கள், முஸ்லிம்களில் பெரும் பணக்காரர்கள் முன் வரவேண்டும்.

நபிமார்கள், சத்திய சஹாபாக்கள் ஆகியோரின் தியாக வரலாறுகள் [http://www.satyamargam.com/articles/history/thozharkal.html] பரவலாக்கப்பட வேண்டும்.

யூட்யூப் இணைய தளத்திற்குப் பரவலாக (Flag as inappropriate)  க்ளிக்குவதுடன் இமெயில், கடிதம், ஃபேக்ஸ் எழுதி கண்டனம் தெரிவித்து, இந்த விடியோவை முழுமையாக நீக்கக் கோரலாம். இவை தவிர வீடியோவை பிற தளங்களில் காண நேரிட்டால், அழகிய முறையில் அந்த தள நிர்வாகத்திற்கு உண்மை நிலையை எடுத்தெழுதி நீக்கக் கோர முடியும். [http://www.satyamargam.com/english/2027-how-to-ban-innocence-of-muslims-video-online.html] சுய விளம்பரத்திற்காக அந்த வீடியோவை முழுமையாகத் தடை செய்ய யோசிக்கும் யூட்யூப், நாட்டளவில் தடை செய்வது நடப்பிலுள்ளது.

ஆங்கிலம் அறிந்த அத்தனை குழுமங்களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர், அனைவருக்கும் அனுப்பி இதன் உண்மை நிலையை அறியச் செய்யலாம். அதன் மூலம் அவர்களும் இத்தகைய விஷம வீடியோக்களைத் தடை செய்ய உதவக்கூடும்.

"தீமையிலும் நன்மையுண்டு" எனும் முதுமொழிக்கேற்ப தம் எதிர்ப்புக் குரலைக் காட்டுவதற்காக தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் ஒற்றுமையுடன் ஒன்று திரண்டதையும் கண்டோம்.

இராக்கில் காட்டப்பட்ட எதிர்ப்பில் ஸன்னிகளும் ஷியாக்களும் ஒன்றாய்க் கலந்ததையும் கண்டோம். புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்கள் ஆற, வன்முறைச் செயல்களை அறவே தவிர்த்து, மற்ற நாடுகள்/மாநிலங்களுக்கு முன்மாதிரியாக - ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டிய பொறுப்பு தமிழக முஸ்லிம்களுக்கு உள்ளது.

பொய், மோசடி, பித்தலாட்டம் கலந்து எந்த அளவிற்கு இஸ்லாத்திற்கு தீங்கிழைக்க எதிரிகள் எண்ணுகிறார்களோ அதைவிட மேலாக இறைவன் இஸ்லாத்தைப் பிற மதத்தவர் அறியும் வண்ணம் செய்கிறான். இந்தக் கழிசடைப் படத்துக்குப் பதிலடி தரும் வண்ணம் நபி(ஸல்) அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்துக் கொண்டிருப்பவர்கள் [http://www.satyamargam.com/1378] விரைந்து அதை வெளியிட முயலவேண்டும். ஏனெனில், அதற்குள் சிண்டி லீயும் அன்னா குர்ஜியும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுவிடக்கூடும்.

பாவம், இறைவனின் ஒளியைத் தம் வாயால் ஊதி அணைத்துவிடுவதற்குப் பகல் கனவு கண்டு தோற்றுப்போன இன்னொரு Innocence of Anti Muslims!

Comments   
~முஹம்மத் ஆஷிக்-Citizen Of World~
0 #1 ~முஹம்மத் ஆஷிக்-Citizen Of World~ 2012-09-20 08:23
அஸ்ஸலாமு அலைக்கும்.

அறிந்திராத அரிய தகவல்கள்.
அவசியமாக தேவைப்படும் அருமையான கருத்துக்கள்.
மிகவும் சிறப்பான ஆக்கம்.

