முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

ஹாஜிக்காபெரும்பாலான தென்னிந்தியப் "பேர்ஷியா"க்காரனைப் போல சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில் வந்திறங்கியவர்தான் 'ஹாஜிக்கா' என்றழைக்கப்பட்ட அப்துல் காதர் ஹாஜி. 

நமது கிராம ஊர்ப் பக்கங்களில் பெரியவர்கள் கட்டும் வெள்ளைத் தலைப்பாகையும், அரபிகள் அணியும் நீண்ட வெள்ளை அங்கியும், அதில் புடைத்து நிற்கும் பக்கக் பாக்கெட்டுக்களுமாக ஹாஜிக்காவைப் பெரும்பாலான நாட்களில் இந்தியத் தூதரகத்தினுள்ளோ, கத்தரில் மிகப்பெரிய அரசாங்க மருத்துவமனையான ஹாமத் மருத்துமனையினுள்ளோ அல்லது வேறுபாடின்றி கத்தர்வாசிகளும் இந்தியர்களும் மற்றவர்களும் கடைசித் துயில் கொள்ளும் கபரஸ்தானிலோ காணலாம். "ஹாஜிக்காவுக்கு வேறு வேலை இல்லை!" என்று நினைத்துவிடாதீர்கள். தோஹாவில் ஒரு சிறிய ஏர்கண்டிஷனிங் சர்வீஸ் சென்ட்டர் உண்டு. மூன்று டெக்னிஷியன்கள் வேலை செய்கிறார்கள்.

சுமார் 18 வருடங்களுக்கு முன்பு ஹாஜிக்காவை முதன்முதலில் சந்தித்த கதை சுவராஸ்யமானது.  கோடையின் துவக்கம். எனது அலுவலகத்தின் ஏஸிகளை சர்வீஸ் செய்யும் பொறுப்பு, பக்கத்தில் கடை வைத்திருந்த சுமார் நாற்பது வயது மதிக்கத் தக்க ஹாஜிக்காவிற்குக் கிடைத்தது.

இரண்டு நபர்களுடன் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்த ஹாஜிக்காவுக்குத் திடீரென்று ஐந்தாறு ப்ளீப் கால்கள் (Bleep calls).  செல்போன்கள் பரவலாக இல்லாத காலம். பதிலுக்குப் பேஜர் (Pager) எனப்படும் சதுரமான சிறிய கருவி புழக்கத்தில் இருந்தது. அவசரத் தேவையென்றால் பேஜருக்கு போன் செய்யவேண்டும்.  அது "ப்ளீப்... ப்ளீப்" (பெயர்க் காரணம்) என்று ஒலியெழுப்புவதோடு அழைத்த நபரின் தொலைபேசி எண்ணையும் காண்பிக்கும். அழைக்கப்பட்ட நபர் உடனடியாக அழைத்தவரை தொடர்புகொள்ள வேண்டும் என்பது மரபாக இருந்தது.

ப்ளீப் கால் கிடைக்கப் பெற்ற ஹாஜிக்கா திரும்ப அழைப்பதற்காக எனது அலுவலகத் தொலைபேசியை உபயோகிக்க அனுமதி கேட்டார். அசுவராஸ்யத்தோடு 'ஆபீஸர்' பாவனையில் மவுனமாகத் தலையாட்டி அனுமதித்தேன். எதிர்முனையை அமைதியாகக் கேட்டபின் ஹாஜிக்கா பேச ஆரம்பித்தார். ஹாஜிக்காவின் நிதானமான பேச்சு இவ்வாறாக இருந்தது.

"மகனே, முதலில் ஆம்புலன்ஸுக்குப் போன் செய்யுங்கள்.  விழுந்து கிடக்கும் நபருக்கு சிறியதாக நினைவிருந்தால் கூட  நிழலில் உட்காரவைக்க உதவி செய்யுங்கள். சர்க்கரை நோய் இருக்கிறதா என்று கேளுங்கள். நான் இதோ புறப்பட்டுவிட்டேன்".

அவ்வளவுதான். புயல்போல அங்கிருந்து மறைந்துவிட்டார். 

ஹாஜிக்காவின் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ ஏதாவது ஆகிவிட்டது என்று முதலில் நினைத்து பதற்றமடைந்த நான், ஹாஜிக்காவின் டெக்னிஷியன்கள் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் தேமே என்று வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து லேசாகி  "என்ன விஷயம் இப்படி ஓடுகிறாரே?" என்று கேட்டபோதுதான் புண்ணியவான் ஹாஜிக்காவின் முதன்மைப் பணி தெரியவந்தது. அதன் பின்னர் எனது அலுவலகம் அந்த இடத்திலிருந்து மாறுவது வரை ஹாஜிக்காவினுடனான என் தொடர்பு இருந்தது. அப்புறம் எப்பொழுதாவது பார்த்து சலாம் சொல்வதோடு சரி.

