முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

லகின் பெரும்பாலான நாடுகளில் ஜூலை 10, 2013 (புதன்கிழமை) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

 

இறையாணை பெற்றிங்கே இஸ்லாமின் உயர்நெறிகள்
முறையான உள்ளச்சம்; முகிழ்க்கின்ற நற்பயிற்சி
மறைஞானம் அளித்துநல்ல மனக்கட்டு செய்துவைக்க
நிறைவான ரமளானே நீவந்தாய்; மகிழுவமே!

மலர்கின்றாய் வானத்தில்; மனமெல்லாம் ஞானத்தில்!
உளமொன்றி வணக்கங்கள்; உலகெங்கும் இணக்கங்கள்
பலங்கொள்ளும் மேன்மக்கள்; பண்புநிறை ஆன்மாக்கள்
வளங்கூட்டச் செய்வதிலே உயர்வெற்றி வாழ்விதிலே!

வழிகாட்டும் வான்மறையை வாழ்வினிலே பிணைத்துவிட
பழிபாவம் தவிர்ந்திடுதே! பசிதாகம் தவிப்பிலையே!
விழிப்பாகும் இதயந்தான் உண்மைக்குக் கண்திறக்க
அழுக்கெல்லாம் எரிகிறதே! ஆன்மாவும் ஒளிர்ந்திடுதே!

மண்ணிதிலே நடப்பெல்லாம் மாநபிகள் கடந்தபடி!
கண்துயிலும் போதினிலும் செவிமடுப்போம் போதனைகள்.
எண்ணமது சிறந்துவிடின் எல்லாமே சிறந்துவிடும்
விண்ணகமே எம்மிலக்கு; உலகமிது ஓர்களமே!

கவிஞர். பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

இறைமறை அருளப்பட்ட இப்புனித மாதத்தில் நல்லறங்கள் பல புரிந்து அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.

நமது தளத்தில் ரமளான் குறித்து பல்வேறு சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில தங்கள் பார்வைக்காக:

மீண்டும் ஒரு ரமளான்... (பகுதி-1)

மீண்டும் ஒரு ரமளான்... (பகுதி-2)

மீண்டும் ஒரு ரமளான்... (பகுதி-3)

மீண்டும் ஒரு ரமளான்... (பகுதி-4) இறுதிப்பகுதி

ரமளான் இரவு வணக்கங்கள்

மகத்துவமிக்க இரவிற்கான வணக்கங்கள்!

ரமழானை வரவேற்போம் - பத்து அம்சத் திட்டம்

நோன்பு குறித்து சில சிந்தனைகள்

லைலத்துல் கத்ர்

இஃதிகாஃப் எனும் இறை தியானம்!

ரமலானின் மூன்று பகுதிகள்

ரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா?

தஸ்பீஹ் தொழுகை - ஓர் ஆய்வு (முன்னுரை)

நோன்பு வரும் பின்னே - பிறைக்குழப்பம் வரும் முன்னே!

புனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்

ஆரோக்கிய நோன்பு

இரண்டு யூதர்கள்!

நோன்பின் மாண்பு - குறள்கள்

நம்பிக்கையுடன் நோன்பிருங்கள்

ரமளான் கண்ட களம்

கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்.

நோன்புப் பெருநாள் - ஈகைத் திருநாள்!

Comments   
நூருத்தீன்.
+1 #1 நூருத்தீன். 2013-07-10 01:58
அஸ்ஸலாமு அலைக்கும்.
சமா குழுமத்தினருக்க ும் வாசகர்களுக்கும் -
Ramadhan Kareem.
அன்புடன்,
-நூருத்தீன்
Quote | Report to administrator
அபூ ஸாலிஹா
+1 #2 அபூ ஸாலிஹா 2013-07-10 14:32
அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த ரமளான் நல்வாழ்த்துக்கள்!

அருட்கொடையாக மலர்ந்துள்ள இம்மாதத்தில் பெறும் பயிற்சியினை தொடர்ந்து வரும் அனைத்து மாதங்களிலும் பின்பற்ற முயற்சி செய்து சிறந்த முன்மாதிரிகளாக வாழ்வோமாக!
Quote | Report to administrator
M Muhammad
0 #3 M Muhammad 2013-07-11 05:56
RAMADHAN MUBARAK TO ALL...... MAY ALLAH'S BLESSINGS AND MERCY BE ON ALL OF US IN THIS RAMADHAN & AFTER ... TO BE RIGHTEOUS AND STRIVE TO MAKE OTHERS RIGHTEOUS, BE STEADFAST AND SUCCESSFUL IN BOTH WORLDS...
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்