முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

ஏடு-இட்டோர்-இயல்

நடந்து முடிந்த தமிழகத்தின் சட்டமன்றத்திற்கான 17ஆவது பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று, அதன் தலைவி ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார். அ.இ.அ.தி.மு.க. அதிக இடங்களை வெல்லும் என ஆரூடம் கூறிய ஊடகங்கள் உட்பட யாருமே எதிர்பாராத அளவுக்கு 147 இடங்களில் தனித்து (91.875%) வென்று, ஆட்சியைப் பிடித்திருக்கிறது அ.தி.மு.க.


கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிலவிய

  1. விண்ணைத் தொட்ட விலைவாசி
  2. மின்வெட்டு
  3. வரலாறு காணாத ஸ்பெக்ட்ரம் ஊழல்

ஆகியன தி.மு.க.வை எதிர்க்கட்சி வரிசைக்கும் கீழே குப்புறத் தள்ளிப் போட்டிருக்கின்றன. பாவம் ஒரு பக்கம்; பழியொரு பக்கம் என்பதுபோல் தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகளால் அக்கட்சியோடு கூட்டணி சேர்ந்த கட்சிகளும் வெறும் தோல்வியை மீறி, பெரும் தோல்வியைத் தழுவியுள்ளன. குறிப்பாக, முஸ்லிம் லீக் மூன்று இடங்களில் போட்டியிட்டு முட்டை வாங்கிக் கொண்டது. ஈழ ஆதரவுக் கட்சிகளான பா.ம.க.வும் விடுதலைச் சிறுத்தைகளும் படுதோல்வியைச் சந்தித்து, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன. சிக்கனமாக, அவ்வப்போது அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டிருந்த புதிய தமிழகம் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டு, இரண்டு இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில் வென்றுள்ளது. கட்சி துவங்கிச் செயல்படத் தொடங்கிய 5 ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தலைச் சந்தித்து, 41 இடங்களை அ.இ.அ.தி.க.விடமிருந்து பெற்று, 29 இடங்களில் (70.731%) வென்று. பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளது தே.மு.தி.க. தேர்தல் ஆணைய விதிகளின்படி தே.மு.தி.க.வுக்கு அங்கீகாரமும் தனிச்சின்னமும் ஒதுக்கப்படவுள்ளன.

மக்களுக்குக் கடந்த ஆட்சியின் மீதிருந்த கடுஞ்சினத்தின் காரணமாக எதிர்மறை வாக்குகளால் பயனடைந்தது அ.இ.அ.தி.மு.க என்றால், பெரும்பயனை அறுவடை செய்த கட்சி தே.மு.தி.க. என்பது பொருத்தமாக இருக்கும். அட்டூழியங்கள் பெருகிப் போனால் மக்கள் வாக்குகளால் தண்டிப்பார்கள் என்பதற்கு நடந்து முடிந்த தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.

'அசைக்க முடியாது' என்ற நினைப்போடு தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸை, 1967இல் மக்கள் அதிரடியாகத் தூக்கி வீசினர்.

அடுக்குமொழிப் பேச்சாளர்கள்; திரைப்பட வசீகர எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர்; மு.க.வின் காகிதப்பூ நாடகம்; அவை எல்லாவற்றுக்கும் மேலாகச் சொந்தக் காசைச் செலவழித்துக் கூட்டங்கள் போட்ட அடிமட்டத் தொண்டர்கள் என அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸுக்கு எதிரான பல்முனை வியூகங்களோடு 1967 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது, அவற்றை அண்ணாவுக்கே நம்பமுடியவில்லை! இந்திய அளவில் புகழின் உச்சியில் இருந்த பெருந்தலைவர் காமராசர், பேருக்காக எதிர்த்து நிறுத்தப்பட்டிருந்த சீனிவாசன் என்ற மாணவர் ஒருவரால் தோற்கடிக்கப்பட்டார்.

