முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

அறிவிப்புகள்

உளமார்ந்த பிரார்த்தனைகள் வேண்டி ...

ண்பதுகளின் மத்தியில் தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ விழிப்புணர்வுப் புரட்சிக்கு வித்திட்டவர்களுள், "PJ" என்று அன்புடன் அழைக்கப்படும் சகோ. P. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தலையானவர். இஸ்லாமியப் பேரவை, அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ், ஜம்யிய்த்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா, அனைத்துத் தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய சன்மார்க்க-சமுதாய அமைப்புகளில் பெரும் பங்காற்றியவர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனர். நாவன்மை மிக்க பிரச்சாரகர். அரபு மொழியில் தேர்ந்தவர். மறை விளக்கம், வரலாறு, ஹதீஸ் கலை, ஃபிக்ஹுச் சட்டம் ஆகியவற்றில் ஆய்வுரை வழங்கத்தக்க நம் சமகாலத் தமிழறிஞர்; பன்னூலாசிரியர். அந்நஜாத், அல்ஜன்னத் ஆகிய மாத இதழ்களில் ஆசிரியராக இருந்தபோது, இவர் எழுதிய தலையங்கங்கள் மாற்றுக் கருத்துடையோராலும் விரும்பிப் படிக்கப்பட்டவை.

பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை, அதன் தூய வடிவில் அறிமுகப்படுத்துவதற்காகத் தமிழகமெங்கும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' எனும் உயிரோட்டமான பிரச்சாரம் மேற்கொண்டவர். எல்லாருக்கும் விளங்கும் எளிமையான பேச்சுக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர்.

சகோதரர் PJ அவர்களது அரபு மொழி அறிவு ஆய்வுத்திறன், எழுத்தாற்றல், சொல்லாற்றல், ஷிர்க் மற்றும் பித்-அத்துக்கு எதிரான  முப்பதாண்டுப் போராட்டம், வரதட்சணை எனும் கொடிய நோய்க்கு எதிராக முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வு, மக்களிடம் ஏற்பட்ட சிந்தனை மாற்றம், பிற சமயத்தாருக்கு இஸ்லாமை எளிமையாக அறிமுகப்படுத்தியமை போன்ற அவரது சேவைகள் உலகெங்கும் வாழும் தமிழறிந்த முஸ்லிம்களுக்குத் தேவை.

அன்னாருக்கு மார்பின் வலப்புறத்தில் தோலுக்கடியில் சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டு, அது கேன்ஸர் வகைக் கட்டி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் சிகிச்சையும் தொடங்கப்படவுள்ளது. "பிரார்த்தனையைவிட சக்திமிக்க மருந்தில்லை" என்று உறுதியுடன் நம்புகின்ற நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் "சகோ. PJ அவர்களுடைய நோயை முற்றிலும் நீக்கி, நிறைவான உடல்நலத்தை அவருக்கு வழங்க வேண்டும்" என உளமாரப் பிரார்த்தனைகள் செய்ய வேண்டுமாய் அன்புடன் கோருகிறோம் - சத்தியமார்க்கம்.காம்இது பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைமை வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பு:

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.

வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

10.10.2012

{jomcomment lock}

Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்