முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

பிரபல கணினி மற்றும் இணைய  நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி  ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண வாருங்கள் என்று அழைப்பு வந்துள்ளது. உலகில் பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டு மழை பொழிகிறது.

தமது சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் விவரிக்க வாஷிங்டனுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் அப்பெண்மணி.

யார் அவர்? அப்படி என்ன சாதித்து விட்டார்?

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபூதபியில் வசித்து வரும் ஃபாத்திமா அல் ஜாபி எனும் பெண்மணிதாம் அவர்.

சிறிதளவு கம்ப்யூட்டர் அறிவு கொண்ட சாமான்யர் எவரும் தம் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற வீடுகளைத் தாமே வடிவமைத்துக் கொள்ளும்படியான கட்டிடக்கலை வடிவமைப்பு (architectural designs) மென்பொருளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். அவ்வளவு தான்!

காப்பிரைட் ஒன்றின் மூலம் மட்டும் தினந்தோறும் மில்லியன்களில் சம்பாதிக்கும் AutoCAD போன்ற மென்பொருட்களை சாமான்யர்கள் பயன்படுத்த இயலாது.  அதற்குரிய கல்வி கற்பதோடு முறையான பயிற்சியும் பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.

ஆனால், Microsoft PowerPoint மென்பொருளை அடிப்படையாகக்  கொண்டு ஃபாத்திமா வடிவமைத்துள்ள மென்பொருள் நேர்மாறானது. எளிமையாக அனைவரும் பயன்படுத்தக் கூடியது.

சமீபத்தில் கல்ஃப் நியூஸ் நாளிதழிலிருந்து ஃபாத்திமாவைச் சந்தித்தனர். அதன் சாரம்சம்:

பவர் பாயிண்ட் மென்பொருளை மேம்படுத்தவேண்டும் என்று ஏன் முடிவெடுத்தீர்கள்? இதற்கு எத்தனை காலம் பிடித்தது?

ஃபாத்திமா: "நான் அல் அய்னில் உள்ள அல் கவாரிஜ்மி சர்வதேசக் கல்லூரியில் இஞ்சினியரிங் கோர்ஸ் முடித்தேன். சிறந்ததொரு கட்டிடக் கலை பொறியாளராக ஆக வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது. கட்டிடங்களை வடிவமைக்கத் தேவைப்படும் 2D அல்லது 3D டிசைன்களைப் பயன்படுத்த மிகவும் சிரமப் பட்டேன். இவற்றை வரையவும் கணக்கீடுகளைச் செய்யவும் ஆட்டோகேட் போன்ற தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். மேலும், எவரும் இதைப் பயன்படுத்தும் வண்ணம் எளிமையான மாற்றுவழி ஏதும் உண்டா என்று தேடினேன்.

இந்தத் தேடலில் ஏற்கெனவே அனைவருக்கும் பரிச்சயமான, எளிய மென்பொருளான MS பவர் பாயிண்ட்டை எடுத்துக் கொண்டு அதனை மேம்படுத்த ஆரம்பித்தேன். ஆறு வருட உழைப்பிற்குப் பிறகு, ஒரு கட்டிட வடிவமைப்பிற்குத் தேவையான மென்பொருளை உருவாக்கி விட்டேன்!"

பவர் பாயிண்ட் மென்பொருளை மேம்படுத்துவதில் ஏதும் சிரமங்களைச் சந்தித்தீர்களா?

ஃபாத்திமா: "சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினரும் மிக எளிமையான முறையில் ஒரு கட்டிடத்தைத் தாமே சிறப்பாக வடிவமைக்கும் வகையில் ஒரு மென்பொருள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆசை என்னுள் இருந்தது. எனவே, பல பதிப்புகளை முதலில் உருவாக்கினேன். முன்னதை விடச் சிறந்ததாக அடுத்தடுத்த பதிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்திய வண்ணம் இருந்தேன்.

தன்னுடைய வீட்டைத் தானே வடிவமைக்க வேண்டும் என்று விரும்பிய என்னுடைய தங்கை ஒருத்தி, என்னுடைய டிரையல் வெர்ஷன் பதிப்பைப் பயன்படுத்தித் திருப்தி அடைந்தாள். அன்று தான் என்னுடைய முயற்சி வெற்றியடைந்தது என உணர்ந்தேன்!"