நமது பார்வையில் அதிகம் படிப்பறிவில்லாத, இயக்கங்களின் பிடியில் சிக்காமல் அதேசமயம் எல்லா இயக்கங்களுக்கும் நேசரான, மிகத் துச்சமான வருமானம் கொண்ட, நமது மூன்றாவது வீட்டு சகோதரரின் தோற்றம் கொண்ட அந்த எளிய மனிதர் கத்தரின் இந்தியச் சமூகத்திற்கு ஓசையில்லாமல் செய்த தன்னலமில்லாத சேவைகள் அவரைத் தெரிந்தவர்கள் மத்தியில் மிகப் பிரசித்தம்.

கத்தர் ஹாமத் மருத்துவமனையில் கேட்பாரற்ற நோயாளிகளின் ஒரே உறவினர் ஹாஜிக்காதான். மொழி தெரியாத ஏழைத் தொழிலாளிகளுக்குச் சரியான மருத்துவ வசதி கிடைக்கச் செய்வதுமுதல் தேவையென்றால் ஊருக்கு அனுப்பத் தேவையான எல்லா அலுவலக வேலைகளையும் தனியாகச் செய்து முடிப்பார்.

சுமார் நாற்பதாண்டு காலம் ஓசையில்லாமல் தனி ஆளாகச் சமூகச் சேவை செய்து வந்த ஹாஜிக்காவின் அகராதியில், சேவை செய்ய தேச-மத-மொழி வேறுபாடில்லை.

வருடக்கணக்காக கடனில் மூழ்கி ஊருக்குச் செல்ல இயலாத நிலையில் இருந்த எத்தனையோ பேரை அறபிகளிடமும் கடன்காரர்களிடமும் பேசி பிரச்சினையைத் தீர்த்து கண்ணீர் மல்கக்  கட்டித் தழுவி ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

யாராவது எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால் முதல் ஆளாக ஆஜர் ஆகுபவர் ஹாஜிக்கா தான். பிழைக்க வந்து யாருமில்லாத ஊரில் இறந்தவர்களின் ஊரிலுள்ள உறவினர்களுக்குக் கலங்கரை விளக்கம் ஹாஜிக்காதான். எம்பஸி, போலீஸ், மருத்துமனை பார்மாலீட்டீஸ்களை முடித்து ஊருக்கு அனுப்பிவைப்பார்.


இன்று நேற்று அல்ல; சுமார் நாற்பதாண்டு காலம் ஓசையில்லாமல் தனி ஆளாகச் சமூகச் சேவை செய்து வந்த ஹாஜிக்காவின் அகராதியில், சேவை செய்ய தேச-மத-மொழி வேறுபாடில்லை. ஒரு தையல் மிஷினை இரண்டுபேர் பிடித்துக் கொண்டு பேஸ்புக்கிலும் ஃபோட்டோக்களிலும் போஸ் கொடுத்தபடி "தர்மம்" செய்யும் இக்காலத்தில் ஹாஜிக்காவிற்கு எந்தவிதமான விளம்பரத்திலும் நாட்டமிருந்ததில்லை.

ஒன்றிரண்டு வருடங்களாக தன் உடல் நிலை மோசமடைந்த நிலையிலும் தொய்வில்லாமல் சேவை செய்து வந்த ஹாஜிக்கா,  இரண்டு நாட்களுக்கு முன் தோஹாவில் காலமாகிவிட்டார். கபரடக்கம் செய்த போது, நூற்றுக்கணக்கான மனிதர்களின் விசும்பல்களுக்கிடையே சிரித்துக் கொண்டே மறைந்து போவது போலிருந்தது அந்தப் பெரிய மனிதரின் பிரிவு.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

- அபூ பிலால், தோஹாHajikka’s death mourned

The Indian embassy yesterday mourned the death of humanitarian worker Abdul Khader Haji (Hajikka) at its community house.

Hajikka, a widely respected Indian expatriate, passed away in Doha on Saturday and was buried in Abu Hamour the following day.

Describing Hajikka as a true humanitarian worker who dedicated his life to the welfare of the needy and deserving sections among the country’s expatriate communities, the mission said his death had left a void which would be difficult to fill.

The embassy also recalled Indian Ambassador Sanjiv Arora’s participation at the condolence meeting held in memory of Hajikka at the Indian Cultural Centre on December 22. While paying tribute to Hajikka, the ambassador had said he was a role model worth emulating. “Despite his adverse health conditions, Hajikka had dedicated his life for the selfless and noble services of the people of different communities and earned remarkable goodwill among the country’s residents,” Arora said at the meeting on Sunday.

The ambassador hailed the suggestion made by community members to set up something in memory of Hajikka. Arora also suggested holding an essay competition for students of Indian schools in Qatar on “How to serve the community”.

