முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

ஏடு-இட்டோர்-இயல்

60 ஆண்டுகள் இழுவையோ இழுவையாக இழுத்துக் கடைசியில் இழுத்து உட்காரவைத்துத் தலையில் மிளகாய்த் தோட்டத்தையே அரைத்துள்ளனர் நீதி?யரசர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்!

 

பட்டப்பகலில் முழு உலகமும் பார்த்திருக்கும் போதே பாபரி மஸ்ஜிதை இடித்துத் தரைமட்டமாக்கினர் இந்துத்துவக் கயவாலிக் காவிகள்! அதைக் கையாலாகாத வகையிலோ அல்லது மவுனமாக அங்கீகரிக்கும் வகையிலோ இடிக்கும் வரை தலைமறைவாகி இருந்து விட்டுப் பின்னர் முதலைக்கண்ணீர் வடித்தனர் காங்கிரஸ் துரோகிகள்; குறிப்பாக பிரதமர் நாற்காலியில் எந்த விலை கொடுத்தும் தூங்கிக்கொண்டே ஒட்டிக் கொண்டிருந்த நரசிம்மராவ் எனப்படும் அயோக்கியன்!

 


திட்டப்படி போதுமான முஸ்லிம்களைக் கொன்றொழித்த பிறகு ஊடகங்கள் முன்னர் தனது நாடகபாணியில் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திலேயே கட்டித் தரப்படும் என்று பொய்வாக்குறுதியும் தந்தான், இந்நாட்டு முஸ்லிம்கள் உள்பட இந்தியக் குடிமக்களின் நல்வாழ்வுக்கு வாக்களித்து பிரதமர் பதவி உறுதிப் பிரமாணம் எடுத்த பொய்யன்!

இது போதாது என எந்த அரசு பதவிக்கு வந்தாலும் டிசம்பர் 6 வரும் போதெல்லாம் பாதுகாப்புக் காரணம் என்ற பொய்யைச் சொல்லி சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்துக்காகத் துன்புறுத்தி  இதயத்தில் இடம் தருவதாகச் சொல்லும் சிறுபான்மைக் காவலர்!

உரிமையியல் வழக்கில் அனுபவப் பாத்தியதை என்ற சாதாரண காரணம் காட்டி எந்த ஒரு ஆக்கிரமிப்பாளரும் 12 ஆண்டுகள் தான் குடியிருக்கும் இடத்தையே விழுங்கி ஸ்வாஹா செய்துவிட்டால் சட்டமே அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்றிருக்கும் போது 400 ஆண்டுகள் பாத்தியதையில் இருந்த ஒரு மஸ்ஜித் காவிக் கயவர்களால் தரைமட்டம் ஆக்கப்படுவதற்கு உலகமே சாட்சியாக இருந்தும் பெரும்பான்மையினரின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கிறார்களாம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதியரசர்கள்!;

அதிலும் திருவாளர் சுதிர் அகர்வால் எழுதுகிறார்:
பாபரோ அவரது பிரதிநிதியோ தான் மஸ்ஜிதைக் கட்டினார் என்பதை முஸ்லிம்கள் நிரூபிக்கத் தவறிவிட்டார்களாம். ஆனால் பெரும்பான்மையினர் பகவான் ஸ்ரீ ராம் பிறந்த இடம் என்று நம்புவது உணர்வுப் பூர்வமாக மதிக்க வேண்டியதாம்! ;

சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையிலும் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள் வில்லங்கச் சான்றுகள் அடிப்படையிலும் தான் உரிமையியல் வழக்குகள் தீர்க்கப்படவேண்டும் என்பது சாதாரணக் குடிமகனுக்கும் தெரியும். ;

தோண்டிப் பார்த்தும் கிடைக்காத ஆதாரம், மிகவும் சிதிலமடைந்து உதிர்ந்து போன நிலையில் இருந்த ராமர் கோயில் இருந்த இடத்தில் மஸ்ஜித் கட்டியதை அநீதிக்கு துணை நிற்கும் அரச விசுவாசி அகர்வால் எப்படி அறிந்து கொண்டாராம்? அப்படியே கோயில் இருந்திருந்தாலும் கோசலைக்குப் பிரசவம் அந்த இடத்தில் தான் நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டாராம்?

விடை மிகவும் எளிது; அதுதான் தனது நீதியை[?] பகவான் ஸ்ரீ ராம் என்று எழுதி நிருபித்துவிட்டாரே காவிகளுக்கு விசுவாசமானவரென்று!

லிபரான் கமிசனும் இனி பெரும்பான்மைச் சுழலில் சிக்கிக் காணாமல் போகப் போவது உறுதி!