உங்கள் ப்ராஜக்ட் நிறைவுற்றவுடன், அதற்குரிய அங்கீகாரமும் சந்தைப்படுத்தலும் எளிமையாக இருந்ததா?

ஃபாத்திமா: "இப்பணி நிறைவு பெற்ற சமயத்தில், இது தொடர்பாக என்னுடைய சொந்தச் செலவிலேயே ஒரு புத்தகம் வெளியிட்டேன். அதில் நான் கண்டுபிடித்த டூல்ஸ்களைக் கொண்டு பவர்பாயிண்ட் மென்பொருளை மேம்படுத்துவது பற்றிய விரிவான ஆய்வை வெளியிட்டேன்.

ஹிஜாப் அணிந்த பெண்கள் குறைந்த செயல்திறன் கொண்டவர்கள்!" என்ற மேற்கத்தியர்களின் தவறான சிந்தனையை மாற்றுவேன் இன்ஷா அல்லாஹ்!  மேலும், நான் அணிந்துள்ள ஹிஜாப், என்னுடைய திறமையை எவ்விதத்திலும் பாதிக்க வில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவேன்.

தொடர்ச்சியாக, பல நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு என்னுடைய ப்ராஜக்ட் பற்றிப் பேசினேன். ஆனால், அவர்களில் எவரும் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து அபூதபி மற்றும் துபையின் வர்த்தக சங்கத்தில் என்னுடைய ப்ராஜக்ட்டைப் பதிவு செய்தேன். அவர்கள் தந்த ஊக்கமும் வழிகாட்டலும் தாம் என்னை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றன. என்னுடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி வெளி உலகிற்குப் பரவ ஆரம்பித்தது.

இப்போது, மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திலிருந்து பாராட்டுச் சான்றிதழும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபருடன் விருந்தில் கலந்துரையாடுவதற்கான அழைப்பிதழும் கிடைக்கப் பெற்றுள்ளேன். கூகுள் மற்றும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்கள் என்னுடைய மென்பொருளை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன."

வெள்ளை மாளிகைக்குச் செல்லவிருக்கிறீர்கள்; பயனுள்ள செயல்திட்டம் ஏதும் வைத்துள்ளீர்களா?

ஃபாத்திமா: "அமெரிக்காவிற்குச் சென்ற கையோடு, அரபிப் பெண்கள் குறித்துப் பிறர் கொண்டுள்ள தவறான உருவகத்தைப் பற்றிப் பலரிடம் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளேன். "ஹிஜாப் அணிந்த பெண்கள் குறைந்த செயல்திறன் கொண்டவர்கள்!" என்ற மேற்கத்தியர்களின் தவறான சிந்தனையை மாற்றுவேன் இன்ஷா அல்லாஹ்!  மேலும், நான் அணிந்துள்ள ஹிஜாப், என்னுடைய திறமையை எவ்விதத்திலும் பாதிக்க வில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவேன்."

உங்களுடைய பொழுதுபோக்கு?

ஃபாத்திமா: "கூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி... அபூதபியில் உள்ள பெண்களுக்கான கூடைப்பந்து விளையாட்டுக் குழுவிற்கு கேப்டனாக உள்ளேன். கல்வி, விளையாட்டு போன்றவற்றில் இஸ்லாம் பெண்களுக்குக் கொடுத்துள்ள விடுதலை பற்றி மேற்குலகிற்கு எடுத்துக் கூறி, அவர்கள் புரிந்து வைத்துள்ள தவறான பார்வையை மாற்றுவேன்!"

நீங்கள் தொழில்நுட்பத்தில் எப்போதுமே ஆர்வம் கொண்டவரா?

