முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

ஏடு-இட்டோர்-இயல்

நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எடுத்துள்ள முடிவுகள் வருத்தப்பட வைக்கின்றன. ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்துப்போட்டு, பெண்களுக்காக எனவும் தலித்களுக்காக எனவும் ஒதுக்கி, முன்னாள் இந்நாள் முதல்வர்கள் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைப்பதில் ஒன்றுபட்டுள்ளனர்.


குரங்கு பங்கு வைத்த ஆப்பத்தில் எஞ்சியிருக்கும் பகுதிகளிலாவது ஒன்றுபட்டுப் பொது வேட்பாளர்களை நிறுத்தினால்கூட முஸ்லிம்கள் அரசியல் பிரதிநித்துவம் பெற்றுப் பதவிக்கு வருவதென்பது சற்றே கடினம் எனும் சூழ்நிலையில், இம்முறை முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட எடுத்துள்ள மோசமான முடிவால், முஸ்லிம்கள் அதிகம் வாழும் உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் ஏதோ ஒரு சில வார்டுகள்கூட முஸ்லிம்களுக்குக் கிடைக்காமல் போகும் அவல நிலையை நினைத்துக் கவலை கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்து அரசியலுக்கும் கட்சிக்கும் மக்கள் கொடுத்த மரண அடியைத் தமக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடி, பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நரவேட்டை மோடியை அழைத்தும் மோடியின் உண்ணா(?)விரதக் கேலிக்கூத்து நாடகத்துக்குத் தம் அமைச்சர்களை அனுப்பிவைத்தும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கிலிருந்து தாம் திருந்தவேயில்லை என்று கூறாமல் கூறும் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாடம் புகட்ட வேண்டுமானால் முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் செய்ய வேண்டுவது என்ன? சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் தங்களைக் கூட்டணியாக இணைத்துக் கொண்ட மமகவையும் தேமுதிமுகவையும் கம்யூனிஸ்ட்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் எட்டித் தள்ளிய
ஜெயலலிதாவுக்குத் தகுந்த பாடம் புகட்டும் வழி என்ன? என்று யோசித்துச் செயல்பட்டிருக்க வேண்டும்.

அரசியல் களத்தில் நிற்கும் முஸ்லிம் லீக்குகளும் மமகவும் இன்னபிற அமைப்புகளும் அரசியலுக்காகவாவது ஒன்றுபட்டு நின்று, வெல்லும் கூட்டணி காண முயற்சிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.


ஆனால் நடப்பதோ வேறு!


ஏற்கெனவே திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, புதிய தமிழகம் ஆகியவை தனித் தனியாகவும் கொங்கு வேளாளர் முன்னேற்றக் கழக ஆதரவோடு பாஜகவும் தேமுதிகவோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஓர் அணியாகவும் நிற்கும் நிலையில்,


முஸ்லிம் லீக், மமக ஆகியவையும் தனித் தனியாக நிற்கிறார்களாம்!


விடுதலைச் சிறுத்தைகளும் விடவில்லை.


எஞ்சியுள்ள முஸ்லிம் அமைப்புகளான 1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை, 2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, 3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, 4. இந்தியன் நேஷனல் லீக், 5. சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை, 6. தேசிய லீக் கட்சி, 7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், 8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த், 9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில், 10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், 11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை, 12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, 13. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம், 14. இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஆகியவை விடுதலைச் சிறுத்தைகளோடு கூட்டணி. இந்தக் கூட்டணியில் 6 கிருஸ்துவ அமைப்புகளும் இடம்பெறுகின்றன.


இப்படிச் சிதறிப் போவதோடு, தங்கள் கட்சித் தலைவர்/தலைவி சொல்வதை வேதவாக்குபோல் எடுத்துக்கொண்டு, உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் வாக்களிக்கும், வாக்குச் சேகரிக்கும் 'கரை வேட்டி' முஸ்லிம்கள் இன்னமும் உள்ளனர்.


சமுதாயத்தை இப்படிச் சிதறவிடுவது யாருக்கு இலாபத்தைக் கொடுக்கும் என்ற சிறு சிந்தனைகூட முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இல்லாமல்போய் விட்டதே!