///இஸ்லாம் துளியும் காட்டித் தராத வன்முறையில் இறங்கி, பொதுச்சொத்துகளை , உடமைகளை, உயிர்களைச் சேதப்படுத்துவது ம், மறியல், ஆர்ப்பாட்டம், பேரணியில் செருப்பால் அடிப்பது, கொடியை எரிப்பது, சாணியைக் கரைப்பது, விளக்குமாறில் வீரம் காட்டுவது, கொடும்பாவியைக் கொளுத்துவது போன்ற இஸ்லாம் காட்டித் தராத பண்பற்ற அரசியலுக்கு மட்டுமே உதவும் அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவது முஸ்லிம்களுக்கு அழகல்ல. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகி விடாது என்பதை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும். நம் உணர்ச்சிகளைக் காட்டவேண்டும்; ஆனால், அது நமக்கு இடர் தராத மக்களுக்கு இடைஞ்சலாகக் கூடாது.///

----வழிமொழியப்பட வேண்டிய கருத்து..!
ஒரு நான்கைந்து நாட்களுக்கு முன்னரே இந்த எடிட்டோரியல் வந்திருந்தால் இன்னும் அதிக பலன்களை தந்திருக்கக்கூடும்.

தாமதம் எனினும் தரம். ஜசாக்கல்லாஹு க்ஹைர்.
Quote | Report to administrator
IBNU HAMDUN
0 #2 IBNU HAMDUN 2012-09-20 11:25
//முஹம்மது (ஸல்) அவர்கள் ஏளனம் செய்யப்படுவதைப் பொறுத்துக் கொள்ளமாட்டான். ஏனெனில் முஹம்மது (ஸல்) அவர்கள் உயிரினும் மேலானவர் என்பதை அவர் காட்டித் தந்த வழிமுறையோடு எதிர்வினையாற்ற வேண்டும். திட்டமிட்ட எதிர்வினை, இனியொரு முறை எதிரிகள் விஷமம் செய்ய எத்தனிக்கையில், ஒரு கோடி முறை யோசிக்க வைக்கும்.

பிற மதத்தவர்களிடம், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வீரியமுடன் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை அதன் சரியான வடிவில் எடுத்துச் சொல்ல வேண்டும். "நான் முஸ்லிம்" என்று வாயால் மட்டும் சொல்லாமல் "நான் முஸ்லிம்" என்பாதை வாழ்வால் காட்டுவதற்கு நாம் முன்வரவேண்டும். இது ஏதோ ஆடியோ, வீடியோ, டிவிடி, புத்தகங்கள், இணைய தளங்கள் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும், நபியவர்கள் போதித்த நெறியைத் தமது வாழ்க்கையாகவே ஆக்கிக் கொள்ளல் வேண்டும். ஒரு முஸ்லிமின் சொல், செயல் அனைத்திலும் ஒரு நறுமணம் போல சுகந்தமாய் இஸ்லாம் வெளிப்படுமாறு "தஃவா" வெளிப்படல் வேண்டும். //

Exactly the way we need all the time.
Quote | Report to administrator
Noushad ali
0 #3 Noushad ali 2012-09-20 11:48
அறிந்திராத அரிய தகவல்கள்.
அவசியமாக தேவைப்படும் அருமையான கருத்துக்கள்.
மிகவும் சிறப்பான ஆக்கம்.
Quote | Report to administrator
Dr. Ibrahim
0 #4 Dr. Ibrahim 2012-09-20 11:59
உங்கள் தலையங்கத்தை ஒரு வாரமாக எதிர்பார்த்திரு ந்தேன். அல்ஹம்துலில்லாஹ்.

வெறுமனே உணர்ச்சி வசப்படலுக்கு முக்கியத்துவம் தராமல், இயக்க அரசியல் விளையாட்டுகள் தவிர்த்து, மிகத் துல்லியமாக, செய்ய வேண்டியவை, புறம் தள்ள வேண்டியவை எவை என்பதை சொல்லியிருக்கிற ீர்கள்.
Quote | Report to administrator
Mohamed Ali Jinnah
0 #5 Mohamed Ali Jinnah 2012-09-20 12:03
உணர்வு பூர்வமான,விளக்க மான கட்டுரை.

தேவையான குறிப்புகள் தந்துள்ளீர்கள்


'ஸன்னிகளும் ஷியாக்களும் ஒன்றாய்க் கலந்ததையும் கண்டோம்'
"நான் முஸ்லிம்" என்று வாயால் மட்டும் சொல்லாமல் "நான் முஸ்லிம்" என்பாதை வாழ்வால் காட்டுவதற்கு நாம் முன்வரவேண்டும்.

