முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

தோஹா: தமிழ் ஊடகப் பேரவை (Tamil Media Forum) மற்றும் இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (Indo Qatar Islamic Council) இணைந்து நடத்திய கருத்தரங்கம் நேற்று (21-04-2015) மாலை தோஹா - கத்தரில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊடகத்துறையில் ஆர்வமுடையோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஜெ.எஸ் ரிஃபாயீ மற்றும் த.மு.மு.க செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சமூக மேம்பாட்டில் ஊடகங்களின் கடமை, ஊடகங்களில் மக்களின் பங்கு தொடர்பான தலைப்புகளில் விருந்தினர்கள் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் ஊடகப் பேரவை கடந்த 15 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை, ஆற்றியுள்ள பணிகள், செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் ஆகியவை தொகுத்து அளிக்கப்பட்டன.

ஏழை எளியோருக்கு வாழ்வில் தன்னம்பிக்கை அளிக்கும் வட்டியில்லா பொருளாதாரத் திட்டமான "ஜனசேவா" பற்றிய அறிமுக உரை நிகழ்ச்சியினூடே நிகழ்த்தப்பட்டது.

உரைகளைத் தொடர்ந்து கேள்வி-பதில் கலந்துரையாடல் நிகழ்ச்சியுடன் கருத்தரங்கம் சிறப்பாக நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டோரிடம் காணப்பட்ட உற்சாகமும், வரவேற்பும் நேர்மையான மாற்று ஊடகத்தின் அவசியத்தையும் பறைசாற்றியது.

தமிழ் ஊடகப் பேரவை (TMF) சார்பாக நடைபெற்று வரும் விழிப்புணர்வு மற்றும் குறும்படங்கள் வெளியிடும் நிகழ்ச்சிகள் பல்வேறு நாடுகளில் எழுச்சியை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக தமிழகம் மற்றும் வளைகுடா நாடுகளில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி: இந்நேரம்.காம்

Comments   

S,S,K
0 #1 S,S,K 2015-04-25 02:29
ஊடகங்கள் மனித சமுதாயத்தில் ஏற்படுத்திடும் தாக்கத்தை முறையாக உணர்ந்து மனிதகுலத்தின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்ற வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உள்ளது.

துணிவாகவும் நேர்மையாகவும் நீதமாகவும் நடுநிலையாகவும் பாரபட்சமற்றதாகவ ும் அவை செயல்பட வேண்டும்,நல்லதை ஏவி தீயதை தடுக்கக் கூடியதாகவும், சமுதாய சீரழிவுக்கு காரணிகளான ஒழுக்கக் கேடுகளை அடையாளம் காட்டி அதை விட்டு தடுக்கக் கூடியதாகவும், ஆக்கபூர்வமான ஆரோக்கியமான சமூக மேம்பாட்டிற்கு வழிகோலக் கூடியதாகவும் அது இருக்க வேண்டும்.

வெறும் பொழுது போக்கு சாதனமாகத் திகழாமல், இதற்கு அடிமையாகி தமது அனைத்தினையும் இழக்கும் இளையதலைமுறைகளின ் பழுது போக்கும் சாதனமாக ஊடகங்கள் மாற வேண்டும்.தவறான கருத்துக்கள் பரப்பப் படும் போது அதற்கு தக்க விளக்கங்கள் துரிதமாக வழங்கிடும் விதமாக நடுநிலையாக ஊடகங்கள் செயல் பட துவங்கினால் தவறையும் நச்சுக் கருத்துக்களையும ் பரப்பி துவேஷமும் உலக ஆதாயத்திற்காக செயல் பட்டு வரும் ஊடகங்களும் தம்மை மாற்றிக் கொள்ள வழியாக அது அமையும்,


அசத்தியத்தையும் வெறுப்புணர்வையு ம் வன்முறையையும் வளர்க்கக் கூடியதாக இல்லாமல் முழு மனித சமுதாயத்தையும் சமமாக சுமூகமாக எல்லாவித வேற்றுமைகளையும் மறந்து ஒற்றுமையாக வாழ்ந்திட வழிவகுக்கும் சாதனங்களாக ஊடகங்கள் அமைந்திட வேண்டும், எழுத்து ஊடகம் அல்லது தொலைகாட்சி இணையதளம் முகநூல் முதல் அலைபேசினூடே வரும் வாட்ஸாப் போன்ற அனைத்திலும் இருக்கும் சீர்கேடுகளை உணர்த்தக் கூடியதாகவும் கண்டதையெல்லாம் நம்பிடும் மற்றும் பரப்பிடும் சமுதாயமாக் இல்லாமல் பலனுள்ளதை மட்டும் பரப்பிடும் உன்னதமான சமுதாயமாக மாற மாற்ற முயல வேண்டும் இதுவே காலத்தின் கட்டாயம் ஆகும்.

அவ்வழியில் வெற்றி நடை போட அனைவரும் நல்வாழ்த்துக்கள ் மற்றும் நல்லாதரவும் வழங்கிடுவோமாக.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்