திமுகவுக்குக் கொடுத்த மரண அடியால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த முதல்வர் ஜெயலலிதா, திமுகவினரைச் சகட்டு மேனிக்குக் கைது செய்து சிறையிலடைத்தும் தம் அகங்காரத்தை விட்டுக்கொடுக்காமல் சமச்சீர் கல்வி விஷயத்தில் மாணவர்கள் நலனில் விளையாடி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு நடத்தி, இறுதியில் உச்ச நீதிமன்றத்திடமிருந்து குட்டு வாங்கித் திரும்பியதையும் புதிய தலைமைச் செயலக விஷயத்தில் மக்களின் கோடிகணக்கான வரிப்பணத்தை வீணாக்கி மக்களிடம் வெறுப்புக்குரியவராக மாறியிருப்பதையும் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதிமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபடாமல் தனித்தனியாகப் பிரிந்து நின்றால் அது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் பலனை ஏற்படுத்தும் என்பது இவர்களுக்குப் புரியவில்லையா?


அரசியலில் கத்துக்குட்டியான, சினிமா கேப்டன் விஜயகாந்துக்கு இருக்கும் அரசியல் தொலைநோக்கு எண்ணம் இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லாமல் போனது ஏனோ?


விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு இருக்கும் பரந்த எண்ணம்கூட இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லாமல்போனது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது!


14 முஸ்லிம் அமைப்புகள் + 6 கிறிஸ்துவ அமைப்புகளை ஒன்றுகூட்டி அவர்களுடன் கூட்டணி வைத்துக் களம் காண்கிறார் திருமா. இந்த அணியில் புதிய எஸ் டி பி ஐ கட்சியும் இணைந்துள்ளது.


இப்போதைய அரசியல் நிலையில், இந்த அணிக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, சிறுபான்மையினரை அரவணைப்பதில் திருமாவின் அரசியல், ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.


அதிமுக அணியிலிருந்து வெளியேறி/வெளியேற்றப்பட்டு, தனித்து நிற்கும் மமகவின் அணுகுமுறையால், அதன் பலன் நிச்சயம் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் கிடைக்கும் என்பது வெளிப்படை. இவ்வாறு எதிர்பார்த்தே, தம் மற்ற கூட்டணிக் கட்சிகளைப் போலவே மமகவையும் ஜெயலலிதா கழட்டி விட்டிருக்கக் கூடும்.


அரசியல் கட்சிகளாகத் தங்களை இனங் காட்டிக் கொள்ளும் மமகவும் முஸ்லிம் லீக்கும் திருமாவுடன் இணையட்டும். இல்லையேல் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கட்டும்.


அதைவிடுத்து, முஸ்லிம்கள் பொது வேட்பாளராக நின்று வெற்றிபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தத்தம் வேட்பாளர்களையும் போட்டியாளர்களாகக் களமிறக்கி, அதிமுக, பாஜக, திமுக, தேமுதிக என வேறு யாராவது வெற்றிபெற வழிவகுத்துத் துணை நின்றால் ... அதனை இச்சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது!

Comments   
சத்தியமார்க்கம்.காம்
0 #51 சத்தியமார்க்கம்.காம் 2011-10-09 12:37
அன்புச் சகோதரர் முஹம்மது ஆஷிக்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.

கடந்த 4.10.2011 தேதியிட்ட எங்களது பின்னூட்டத்தில் , முஸ்லிம் லீக்கோ மமகவோ முஸ்லிம் அமைப்புகளை ஒன்றிணைத்து கூட்டணிக்குத் தலைமையேற்றிருந் தால் அவர்களைத்தாம் நாங்கள் ஆதரித்து எழுதியிருப்போம் . எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.

எல்லா அமைப்புகளையும் ஒன்றுகூட்ட முடியாவிட்டாலும ் இரு அரசியல் கட்சிகளாவது ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்திருந்தா ல் சமுதாயத்துக்கான ஆதாயம் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பு இருந்ததல்லவா?

Quote:
எல்லா தொகுதிகளிலும் திருமா தன் கட்சியில் இருந்து முஸ்லிம்களை மட்டுமே நிறுத்துவார் என்று நாம் எதிர்பார்க்க முடியாதல்லவா..?
எனும் உங்கள் கேள்வி நியாயமானதுதான்.

