முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

http://news.images.itv.com/image/file/535133/stream_img.jpgலகின் மிகப்பெரிய கால்நடை பலி திருவிழா நேபாளத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 5 லட்சம் எருமை, ஆடு, மாடுகள் வெட்டப்படுகின்றன.

நேபாளத்தின் பாரா மாவட்டம், பரியபூர் கிராமத்தில் கதிமாய் அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகப்பெரிய கால்நடை பலி திருவிழா நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நேற்று தொடங்கியது. ஒரு பன்றி, புறா, வாத்து, சேவல், எலி ஆகியவற்றை கோயில் பூசாரி பலியிட்டு விழாவை தொடங்கிவைத்தார்.

இரண்டு நாள்களில் சுமார் 5 லட்சம் கால்நடைகள் வெட்டப்பட உள்ளன. இதில் எருமைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கதிமாய் கோயில் திருவிழாவுக்கு இந்தியாவில் இருந்து கால்நடைகளை கொண்டு செல்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தடை விதித்தது. ஆனாலும் பிஹாரில் இருந்து ஏராளமான கால்நடைகள் எல்லை தாண்டி கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் கோயிலில் பலியிடப்படும் கால்நடைகளில் 70 சதவீதம் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

http://i.dailymail.co.uk/i/pix/2014/11/28/2392A54900000578-2852739-image-21_1417181809226.jpg


கதிமாய் கோயிலுக்கு அருகில் கடந்த 3 மாதங்களாக மிகப்பெரிய கால்நடை சந்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்கப்பட்டுள்ளன.

பிராணிகள் நல அமைப்பு எதிர்ப்பு

இதனிடையே கதிமாய் கோயில் திருவிழாவுக்கு பிராணிகள் நல அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறியபோது, சிலரின் வணிக நோக்கத்துக்காக 5 லட்சம் கால்நடைகள் பலியாவது துரதிருஷ்டவசமானது என்று குற்றம்சாட்டினர்.

கோயில் பக்தர்களுக்கும் பிராணிகள் நல அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க பரியபூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நன்றி: த ஹிந்து தமிழ் (29-11-2014)

Comments   

ராமகிருஷ்ணன்
+1 #1 ராமகிருஷ்ணன் 2014-12-13 15:46
இந்தியா போன்ற பல்சமூக மக்கள் வசிக்கும் நாட்டில் மட்டும் தான் கோமாதாவை பலியிடுகின்றனர் என்று நினைத்திருந்தேன்.

ஒரே ஒரு கோமாதாவை பலி கொடுத்தால் கூட ஆவேசமாக துள்ளி எழும் ஹிந்துத்துவாவின ரின் கோஷங்களைப் பார்த்து வியந்திருக்கிரேன்.

உலகத்தில் ஒரே இந்து நாடான நேபாளிலும் 5 லட்சம் கோமாதாக்களை ஒரே நேரத்தில் வெட்டி பலியிடுகிறார்கள ் எனில் என்ன தான் செய்வது?

இந்தியாவில் கோமாதாவை புனிதமாகக் கருதிய ஹிந்த்துவா அரசியல்வாதிகள், ஏன் இதை இந்து நாடான நேபாளை மட்டும் கண்டிக்க மறந்தனர்?

ஹிந்துக்களின் தலை சுற்றிவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதிகளின ் பிழைப்பு புரிய வருகிறது.
கண் கெட்ட பிறகு நான் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்