இஸ்லாம் துளியும் காட்டித் தராத வன்முறையில் இறங்கி, பொதுச்சொத்துகளை , உடமைகளை, உயிர்களைச் சேதப்படுத்துவது ம், மறியல், ஆர்ப்பாட்டம், பேரணியில் செருப்பால் அடிப்பது, கொடியை எரிப்பது, சாணியைக் கரைப்பது, விளக்குமாறில் வீரம் காட்டுவது, கொடும்பாவியைக் கொளுத்துவது போன்ற இஸ்லாம் காட்டித் தராத பண்பற்ற அரசியலுக்கு மட்டுமே உதவும் அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவது முஸ்லிம்களுக்கு அழகல்ல. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகி விடாது என்பதை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும். நம் உணர்ச்சிகளைக் காட்டவேண்டும்; ஆனால், அது நமக்கு இடர் தராத மக்களுக்கு இடைஞ்சலாகக் கூடாது.
Quote | Report to administrator
அபுஇபுறாஹிம்
0 #6 அபுஇபுறாஹிம் 2012-09-20 12:32
பெரும்பாலான மக்களால் அறியபப்டாத தகல்களை ஆதாரத்துடன் திரட்டியிருக்கி றது இந்த கட்டுரை...

எதிர்ப்பு அதிர்வுகளை வன்முறையில் முடக்கியிருந்தி ருக்க கூடாது..

தமதமெனிலும் தகுமான பதிவு அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள்.
Quote | Report to administrator
லறீனா அப்துல் ஹக்
0 #7 லறீனா அப்துல் ஹக் 2012-09-20 22:32
அற்புதமான ஆக்கம். கட்டுரையாளருக்க ும் சத்தியமார்க்கம் .காமுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

ஜஸாக்கல்லாஹு கைரன் வ பாரகல்லாஹு ஃபீகும் ஃபித் தாரைன்!
Quote | Report to administrator
மகேஸ்வரன்
0 #8 மகேஸ்வரன் 2012-09-20 23:17
//இஸ்லாம் துளியும் காட்டித் தராத வன்முறையில் இறங்கி, பொதுச்சொத்துகளை , உடைமைகளை, உயிர்களைச் சேதப்படுத்துவது ம், மறியல், ஆர்ப்பாட்டம், பேரணியில் செருப்பால் அடிப்பது, கொடியை எரிப்பது, சாணியைக் கரைப்பது, விளக்குமாறில் வீரம் காட்டுவது, கொடும்பாவியைக் கொளுத்துவது போன்ற இஸ்லாம் காட்டித் தராத பண்பற்ற அரசியலுக்கு மட்டுமே உதவும் அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவது முஸ்லிம்களுக்கு அழகல்ல. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகி விடாது என்பதை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும். நம் உணர்ச்சிகளைக் காட்டவேண்டும்; ஆனால், அது நமக்கு இடர் தராத மக்களுக்கு இடைஞ்சலாகக் கூடாது.//

சரியாகச் சொல்லியிருக்கிற ீர்கள். சென்னையில் இரு நாட்கள் முன்பு நடந்த பேரணி ஆர்ப்பாட்டத்தில ் இடையில் தெரியாதமாக சிக்கி 5 மணி நேரங்கள் சிரமப்பட்டோம் நானும் என் குடும்பமும். உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஏன் பலிஆக வேண்டும்.

அதே சமயத்தில் முசுலிம்களின் உணர்வுகளை காயப்படுத்திய பயங்கரவாதத்தையு ம் கண்டிக்கிறேன்
Quote | Report to administrator
பிறைநதிபுரத்தான்
0 #9 பிறைநதிபுரத்தான் 2012-09-21 08:24
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), அருமையான - துனிச்சலான தலையங்கம். நமது உணர்வுகளை புண்படுத்தியவர் களுக்கு எதிர்ப்பை காட்டியது மிகச்சரியான செயல் - ஆனால் எதிர்ப்பை காட்டிய விதம்தான் நெருடலாக இருக்கிறது. இஸ்லாத்தின் - முஸ்லிம்களின் எதிரிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிவிட்டோமே என்று அஞசத்தோன்றுகிறத ு.
Quote | Report to administrator
Yousef
0 #10 Yousef 2012-09-21 20:47
//எதிர்வினையாற் ற வேண்டும். திட்டமிட்ட எதிர்வினை, இனியொரு முறை எதிரிகள் விஷமம் செய்ய எத்தனிக்கையில், ஒரு கோடி முறை யோசிக்க வைக்கும்.//

When I read the above lines via Facebook www.facebook.com/satyamarkam , I rushed to read the full article, keeping in mind that you are heating up muslims towards violence.