"ஒரு முஸ்லிம் தொகுதியில் போட்டியிடும் எல்லா அரசியல் கட்சியைச் சார்ந்த முஸ்லிம்களும் ..." என்று எமது பின்னூட்டத்தில் குறிப்பிட்டது, பிற மதத்தவரோடு முஸ்லிம்கள் அதிகமாகக் கலந்து வாழும் ஊர்களை/வார்டுகளைப் பற்றியதாகும். பீஜேபீயைத் தவிர, திருமாவின் வி.சி. கட்சி உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு வார்டில் முஸ்லிமைத்தான் நிறுத்தும். அப்படிப் பல கட்சிகளாலும் ஒரு தொகுதிக்கு வேட்பாளர்களாகப் பல முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டு, வாக்குகள் சிதறினால் நம்பிக்கையே இல்லாமல் எதிர்த்து நிற்கும் வேட்பாளர் வெற்றிபெறும் வாய்ப்பு உண்டல்லவா? எனவே, தன்னலம் தன் கட்சி நலன் என்பதைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, தன் சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு, எல்லாக் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் வேட்பாளர்களும் தங்களுக்குள் பேசிக்கொண்டு ஒரு முஸ்லிமைத் தங்கள் எல்லாருடைய பிரதிநிதியாகவே அறிவிக்கலாம்.

ஒரு தொகுதிக்கு ஒரு அமுஸ்லிம் +6 முஸ்லிம்கள் போட்டியிட்டால் முடிவு எப்படி இருக்கும்? என்பது வெளிப்படை. இது ஊரும் தெருவும் சார்ந்த வார்டுக்கான தேர்தல்தான் என்பதால் 'பொது வேட்பாளர்' என்பதில் அரசியல் கட்சிகள் பெரிதாக அலட்டிக் கொள்ளாது.

இதற்கு மாற்றாக,
முஸ்லிம்கள் குறைவாக வாழும் ஒரு தொகுதிக்கு 6அமுஸ்லிகளும் ஒரு முஸ்லிமும் போட்டியிடுகிறார் என வைத்துக் கொள்வோம். அப்போதும் முஸ்லிமுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். இவை அனைத்தும் 3.10.2011க்கு முன்னரே சிந்தித்து - அதாவது சமுதாய நலனைச் சிந்தித்து - எடுத்திருக்க வேண்டிய முடிவுகள்.

நீங்கள் உங்களது முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதுபோல் தன்பலம் காட்டுவதுதான் குறிக்கோள் என்றாகிவிட்ட பிறகு சமுதாய நலன் ஐந்தாம் பட்சமாகிவிட்டது.

நிற்க.

Quote:
தங்களின் சென்ற பதிவில் ஏற்பட்டுவிட்ட இஸ்லாமிய ஒற்றுமையின் அடிப்படையில்
எனக் குறிப்பிட்டிருக ்கின்றீர்கள். அது எமது பதிவன்று என்பதை முன்னமே சுட்டியிருக்கிறோம்.

மூன்றுபேர் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டால் முழு சமுதாயமும் ஒன்றுபட்டுவிட்ட து என்பது கனவாகத்தானிருக் கும் - ஆனால் நல்ல கனவாக!

தங்களின் வருகைக்கும் நல்ல கருத்துகளுக்கும ் நன்றி!
Quote | Report to administrator
முஹம்மது ஆஷிக்_citizen of world
0 #52 முஹம்மது ஆஷிக்_citizen of world 2011-10-10 02:56
அன்புள்ள சத்தியமார்க்கம் தளத்தினருக்கு,
தங்கள் விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றி சகோ.
ம்ம்ம்... இனி என்ன செய்ய..?
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தேர்தலிலாவது நம் எண்ணம் போல் அனைத்து முஸ்லிம் கட்சியினரும் மற்ற நலனை எல்லாம் புறந்தள்ளி, "இஸ்லாமிய சமுதாயநலனே பிரதானம்" எனக்கொண்டு... ஒன்று சேர எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்வோம்.