காரணங்கள் சிலவோ பலவோ, தலையாயது அன்றும் இன்றும் ஒன்று மட்டுமே - விலைவாசி!

நடந்து முடிந்த தேர்தலில் களப்பணி என்பதைக் கருத்தில் கொண்டால் இன்றைய முதல்வர் ஜெயலலிதா பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்றே சொல்லலாம். கடந்த ஐந்தாண்டுகளாக அவர் சென்னையில் இருந்ததைவிட கொடநாட்டு பங்களாவில் தங்கி 'ஓய்வு' எடுத்ததே அதிகம். நாடு முழுதும் செய்தியாகிப்போன ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலைக்கூட தமது தேர்தல் பிரச்சாரத்தில் உரிய வகையில் அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. காரணம், ஊழல் என்பது நமது நாட்டு மக்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது என்ற துணிச்சல். "ஆத்துத் தண்ணி, ஐயா குடிச்சா என்ன? அம்மா குடிச்சா என்ன?" என்ற மனோநிலைக்கு நம் மக்கள் வந்து வெகுகாலமாகிவிட்டது. கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொதுவுடமையாகிப்போன ஊழலில், ஒவ்வொரு காசும் தன்னுடையது எனும் உண்மையை மக்கள் உணர்வதேயில்லை. அரசியல்வாதிகள் ஊழல் செய்து கொழிப்பதால்தான் விலைவாசி தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. ஏறிய விலைவாசி குறைந்தது என்ற வரலாறும் இல்லை. என்றாலும் தேர்தலின்போது அரசியல்வாதிகள் தெரிந்து கொண்டே பொய் சொல்வார்கள், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம்" என்று.

முதல்வர் பதவி ஏற்றிருக்கும் ஜெயலலிதா முன்னோக்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய உள்ளன. அவற்றில் கவனம் செலுத்தாமல் பழிவாங்கும் போக்கில் பாடநூல்களில் இடம்பெற்றிருக்கும் மு.க.வின் கவிதைகளக் களையெடுப்பதில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கும்போது, "இவர் திருந்தவே மாட்டார்" என்னும் முடிவுக்கு வருவதற்கு மக்களைத் தள்ளுகிறார் ஜெயலலிதா. இவருடைய முந்தைய ஆட்சியில்தான், "இந்தச் சட்டமன்றக் கட்டடம் கோணலாக இருக்கிறது; நவீன வசதியுடன் புதிய சட்டமன்றக் கட்டடம் கட்டவேண்டும்" என்று கூறினார். அதற்காக ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கும் திட்டம் வைத்திருந்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த மு.க., நானூற்றி ஐம்பது கோடி "ஆத்துத் தண்ணி"யான தமிழக மக்களின் வரிப்பணத்தில் ஜெ. திட்டமிட்ட நவீன வசதிகளோடு கூடிய சட்டமன்றத்துக்காகப் புத்தம்புது கட்டடம் கட்டத் தொடங்கினார். "ஆத்துத் தண்ணி" இப்போது ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. ஏதோ மு.க.வின் சொந்தப் பணத்தில் கட்டிய கட்டடம் என்ற தோரணையில், "அந்தக் கட்டடத்துக்கு நான் போகமாட்டேன்" என்று அடம் பிடிப்பது, இத்தனைக்குப் பின்னும் ஜெ.யின் அரசியல் பக்குவமற்ற தன்மையைத் தெற்றெனக் காட்டுகிறது.

தமது பதவியேற்பின்போது முஸ்லிம்களுக்கான முதல் எச்சரிக்கையாக, நரவேட்டை மோடியை அழைத்து வந்து மேடையில் வைத்துப் பூச்சாண்டி காட்ட நினைக்கும் ஜெ, தமக்கு வாக்களித்தவர்களுள் தமிழக முஸ்லிம்களும் அடக்கம்; தமது கூட்டணியில் ம.ம.க. எனும் முஸ்லிம் அரசியல் கட்சியும் அடக்கம் என்பதையெல்லாம் ஆட்சிக் கட்டில் ஏறிய கையோடு மறந்து, மீண்டும் முருங்கை மரமேறும் வேதாளமாக இனம் காட்டுகின்றார்.

  • பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு 1992இல் தமிழகத்திலிருந்து கரசேவகர்களை அனுப்பியது

  • பாபரி மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து கூட்டப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, "பாபரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளிய செயல் போற்றத் தக்கது" எனப் பேசி, சங் பரிவாருக்கு உற்சாகம் கொடுத்தது

  • அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அக்டோபர் 2002இல் 'மதமாற்றத் தடைச் சட்டம்' கொண்டு வந்தது (பிரிவு 2 : 'பொருட்கள் அல்லது பணம், அது தொடர்பான பரிசுகள் கொடுத்து மதமாற்றம் செய்யக் கூடாது'; பிரிவு 4: 'பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் போன்றவர்களை ஏமாற்றி மதமாற்றம் செய்தால், 4 ஆண்டுகள் சிறை, 1 லட்சம் அபராதம் - இடஒதுக்கீடு ஆசைகாட்டி, சலுகை எனும் பெயரில் தலித் மக்களைக் கட்டாயப்படுத்தி, 11.8.1950இல் குடியரசுத் தலைவர்  வெளியிட்ட ஆணை எண்-19 தலித்துகளை இந்து மதத்தில் இருக்கச் சொல்லும் கட்டாய மதமாற்ற ஆணையே. எனில், 2002ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசு கொண்டுவந்த கட்டாய மதமாற்றத் தடையின் சட்டப் பிரிவு 4இன்படி, குடியரசுத் தலைவர் குற்றவாளியாவார்)

  • பா.ஜ.க. என்றொரு பெயரே தமிழகத்தில் அறிமுகமாகி இல்லாத காலகட்டமான 1998இல் அக்கட்சியைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, தம் தொண்டர்களின் உழைப்பினால் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கிக் கொடுத்து வளர்த்து விட்டது

  • அதைத் தொடர்ந்து மக்களால் பதவி பறிக்கப்பட்டதும், "பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துத் தவறு செய்துவிட்டேன்; அத்தவறை மீண்டும் செய்ய மாட்டேன்" என்று வாழ்வுரிமை மாநாட்டில் முஸ்லிம்களிடம் போலி வாக்குறுதி கொடுத்து, வாக்குச் சீட்டுக்காகக் கெஞ்சியது

  • தம் வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, 2004இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜா.கவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது

  • நாடாளுமன்றத் தேர்தலில் துடைத்தெறியப்பட்ட பின்னர், தானாகக் காலாவதியாகிப்போன மதமாற்றத் தடைச் சட்டத்தை 18.5.2004இல் தாமே ரத்து செய்ததாக அறிவித்தது ("As per the Provisions of Clause 2 of Article 213 of the Constitution, every Ordinance promulgated, has to be replaced by an Act of the Legislature within six weeks from the date of re-assembly of the Legislature. Hence, the Law Department was requested to prepare a Draft Bill to replace the Tamil Nadu Prohibition of Forcible Conversion of Religion (Repeal) Ordinance, 2004")

  • இந்தியாவில் ராமருக்குக் கோயிலே இல்லை என்பதுபோல், "ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறெங்கு கட்டுவது?" என்று  செய்தியாளர்களிடம் கேட்டது.

