முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

அறிவிப்புகள்

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ஓரிரு நாட்களாக ஒரு குறிப்பிட்ட ஐ.பி முகவரியிலிருந்து அநாகரிகமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. சத்தியமார்க்கம்.காம் தளத்தின் விவாத அரங்கம் பகுதியில் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதாக ஒப்புக் கொண்டு முறையாகத் தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, தற்போது வெவ்வேறு பெயர்களில் தம் கருத்துக்களை பதிந்திருக்கும் இந்த நபரின் கருத்துக்கள் நாகரீகமானதாக இருந்த காரணத்தால், இவரைப் பற்றி நாம் அறிந்திருந்தும் இவர் எந்த எந்த புனைப்பெயர்களில் எல்லாம் பதிகிறார் என்ற அநாவசிய ஆராய்ச்சியில் ஈடுபடாமல் ஆரோக்கியமான இவரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அனுமதித்து வந்தோம்.

 

ஆனால் சமுதாயத்தில் பிளவையும், சமுதாய நலனுக்குக் கேட்டையும் ஏற்படுத்தும்படி பிரபல இமாம்களின் பெயர்களில் அவர்களே தங்களின் சொந்தப் பெயர்களில் பதிவது போன்ற தோற்றத்தை  ஏற்படுத்திக்கொண்டு வன்முறையைத் தூண்டும் விதமாக இவரே சமீப ஆக்கங்களின் பின்னூட்டங்களில் பெயரை மாற்றி மாற்றி பதிந்து வருவதால் அதனை தொடர்ந்து மட்டுறுத்தலுக்கு உட்படுத்தி வருகிறோம்.

 

அநாகரிக கருத்துக்களை தொடர்ந்து இட்டுவரும் இச்சகோதரரை நாம் கேட்டுக் கொள்வது என்னவெனில் இவரின் கையாலாகாதனம் தொடரும் பட்சத்தில் சர்வதேச தரத்திலான உயர்தொழில்நுட்பங்களை திறமைவாய்ந்த வல்லுனர்களைக் கொண்டு கையாளும் சத்தியமார்க்கம்.காம் தன்னிடம் பதிவாகியுள்ள அனைத்து ஆதாரங்களையும் ஒன்று திரட்டி இவர் இருப்பிடமாகக் கொண்டு பதியும் சைபீரியா இணைய வழங்கி நிறுவனத்தின் உயர்அலுவலர்கள் திரு மஜ்தி ஈத், திரு காலித் சல்மான் அவர்களிடம் முறையான சட்டரீதியான சைபர் க்ரைம் பிரிவில் புகார் தரப்படும் என்பதையும் அதே வேளையில் சமூகக்கேடு விளைவிக்கும் எண்ணத்துடன் அவர் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பதிந்த அனைத்து விஷயங்களையும் முழு ஆதாரத்துடன் வெளியிடப்படும் என்பதையும் அன்புடன் அறியத் தருகிறோம்.

 

-நிர்வாகம் (சத்தியமார்க்கம்.காம்)

Comments   
அட்றா சக்கை
0 #1 அட்றா சக்கை -0001-11-30 05:21
அப்பாடா, இப்பவாவது இந்தப் பிரச்சனையில ஒரு தெளிவான முடிவுக்கு வந்தீங்களே, ரொம்ப சந்தோஷம்!

இஸ்லாத்தை ஒழிக்க முழுநேரப் பணியில் ஒரு சில எதிரிகள் இயங்கும் வேளையில் இது போல சில புத்தி கெட்ட கேசுகள் நம் நேரத்தையும் வளத்தையும் வீண் அடிப்பதை நினைத்து வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை
Quote | Report to administrator
முஸ்லிம் சகோதரன்
0 #2 முஸ்லிம் சகோதரன் -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த சகோதரர்களே

'நமது செல்வத்தை எவ்வழியில் சம்பாதித்தோம், எவ்வழியில் செலவழித்தோம், நமது வாழ்க்கையை எவ்வழியில் செலவழித்தோம்,நம து வாலிபத்தை எவ்வாரு பாதுகாத்தோம், நாம் அறிந்த மார்க்க அறிவை எவ்வாறு செயல்படுத்தினோம ்' போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மறுமையில் நமது பாதங்கள் நகர முடியாது. எனும் கருத்தில் உள்ள நபிமொழியை நினைவில் கொண்டு நமது செயல்களை ஆக்கப்பூர்வமானத ாக ஆக்கி நமது வாழ்க்கையை நல்வழியில் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அவன் வெறுப்பை அஞ்சி வாழ அல்லாஹ்விடம் அனைவரும் மனமுருகி துவா செய்து ஷைத்தானின் எல்லாவித தீங்கிலிருந்தும ் பாதுகாவல் பெற்றவர்களாக என்றென்றும் வாழ்ந்து வருவோமாக. இதுவே நமது வெற்றிக்கு வழி.
Quote | Report to administrator
J MOHAMMED ALI--MANAKKADU SALEM
0 #3 J MOHAMMED ALI--MANAKKADU SALEM -0001-11-30 05:21
SATYAMARGAM ASATTHEYATTHAI VELLA
ELLAM VALLA ALLAH THUNAIBURIWANAG A
Quote | Report to administrator
முகம்மது அலி
0 #4 முகம்மது அலி -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும். நான் சீனாவில் கல்வி கற்கும் தென்னிலங்கை முஸ்லிம் மாணவன். என்னைப் பொருத்தமட்டில் உங்கள் தளத்தை வலம் வர கிடைத்ததை படைத்தவனின் மிகப் பெரும் கிருபையாக கருதுகிறேன். ஆனால் எனக்கு நிறைய கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் இருக்கின்றன ஆனால் கேள்விகளை எங்கே கேட்க வேண்டுமென்று தெரியாது. நான் எப்படி கேள்விகள் கேட்க வேண்டுமென்று சொல்லுங்கள். நன்றி. இறைவன் உங்களுக்கு நற்கூலி அளிப்பானாக! ஆமீன்.
Quote | Report to administrator
நிர்வாகி, சத்தியமார்க்கம்.காம்
0 #5 நிர்வாகி, சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
ஆர்வத்திற்கும், வரவிற்கும் மிக்க நன்றி சகோதரர் முஹம்மது அலி அவர்களே. தங்கள் கேள்விக்கான விளக்கம் தங்கள் மடல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
____________________________________
-நிர்வாகி, சத்தியமார்க்கம் .காம்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்