"பாபர் அன்னியன் ஆக்கிரமிப்பாளன்;  அவனுடைய சின்னத்தை அழிக்கப் படுவது தேசிய மானப்பிரச்சினை" என்று காதில் பூ சுத்தும் கா(வி)லிகள், இது போன்று இன்னும் எஞ்சியுள்ள எத்தனையோ ஆங்கிலேய, முகலாய அரசுகளால் கட்டப்பட்ட கட்டிடங்கள் அரசாங்கத்தின் கையிலும் பொது இடங்களாகவும் உள்ளனவே; அதை பற்றி ஏன் கண் மூடியுள்ளனர்? அங்கும் இதே காரணத்தை காட்டி தகர்த்து தரை மட்டமாக்க வேண்டியது தானே?

இதே பாணியில் இதற்கு முன்னர் புத்த விஹார்களாக ஆலயங்களாக இருந்தவற்றை இடித்து கோயில்களாகக் கட்டித்தள்ளியவர்கள் அவற்றையும்  திருப்பி தருமாறு நீதி வழங்கப்படுமா??

அட அகக்கண் குருடர்களே! நீதிபதிகள் எனும் பெயருக்கும் இழுக்கு விழும் விதமான உங்களின்  தீர்ப்பு, கையில் தராசுடன் கண்களைக் கட்டியுள்ள நீதி தேவதை சின்னம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டி அல்ல, நீதியை நியாயத்தை பார்க்காமல் தான் விரும்பிய விதத்தில் நீதி வழங்கிடவே கண்களை கட்டியுள்ளதோ என்று மக்கள் வியாக்கியானம் செய்ய வித்திடும் நிலையில் அமைந்து விட்ட உங்களின் கட்டப்பஞ்சாயத்து, இந்தியாவின் மானத்தை உலகின் முன்னிலையில் காற்றில் பறக்கவிட்டு விட்டதே!

Comments   
ஸாதிக்
0 #1 ஸாதிக் 2010-10-02 06:18
அடங்கொக்கா மக்க எங்கேய்யா ஒன் சொம்பு, கொப்பளித்து உன் மூஞ்சிலே காறித் துப்ப... எங்க ஊரு மருத்துவமனையில் தான் நான் பிறந்தேன் என்பதற்கான ஆதாரமாக அரசு முத்திரையுடன் என் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்கிறேன ், இந்த ஐயா எனக்கு அந்த மருத்துவமனையை தர உத்தரவிடுவாரா? ராம் என்ற கற்பனைப் படைப்பிற்கு அதுகூட இல்லை.

/சுதிர் அகர்வால்: பெரும்பான்மையின ர் ராம் பிறந்த இடம் என்று நம்புவது உணர்வுப் பூர்வமாக மதிக்க வேண்டியது/
Quote | Report to administrator
INDIAN MUSLIM
0 #2 INDIAN MUSLIM 2010-10-02 06:45
30.10.2010 "ASATYAME VIJAYTHE" ????? May be as per IPC 420 but there is "Supreme Court" and beware that above all there is a Court of Almighty GOD which is the real and "Final SUPREME Court" Which will be the real and just Judgement the just Verdict which none can influence.
Quote | Report to administrator
Haja Mohamed
0 #3 Haja Mohamed 2010-10-02 23:12
எதிர்ப்பை காட்டவில்லை என்றால் நம்மை எதிர்ப்பார்கள் ஒடுக்குவார்கள். ...1949 ம் ஆண்டே சிலையை தூக்கி வெளியே எறிந்திருந்தால் அந்த தொடை நடுங்கிகள் பயந்து ஓடிடிருப்பர்கள் நாம் அநீதிக்கு எதிராக எதிப்பை வெளிபடுத்தி கொண்டே இருக்கவேண்டும் இல்லையேல் நாம் அழைக்கப்பட்டோம் படுவோம்
Quote | Report to administrator
mohideen
0 #4 mohideen 2010-10-03 01:01
இந்தியாவில் நீதித்துறை காவிமயமனது என்பதுக்கு இது ஓர் உதாரணம்,
நீதித்துறை உச்சிக்குடுமிகள ின் கூடாரம் என்பதை நிருபித்துள்ளது,
முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபடவேண்டிய காலம் என்பதை உணர்த்துகிறது,
நிச்சயமாக முஸ்லிம்கள் மத்தியில் மீண்டும் ஓர் மறுமலர்ச்சி இன்ஷா அல்லா உருவாகும்.
Quote | Report to administrator
INDIAN MUSLIM
0 #5 INDIAN MUSLIM 2010-10-03 10:44
சகோ ஸாதிக் அவர்களே இது என்ன நியாயம்,
நீங்கள் பிறந்த மருத்துவமனையில் உங்களைப் போல் பலர் பிறந்திருக்க முழு மருத்துவமனையும் உங்களுக்கு எப்படி தர இயலும் IPC "இந்து பூனூல் கோடு" 420 படி அந்த மருத்துவ மனையில் பிறந்ததாக யாரெல்லாம் தாவா செய்கிறார்களோ அனைவருக்கும் அதில் சரா சாரி பங்கு பிரித்து வழங்கப் படும். மேலும் Birth Certificate பிறந்த சான்றிதழ் தேவையில்லை நம்பிக்கை இருந்தால் போதும்.