I read the full story and would like to say from my bottom of heart that this is a stunning article with very professional approch, Constructive and Productive.

You are doing great.
Quote | Report to administrator
M Muhammad
0 #11 M Muhammad 2012-09-21 21:48
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களே

மீண்டும் இது போன்ற சம்பவங்களின் பின்னணியில், ஒரு சில அடிப்படையான உண்மைகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

இஸ்லாமோ முஸ்லிம்களோ வன்முறையாளர்களை உருவாக்கவில்லை. வன்முறையை என்றுமே தூண்டியதில்லை அது மனிதர்களின் படைப்பாளனாகிய ஏக இறைவனால் மனித சமுதாயம் முழுவதற்கும் வழங்கப்பட்ட, தூய்மையான இறை மார்க்கமான இஸ்லாத்திலோ உண்மையான முஸ்லிம்களாலோ போதிக்கப்பட வில்லையென்பதே வரலாற்றில் பதியப்பட்டுள்ள சத்தியம்.

"எவர் ஒருவர் அநியாயமாக ஒரு மனிதரை கொலைச் செய்கிறாரோ அவர் முழு மனித சமுதாயத்தையும் கொலைச் செய்தவராவார், ஒரு மனிதரை வாழ வைப்பவர் முழு மனித சமுதாயத்தையும் வாழ வைத்தவராவார்" என்று உபதேசிக்கும் மார்க்கம். பார்க்க அல் குர் ஆன் 5 : 32

மனிதகுலத்தின் எதிரியாகிய தீய ஷைத்தானின் வலையில் சிக்கியவர்களை அவன் தனது சூழ்ச்சியால் இது போன்ற கீழ்தரமான காரியஙளில் ஈடுபடுத்கி அதன் எதிர்விளைவாக சிலரை வன்முறையி ஈடுபடுத்தி மகிழ்கின்றான். உண்மையான முஸ்லிம்கள் இது போன்ற நேரங்களிலும் தமது உயிருக்கும் மேலான இறைவன் மீதும் அவன் வழங்கிய மார்க்கத்தின் மீதும் அதன் வேதத்தின் மீதும் அவனால் அனுப்பப்பட்ட இரைத்தூதர்கள் மீதும் அவர்கள் வழிமுறையின் மீதும் உள்ள அன்பின் காரணமாக இது போன்ற நிகழ்வுகளிலும் பொறுமையை கடைபிடிக்கின்ரன ர் பொறுமையை கடைபிடிக்கவேண்ட ும் என்று வலியுறுத்துகின் ரனர் இல்லையென்றால் வன்முறையின் தீயில் அதுவுமே மிஞ்சி நிற்காது என்றால் மிகையாகாது.

ஆனால் இன்னும் சிலர் மேலே கூறப்பட்ட இதே அன்பின் காரணமாக இது போன்ற நிகழ்வுகளில் பொறுமை இழக்கும் நிலை ஏற்படுகிறது,இது முற்றிலும் தவறான கண்டனத்திற்குரி ய வழிமுறையாகும். யாரோ ஒருவர் செய்த துற்செயலுக்கு யாரையோ தண்டிப்பது போன்றது விவேகமும் அறிவார்த்தமுமற் ற அபத்தமான ஒரு காரியமாகும். அதன் மூலம் வன்முறைகள் நிகழ்கின்றது இதன் மூலம் மனித குலத்தின் எதிரியான ஷைத்தானுக்கு பொறுத்தமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. உண்மை முஸ்லிமுக்கோ ஏக இறைவனுக்கோ மகிழ்ச்சி ஏற்படுவதில்லை என்பதே இறைமார்க்கம் தரும் படிப்பினையாகும் .சம்பந்தப்பட்டவ ர் தண்டிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் அதற்க்காக முறையான முயற்ச்சிகளும் நடவடிக்கைகளும் வரம்பு மீராமல் எடுக்கப்பட வேண்டும்.

