முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

சத்தியமார்க்கம்.காம் பற்றி

நோக்கம்: (ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாய பிரச்னைகளுக்குச் சரியான தீர்வு)

சத்திய மார்க்கம்

இது இறைவனால் மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளில் மிகவும் சிறந்த அருட்கொடையாகும். இந்த அரிய அருட்கொடைக்கு தமது இறைவனுக்கு என்றென்றும் நன்றி செலுத்த வேண்டிய நம் சமுதாயம், பிறப்பால், இனத்தால், நிறத்தால், மத-குல, மொழி-பணி, கட்சி, கழகம், சங்கம், குழு, இயக்கம் போன்ற இன்னபிற வேறுபாடுகளால் பிரிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.

இதன் பலன்?

மனித சமுதாயத்திற்கே வழிகாட்ட வேண்டிய நம் சமுதாயம், விழி இருந்தும் அசத்திய இருளில் சிக்கியுள்ளது. வழிகேடல் ஆழ்கடல் அலைகளில் மூழ்கியுள்ளது.

மனித சமுதாயம் இப்புவியில் தோன்றிய காலம் முதல், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இம்மனித சமுதாயம் நேர்வழியில் சமத்துவமாக, இன/நிற, மத/குல, மொழி/பணி,மேலும் இன்னபிற வேறுபாடுகளின்றி சுமுகமாக, சாந்தியாக, நிம்மதியாக, ஒழுக்கமாக, ஒற்றுமையாக வாழ வழிகாட்டும் "சத்திய மார்க்க" வேதங்களும், அதை தமது வாழ்க்கையில் செயல் வடிவமாக விளக்கிக் காட்ட இலட்சக்கணக்கில் இறைத்தூதர்களும் இறைவனால் அனுப்பப்பட்டனர். அவர்கள் அனைவரும் மக்களை இந்த ஒரே சத்திய மார்க்கத்தின் பால் தான் அழைத்தனர்.

சத்திய மார்க்கம்

இது மிகவும் அவசியமானது, சீரானது, தூய்மையானது, உறுதியானது, நிலையானது, முழுமையானது, நடுநிலையானது, சாந்திமயமானது, இன்பமானது. இது அனைவருக்கும் ஏக இறைவனால் அருளப்பட்டது ஆதலால், சார்பற்றது, நிகரற்றது, குறையற்றது, கலப்படமற்றது, வேறுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளற்றது, இதுதான் ஈடேற்றம் அளிக்க வல்லது என்ற சத்தியத்தை மறந்த சமுதாயமாக நம் சமுதாயம் மாறியும் (தன்னை) மாற்றியும் வருகிறது.

இந்த நிலைக்கு மறு பெயர் தான் முன்னேற்றமாம்!?

சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தை உணர்ந்து, ஏற்று வாழ்ந்து, ஈடேற்றம் பெற்றவர்களையும் மறந்து, மறுத்து, புறக்கணித்தவர்களையும், இறைவன் அவரவர் வழியில் விட்டு கண்காணித்து வருகிறான் என்பது ஒரு மறுக்க முடியாத சத்தியம். ஆம்!

இதற்கு வரலாறு என்றென்றும் சான்று பகர்ந்து வருகின்றது. இவற்றின் மூலம் படிப்பனை பெற்று நேர் வழிக்கு வந்தவர்கள் சத்திய மார்க்கத்தில் இருந்தவர்கள், சத்திய மார்க்கத்தில் இருப்பவர்கள், சத்திய மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள்.

சத்திய மார்க்கம்

இது, தனி நபருக்கோ, குழுவுக்கோ, குலத்திற்கோ, இனத்திற்கோ சொந்தமானதன்று.

இது பிறப்பால் பெறக் கூடிய, குலச் சொத்தும் அன்று. முழு மனித சமுதாயத்தின் பொதுச் சொத்தாகும். இதை யார் விரும்பி உணர்ந்து அணுகி வருகின்றாரோ அவருக்கு இதில் பங்கு உண்டு. பலன் என்றென்றும் உண்டு.

சத்தியத்தின் மகிமையை மனிதச் சமுதாயம் முறையாக உணர வேண்டும். அதன் மூலம் இந்த மனிதச் சமுதாயம் மூட நம்பிக்கைகள், ஏற்றத் தாழ்வுகள், வீண் விரயங்கள், போலியான சடங்குகள், வழிகேடில் மூழ்கடிக்கும் கலாச்சாரச் சீரழிவுகள், சுரண்டல்கள் ஆகிய அனைத்து வகைத் தீமைகளிலும் இருந்து விடுபட்டு இறைவன் வழங்கியப் பகுத்தறிவு எனும் அருட்கொடையை முறையாகப் பயன்படுத்தக்கூடிய, அதன் மூலம் சத்தியத்தைப் பகுத்தறிந்துப் பயன் பெறக் கூடிய சத்திய மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள் எனும் ஒப்பற்றப் பெயர் கொண்ட சமுதாயமாகத் திகழ வேண்டும்".

நாம் சொல்வதுதான் சத்தியம் என்பதை விட்டு சத்தியத்தையே நாம் சொல்வோம் என்ற உன்னத நிலைக்கு இந்த மனிதச் சமுதாயம் மாற வேண்டும்.

