முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

உலக செய்திகள்

குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் "இஸ்லாமிய வழிகாட்டி மையம்" (IGC), கடந்த வருடங்களைப் போன்றே இவ் வருடமும் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந் நிகழ்ச்சிகளுக்காக "சுவனத்துப் பூஞ்சோலை" கூடாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால், ஒரு சில தினங்கள் மட்டும் IGC-யின் அலுவலகத்திற்குள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. கூடாரம் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்ட காரணத்தால், இன்று (12-07-2013 வெள்ளிக்கிழமை) முதல் நிகழ்ச்சிகள் கூடாரத்தில் நடைபெறுகிறது. அது சமயம் இஷா தொழுகை, இரவுத் தொழுகை மற்றும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்பதையும் சகோதரிகளுக்குத் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பினைக் கண்ணுறும் குவைத் அல்லாத பிற நாடுகளில் உள்ள வாசகர்கள், இதனை குவைத்தில் வசிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் பயன்பெறுவர். (Link: http://www.satyamargam.com/news/world-news/2129-kuwait-igc-ramadan-2013-programs.html)

அபூஹலிஃபா, மங்காஃப், ஃபஹாஹீல் பகுதிகளிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் கூடாரத்திற்கு வர வாகன வசதி  தேவைப்படுவோர் குவைத்தில் 66868270 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பைக் காணவும்.

Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்