அவரை விட்டு விட்டு நமது கோபத்தை வன்முறைகளில் வெளிபடுத்துவதன் மூலம் நாம் நம்மை வன்முறையாளர்கள் என்று பட்டம் சூட்டி மகிழ்பவர்கள்காக ிய மனிதகுல எதிரிகலுக்கு உதவுகின்ரோம் என்பதை உணரவேண்டும், மட்டுமல்லாமல் இந்த தூய மார்க்கத்தினைப் பற்றி தவறான கருத்தில் உள்ளவர்களுக்கு மேலும் அவர்கள் அந்த தவறான கருத்தில் உறுதியாக இருக்க அதன் மூலம் இந்த சத்திய இறைமார்க்கத்தின ் உண்மையை ஏற்கமல் வாழ்ந்திட வழி வகுகின்ரோம்.

முழு மனித சமுதாயமும் ஒரு குடும்பம் மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையருக்கு பிறந்த சகோதரர்கள் தாம் ( என்பதை அல் குர் ஆன் 4 : 1,மற்றும் 49 :13 ஆகிய வசனங்கள் பறைச்சாற்றுகின் றன) அவர்கள் இன்று எந்த மததில்,கடவுள் கொள்கையில் ,அல்லது நாத்திக கோட்பாடில் பிரிந்து கிடந்தாலும் அவர்கள் சகோதரர்களே என்பதை தாம் இரைவேதம் என்று நம்பும் எந்த வேதத்தை முறைகாக அணுகினாலும் அறிய முடியும். பொறாமை, காழ்ப்புணர்ச்சி ,வெறுப்பு, உலகாதாயம் . சுய இச்சைகள் ,குரோததத்தையும் விரோதத்தையும் ஏற்படுத்தி மனித நேயத்தை சீர்குலைக்கின்ர து என்ற உண்மையையும் அந்த உண்மைகலை உணர்த்த வந்த உததம இரைத் தூதர்கள் அனைவரையும் முழுமையாக அரிந்து போற்றீ முழுமையாக பின்பற்ற வெண்டும் என்பதை உணர்வதும் உணர்த்துவதும் முழு மனித சமுதயத்தின் தலையாய கடமையாகும்.

இதன் மூலம் இவ்வுலகில் மனித நேயம் மலர்ந்திடவும் சுமூகமான வாழ்க்கை அமைந்து இரு உலகிலும் வெற்றியும் ஈடேற்றமும் கிடைக்க தொடர்ந்து முயற்சிப்பதுடன் அதற்காக தூய மனதுடன் ஏக இறைவனை பிராத்திப்போமாக .
Quote | Report to administrator
சஃபி
0 #12 சஃபி 2012-09-21 23:50
அஸ்ஸலாமு அலைக்கும்.

"வன்முறை இஸ்லாத்தில் இல்லை" ; "அப்படிச் செய்திருக்கக் கூடாது" என்றெல்லாம் இங்கு எழுதும் சகோதரர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. நடக்காத வன்முறையை நடந்ததாகக் கற்பனை செய்துகொண்டு, "நாங்க ரொம்ப நல்லவங்க" என்பதுபோல் ஏஸி ரூமில் உட்கார்ந்துகொண் டு எழுதுவது சுலபம்தான்.

அப்படி என்ன வன்முறை நிகழ்ந்தது? அல்லது வன்முறைகள் நிகழ்ந்தன?

நாமெல்லாம் ரொம்பவும் சாதுவாகி, தஃவாவை விட்டு ஒதுங்கிப்போவதால ், இஸ்லாத்தைப் பிறருக்கு எத்திவைக்கும் பணியை அவ்வப்போது தன் எதிரிகள் மூலமாக அல்லாஹ் நிறைவேற்றுகின்ற ான்; அவ்வளவுதான்.

கடைசியாக நம் தூக்கம் எப்போது கலைந்தது என்று நினைவிருக்கிறதா ? 2006இல் டென்மார்க்கின் Jylland-Posten இதழ் பிரசுரித்த கேலிச்சித்திரத் தின்போது. அதாவது ஆறு ஆண்டுகள் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம்.