  • வாழ்வுரிமை மாநாட்டில், "முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கு நான் ஆணையிடுவேன்" என்று பேசியதை 23.8.2001 அன்று சட்டமன்றத்தில் திருமாவளவன் நினைவூட்டியதை மறுத்தது

  • குஜராத்தில் தன் சொந்த மாநில மக்களுள் 2,500 முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த நரவேட்டை மோடி, துக்ளக் ராமசாமியின் பத்திரிகையின் ஆண்டு விழாவுக்காக 26.1.2008இல் தமிழகத்துக்கு வந்தவேளை, முஸ்லிம் அமைப்புகள் மோடியின் தமிழக வரவை எதிர்த்துக் கருப்புக்கொடி காட்டிக் கொண்டிருந்தபோது, ஓடிச் சென்று மோடியை வரவேற்று உற்சாக விருந்தளித்து மகிழ்ந்தது

போன்ற தமிழக முஸ்லிம்கள் இன்னும் மறக்காதவை உண்டு என்பதை முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் ஜெயலலிதாவுக்கு இங்கு நினைவூட்டுகிறோம்.

தமிழகத்திலுள்ள முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் 'தன்னிலை மறந்தவர்களாக'வே இன்னும் இருந்து கொண்டிருப்பது வேதனைக்குரியது!

"சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும்" என்று உரத்து முழங்கிக் கொண்டே, அத்தகைய பிரதிநிதுத்துவம் வந்துவிடாமலிருப்பதற்கான அத்தனை சாத்தியங்களையும் ஆராய்ந்து செயல்படுத்தும் தமிழக முஸ்லிம் அமைப்புகள், தாங்களே தொலைத்த தம் 'கயிறை'த் தேடி எடுத்துக் கொள்ள முன்வரவேண்டும். "போட்டியிடும் எல்லா இடங்களிலும் தோற்கடிப்போம்" எனும் 'அரசியல் பக்குவத்தை' முஸ்லிம் விரோத சக்திகளிடம் காட்ட வேண்டும்.

முஸ்லிம்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கு போன்றவற்றை மலக்குகள் கொண்டு வந்து நம் கையில் தரமாட்டார்கள். அவற்றை ஒன்றிணைந்து செயல்படுவது ஒன்றின் மூலமே பெறமுடியும். இது எல்லாருக்கும் தெரிந்த எளிய உண்மைதான். இதை முஸ்லிம்கள் தங்கள் தலைவர்களுக்கு நினைவூட்டி, செயலில் கொண்டுவந்துவிட வேண்டும் - கூடவே, கீழ்க்காணும் இறைவசனத்தையும்:

"... தம்மைத் தாமே மாற்றிக் கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் மாற்றியமைப்பதில்லை ..." அல்-குர்ஆன் 13:11.

Comments   
அபூ ஹஸன்
0 #1 அபூ ஹஸன் 2011-05-21 19:23
சுட்டெரிக்கும் புள்ளி விபரங்கள். பின்னோக்கிப் பார்த்தால் ஜெயலலிதாவே பதைக்கும் படியான நினைவூட்டும் பட்டியல்;

புதிய முதல்வருக்குக் கண்டிப்பாக இதனை அனுப்பி வையுங்கள். இதுவே உங்களைப் போன்ற ஊடகத்தார், நாட்டை ஆள்பவரைப் பக்குவப்படுத்து ம் சிறந்த வழியாக இருக்கும்.
Quote | Report to administrator
md ali
0 #2 md ali 2011-05-22 04:22
தம்மைத் தாமே மாற்றிக் கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் மாற்றியமைப்பதில ்லை ..." அல்-குர்ஆன் 13:11.
Quote | Report to administrator
annu
0 #3 annu 2011-05-24 21:22
The question is, doesnt any of the so called muslim organization have any least amount of memory to remember these???? It is fully under broad day light that these orgs are also only for fame,money and power at any level. Nothing more than that...!!!
Quote | Report to administrator
Abumymoona
0 #4 Abumymoona 2011-05-25 18:02
ஒவ்வொரு தொகுதியிலும் இந்த இரண்டுகட்சியின் வேட்பாளர்களோடு வேறு கட்சிகளைச் சார்ந்த- சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டார்க ளே இருந்தும் மக்கள் ஏன் இப்படி அதிமுகவிற்கு கட்டாயமாக மீண்டும் ஓட்டளித்துத் தொடர்ந்து தவறிழைக்கவேண்டு ம்? ஓட்டளிக்காமல் தேர்தலை இம்முறை புறக்கணித்திருக ்கலாம் அல்லது இந்த இரு கட்சிகள்தவிர்த் து போட்டியிட்ட வேட்பாளர்களில் பொதுவான ஒருவரை வெற்றிபெறச் செய்திருக்கலாம் அல்லது அந்த தொகுதியைச் சார்ந்த நல்ல ஒருவரை சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்திருக்கலாம்.

