முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

யூதர்களுக்கெதிரான நாஜி கொடுமைகளின் (ஹோலோகாஸ்ட்) வரலாற்று சாத்தியக்கூறுகளை கேள்விக்குட்படுத்தும் கருத்தரங்கம் தெஹ்ரானில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. ஈரான் அரசு முன்வந்து நடத்தும் இக்கருத்தரங்கத்தில் 30 நாடுகளில் உள்ள யூத ரப்பிகள் உட்பட மத, வரலாற்று அறிஞர்கள் பங்கெடுக்கின்றனர்.

 

மேற்கத்திய நாடுகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையில் நடக்கும் "ஹோலோகாஸ்ட் புனராய்வு : சர்வதேச நிலைபாடுகள்" என்ற பெயரில் நடைபெறும் இந்நிகழ்ச்சி மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

ஜெர்மனியில் நாஜிக்களின் ஆட்சி காலத்தில் விஷவாயு கூடங்கள் உபயோகித்து 60 லட்சம் யூதர்களை ஹிட்லர் கொலை செய்ததாக சியோனிஸ்டுகளும் அவர்களை ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகளும் பிரச்சாரம் செய்கின்றன. இந்த சம்பவத்தின் பிராயசித்தம் என்ற பெயரில் தான் 1948 ல் பலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. இந்த ஹோலோகோஸ்ட் கதையை உபயோகித்து தான் பலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இன்றுவரை செய்துவரும் கொடும் குரூர அட்டூழியங்களும் மறைத்து வைக்கப்படுகின்றன.

 

ஆனால், இந்த சம்பவம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட கதை என்று ஐரோப்பாவிலேயே பிரபலமான பல வரலாற்று அறிஞர்களும் சமூக, விஞ்ஞான பண்டிதர்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அதேநேரம், ஹோலோகாஸ்டை விமர்சிப்பதை கூட மிகப்பெரிய குற்றச்செயலாகத் தான் பல ஐரோப்பிய நாடுகளும் பார்த்து வருகின்றன. விமர்சனம் செய்பவர்களை சிறையிலடைத்தும் குரூரமாக கொடுமைப்படுத்தியும் பல அரசுக்களே ஹோலோகோஸ்டுக்கு எதிராக யாரும் வாயைத் திறப்பதைக் கூட அனுமதிக்கவில்லை.

 

ஆனால் அதேநேரம் இஸ்லாத்தையும் இறைத்தூதரையும் விமர்சிப்பதை சமூக சுதந்திரத்தின் பாகமாக மேற்கத்திய நாடுகள் உற்சாகப்படுத்தின. இறைத்தூதரை மோசமாக காட்டும் கார்ட்டூன்களை டென்மார்க் பத்திரிக்கை பிரசுரித்தபொழுதும் அதற்கு எதிராக முஸ்லிம்கள் உலகளாவிய அளவில் எதிர்ப்புகாட்டிய பொழுதும் மேற்குலகின் நிலைபாடு அதுவாகவே இருந்தது.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சியோனிஸத்தை திறந்து காட்டும் சர்ச்சைக்கு ஈரான் அடித்தளமிட்டுள்ளது. இதற்கு முன்பு இதே விஷயத்தில் ஒரு சர்வதேச கார்ட்டூன் போட்டியும் ஈரான் நடத்தியுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Institute for Political and International Studies இம்மாநாட்டை நடத்துகின்றது.

 

பிரபல அமெரிக்க கல்வியாளர் டேவிட் ட்யூக், பிரெஞ்சு எழுத்தாளர் ஷோர்ஷ் தீல் போன்ற பல பிரபலங்கள் இச்சர்ச்சையில் பங்கெடுக்கின்றனர்.

 

"சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குரிய சூழ்நிலை உருவாக வேண்டும். ஹோலோகாஸ்டைக் குறித்து பேசக்கூடாது என்று கூறுவது வெட்கம் கெட்ட நிலைபாடாகும். இக்காரணத்தினால் தான் இஸ்ரேலின் அக்கிரமங்களை உலகம் கண்டும் காணாது போல் நடித்து வருகிறது" என்று டேவிட் ட்யூக் கூறியுள்ளார்.