அதற்கும் முன்னதாக 1998இல் சைத்தான் ருஷ்டியின் 'சாத்தானிய வசனங்கள்' வந்தபோது கண்களைக் கசக்கிவிட்டுக்க ொண்டு எழுந்து உட்கார்ந்தோம்.

அந்த இரு நிகழ்வுகளும் நம் உயிரினும் மேலான அண்ணலாரைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்ட ு முன்னெடுக்கப்பட ்ட முயற்சிகள். விளவு என்ன? அதற்குப் பிறகுதானே மேற்குலகம் வரலாறு காணாத அளவில் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டது?

"பேஸ்லியின் ட்ரெய்லருக்கு எதிர்ப்புக் காட்டாமல், கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் ஆறு லட்சம் பேர் பார்த்திருக்க வாய்ப்பிருந்திர ுக்காது" என்றெல்லாம் நம் சகோதரர்களே எழுதுவதைப் பார்த்து, இவ்வளவு கோழையாகிப் போகவேண்டுமா? என்று பதைப்பு ஏற்படுகிறது. 14 நிமிட ட்ரெய்லரை ஆறு கோடி பேர் பார்த்தால்தான் என்ன? இப்போது காட்டப்பட்டிருக ்கும் குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட காட்டாமல் விட்டிருந்தால் முழுப்படத்தையும ் அமெரிக்காவின் வரிச்சலுகை ஆசியோடு பேஸ்லி வெளியிட்டிருப்பான்!

நபி (ஸல்) எங்கள் உயிரைவிட மேலானவர் என்பதெல்லாம் வெறும் உதட்டளவோடு நின்றுவிடுவதுதா ன் இஸ்லாத்தை விவேகமாக வளர்ப்பதாக்கும்?

"அல்லாஹ்வின் தூதரே! என் உயிரைத் தவிர்த்து, இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றயும்வி ட உங்களை நேசிக்கிறேன் நான்" என்று உமர் (ரலி) கூறியபோது, "உம்முடைய உயிரைக் காட்டிலும் என்னை நேசிக்காதவரை உமது ஈமான் முழுமையடையாது உமரே" என்று நபி (ஸல்) பதிலளித்தார்கள்.
பதைத்துப்போன உமர் (ரலி) "அல்லாஹ்வின் மீதாணை! என் உயிரைவிடவும் உங்களை நேசிக்கிறேன்" என்று கூறியபோது, "இப்போதுதான் உமரே முழுமையான ஈமான் கொண்டவரானீர்" என்று நபி (ஸல்) மகிழ்ச்சி தெரிவித்தார்கள் .
فتح الباري شرح صحيح البخاري - كتاب الْأَيْمَانِ وَالنُّذُورِ - حتى أكون أحب إليك من نفسك فقال له عمر فإنه الآن والله لأنت أحب إلي من نفسي

"இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் ..." 33:6 .

உயிரைவிடவா? உயிரை விடவா
சாவைத் தம் கண்ணெதிரே கண்டபின்னும், "கை-கால்கள் கட்டப்பட்டு தண்டனை அனுபவிக்கும் என் நிலையில் முஹம்மது இருந்தால் நன்றாயிருக்குமே " என்று வெறும் வாயால் சொல்வது மட்டுமே உயிர்பிழைக்க விலையாக குபைப் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவ்வாறு கூறினால் விடுதலை நிச்சயம் என்று தெரிந்த பின்னும் "என் தலைவரின் காலில் சிறு முள் குத்துவதைக்கூட என்னால் சகிக்க இயலாது. நீ சொல்வதுபோல் நாவால் சொல்லவும் எனக்கு சாலாது. என் தலையை வெட்டுவதாயின் வீணாக நேரம் கடத்த வேண்டாம்" என்று கூறிய குபைப் (ரலி); நபி (ஸல்) அவர்களின் தூதுவராகப் பொய்யன் முஸைலமாவிடம் சென்று கண்ட-துண்டமாக வெட்டப்பட்ட ஹபீப் (ரலி) ஆகிய சத்தியவான்களின் தியாகத்தை நாம் கேலி செய்கிறோமோ?
Quote | Report to administrator
பேட்டையான்
0 #13 பேட்டையான் 2012-09-22 18:24
ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகி விடாது என்பதை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும். நம் உணர்ச்சிகளைக் காட்டவேண்டும்; ஆனால், அது நமக்கு இடர் தராத மக்களுக்கு இடைஞ்சலாகக் கூடாது.//மகேஸ்வ ரன்: கருத்து சரியானது