இந்த நிலைக்கு மனிதச் சமுதாயம் மாறுவது காலத்தின் கட்டாயம், இறைவன் நமக்கு விதித்த இந்தக் கடமையை, இந்தச் செய்தியை நம்மால் இயன்றவரை இயன்ற வழியில் ஒவ்வொருவரும் மற்றவருக்கு எத்தி வைக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இந்நோக்கத்தில் பிறந்ததே சத்தியமார்க்கம்.காம்(satyamargam.com) எனும் இணையதளம்.

சத்தியமார்க்கம்.காம் (satyamargam.com)

இது நம் அனைவரின் மார்க்க நிலையினை ஆராய்ந்து மறுபரிசீலனை செய்துக் கொள்ள இறைவனால் அளிக்கப்பெற்றுள்ள ஒரு நல்வாய்ப்பு என்றால் மிகையாகாது.

நாம் இருப்பதே சத்தியமார்க்கம் என்ற நிலை மாறி நாம் சத்திய மார்க்கத்திலே தான் நாம் இருப்போம் என்ற நிலைக்கு மனிதச் சமுதாயத்தை மாற்ற வழி வகுக்கும் ஒரு சிறிய (சீரிய) முயற்சியே இது.

இனி ஒருபோதும் "அசத்தியத்தில் மூழ்கியுள்ளோர்" எனும் இழி நிலையில் இருக்க மாட்டோம்; மேலும் அசத்தியத்தில் இருந்து மனித சமுதாயத்தைக் காக்கக் கடமை உணர்வுடன் ஆவனச் செய்வோம். (இன்ஷா அல்லாஹ்)

இது தான் மனிதச் சமுதாயம் படைக்கப்பட்ட நோக்கம் என்பதை நாம் உணர்ந்தது போல் முழு மனிதச் சமுதாயமும் உணர வேண்டும் என்ற நோக்கத்தின் வெளிப்பாடே இதுவன்றி வேறில்லை.

இவ்வழியில் எவ்வித இவ்வுலக இலாப நோக்கமும் இன்றிச் சத்திய மார்க்கத்தைக் கலப்பற்றத் தூய்மையான நிலையில் முழு மனிதச் சமுதாயத்திற்கும் படைத்தவன் உதவியால் எடுத்துரைப்போம். அதை எத்தி வைப்போர்களின் ஆக்கங்களை, உரைகளைச், சான்றுகளை இயன்ற வழியில் நமது இந்தச் சத்திய மார்க்கம் இணையதளம்(satyamargam.com) மூலம் முறையாக அறிமுகப்படுத்துவோம்.

"சத்தியத்தைச் சொல்பவர் யார் என்று பார்க்காமல் ஆதரவு அளிப்போம்; சொல்பவரை வைத்துச் சத்தியம் என்று கண் மூடிச் செயல்பட மாட்டோம்" என்று முழங்க மட்டும் செய்யாமல் அதை முறையாகச் செயல் படுத்தக்கூடிய உன்னதமான, நடுநிலையான, காழ்ப்புணர்ச்சியற்ற, நீதமான சமுதாயமாக மாறி ஒரு முன்னுதாரணமாகத் திகழ நாம் இன்ஷா அல்லாஹ் முயல்வோம்.

Comments   

MOHAMED USMAN
0 #1 MOHAMED USMAN -0001-11-30 05:21
I appreciate your works. We are getting some good ideas and answers while reading your site. We will pray for you to continue your service to Islam. We should work for all Organizations in the name of ISLAM in TN to be united under one umbrella. If only the Divine Message of Allah will reach everybody without any confusion. If the organizations are fighting each other and they are wasting time by explosing each others will continue means they are responsible in front of Allah for not spreading HIS Words accordingly.

They people should know well, since they are well educated in Islam compared to us. Insha Allah, He will show them the right bath.

with regards,

MOHAMED USMAN
Financial Controller
Gulf Catering Company
Safat - Al Kuwait
Quote | Report to administrator
Musthak M.H
0 #2 Musthak M.H -0001-11-30 05:21
Alhamdulillah Bro Mohammed Usman
There is no doubt that there are more people , more than what we can imagine who share the view acknowledge by you , and their number doesn't matter whether its less or more, but what matters is this genuine feeling that all muslims and in particular the organisations working for Islam should be united and be successfull.
We have to spread this message that we have to be united despite our difference of opinions and thoughts, for pleasing Allah thereby we can understand each other's view in a better way and be blessed with true Islamic light rather than developing rift because of our differences, which one day will widen and widen and make our deeds void,... and drown us in the so called trench created by our first and only real enemy Satan.
Allah says in Al Quran 16 : 125 'Invite all in his way with hikmah' (which also means intelligent approach required ) 'and advising beautifull words, and if you have difference of opinion have a dialogue to discuss in a beautifull way' ( with an intention that the brother with other view should understand me and i should try to understand his rather than to degrade or demoralize his views by our view and pressure in a way to insult him and prove our superiority over him and his views, or to backbite about him and his views without really seeking clarififacion of his stand and view from him directly ) It is unfortunate and sad that people fail to understand and implement this attitude. Which is a great lapse as such on their part and indeed agret loss too..
This is where every so called intelligent man and Daayee is getting trapped in ego, and complexes leading to go astray themselves and their blind followers forgetting the fact that it can be Satan's trap who will misguide you with making you feel that what you are doing is only correct thereby blocking your mind and thought.
The above verse 16.125 ends.. 'Only Allah knows for sure who is in the wrong and who is in his staright path'
If muslims brothers in particular understands this and strive with open mind for Allah and Islam they will not be bound by such views that our organisation is only correct and even if there is differences will be united and respect each other who calls him a muslim and pray to Allah to show the staright path for either of them who is not in staraight path.InshaAllah
Inssha Allah only this can make way for all organisations to unite and understand each other's views and understand Islam.... lets all pray for this unity in view and thought which will unite and benefit all muslim brothers, and be rewarded in this world and hereafter and if this unity is not materialising in our life time whenever it materialises Allah will reward us for this genuine intention even if we are not in this world.
May Allah help us and bless us with his grace to be open minded to respect and accept each others views and be united despite difference of views and show us the staright path the one and only accepted path pleasing him and prevent us and save us from the torment of hell fire. and bless us with Jannathul Firdous-ul Aalla. the greatest heavenly rewarding peacefull life forever..... Ameen..
Musthak.M.H
Quote | Report to administrator
இப்ராகீம்
0 #3 இப்ராகீம் -0001-11-30 05:21
//நோக்கம்: (ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாய பிரச்னைகளுக்குச ் சரியான தீர்வு)//