ஃபாத்திமா: "ஆம்! சிறுவயது முதற்கொண்டே வீட்டிலுள்ள உடைந்த பொருட்களில் பழுது நீக்குவதில் ஆர்வமாக இருப்பேன். என்னுடைய சகோதரர்கள் கம்ப்யூட்டர்களைப் பழுதுபார்ப்பது பற்றிக் கற்றுத் தந்தனர். ஒரு சிக்கலைத் தீர்ப்பது எப்படி என்று தெரியவில்லை என்றால் சோம்பிப் போய் உட்கார்ந்து விடாமல், அதைத் தேடிப் பிடித்துப் படித்துத் தெரிந்து கொண்டு தான் ஓய்வேன். இறைவனின் நாட்டமும், என்னுடைய பழக்கமுமே என்னுடைய வெற்றிக்கான காரணமாக எண்ணுகிறேன்!"

********

உடைகளைக் களைந்து பொதுவெளியில் நிர்வாணமாக விரும்பியவாறு நடந்து செல்வதைத் தடுக்காத மேற்கத்திய நாட்டுச் சட்டங்கள், அதே நாட்டில் ஒரு பெண், தான் விரும்பும் உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் போது தடுப்பதும் தடுமாறுவதும் விசித்திரம்!

ஹிஜாபிற்கான தடைகள் கொண்ட நாடுகளில் "Judge me by what's in my head not what's on my head! " என்ற பதாகைகள் ஏந்திப் போராடும் பெண்களில் ஒருவராக நாம் சகோதரி ஃபாத்திமாவைப் பார்க்கிறோம். சர்வதேச அளவில் பெப்ரவரி 1 அன்று உலக ஹிஜாப் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், ஹிஜாப் மூலம் பெண்களுக்குக் கிடைக்கும் கண்ணியம், அணிவதில் உள்ள செளகரியங்கள், இறைவனின் பொருத்தத்தை அடையும் நன்மைகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு பெண்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது.

சகோதரி ஃபாத்திமாவின் குறிக்கோள் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

- அபூ ஸாலிஹா

Comments   

Shaik Thambi
-1 #1 Shaik Thambi 2014-01-29 02:12
சஸ்பென்ஸ் தாங்கலையே?

என்ன அது?
Quote | Report to administrator
கிருஷ்ண குமார்
0 #2 கிருஷ்ண குமார் 2014-01-29 17:11
ஹைக்கூ கவிதையிலிருந்து , செய்தி என்னவாக இருக்கும் என்று ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது.

முழு விபரங்களை விரைவில் தரவும்.
Quote | Report to administrator
ABDUL AZEEZ
-1 #3 ABDUL AZEEZ 2014-01-31 15:29
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து சகோதரர்களுக்கும ் ஃபாத்திமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மா சலாம்
அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
IRO Srilanka
-1 #4 IRO Srilanka 2014-02-04 16:45
பெண் என்றால் கல்வியை மறுப்பவர்கள், வீட்டினுள் பூட்டி வைப்பவர்கள் என்ற பொய் பிரச்சாரத்திற்க ு சரியான சவுக்கடி கொடுக்கும் வரிகள் சகோதரியினுடையது.

மகிழ வைத்த செய்தி! இதனை நன்றியுடன் பதித்துள்ளோம்.

www.facebook.com/.../

IRO Srilanka
Quote | Report to administrator
E-Velicham
-1 #5 E-Velicham 2014-02-04 16:49
Thanks Satyamargam for the wonderful news article.

We have republished the article and below is the link:
evelicham.blogspot.com/.../...
Quote | Report to administrator
வி களத்தூர்
-1 #6 வி களத்தூர் 2014-02-04 17:17
விழிப்புணர்வு ஊட்டும் ஆக்கம்.

எங்களூர் தலமான வி.களத்தூர் பார்வை இல் இதனை ப்தித்துள்ளோம்.

vkalathurparvai.blogspot.com/. ../...
Quote | Report to administrator
தமிழ் கம்ப்யூட்டர்
-1 #7 தமிழ் கம்ப்யூட்டர் 2014-02-16 17:50
Dear Satyamargam.com
Thanks for this wonderful news.

We published this news in our website:
tamilcomputerblog.com/.../...
Quote | Report to administrator
V. MOHAMED IBRAHIM
-1 #8 V. MOHAMED IBRAHIM 2014-02-18 12:07
Alhamthullilah, wishes to obey Allah and his Rasool (S.A.S)rules and regulation of islam will enter paradise.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்