போராட்டம் தேவைதான் ஆனால் சாலைமரியல் கூடாது
Quote | Report to administrator
பேட்டையான்
0 #14 பேட்டையான் 2012-09-22 19:45
நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும், நபியவர்கள் போதித்த நெறியைத் தமது வாழ்க்கையாகவே ஆக்கிக் கொள்ளல் வேண்டும். ஒரு முஸ்லிமின் சொல், செயல் அனைத்திலும் ஒரு நறுமணம் போல சுகந்தமாய் இஸ்லாம் வெளிப்படுமாறு "தஃவா" வெளிப்படல் வேண்டும்.

இதுவே நாம் நபி(ஸல்)அவர்கலை உன்மையாக நேசிப்பதாகும்
Quote | Report to administrator
mohammed siraj
0 #15 mohammed siraj 2012-09-22 19:57
your message is good medicine for me because i cannot sleep well for last 1week, iam very disturb because of the movie
allah bring all muslims together to fight against the bigger saitan america
and my kind request to all muslim is plz stop using american products we muslim can bring down the american economic so that it become a poor country in the world aameen
Quote | Report to administrator
M.S.K.
0 #16 M.S.K. 2012-09-22 23:51
STOP USING ALL AMERICAN PRODUCTS ,WHETHER ITS JUST A BEVERAGE OR ANYTHING ELSE FOR THIS REASON AND USE ALTERNATE THINGS TILL THEY TAKE STRICT ACTION AND DO STOP SUCH THINGS AND APOLOGIZE...... ALREADY MANY ARE DOING THIS AND IN DENMARK TOO IT WAS DONE WHETHER THIS MAKES A DIFFERENCE TO THEIR ECONOMY OR NOT IT WILL SURELY MAKE A DIFFERENCE IN THEIR WAY OF APPROACHING TO SUCH MADNESS AND BEING STRICT IN CONTROLLING OR ACTING TO CURB SUCH ABSURD "FREEDOM OF HATRED "...BY FILTHY WORTHLESS CRIMINALS AND ENEMIES OF HUMANITY
Quote | Report to administrator
M Muhammad
0 #17 M Muhammad 2012-09-23 00:57
நபிகள் நாயகம் (ஸல்) வாழ்கை வரலாறு 01

www.youtube.com/.../
Quote | Report to administrator
M Muhammad
0 #18 M Muhammad 2012-09-24 01:19
Prophet Mohammed's lLast sermon

"http://www.youtube.com/embed/62xHNvvGsFU?feature=player_detailpage"
Quote | Report to administrator
abumujaddidh
0 #19 abumujaddidh 2012-10-13 23:09
பல தகவல்களை உள்ளடக்கிய நல்ல ஆக்கம்! ஆனால் தீர்வுதான் சரியல்ல! இதுபோன்ற 'குற்றங்களுக்கு ' இஸ்லாம் தெளிவான தீர்வை வழங்கி இருக்கிறது. அதை எப்படி அமல் படுத்த வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறது. அதைத் தான், அதன்படிதான் நாம் சொல்லவும் செயல்படவும் வேண்டும். அதை விடுத்து ஆளாளுக்கு 'ஆலோசனை' சொல்லிக் கொண்டிருப்பது வரம்பு மீறல் என்பதை நினைவுறுத்துகிற ேன்! அல்லாஹ்வின் சட்டவரம்புகளை நம்பிக்கை கொண்டதோடு நின்றுவிடாமல் அவற்றை அதற்கே உரிய வழிமுறையைப் பின்பற்றி செயல்படுத்த நாம் எல்லோரும் முன்வருவோமாக!
Quote | Report to administrator
K.Mohamed Mohideen
0 #20 K.Mohamed Mohideen 2013-04-05 09:35
It is nice article.The islam symbol is missing in the protesting muslim.As we are not practising islam fully,we are in this situation.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்