நல்லது. உயரிய நோக்கங்களுடன் சத்தியப்பாதையில ் புறப்பட்ட உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள்!

எனக்கொரு சந்தேகம்.

தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்காக 90 களுக்கு பிறகு உருவான அமைப்பு, இயக்கங்கள், குழுக்கள் அனைத்தும் நீங்கள் குறிப்பிடும் இதே நோக்கங்களையே தங்களின் பிரதான நோக்கங்களாக கூறிக் கொண்டு களமிறங்கின.

தற்போதைய தமிழக முஸ்லிம்களின் நிலையோ?

இவ்வாறு ஒற்றுமையும் சகோதரத்துவத்தைய ும் கூறிக் கொண்டு படைகள் புறப்பட்ட பின்பு தான் தமிழக முஸ்லிம்களுக்கி டையில் பிரிவினையும், ஒற்றுமையின்மையு ம் மிக அதிகமாக எழுந்திருக்கின்றன.

தௌஹீதுவாதிகளை மட்டுமே முஸ்லிம்களாக கணக்கில் எடுத்துக் கொண்டு மற்ற எல்லா முஸ்லிம்களையும் காஃபிர்களாக ஆக்கித் திரியும் தமிழக அனைத்து தௌஹீது கூட்டமைப்பின் நோக்கமும் ஒற்றுமை, சகோதரத்து8வமே!

சரி அவர்கள் கூறும் கொள்கைப்படி அது அனைத்து தௌஹீது ஜமாத்தை சார்ந்தவர்களுக் கிடையில் மட்டும் தான் என எடுத்துக் கொண்டால், இன்று வீதியில் இறங்கி அவர்கள் போராட அழைப்பு விடுப்பதோ அனைத்து முஸ்லிம்களுக்கும்.

யா அல்லாஹ்! இவர்கள் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை.

இதே நிலை தான் ஒவ்வொரு குழுக்களுக்கும்.

ஒவ்வொரு குழுவையும், இயக்கத்தையும் பெயர் எடுத்துக் கூறி அவர்களின் கொள்கைகளுக்கே அவர்கள் எதிராக, முரணாக செயல்படுகின்றனர ் என நிரூபிக்க இயலும்.

ஒட்டு மொத்தமாக கூற வேண்டும் எனில் கொள்கைகளில் எவருக்கும் எவ்வித தெளிவும் இல்லை.

முழக்கம் மட்டும் ஒற்றுமை, சகோதரத்துவம்.

இதோ இங்கே ஒரு சத்தியமார்க்கம் .காம் தள குழுவினருக்கும் அதே ஸ்லோகன் - ஒற்றுமை, சகோதரத்துவம்.

விமர்சிக்கவோ, உங்களை கிண்டல் செய்யவோ இதனை நான் எழுதவில்லை.

மனதில் எழும் ஆதங்கத்தையே வெளிப்படுத்துகின்றேன்.

கூறும் கொள்கையில், நோக்கத்தில், செயல்திட்டத்தில ் எவருக்கும் தெளிவு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஒற்றுமை, சகோதரத்துவம் என்ற நோக்கத்தை சற்று தெளிவாக தாங்கள் விளக்க இயலுமா?

* யாரிடையே ஒற்றுமை ஏற்படுத்த முயல்கின்றீர்கள்?

* நீங்கள் எதிர்பார்க்கும் சகோதரத்துவம் என்ன?

* ஷாஃபி, ஹனபி, மாலிக்கி, ஹன்பலி என மத்ஹப்களால் பிரிந்திருக்கும ் முஸ்லிம்களையும் நீங்கள் முஸ்லிம்கள் என கருதுகின்றீர்களா?

* அரசியல் சித்து விளையாட்டால் துண்டாடப்பட்டு தவறான கொள்கைகளை பரப்பி தனிபெரும் பிரிவாக இருக்கும் ஷியாக்களை முஸ்லிம்கள் என ஏற்றுக் கொள்கின்றீர்களா?

* சகோதரத்துவம் என்பது சத்தியமார்க்கம் .காம் தள கட்டுப்பாட்டுக் குள் வருபவர்களுக்கிட ையில் மட்டுமா? அல்லது ஏகத்துவத்தில் உறுதியாக இருப்பவர்களிடைய ே மட்டுமா? அல்லது சுன்னத் வல் ஜமாஅத்தினரிடையே மட்டுமா? அல்லது தங்களை முஸ்லிம்கள் என வெளிப்படையாக அறிவித்துக் கொள்பவர்கள் அனைவரிடையிலேயா?