 

ஹோலோகாஸ்டில் மரண எண்ணிக்கை, அதிகப்படுத்தப்பட்டு பிரசுரிக்கப்பட்ட ஒரு கற்பனைக்கதை என்று கூறியதன் காரணத்தினால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு ஆளானவர் ஷோர்ஷ் தீல்.

 

இஸ்ரேல் கொடியை வெட்டி நீக்கிய அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு யூத ரப்பிகள் இச்சர்ச்சையில் பங்கெடுத்துள்ளனர். "நாங்கள் யூதர்கள் தான். ஆனால் சியோனிஸ்டுகள் அல்ல. ஹோலோகாஸ்ட் நடந்த சம்பவம் தான். ஆனால் அது பலஸ்தீனுக்கு எதிரான கொடும் செயல்களுக்கு நியாயம் கூறுவதாகக் கூடாது" என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Comments   
இப்னு பஷீர்
0 #1 இப்னு பஷீர் -0001-11-30 05:21
//இந்த சம்பவத்தின் பிராயசித்தம் என்ற பெயரில் தான் 1948 ல் பலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.//

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியை பாலஸ்தீன் ஆதரித்ததால் மற்ற உலக நாடுகள் பாலஸ்தீன் மீது கோபமடைந்ததாகவும ் அதன் விளைவாகவே இஸ்ரேல் உருவாவதற்கு பிரிட்டன் உதவியதாகவும் சொல்லப் படுகிறது.

பாலஸ்தீன் ஜெர்மனியை ஆதரித்த காரணம், இஸ்ரேல் உருவானதில் பிரிட்டனுக்கு கிடைத்த அரசியல் லாபம், அதற்காக யூதர்களின் காய்நகர்த்தல்கள ் ஆகியவற்றைப் பற்றி பா.ராகவன் தனது 'நிலமெல்லாம் ரத்தம்' நூலில் தெளிவாக விளக்கியிருக்கி றார். இந்தப் பிண்ணனி விபரங்களை அறிந்திருந்தால் தான் இன்றைய பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்னை பற்றி ஓரளவுக்காவது புரிந்து கொள்ள முடியும்.

//ஹோலோகாஸ்டை விமர்சிப்பதை கூட மிகப்பெரிய குற்றச்செயலாகத் தான் பல ஐரோப்பிய நாடுகளும் பார்த்து வருகின்றன. விமர்சனம் செய்பவர்களை சிறையிலடைத்தும் குரூரமாக கொடுமைப்படுத்தி யும் பல அரசுக்களே ஹோலோகோஸ்டுக்கு எதிராக யாரும் வாயைத் திறப்பதைக் கூட அனுமதிக்கவில்லை.//

வேடிக்கை என்னவென்றால் அத்தனை ஐரோப்பிய நாடுகளும் ஒரு காலத்தில் யூதர்களை ஓட ஓட விரட்டின. ஏராளமான அடக்குமுறைக்கு அவர்களை ஆளாக்கின. மனிதாபிமானத்துட ன் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே நாடு பாலஸ்தீன் மட்டுமே. அந்த மனிதாபிமானதிற்க ான விளைவைத்தான் இப்போது பாலஸ்தீனர்கள் அனுபவிக்கிறார்க ள்.
Quote | Report to administrator
இராமச்சந்திரன்
0 #2 இராமச்சந்திரன் 2018-10-14 15:24
மனித சமுதாயம் தோன்றியது முதல், இன்னொரு மனிதக்கூட்டத்தை கொன்றொழித்தே தன் வ
வெற்றியை நிலைநாட்டி வருகிறது. இதை மாற்ற வேண்டுமெனில் தன் காலத்தில் தன்னோடு வாழும் சக மனிதனின் மீது அன்பு செழுத்தும் மனம் இயல்பாக ஏற்படவேண்டும். அதற்கான முயற்சி ஒவவொரு நாட்டிலும் ஏற்படுத்தப்படவே ண்டும். இல்லையெனில் மனிதனை மனிதனே அழித்துக்கொண்டு பூமியில் மனித இனம் இல்லாமல் போய்விடும்.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்