திமுக ஆட்சியின் தவறுகளால்-ஏற்பட ்ட வெறுப்பின் காரணமாக இப்படி அதிமுகவிற்கு ஓட்டளித்து மீண்டும் மக்கள் மாபெரும் தவறிழைத்திருப்ப தால் அதன் பலன்களையும் இன்னும் ஐந்தாண்டுகளுக்க ு அனுபவித்துத்தான ே ஆகவேண்டும்.

மேலும் பல தொகுதிகளில் முஸ்லிம் இளைஞர்கள் அதிமுகவின் ஆர்.எஸ்.எஸ்.அனு தாபி வேட்பாளர்களுக்க ாக அல்லும் பகலும் அரும்பணியாற்றி வெற்றி பெறச்செய்ததுதான ் மிகவும் விசேடமானது.

"முஸ்லிம்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கு போன்றவற்றை மலக்குகள் கொண்டு வந்து நம் கையில் தரமாட்டார்கள். அவற்றை ஒன்றிணைந்து செயல்படுவது ஒன்றின் மூலமே பெறமுடியும்"
(மிகவும் உண்மையானக் கருத்து)
Quote | Report to administrator
abu hudhaifa
0 #5 abu hudhaifa 2011-05-25 22:36
எனக்கு தெரிந்த வரை"திமுக"வோடு" பஜக"கூட்டணி வைத்த போது தான்"பஜக"வுக்கு ஐந்து சட்ட மன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள் என்று நினைக்கிறேன்.தவ றாக இருந்தால் சுட்டிக்காட்டவும்.
ஆக்கம் மிகவும் அருமை.
Quote | Report to administrator
Abdul Malick
0 #6 Abdul Malick 2011-05-27 05:36
முதன் முதலில் 'பஜக' வை அறிமுக படுத்தி அதற்கு கனிசமான MP சீட் வாங்கிக் கொடுத்தது VP சிங் கட்சிதான். காவி கட்டிய பண்டாரங்கள் என்று 'பஜக' வை சாடிய திமுக, பின்னர் 'பஜக' வோடு கூட்டணியமைத்து மத்திய மந்திரி பதவியும் பெற்று சுகம் அனுபவித்தது. இதெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. அதிமுக செய்தால் மட்டும் அது முஸ்லிம்களுக்கு விரோத செயல் என்றும் 'ஜெ' மாறவே மாட்டார் என்றும் வாய் கிழிய பேசுவது என்ன நியாயம்?

மோடியை விழாவிற்கு அழைப்பது அவ்வளவு பெரிய குற்றமா? முதல்வர் என்பவர் அனைத்து பிரிவு மக்களுக்கும், அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர். அனைத்து தரப்பு மக்களையும் அவர் திருப்தி படுத்தியாக வேண்டும். இவரை அழைக்க கூடாது; அவரை அழைக்க கூடாது என்று சொல்வதெல்லாம் சிறுபிள்ளைதனமான து. இனியாவது இதுபோன்று குறை சொல்வதை நிறுத்தி கொள்ளுங்கள். காமாலை கண்ணுக்கு பார்வையில் பட்டதனைத்தும் மஞ்சலாக தெரியுமாம் அதுபோல் இருக்கிறது உங்கள் கூற்று.
Quote | Report to administrator
M முஹம்மத்
0 #7 M முஹம்மத் 2011-05-27 13:03
// காமாலை கண்ணுக்கு பார்வையில் பட்டதனைத்தும் மஞ்சலாக தெரியுமாம் அதுபோல் இருக்கிறது உங்கள் கூற்று.// ஆம் சகோதரரே....... 100% சரியான கூற்று.........