அனைவரும் கூறும் அதே ஸ்லோகனை கூறிக் கொண்டு நீங்கள் பத்தோடு பதினொன்றாக இருக்கின்றீர்கள ா? அல்லது உங்களுக்காவது முறையான, தெளிவான செயல் திட்டமும், நோக்கமும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவே இதனை நான் கேட்கின்றேன்.

கேட்பதற்கு இன்னும் நிறைய உள்ளன. உங்களின் பதிலை வைத்து மற்றவைகளை தொடரவா வேண்டாமா என்பதை முடிவு செய்வேன் இன்ஷா அல்லாஹ்!

உங்களுக்கு சகோதரன் என நினைத்துக் கொள்ளும்
சகோதரன் இப்ராகீம்.
Quote | Report to administrator
மு.முஹம்மது
0 #4 மு.முஹம்மது -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் இப்ராஹீம் அவர்களே...

சத்தியமார்க்கத் தளத்தில் ஒற்றுமை,சகோதரத் துவம் என்ற வார்த்தைகள் தள நோக்கத்தில் இருப்பதை படித்து விட்டு அல்லது இதே நோக்கத்திற்காக ஏற்கனவே பலர் வந்து சமுதாயத்தில் இன்று பல கருத்துக்கள் கூறி பல பிரிவுகளாகி விட்ட நிலையை கண்டு ஏற்பட்ட விரக்தி மற்றும் ஆதங்கத்தின் வெளிபாடாகிய தங்கள் கருத்து எதார்த்தமானதே, ஆனால் இந்த நோக்கத்தையே தவறு என்பதும் சரியல்ல.

இந்த நோக்கம் முன் சென்றவர்களின் அணுகுமுறையால் நிறைவேறவில்லை என்பதால் , இந்த நோக்கத்திற்கு எதிரான வார்த்தைகளை தமது நோக்கமாக கொண்டு யாரும் செயல் பட முடியாது.

மேலும் ஒற்றுமை என்பது மனித சமுதாயம் முழுவதும் சுமூகமாக இருக்கும் நிலையையே அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும், ஒரு குலத்தையோ, இனத்தையோ குழுவையோ, பிரீவையோ ,ஜமாத்தையோ கருத்தையோ, கொள்கையையோ அது அடிப்படையாக ஆதாரமாக கொண்டிராமல் இருத்தல் அவசியம்.

கருத்துக்கள், கோட்பாடுகளில் வேற்றுமை இருப்பதால் ஒற்றுமையின்மையு ம், சகோதரத்துவத்திற ்கு பாதிப்பும் ஏற்படாமலிருக்கவ ும் முனைபவர்களாக,அத ே நேரத்தில் சத்தியத்தை முறையாக எத்தி வைத்து( யாரையும் ஏசாமலும் இழிவாகவோ தரக்குறைவாக கருதி உதாசீனப் படுத்தாமலும் எவ்வித தீங்குமிழைக்காம லும்ம) அனைவருக்கும் நன்மையை நாடுபவர்களாக இருப்பவர்களே உண்மையான சத்திய(இஸ்லாமிய )மார்க்கத்திலுள ்ளவர்களாக இருக்க முடியும்.ஏன் இன்னும் சொல்வதென்றால் அவர்கள்தான் உண்மையில் மனிதர்களாக இருக்க மூடியும்.

அவர் சத்திய மார்க்க தளத்திலோ,, இஸ்லாமிய மார்க்கத்தில் இன்று ஏற்பட்டுள்ள எப்பிரிவிலிருக் கும் ஓருவராயினும் அல்லது இஸ்லாத்தின் வெளியிலிருப்பவர ் எனினும், ஒற்றுமையிலும் சகோதரத்துவத்தில ும் (அவர் நேரடியாக எதிர்த்து தாக்கி தீங்கிழைக்க முனையும் வரை)எந்த ஒரு வேற்றுமையும் பாராட்டப்படக்கூ டாது என்ற சத்தியத்தை மனித சமுதாயம் ( முஸ்லீம் அல்லாதோர் உட்பட) உணர்ந்தால் இது போன்ற கேள்விகளுக்கு இடமே இருக்காது.

அந்நிலைக்கு அனவரும் முனைய வேண்டும், அம்முயற்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அதுவே இதற்கு தீர்வாகும்.
Quote | Report to administrator
GHANI
0 #5 GHANI -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
முதலில் சகோதரர் இபுராகிம் அவர்களின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துக்கொள ்கின்றேன். அவர் எழுதிய கீழ்கண்ட கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது

* ஷாஃபி, ஹனபி, மாலிக்கி, ஹன்பலி என மத்ஹப்களால் பிரிந்திருக்கும ் முஸ்லிம்களையும் நீங்கள் முஸ்லிம்கள் என கருதுகின்றீர்கள ா?