Courtesy: Gulf-Times

Comments   

அப்துல் ரஹ்மான்
+2 #1 அப்துல் ரஹ்மான் 2013-12-26 00:03
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அல்லாஹ் ஹாஜிக்காவுக்கு உயர்ந்த இருப்பிடத்தை வழங்குவானாக. மனதில் எங்கோ உயர்ந்துவிட்டார ் ஹாஜிக்கா. இத்தகைய தன்னலமற்ற, விளம்பரமற்ற சேவை செய்யும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்கட்டும்.
Quote | Report to administrator
நூருத்தீன்.
+2 #2 நூருத்தீன். 2013-12-26 00:12
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எனக்கு அறிமுகமில்லாத இந்த அண்ணனுக்காக நான் ஏன் அழுகிறேன்?
Quote | Report to administrator
அப்துல் ரஹ்மான்
+1 #3 அப்துல் ரஹ்மான் 2013-12-26 00:19
//கபரடக்கம் செய்த போது, நூற்றுக்கணக்கான மனிதர்களின் விசும்பல்களுக்க ிடையே சிரித்துக் கொண்டே மறைந்து போவது போலிருந்தது அந்தப் பெரிய மனிதரின் பிரிவு.//

வாசிக்கும் ஒவ்வொருவருக்கும ் கண்ணீரை வரவழைக்கிறது.

யா அல்லாஹ்! இது போன்று எண்ணற்ற ஹாஜிக்கா'களை, மனிதத்தை நேசிக்கும் உன்னத மனிதர்களை இம்மனித குலத்துக்குத் தந்தருள்!
Quote | Report to administrator
அபூ ஸாலிஹா
+1 #4 அபூ ஸாலிஹா 2013-12-26 00:27
மனதை நெகிழ வைத்து விட்ட செய்தி!

ஹாஜிக்கா என்று அன்போடு அழைக்கப்பட்ட சகோ. அப்துல் காதர் ஹாஜி அவர்களின் குற்றங்களை மன்னித்து இறைவன் சுவனத்தில் உயர்ந்த இடத்தை அளிப்பானாக!

துரிதமாக இச் செய்தியை அளித்த அபூ பிலால் அவர்களுக்கு மிக்க நன்றி!
Quote | Report to administrator
JAFAR
+1 #5 JAFAR 2013-12-26 01:14
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
Quote | Report to administrator
M Muhammad
+1 #6 M Muhammad 2013-12-26 01:41
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

அல்லாஹ் ஹாஜிக்காவுக்கு உயர்ந்த இருப்பிடத்தை வழங்குவானாக. மனதில் எங்கோ உயர்ந்துவிட்டார ் ஹாஜிக்கா. இத்தகைய தன்னலமற்ற, விளம்பரமற்ற சேவை செய்யும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்கட்டும்.
Quote | Report to administrator
அபூ அப்துல்லாஹ்
+1 #7 அபூ அப்துல்லாஹ் 2013-12-26 11:37
ஹாஜிக்காவின் சுய நலமற்ற சேவையை வல்ல ரஹ்மான் ஏற்றுக்கொள்வானா க, பொருந்திக்கொள்வ ானாக. அவருக்கு சுவர்க்கத்தை-அத ிலும் உயர்ந்த பதவியை கொடுப்பானாக.

ஹாஜிக்கா வல்ல அல்லாஹ்வை இன் முகத்துடன் சந்திப்பார். நம்மிடம் என்ன இருக்கிறது? நாம் சேகரித்தது என்ன?

இது தொடர்பான மற்றுமொரு செய்தி:
Indian expat who has helped repatriate 1,700 bodies
(gulfnews.com/.../...)
Quote | Report to administrator
அபூ நஸீஹா
+1 #8 அபூ நஸீஹா 2013-12-28 12:47
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
Quote | Report to administrator
Mohamed Haja
+1 #9 Mohamed Haja 2013-12-29 12:55
Allahuthalaa intha adiyarai porunthi kolvanaka ameen..
Quote | Report to administrator
ahmad noohu
0 #10 ahmad noohu 2014-01-09 06:00
inna lillahi wa inna ilaihi rajioon,MAY ALMIGHTY ALLAH ACCEPT HIS DEEDS AND GRANT HIM JANNATHUL FIRDOUS
Quote | Report to administrator
Iqbal
0 #11 Iqbal 2014-01-16 20:06
இந்தக் கட்டுரையை வெளியிட்டு ஹாஜிக்காவைப் பற்றி அனைவரும் அறிய துணை புரிந்ததற்கு நன்றி.!

இதைப் படித்ததினால் ஏற்பட்ட தாக்கம் மனதை விட்டு நீங்க மறுக்கிறது.! ஹாஜிக்காவிற்கு உயர்ந்த அந்தஸ்து கிடைக்க எல்லாம் வல்ல ரஹ்மானை இறைஞ்சுகிறேன்.!

நாம் வாழ்கின்ற வாழ்க்கையை நினைக்கும்போது வெட்க உணர்வு ஏற்படுகிறது.! நாம் செய்த அமல்களே துணை தரப் போகின்ற அந்த மறுமை நாளை நினைத்து, ஹாஜிக்காவை உதாரணமாகக் கொண்டு நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.!
Quote | Report to administrator
sultan abdul kader
0 #12 sultan abdul kader 2014-01-18 17:00
அல்லாஹ் அன்னாரின் பாவங்கலை மன்னித்து
ஜன்னத்தை தந்தருல்வானாக ஆமீன்
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்