அதே போல் தான் .........

அகக் கண் குருடர்களுக்கு எதுவும் தெரியாது ( வீ பீ சிங் பீஜேபிக்கு அளித்த ஆட்சி ஆதரவை ரதத யாத்திரை போன்றவற்றின் பின்னணியில், திரும்பிப் பெற்றது முதல்.....மோடி போன்றவன் செய்த உலக குபிரசித்தம் பெற்ற மனித விரோத செயல்கள் வரை ..)

உண்மைதான் சிலர் மாறவே மாற்றார்க்ள் ..தாம் தவறான நிலையில் இருந்தாலும்....
Quote | Report to administrator
M முஹம்மத்
0 #8 M முஹம்மத் 2011-05-27 23:16
மேலும்....

உண்மைதான் சிலர் மாறவே மாட்டார்க்ள் ..தாம் தவறான நிலையில் இருந்தாலும்....

அதே போல் அரசியல் என்பது உலகில் சுய நல சந்தர்ப்பவாதிகள ின் விஷம விளையாட்டு என்றால் மிகையாகாது. அன்று போஃபோர்ஸ் ஊழலுக்கு எதிரான அலை மூன்றாவது அணி, மண்டல் கமிஷன், பாபரி மஸ்ஜித் , இராமர் கோயில் மாட்டு தீவின ஊழல், தமிழகத்தில் ஜெ வின் கடந்த கால ஊழல்க்ள் மற்றும் தற்போது திமுகவை அலைகலைத்த ஸ்பெக்ட்ரம் ஊழல்கள்........ இதயாதிகள் அரசியலில் வெற்றி தோல்விகளில் முக்கிய பங்கு வகித்துள்ளன, எனலாம்....

அதே நேரம் மறுமையை நம்பும் முஸ்லிம்களை பொருத்தமட்டில் இதற்கும் மேலான அளவுகோல்க்ள் நிலைபாடுகள் தேவை என்பது மறுக்கவியலாது. வெற்றி பெற்றது யார்? என்பதை விடவும் வெற்றி பெற்றது எது? எப்படி என்பது மிகவும் முக்கியமானது, இதை உணராவிட்டால் வெற்றியும் தோல்வியே உணர்ந்தால் தோல்வியும் வெற்றியே,,,,
Quote | Report to administrator
M S K
0 #9 M S K 2011-05-27 23:57
முதல்வர் ஜெயலலிதா கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது முஸ்லிம் அமைச்சர் இல்லாமலேயே தனது ஐந்தாண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்தவர். ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோத செயல்பாடுகள் முஸ்லிம் சமுதாயம் அறிந்த ஒன்றுதான் என்றாலும், கருணாநிதியின் துரோகங்கள் தந்த வலியால், இந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயம் ஜெயலலிதா கட்சிக்கு வாக்களித்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உறுதுணையாக நின்றது.

அரசியலில் அடையாளம் தெரியாமல் இருந்த நிலையிலிருந்த ஜெயலலிதா, மீண்டும் அரியாசனம் ஏறியவுடன் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான தனது மனநிலையை வெளிப்படுத்தினா ர். அவரது அமைச்சரவையில் கவுண்டர் சமுதாயத்திற்கு 8 , தேவர் சமுதாயத்திற்கு 6 , வன்னியர் சமுதாயத்திற்கு 5 என அமைச்சர் பதவிகளை வழங்கியவர், தமிழகத்தில் சுமார் 13 சதவிகிதம் உள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரே ஒரு அமைச்சர் பதவியை வழங்கினார். அதுவும் நிதி, போக்குவரத்து, சட்டம், மின்சாரம், பொதுப்பணி போன்ற பிரபல்யமான துறைகள் எல்லாம் தமக்கு வேண்டிய சமுதாயத்திற்கு தந்துவிட்டு முஸ்லிம்களுக்கு 'சுற்றுச்சூழல்' என சுற்றலில் விட்டார்.