அவருடைய கருத்தில், மத்ஹப்புகளை பின்பற்றும் முஸ்லிம்களையும் நீங்கள் முஸ்லிம்கள் என கருதுகின்றீர்கள ா? என்றால் என்ன அர்த்தம்? மத்ஹப்களைப் பின்பற்றுபவர்கள ் எல்லாம் முஸ்லிம்கள் இல்லையா? அப்படியென்றால் அவர்களை யார் என்று கருதுகிறார்??? உண்மையில் அவர்கள்தான் உண்மையான முஸ்லிம்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறைப்படியும் தங்களுடைய வாழ்க்கை அமைத்துக்கொண்டவ ர்கள். ஒவ்வொரு மத்ஹப்புகளும் இஸ்லாமிய ஷரியத்தின் சட்டங்களுக்கு உட்பட்டே ஏற்படுத்தப்பட்ட ுள்ளன. எனவே ஒருவர் ஒரு மதஹபைச் சார்ந்தவராக இருந்தால் அவர் வழிதவறிவிடமாட்ட ார். அவரும் இஸ்லாமிய நேரியவழியிலேயே வாழ்ந்து வருவார். ஒருவிளக்கத்தால் உங்களுக்கு உணர்த்தலாம். ஒரு நோய்க்கு பலமுறையில் சிகிச்சை உள்ளதுபோல், நோய் குணமாக ஏதாவது ஒரு சிகிச்சை கடைபிடித்தால் அந்தநோய் குணமாவதுபோல், ஒருவர் இஸ்லாம் மார்க்கமுறைப்பட ி வாழ இந்த மத்ஹப்புகளில் ஒன்றைப் பின்பற்றி நடப்பதால் இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக வெற்றிஅடைந்தே தீருவார். அதில் அணுவளவும் சந்தேகம் இல்லை. வல்ல அல்லாஹ் உதவிசெய்வான். ஆமீன்.

அடுத்து, சமுதாய ஒற்றுமைக்கு அவர் என்ன திட்டம் வைத்துள்ளார். உண்மையில் சமுதாய ஒற்றுமையை அவர் விரும்புவராக இருந்தால் முதலில் மற்றவர்களை குறைகூறி எழுதுவதை தவிர்க்கவேண்டும ்.

இன்றைய காலகட்டத்தில் சமுதாய ஒற்றுமையை முழுமையாக ஏற்படுத்துவது மிகவும் சிரமம் என்றே நினைக்கின்றேன். ஆனால் ஒவ்வொரு முஸ்லிமையும் அல்லாஹ்வுடைய கட்டளைப்படியும் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான வாழ்க்கை முறைப்படியும் வாழ வைப்பதற்க்கு பாடுபடும் உழைப்பில் நாமும் சேர்ந்து முதலில் நம்முடைய வாழ்க்கையில் தீன்வருவதற்கு பாடுபட்டு பிறகு நம்முடைய குடும்பம் இப்படி அடுத்தடுத்து முயற்சி செய்யும்பொழுது இன்ஷாஅல்லாஹ் விரைவில் முஸ்லீம் சமுதாயத்தில் தீன் முழுமையாக வந்துவிடும். முஸ்லிம் என்று சொல்லிக்கொள்கின ்றவனுக்கு தீன் தான் மிகவும் முக்கியமானது. அதன்படி அவன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டா ல் அவன் இந்தஉலகிலும் வெற்றிபெற்றுவிட ுவான். இன்ஷாஅல்லாஹ் மறுமையிலும் வெற்றியடைந்து விடுவான். அல்லாஹ் உதவிசெய்வான். ஆமீன் இதற்கு தற்பொழுதுள்ள ஒரு வழிகளில், தப்லீக் ஜமாத்தின் பணியும் மிகமுக்கிய பங்காற்றுகின்றத ு. நாம் எந்த இயக்கம்கள், மதஹப்புகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சுன்னத்வால் கொள்கையுடையவர்க ள் யாவரும் இணைந்து இந்த ஜமாத்தில் தம்மைத்தானே ஈடுபடுத்திக்கொண ்டால் இன்ஷாஅல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிம் இடத்திலும் தீன் வந்துவிடும்.
வல்ல அல்லாஹ் நம்முடைய நல்அமல்களை மற்றும் உண்மையான தீனுடைய கவலைகளை பொருந்திக்கொள்வ ானாக. ஆமீன்.
Quote | Report to administrator
அப்துல் கரீம்
0 #6 அப்துல் கரீம் -0001-11-30 05:21
//ஒரு நோய்க்கு பலமுறையில் சிகிச்சை உள்ளதுபோல், நோய் குணமாக ஏதாவது ஒரு சிகிச்சை கடைபிடித்தால் அந்தநோய் குணமாவதுபோல், ஒருவர் இஸ்லாம் மார்க்கமுறைப்பட ி வாழ இந்த மத்ஹப்புகளில் ஒன்றைப் பின்பற்றி நடப்பதால் இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக வெற்றிஅடைந்தே தீருவார். அதில் அணுவளவும் சந்தேகம் இல்லை. //

நோயின் சிகிட்சைக்கும் மார்க்கத்திற்கு ம் என்ன தொடர்பு உள்ளது?

வெற்றி பெற மார்க்கம் ஒரே வழிமுறையை தான் காட்டுகின்றது.

அது அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை நான்கு வழிகளிலா இருந்தது? அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தால ும் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று கூறுவதற்கு.

இல்லை இவ்வாறு நான்கு மத்ஹப்களில் ஏதாவது ஒன்றை பின்பற்றினாலும் வெற்றி பெற்று விடலாம் என நபி(ஸல்) அவர்கள் எங்காவது கூறியுள்ளார்களா?