மேலும் ,நீதிபதிகள் வீட்டில் யாரெல்லாம் பிறந்ததாக நம்புகிறார்களோ அவர்களுக்கும் அவருடைய வீட்டிலிருந்து சமமாக பிரித்து வழங்கப்படும் என்பதையும் அறியவும்......
Quote | Report to administrator
Dravidan
0 #6 Dravidan 2010-10-04 18:48
அயோத்தி தீர்ப்பு பற்றி முஸ்லிம் வீடுகளில் என்ன பேசிக் கொள்கிறர்கள்?.

குறிப்பாக முஸ்லிம் பெரியவர்கள் சொல்வது: "இது பெருமானாருக்கும ்(ஸல்) குரைஷிக்களுக்கு ம் இடையே நடந்த ஹுதைபியா ஒப்பந்தம் போன்றது".

அந்த ஒப்பந்தத்தில் குரைஷி தரப்பில் இருந்த ஒரு முக்கியமான நிபந்தனை "எங்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்று உங்களிடம் வந்தால் அவரை எங்களிடம் திருப்பித் தந்து விடவேண்டும். உங்களில் ஒருவர் இஸ்லாத்தை துறந்து எங்களிடம் தஞ்சம் புகுந்தால் நாங்கள் திருப்பித் தர மாட்டோம்".

பெருமானார் ஒப்பந்தத்தை ஏற்றார்.அந்த ஒப்பந்தத்தால் பல முஸ்லிம்கள் மனமுடைந்து போயினர். இத்துடன் இஸ்லாம் அழிந்தது என்று அழுதனர். அப்பொழுது அல்லாஹ்விடமிருந ்து பெருமானாருக்கு( ஸல்) "உங்களுக்கு வெற்றியை நான் அளித்து விட்டேன்" எனும் வரிகளுடன் சூரா இறங்கியது.

*************** **************

முஸ்லிம்கள் ஹிந்துத்வா தலைவர்களிடம் "உங்களுக்கு எந்தெந்த பள்ளிவாசல் தேவை எனும் பட்டியலை கொடுங்கள். நாங்கள் தந்து விடுகிறோம். இடித்து கோவில் கட்டிக் கொள்ளுங்கள். ஒப்பந்தம் செய்து கொள்வோம்" என்று சொன்னால் என்ன நடக்கும்?.
Quote | Report to administrator
Thameem
0 #7 Thameem 2011-02-19 11:31
இந்திய பிரதமராக இருந்தவரையே அவன் இவன் என எழுதும்பொழுது சர்காரியாவை தொடர்ந்து வீராணம் கழித்து இன்று ஒவ்வொரு காகிதமும் பாசாக கணக்கு வைத்து காசு வாங்கும் முடை நாற்றமெடுத்த தன நெஞ்சிலே சிறு பான்மையினரை வைத்திருப்பதாக சொல்லும் கருணாநிதி என்னும் அயோக்கியனை மட்டும் ஏன் ஒருமையில் பேச பயம்.
Quote | Report to administrator
Thameem
0 #8 Thameem 2011-02-19 11:38
இந்தியன் முஸ்லிம் அவர்களே நீதிபதியின் வீட்டிலா அல்லது வீடு இருக்கும் இடத்திலா அந்த இடத்தில் மாடு கன்று ஈன்று இருந்தாலும் அதற்கும் பங்கு உண்டு.
Quote | Report to administrator
Thameem
0 #9 Thameem 2011-02-19 12:12
அந்த குறைஷி காபிர்களுக்கும் இன்றைய காம சாமி காபிர்களுக்கும் இடையே நிறைய்ய வித்தியாசங்கள் உள்ளன அவர்களை குறித்து இறைவன் திருமறையிலே சொல்லும்பொழுது இந்த அரபியர்கள் இறை நிராகரிப்பிலும் நய வஞ்சகத்திலும் கடின சித்தம் உடையோராய் இருக்கின்றனர்என ்று கூறுகிறான் (ஏறத்தாழ இந்த பொருள், அல்லாஹ் அ'லம்) இன்றைய RSS பிஜேபி கயவர்கள் முஸ்லிம்களை மட்டும் கொல்வதில்லை தங்களின் அடிவுருடிகளையும ் சேர்த்தே அவர்கள் அனுபவிக்க காத்திருக்கும் நரக படுகுழிக்கு அனுப்பு வைக்கின்றனர் நயவஞ்சகத்தின் நாயகர்கள்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்