ஜெயலிதாவின் இந்த செயல், அவரது கடந்த கால அரசியல் தோல்வி அவருக்கு மன மாற்றத்தை தந்திருக்கும் என நம்பி வாக்களித்த முஸ்லிம்களுக்கு நெஞ்சில் நெருஞ்சியாய் குத்தியது. இருந்தாலும் 'ஆலை இல்லாத ஊருல இலுப்பைப் பூ சக்கரை' என்ற பழமொழிகேற்ப, ஏதோ ஒன்றாவது தந்தாரே என ஆசுவாசப்படுத்தி க் கொண்டிருந்த வேளையில், அல்லாஹ் அந்த அமைச்சரையும் அற்பநாளில் இறப்பெய்த செய்துவிட்டான். [இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்]

மரியம்பிச்சை மரணமடைந்த செய்தியறிந்து முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு கண்ணீர் வடித்த வேளையில், மரியம்பிச்சைக்க ு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் ஜெயலலிதா. இது சற்றே ஆறுதலாக தெரிந்தது. மரியம்பிச்சை முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது துறை ஒரு முஸ்லிமுக்கே வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருந்த வேளையில் அந்த நம்பிக்கையை தகர்த்தெறிந்து இருக்கிறார் ஜெயலலிதா.
கவர்னர் பர்னாலாபிறப்பித ்த உத்தரவில் மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் துறைகள் பிற்படுத்தப்பட் டோர் அமைச்சர் சின்னய்யாவுக்கு ஒதுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

''தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவத ு: முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவுரையின் பேரில், மறைந்த அமைச்சர் என்.மரியம் பிச்சையிடம் இருந்த சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் ஆகிய துறைகள் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்ன ய்யாவுக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இதைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர், இனிமேல் பிற்படுத்தப்பட் டோர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது .

இதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்கு பிரதிநித்துவம் இல்லாத ஆட்சி நடத்த ஜெயலலிதா நாடிவிட்டார் என தெரிகிறது. மேலும் இவரது கட்சியில் முஹம்மது ஜான் மற்றும் அப்துர்ரஹீம் ஆகிய முஸ்லிம் எம்.எல். ஏக்கள் இருக்கும் நிலையில் அவர்களை அவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்காமல் புறந்தள்ளியிருக ்கிறார். அதுமட்டுமன்றி ஜெயலலிதாவிற்கு நீண்டகாலமாக விசுவாசமாக இருக்கும் அன்வர்ராஜாவுக்க ு இந்த பதவியை வழங்கியிருக்கலா ம். அவரை மரியம்பிச்சை தொகுதி இடைத் தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற செய்திருக்கலாம் . அதையும் ஜெயலலிதா தவிர்த்துள்ளார் .

ஆக ஜெயலலிதாவின் போக்கு 'மாறாதய்யா மாறாது; மனமும் குணமும் மாறாது' என்று அவரது அரசியல் ஆசான் பாடலில் பாடியது போலவே உள்ளது.
Quote | Report to administrator
Thajudeen
0 #10 Thajudeen 2011-05-29 16:21
புள்ளிவிபரங்களு டன் பதியப்பட்ட அருமையான பதிவு.
Quote | Report to administrator
abu hudhaifa
0 #11 abu hudhaifa 2011-06-18 14:28
msk அவர்களின் கருத்து மிகச்சரியானதே!அ தை ந்வழி மொழிகிறேன்.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்