மார்க்க வழிமுறை எனக் கூறும் முன் நன்கு சிந்தித்து ஆதாரத்துடன் கூறுவது நல்லது.
Quote | Report to administrator
GHANI
0 #7 GHANI -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
உதரணத்தின் மூலம் மனிதர்களுக்கு விளக்குவது விரைவில் புரியும் என்பதால் மேற்கூறிய உதாரணம் கூறினேன்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு புரியவைப்பதற்கா க பல உதரணங்களைக் கூறி விளக்கியும் உள்ளார்கள். தொழுகை சம்பந்தப்பட்ட ஹதீஸ்களில் உதாரணங்கள் மேற்கொள் காட்டப்பட்டுள்ள தைக் காணலாம்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றித்தான் நான்கு மதஹபுகளும் அமைந்துள்ளன. எந்த இமாம்களும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை விட்டு தவறி மதஹபுகளை ஏற்படுத்தவில்லை . அனைத்து மதஹபுகளும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைமுறையைப ் பின்பற்றியே ஏற்படுத்தப்பட்ட ுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு தான் மதஹபுகள் ஏற்படுத்தப்பட்ட ுள்ளன. பிறகு எப்படி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நான்கு மதஹபுகளைப் பற்றி அறிவிப்புச் செய்து இருப்பார்கள்.
மதஹபுகள் அனைத்தும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு உட்பட்டு இருப்பதால் எந்த ஒரு மதஹபை ஒருவர் பின்பற்றினாலும் அவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான வாழ்க்கைவழியை பின்பற்றியவராகவ ே கருதப்படுவார். அதன் அடிப்படையில் தான் வெற்றி பெறுவது என்பது, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி ஏற்படுத்தப்பட்ட மதஹபுகளை பின்பற்றுவதால் உண்டாகும் என எழுதியுள்ளேன். என்னுடைய கருத்துப்படி மதஹபுகளைப் பின்பற்றுவதால் யாரும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளைப் பின்பற்றி நடப்பதில் தவறிவிடுவதில்லை என்பதேயாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு நேரிய பாதையில் நடக்க அருள்புரிவானாக. ஆமீன்.
Quote | Report to administrator
மு முஹம்மது
0 #8 மு முஹம்மது -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர் GHANI,அவர்களே.. . தங்கள் கருத்துக்களை கண்டேன் அதனை கண்டபின்னர் ஒரு சில கருத்துக்களை தங்களுக்கும் தங்கள் கருத்துக்களையுட ையவர்க்கும் கூறிக்கொள்ள ஆசைபடுகின்றேன்.

அன்பு சகோதரரே, இஸ்லாத்தில் இன்று பல பிரிவுகள் ஏற்பட்டுள்ளதும் , பிரிவில் இருப்பவர்கள் தங்களின் இப்பிரிவுதான் சரி என்பது அல்லது எல்லாமே சரி என்பது போன்ற கருத்துக்கள் நிலவுகின்றன.

தாங்கள் ஹனஃபீ, ஷாஃபீ, மாலிக்கி, ஹம்பலீ போன்ற பிரிவினரை முஸ்லீம்கள் என்று ஏற்றுக்கொள்கிற ீர்களா? என்ற கேள்விக்கு தங்கள் பதிலில் ஓரளவுக்கு எனக்கு உடன் பாடுள்ளது. அதாவது ஒருவர் தன்னை முஸ்லீம் என்று கூறி ஒரு அல்லாஹ்வையும், முஹம்மது(ஸல்) அவர்களையும் அவருடைய தூதுத்துவத்துடன ் தூதையும் ஏற்று பின்பற்றி வரும் போது அவரை முஸ்லிம் இல்லை என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. அதே நேரத்தில் அவரிடம் நபி வழிக்கு மாற்றமானவைகள் இருப்பின் அதை சுட்டிக்காட்டப் பட வேண்டும். சில நேரங்களில் எல்லாம் சரியாக முடியாது.

எப்படி எம்மதமும் சம்மதம் என்ற கருத்து சரியில்லையோ எல்லாவற்றிலும் சரியானவையும் தவறானவையும் இருக்கும் போது எப்படி எல்லாமே சரியாக முடியாதோ இதுவும் அப்படியானதொரு கருத்துதான் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர் முரணான கருத்துகள் உண்பதிலிருந்து, வணக்க வழிபாடுகளின் முறைகள், என்றும் இன்னும் சில வாழ்க்கை பிரச்சினைக்கள் திருமணம், விவாகரத்து சட்டங்கள் என்று மாற்று கருத்துக்கள் ....இத்யாதி எல்லாம் நபி வழியாகவும் நேர்வழியாகவும் இருக்க முடியாது என்பது என் கருத்து.

சில விஷயங்களில் இரு நிலைபாடுகள் இருந்து அதற்கு அங்கீகாரம் நபி(ஸல்) அவர்களால் அளிக்கப்பட்டாலே ஒழிய அது மார்க்கம் ஆகாது என்பது அல்லாஹ்வின் கட்டளை பார்க்க 33:36 எனும் குர் ஆன் வசனம்.

அதே போல் நபி(ஸல்) அவர்கள் உங்களிடம் இரண்டை விட்டு செல்கிறேன் அவற்றை பின்பற்றி நடக்கும் வரை வழி தவற முடியாது என்று இறுதி பேருரையில் கூறி அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர் ஆன் இரண்டாவது நபி(ஸல்) அவர்களுடைய வழிமுறை (ஸுன்னத்துக்களை தாங்கிய ஹதீஸ்கள்) என்று தெளிவாக கூறியுள்ளபோது, இதற்கு மாற்றமானதும் நேர் முரணானதும் புதுமையானதும் நேர்வழியாக முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.

இந்த கேள்விக்கு அவரவரும் தமது மனசாட்சியுடன் கேட்டு பதில் பெற வேண்டும்.

