முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

ஏடு-இட்டோர்-இயல்

பாரான் பள்ளத்தாக்கில் கிடத்தப் பட்ட ஒரு பாலகன், அப்பாலகனின் பெற்றோர் ஆகிய மூவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழ்ந்த/வாழும்/வாழப் போகிற முஸ்லிம்களுக்கு மாறாத படிப்பினையாகவும் அம்மூவரது செயல்பாடுகளில் சில முஸ்லிம்களின் கடமையான வழிபாடுகளாகவும் மாறிப் போயின.

 

ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் - எண்ணியெண்ணி வியக்கும் அந்த வரலாறு,

"எங்கள் இறைவா! விவசாயமற்ற இப்பள்ளத்தாக்கில், மாண்புமிகு உன் இல்லத்தை அடுத்து என் வழித்தோன்றலை (குடும்பத்தாரை) வசிக்க விட்டிருக்கிறேன். தொழுகையை நிலைபெறச் செய்வதற்காகக் குடியேற்றி இருக்கிறேன். எனவே, எங்கள் இறைவா! ஆதரவுள்ளம் கொண்ட மக்களை இவர்களுக்கு ஏற்படுத்துவாயாக! இவர்கள் உனக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, கனிகளைக் கொண்டு இவர்களுக்கு உணவளிப்பாயாக!" (அல்-குர்ஆன் 14:37) என்று தொடங்குகிறது.

தன் வாழ்க்கைத் துணைவியையும் வயோதிக காலத்தில் தனக்கு வாரிசாகப் பிறந்த பால்குடி மாறாப் பாலகனையும் பாலைவனத்தில் விட்டுச் செல்ல அண்ணல் இபுறாஹீம் நபி (அலை) எப்படித் துணிந்தார்கள்?

அதுதான் தியாகம்! அல்லாஹ்வின் கட்டளைக்காக அனைத்தையும் துறக்கத் துணிந்த தியாகம்!

"இறைவன்தான் இந்தப் பாலைவனத்தில் எங்களை விட்டுச் செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிட்டான் எனில், அவனே எங்களைப் பாதுகாப்பான்" என்று உறுதியோடு உரைக்க அன்னை ஹாஜராவுக்கு எப்படி மனம் வந்தது?

அல்லாஹ்வின் மீதுள்ள அளவு கடந்த நம்பிக்கையில், வானமே கூரையாக சுட்டெரிக்கும் பாலையிலும் வாழ்ந்திடத் துணிந்த தியாகம்!

மகன் மட்டும் தியாகத்தில் சளைத்தவரா?

"... என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உன் கருத்து என்ன என்பதை யோசித்துச் சொல்"

"என்னருமைத் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப் பட்டதோ அதையே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால், (எதையும்) சகித்துக் கொள்ளக் கூடியவர்களுள் ஒருவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்" (அல்-குர்ஆன் 37:102).

இங்குக் கொடுத்திருக்கும் இஸ்லாத்துக்கே சொந்தமான தியாக வரலாற்றின் மிகச் சில வரிகள் வாசிப்பதற்கு மட்டுமா? என்ற கேள்வியை நாம் நம்மையே கேட்டுக் கொள்ள இந்நாளில் கடமைப் பட்டிருக்கிறோம்.

தியாகத்திருநாளை இரு ரக்அத் சிறப்புத் தொழுகையுடனும் நபி இபுறாஹீம் குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுபடுத்தும் ஒரு குத்பா கொண்டாடுவதோடு நம் தியாகங்களும் முடிந்து விட்டன என்ற தவறான எண்ணத்திலிருந்து விடுபட்டு... இத்தியாகத் திருநாளில் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.

தியாகம் நினைவுபடுத்துவதற்கோ நினைவுகூர்வதற்கோ மட்டும் அல்ல; ஒவ்வொருவரின் வாழ்விலும் செயல்படுத்துவதற்கும் சேர்த்தேதான்!