பிறர் எழுதிய ஒரு பதிவில் தங்களுக்கு கொள்கை அளவில் முழு உடன்பாடு இல்லாவிட்டால் அதை நீங்கள் இங்கே பிரசுரிக்காவா போகிறீர்கள்..?
//அது எமது பதிவன்று என்பதை முன்னமே சுட்டியிருக்கிற ோம்.//---தெரியு ம் சகோ.
//தங்களின்// என்பதை.... //தங்கள் தளத்தில் வெளியான//... என்ற பொருளில் சொன்னேன். இப்படியே கூட நான் எழுதி இருக்கலாம். தவறுதான். இனி கவனமாக இருந்து கொள்கிறேன்.
Quote | Report to administrator
இப்னு ஹலிமா
0 #53 இப்னு ஹலிமா 2011-10-10 09:40
அஸ்ஸலாமு அலைக்கும்
சத்தியமார்க்கம் தளத்தினர்களுக்கு,
இதற்கு மேலும் இங்கு உரையாடுவது கல் பாறையுடன் பேசுவதற்கு சமம். ஆகையால் இனிமேல் கருத்துக்களை பதிவது வீண் என்ற முடிவுக்கே நான் வந்திருக்கிறேன் . ஆனாலும் இந்த தளத்தைப் பற்றிய என்னுடைய ஐயம் மிக சரியான ஆதாரத்துடன் அப்படியே தொடர்கிறது. வாழ்க சத்தியமார்க்கத் தின் கருத்து சுதந்திரம்.
Quote | Report to administrator
அன்வர்தீன்
0 #54 அன்வர்தீன் 2011-10-10 16:14
அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த கட்டுரைக்கு ஆதரவாக, எதிராக கருத்திட்டவர்கள ் அனைருக்கும் இறைவன் அருள்புரிவானாக.

முஸ்லிம்கள் ஒற்றுமையின்றி பல பிரிவினராக பிரிந்திருக்கும ் இந்த சூழலில் ஒற்றுமையை ஏற்படுத்துவது போன்ற::: இணைந்தது சமுதாயம் ! எதிரிகளுக்கு அதிர்ச்சி!! நிகழ்ச்சிகள் நம்மிடையே அதிகமான தாக்கத்தை ஏற்ப்டுத்திவிடு கின்றன. நம்முடைய உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நாம் தொலைநோக்கோடு பார்க்கவேண்டும்.

சகோ புர்ஹான் அவர்கள் சரியாக குறிப்பிட்டுள்ள துபோல, இம்மை மறுமை இரண்டிலும் வெற்றி என்பது மட்டுமே ஒரு உண்மையான முஃமினின் லட்சியமாக இருக்க முடியும். இந்த குறிக்கோள் ஒன்றை மட்டுமே லட்சியமாகக்கொண் டு செயல்பட்டால் முஸ்லிம்களிடையே ஒற்றுமை தானாக வந்துவிடும்.

கூத்தாநல்லூரில் சகோதரர்கள் எதற்காக ஒன்று கூடினார்கள், அவர்களின் குறிக்கோள் என்ன, அந்த கூட்டத்தில் விவாதித்தது என்ன, கூட்டம் முடிந்தபிறகு அதை செயல்படுத்தினார ்களா? இதுபோல் இன்னும் பல விடை காண முடியாத கேள்விகள்தான் நம்முன்னே நிற்கின்றன. மூன்று அமைப்புகள் ஒன்றுகூடி, ஒரே சஹானில் சாப்பிட்டுவிட்ட ு பொன்னாடை போர்த்திவிட்டால ் ஒற்றுமை வந்துவிடும் என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வத ற்கு சமம்.

இதை ஆதரிப்பவர்களிடம ும், இந்த போலி ஒற்றுமைக்கு வித்திட்டவர்களை யும் நோக்கி நாம் கேட்கும் ஒரு கேள்வி. ஒற்றுமை வந்துவிட்டது என்று கூப்பாடு போடுகிறீர்களே, குறைந்தது இந்த உள்ளாட்சி தேர்தலிலாவது இந்த மூன்று இயக்கங்களைச்சேர ்ந்தவர்களும் ஒற்றுமையாக சேர்ந்து தேர்தலை சந்திக்கிறீர்கள ா?மமக ஒரு பக்கம், SDPI ஒரு பக்கம் TNTJ ஒரு பக்கம். நான் கேட்கிறேன் முழு தமிழகத்திலும் வேண்டாம், கூத்தாநல்லூரில் மட்டுமாவது இதை செயல்படுத்துங்க ள். சகோதரர்களே, பிறரை சந்தோஷப்படுத்து வதையும், இந்த போலி ஒற்றுமையை எதிர்ப்பவர்களை இயக்கத்தைச்சேர் ந்தவர்கள் என்று முத்திரை குத்துவதையும் விட்டுவிட்டு, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரின் போதனைகளையும் சரியாக பின்ற்றுவோம். அப்போது நம்மிடையே உண்மையான ஒற்றுமை மலரும். இன்ஷாஅல்லஹ்.

சகோ
அன்வர்தீன்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்