இரண்டாவது தாங்கள் கூறியுள்ள படியே

1)நான்கு இமாம்களும் நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் எழுபது ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றியவர்கள் என்பதும்,

2)மரியாதைக்குரிய அந்த நான்கு இமாம்களும் இந்த நான்கு மத்ஹப்களை ஏற்படுத்தவில்லை என்பதும், -

3)ஸஹீஹான ஹதீஸ்களே எங்கள் மத்ஹப்(கருத்து) ஆகும்,

4)உங்களுக்கு கிடைக்கும் ஸஹீஹான ஹதீஸ்(நபி வழி) எங்கள் சொல்லுக்கு மாற்றமாக இருந்தால் அதையே பின் பற்றுங்கள், எங்கள் பேச்சை விட்டு விடுங்கள்.

என்று அழகாக தமது நூல்களில் தெளிவு படுத்தியுள்ள போது அதை உதாசீனப்படுத்து வது, நபி வழியையும், அதற்கு மட்டுமே முன்னுரிமை அளித்த நான்கு பெரும் இமாம்களுடைய மற்றும் இக்கருத்தை கூறும் அனைவரையும் பொருட்படுத்தாம ல் தமது நிலையை சரிகாண்வது முறையான ஒற்றுமையாக முடியாது என்பதை விட அல்லாஹ்வின் பார்வையில் சரியாகுமா என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.

எல்லாமே சரி என்றால் நபி(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதன் உண்மை நோக்கம் என்ன?, அத்ற்கு மாற்றமாக செயல் பட அவர்களே தடை விதித்திருக்க அதை மீறுவது அப்பாவிதனத்தினா ல் என்றாலும் அல்லாஹ்விடம் கோபத்தை ஏற்படுத்த வல்லது என்ற நிலையுமுள்ளது.

ஆகையால் நபி(ஸல்) அவர்கள் வழியை அனைவருக்கும் 'தப்லீக்' செய்வதே உண்மயான தப்லீக் (அழைப்பு பணி) என்பதை முறையாக அனைவரும் உணர்ந்து, நபி(ஸல்) அவர்கள் கூறிய நேர்வழிபெற்ற, சுவனத்திர்க்கு செல்லும் அந்த ஒரு கூட்டத்தில் நம்மை அல்லாஹ் இணைத்து அருள் புரிவானாக அதற்குரிய விதத்தில் நமது அமல்களை சீராக்கி ஏற்றருள்வானாக.. ஆமீன்.
Quote | Report to administrator
அப்துல் கரீம்
0 #9 அப்துல் கரீம் -0001-11-30 05:21
அருமையான கருத்துக்களை பகிர்ந்த சகோதரர் மு.முஹம்மது அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் கைர்.

சகோதரர் கனி அவர்களுக்கு

தாங்கள் கூறிய சிலவற்றில் நான் ஏற்கெனவே சிலவற்றிற்கு ஆதாரங்கள் கேட்டிருந்தேன். ஒரு ஆதாரம் கூட தராமல் மீண்டும் தவறான பல தகவல்களை தந்துள்ளீர்கள்.

மீண்டும் நான் கூறுகின்றேன், இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட ுவது திருக்குர்ஆனும் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் சுன்னாக்களும் மட்டுமே. அதன் பின்னர் வந்தவை அனைத்தும் புறக்கணிக்கப் பட வேண்டியவையே.

நான்கு மத்ஹப்கள் பின்னர் தோன்றியவை என்றாலும் அவை நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளையே பின்பற்றுகின்றன எனக் கூறியுள்ளீர்கள் . இனி உங்கள் பதிலிலிருந்தே சில கேள்விகளை முன் வைக்கின்றேன். தயவு செய்து நேர்மையாக ஆதாரத்துடன் பதில் தாருங்கள். நீங்கள் தரும் பதில் குர்ஆன், சுன்னாவுக்கு உட்பட்டு இருக்குமேயானால் அப்படியே ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கின்றேன்.

1. //அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றித்தான் நான்கு மதஹபுகளும் அமைந்துள்ளன.//

மத்ஹப் என்றால் வழிமுறை என்று அர்த்தம். நபி(ஸல்) அவர்களின் வழிமுறை ஒன்று தான். அப்படியிருக்க அதனை பின்பற்றி கருத்துக்கள், ஹராம்-ஹலால்களில ் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நான்கு மத்ஹப்கள் உருவானது எப்படி? மேலும் ஒன்றுக்கொன்று முரணான நான்கு வழிமுறைகள்-மத்ஹ ப்கள் எவ்வாறு ஒரே வழிமுறையான-மத்ஹ பான நபி(ஸல்) அவர்களின் வழிமுறை-மத்ஹப் ஆகும்.

2. //எந்த இமாம்களும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை விட்டு தவறி மதஹபுகளை ஏற்படுத்தவில்லை.//

மத்ஹப்களை உருவாக்கியவர்கள ் கண்ணியத்திற்குர ிய இமாம்கள் எனக் கூறியுள்ளீர்கள் .

தனியாக ஒருவழிமுறையை எந்த ஒரு இமாம்களும் உருவாக்கவில்லை. அவர்கள் தங்கள் கருத்துக்களை அவர்களிடம் கல்வி பயின்ற மாணவர்களுக்கு சொல்லி சென்றதைத்ஹ் தவிர வரலாற்றில் இமாம்கள் தங்களுக்கு என தனியொரு மத்ஹபை உருவாக்கியதாக எங்குமே ஆதாரத்தைக் காண முடியாது.