உலகம் முழுதும் இஸ்லாத்துக்கு எதிரான திட்டமிட்ட, பல்முனைத் தாக்குதல்கள் பெருகி வரும் காலமிது. குறிப்பாக ஊடகத்துறையில் இஸ்லாத்தைப் பற்றிய பொய்களும் பூஞ்சைத் தனமான குற்றச்சாட்டுகளும் தற்போது தமிழ் இணையத்திலும் பெருகி வருகின்றன. தடுத்துச் சற்றே கையை உயர்த்தினாலே பொடியாகிப் பறந்து விடும் என்ற கருத்தில்தான் 'பூஞ்சைத் தனமான' குற்றச் சாட்டுகள் என்று இங்குக் குறிப்பிடப் படுகிறது.

கை உயர்த்துவதற்குத்தான் ஆட்கள் தேவை. வெறும் கையைன்று; எழுதுகோல் எனும் ஆயுதம் ஏந்திய கைகள்!

அண்ணல் இபுறாஹீம் எதிர் கொண்ட சோதனைகள் இன்று நமக்கில்லை. அன்னை ஹாஜரா தாங்கிக் கொண்ட வேதனைகள் நமக்கில்லை. அண்ணல் இஸ்மாயீல் ஏற்றுக் கொண்ட 'சுயபலி'யும் நமக்கில்லை. நமக்குள்ள நேரத்தைக் கொஞ்சம்போல் தியாகம் செய்தால் போதும். எழுத்துலகுக்கு இன்னும் இன்னும் இன்னும் முஸ்லிம்கள் வேண்டும்.

கையை உயர்த்துங்கள் - எழுதுகோல் ஆயுதத்தோடு!

சகோதர, சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காமின் நெஞ்சம் நிறைந்த தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்!

Comments   
kavianban KALAM, Adirampattinam
-1 #1 kavianban KALAM, Adirampattinam -0001-11-30 05:21
கனவினை மெய்பிப்பதாக விழைந்து
மனதுக்கு பிடித்த மகனை விரைந்து
அறுத்திடத் துணிந்த போழ்து
பொறுத்திட்டார் புதல்வர் மகிழ்ந்து...
மனிதப் பலியினை மறுத்து;
புனித சுவனத்து ஆட்டினை அறுத்து
பகரமாக்கியது படைத்தோனின் நியாயம்
அகத்தின் அழுக்காறு களைவதே தியாகம்;
இறைச்சியும்; இரத்தமும்
இறைவனைச் சேரா!
தந்தையும் மகனுமாய் உழைத்து;
சிந்தையைக் காந்தம்போல் கவரும் முதலாலயம் அமைத்து;
பாரோரெல்லாம் பயணித்திட அழைத்தனரே...
யாரெல்லாம் பாக்யம் பெற்றனரோ- அவர்களெல்லாரும்
இச்சையை துறந்து; இம்மையை மறந்து;
ஹஜ்ஜை நாடி; இறையன்பைத் தேடி;
இன்பமாய் தல்பியா பாடி;
துன்பம் போக்க துஆ செய்வர் கோடானு கோடி....
பாக்யம் பெற்றவர்களாய் நம்மனைவரையும்
ஆக்கியருள வேண்டும்- ஆற்றல் மிகு படைத்தோன்.'கவியன்பன்'கலாம ், அதிராம்பட்டினம்
Quote | Report to administrator
sathyan
+2 #2 sathyan -0001-11-30 05:21
Happy Bakrid to one and all!
Quote | Report to administrator
muhammad
+2 #3 muhammad -0001-11-30 05:21
இச்சையை துறந்து; இம்மையை மறந்து;
ஹஜ்ஜை நாடி; இறையன்பைத் தேடி;
இன்பமாய் தல்பியா பாடி;
துன்பம் போக்க துஆ செய்வர் கோடானு கோடி....
பாக்யம் பெற்றவர்களாய் நம்மனைவரையும்
ஆக்கியருள வேண்டும்- ஆற்றல் மிகு படைத்தோன்.

---'கவியன்பன்'க லாம், அதிராம்பட்டினம்.

ஆமீன். ஆமீன். யாரப்பல் ஆலமீன்.
Quote | Report to administrator
kavianban KALAM, Adirampattinam
0 #4 kavianban KALAM, Adirampattinam -0001-11-30 05:21
மிக்க நன்றி
Quote | Report to administrator
அபூ நஸீஹா
+1 #5 அபூ நஸீஹா -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹ் வ பரகாதுஹு

இணையத்தில் 'களப்பணி' ஆற்றும்
'சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுக்கும ் என் உளமார்ந்த தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்!'

உள்ளத்தில் ஏகத்துவ உறுதியோடு
ஏந்துவோம் கையில் எழுதுகோல்
சத்தியம் வந்தது! அசத்தியம் அழிந்தது! அசத்தியம் அழிந்தே தீரும்!! - அல் குர்ஆன்

இன்ஷா அல்லாஹ் ஒன்று படுங்கள், வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
உங்கள் சகோதரன்
அபூ நஸீஹா
Quote | Report to administrator
Ferozkhan
0 #6 Ferozkhan -0001-11-30 05:21
சத்தியத்தை உணர்ந்தாலே
தியாகங்கள் எளிதாகும்
வாருங்கள் இளைஞர்களே
சத்தியத்தை உணர்ந்து
அதை பிற மக்களுக்கு எடுத்து
சொல்லும் ஊடகத்துறையில்
உள் நுழைவோம்
திரித்தும் மறைத்தும் கூறப்படும்
செய்திகளை அம்பலப்படுத்து
உள்ளதை உள்ள படி சொல்வோம்
இது தான் நம் தற்போதைய ஜிஹாத்
இந்த போராட்டத்தில் ஏற்படும் சோதனைகளை புன்னகையோடு ஏற்போம்
இன்ஷா அல்லாஹ் புதிய சரித்திரம் படைப்போம்
Quote | Report to administrator
Rafique uthuman
0 #7 Rafique uthuman -0001-11-30 05:21
அனைத்து நெஞ்சங்களுக்கும ் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள ். ஆஹா என்ன அருமையான ஊக்கம் (கையை உயர்த்துங்கள் எழுதுகோல் ஆயுதத்தோடு) அருமை மானுட சகோதர சகோதரிகளே நேரங்கிடைக்கும் போதெல்லாம் படியுங்கள் எழுதுங்கள். ரெடிப்மெயில் மற்றும் பல தளங்கள் போன்றவற்றில் வரும் கமெண்ட்களில் சேறு வாரிதூற்றும் போதும் அழகிய முறையில் பதில் எழுதுங்கள்.எழுத ிக்கொண்டேயிருங் கள்.
Quote | Report to administrator
மு முஹம்மத்
-1 #8 மு முஹம்மத் -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்

அருமையான கருத்துக்கள் நானும் கையுயர்த்துவோரோ டு இணைந்து கையுயர்த்தி பிராத்திக்கின்ற ேன் எழுதுகோல் ஆயுதத்துடன் பிராத்திக்க கோரி.

PEN IS MIGHTIER THAN SWORD
எழுதுகோல் வாளைவிட வலுவானது
எனும் கருத்துடன்....

சகோதரர்களே நன்றாக எழுதுவது சற்று சிரமமாகலாம் ஆனால் நல்லதை எழுதுவது சிரமமல்ல...

தொடரட்டும் எழுதுகோல் பணி தொய்வின்றி தரணியில் ஒளி வீசிட..
அறியாமை அராஜகம் அறிவீனம் போன்ற இருள்கள்.. அகன்றிட
சத்தியக் குரல்கள் ஓங்கிட.....

அல்லாஹ் உதவி புரிவானாக... ஆமீன்.

மு முஹம்மத்.
Quote | Report to administrator
M. J. SYED ABDULRAHMAN
0 #9 M. J. SYED ABDULRAHMAN 2010-06-07 18:56
NAREAY TAKBEER ALLAHU AKBAR
Quote | Report to administrator
M Muhammad
0 #10 M Muhammad 2012-10-26 06:15
Assalamu Alaikum

EID MUBARAK ,,, TAQABBAL ALLAHU MINNA WA MINKUM ( May Allah accept from you and from us )

mh2345.myblog-online.net/.../. ..
Quote | Report to administrator
இராஜகிரியார்
+2 #11 இராஜகிரியார் 2012-10-26 21:35
சத்தியமார்க்கம் .காம் சகோதரர்களுக்கும ் மற்றும் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்.