தமிழகத்தில் தற்காலத்தில் தங்களுக்கு என ஒரு அமைப்பு, இயக்கம் என்ற அளவில் சில இமாம்கள் வழிமுறைகளை அமைக்கின்றனர். இந்த அளவில் கூட ஷாஃபிஈ, அஹ்மத், மாலிக், ஹன்பல் போன்ற கண்ணியத்திற்குர ிய இமாம்கள் ஏற்படுத்தாத போது நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு அவர்கள் மீது அபாண்டத்தை சுமத்துகின்றீர் கள்.

அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். நாளை நீங்கள் கூறும் இந்த விஷயத்திற்கு அல்லாஹ்விடம் அந்த இமாம்கள் முறையிட்டால் பதில் கூற வேண்டி வரும்.

கண்ணியத்திற்குர ிய அந்த நான்கு இமாம்களுமே தாங்கள் எழுதிய நூல்களில் சகோதரர் மு.முஹம்மது அவர்கள் சுட்டிக்காட்டிய கீழ்கண்ட கருத்துக்களை தெளிவாக பதிந்து சென்றுள்ளனர்.

3)ஸஹீஹான ஹதீஸ்களே எங்கள் மத்ஹப்(கருத்து) ஆகும்,

4)உங்களுக்கு கிடைக்கும் ஸஹீஹான ஹதீஸ்(நபி வழி) எங்கள் சொல்லுக்கு மாற்றமாக இருந்தால் அதையே பின் பற்றுங்கள், எங்கள் பேச்சை விட்டு விடுங்கள்.

மேற்கண்ட இரு கருத்துக்களும் கண்ணியத்திற்குர ிய அந்த நான்கு இமாம்களின் கருத்துக்கள் தான் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆனால் மத்ஹப்களை உருவாக்கியவர்கள ் கண்ணியத்திற்குர ிய அந்த நான்கு இமாம்கள் தான் என்பதற்கு தங்களிடம் ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா?

3.//நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு தான் மதஹபுகள் ஏற்படுத்தப்பட்ட ுள்ளன. பிறகு எப்படி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நான்கு மதஹபுகளைப் பற்றி அறிவிப்புச் செய்து இருப்பார்கள்.//

இதனைத் தான் நானும் சொல்கின்றேன். நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் உருவாக்கப்படும் இஸ்லாத்தில் இல்லாத ஒவ்வொன்றும் புறக்கணிக்கப்பட வேண்டும்.

4. //மதஹபுகள் அனைத்தும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு உட்பட்டு இருப்பதால் எந்த ஒரு மதஹபை ஒருவர் பின்பற்றினாலும் அவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான வாழ்க்கைவழியை பின்பற்றியவராகவ ே கருதப்படுவார்.//

மத்ஹப்கள் அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு உட்பட்டதல்ல.

உதாரணத்திற்கு, உடும்பு இறைச்சி மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட தாகும். நபி(ஸல்) அவர்களே நேரடியாக இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஹதீஸ்களில் உள்ளது. ஆனால் இது ஹனபி மத்ஹபில் மக்ரூஹ் ஆகும். மத்ஹப்கள் நபி வழியை பின்பற்றுகின்றன எனில் நபி வழிக்கு மாற்றமான இந்த முரண்பாடு ஏன்?
Quote | Report to administrator
GHANI
0 #10 GHANI -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மதஹபுகள் சம்பந்தமாக விளக்கங்களைத் தந்த அன்பான சகோதரர்கள் மு.முஹம்மது மற்றும் அப்துல் கரீம் அவர்களுக்கு மிக்க நன்றி.

கண்ணியமிக்க இமாம்கள் பற்றிய விபரங்களில்,
ஹனபி மதஹபு - இமாம் அபுஹனிபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி
ஷாபி மதஹபு - இமாம் ஷாபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி
மாலிகி மதஹபு - இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
ஹம்பலி மதஹபு - இமாம் அஹமது இப்னு ஹம்பல் நஹ்மத்துல்லாஹி அலைஹி
Quote | Report to administrator
GHANI
0 #11 GHANI -0001-11-30 05:21
மேலே உள்ள கருத்தின் தொடர்ச்சி..,

இதுபோல் தான் மதஹபுகளை அழைக்கிறார்கள். சில இணையதளங்களில் ஒவ்வொரு மதஹபைப் பற்றி குறிப்பு எழுதும்பொழுது அதில் FOUNDER OR FOUNDED என்ற வார்த்தைகளைக் பார்க்கலாம்.
பார்க்க islamawareness. net (or) wikipedia & islamonline.net

இதில் மேலேயுள்ள பதிவு மூன்றுதடவைகள் பதிவாகிவிட்டன. தயவுசெய்து அதனை நிர்வாகிகள் சரியாக்கிக்கொள் ளவும்.
மதஹபுகள் சம்பந்தமான விவாதத்தை இத்துடன் முடித்துக்கொள்க ின்றேன்.
மேலேயுள்ள இணையதளங்களில் மதஹபுகளின் ஆரம்பகால தொடக்கத்தை அறிந்துகொள்ளலாம ்.
எல்லாம் வல்ல அல்லாஹ், அவனுடைய கட்டளைப்படியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் நேரானவழிமுறைபடி யும் வாழவைப்பானாக. ஆமீன்
Quote | Report to administrator
நிர்வாகி சத்தியமார்க்கம்.காம்
0 #12 நிர்வாகி சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
சகோதரர் GHANI அவர்களின் வேண்டுகோளுக்கிண ங்க அவரின் முந்தைய இரு பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ள ன என்பதை அறியத்தருகிறோம்.

நிர்வாகி(சத்தியமார்க்கம்.காம்)
____________________________
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்