ஆம். இன்றைய தேவை ஏராளம் ஏராளம் எழுதுகோல் ஆயுதங்கள் தாங்கிய இஸ்லாமிய கைகள். அந்தோ பரிதாபம். எம் சகோதர சகோதரிகளோ டிவியிலும், சினிமாவிலும், பயனற்ற கிரிக்கெட்டிலும ் தங்களது பொன்னான நேரத்தினை வீணாக்கி கொண்டிருக்கின்ற னர். எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் இவற்றிலிருந்து மீள மறுக்கின்றனர்.

தாங்கள் குறிப்பிட்ட படி இணையம் சார்ந்த எழுத்துலகில் நாம் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் அச்சு ஊடகத்திலும் காட்சி ஊடகத்திலும் நாம் அதிகமதிகம் கவனம் செலுத்த வேண்டும். உண்மையை உரக்க சொல்ல நமக்கு தினசரிகளும், தொலைகாட்சி சேனல்களும் மிகவும் அவசியம். இன்று முளைத்த காளான்களிடம் கூட இன்று பல தொலைகாட்சி சேனல்கள் உள்ளபோது, இந்திய மக்கள் தொகையில் கிட்டதட்ட 20-25 சதவீதம் உள்ள முஸ்லிம்களிடத்த ில் எத்தனை தொலைகாட்சிகள் உண்டு என்பதை நாம் எண்ணி பார்க்க வேண்டும். எத்தனை முஸ்லிம் செல்வந்தர்கள் நம்மிடம் உண்டு. அவர்களை ஒருங்கிணைத்து நம்மால் ஒரு சில சேனல்களை கூடவா தொடங்க முடியாது? அவ்வாறால்ல. நமக்கு தேவை - நமக்குள் அடித்து கொள்ளாத ஒருங்கிணைக்கப் பட்ட தலைமை. அருமையான திட்டமிட்ட செயல்பாடுகள். முழுமையான ஒற்றுமை.

துாய்மையான உள்ளத்தோடும் உறுதியான ஈமானோடும் முயன்றால் வெற்றியளிக்க அல்லாஹ் போதுமானவன்.
Quote | Report to administrator
abdulrahuman
0 #12 abdulrahuman 2013-05-01 20:07
Assalamu alaikkum ... Ungalin thalam mika payanullathaaka ullathu ....

====
தங்களது பின்னூட்டத்தில் உள்ள கேள்விகள் இப்பதிவுக்குத் தொடர்பில்லாததால ் நீக்கப்பட்டு, சத்தியமார்க்கம் நிர்வாகத்தினருக ்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

~மட்டுறுத்துனர்
====
Quote | Report to administrator
M Muhammad
0 #13 M Muhammad 2013-10-15 00:26
அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹ் வ பரகாதுஹு

இணையத்தில் 'களப்பணி' ஆற்றும்
'சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுக்கு ் என் உளமார்ந்த தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்!'


Wishing you all a "HAPPY AND PROSPEROUS EID-ul-Adha MUBARAK".

May Almighty ALLAH shower HIS choicest blessings upon you and your family.

TaqabbalAllahu Minna wa Minkum.(May Allah accept from us )(all our good deeds )

அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹ் வ பரகாதுஹு

இணையத்தில் 'களப்பணி' ஆற்றும்
'சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுக்கும ் என் உளமார்ந்த தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்!'

உள்ளத்தில் ஏகத்துவ உறுதியோடு
ஏந்துவோம் கையில் எழுதுகோல்
சத்தியம் வந்தது! அசத்தியம் அழிந்தது! அசத்தியம் அழிந்தே தீரும்!! - அல் குர்ஆன்

இன்ஷா அல்லாஹ் ஒன்று படுங்கள், வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
உங்கள் சகோதரன்
அபூ நஸீஹா


Wasalam

M Muhammad
Quote | Report to administrator
mohamedali
+1 #14 mohamedali 2018-08-23 06:59
அருமையான கட்டுரை
பெருநாள் வாழ்த்துக்கள்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்