முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

மெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உலகப்புகழ் பெற்ற கன்சாஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சவுதியைச் சேர்ந்த தாயும் மகனும் ஒரே விழா மேடையில் பட்டம் பெற்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில், பாத்திமா அல் கப்லி (46) கணிதவியல் இளங்கலை பட்டமும் அவரது மகன் சலாம் (22) பெட்ரோலிய பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றனர்.

தனது கணவரைப் போல் கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்று முனைவர் ஆவது தான் தனது வாழ்நாள் லட்சியம் என்று கூறினார். தாயாரின் கல்வி வேட்கையைப் பற்றி கருத்து கூறிய சலாம், "என்னை விட எனது தாயார் நல்ல அறிவு கூர்மையுடன் உள்ளார். எனது பாடங்களிலும் அவர் உதவியாக இருக்கிறார். அவருடன் சக மாணவனாக ஒரே பல்கலைக்கழகத்தில் பயின்றதும், பட்டம் பெற்றதும் மறக்க முடியாத அனுபவம்" என்றார்.

அரபு நாட்டு ஊடகங்களும், மேற்கத்திய நாட்டு ஊடகங்களும் வியக்க வைக்கும் இப் பட்டமளிப்பு சம்பவத்தைக் குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- ஹமீத் சுல்தான்

Comments   

Muhammad
+1 #1 Muhammad 2013-06-02 15:07
இதில் என்ன அதிசயம் என்பது புரியவில்லை. தாத்தா பாட்டிக்கு பேரப்பிள்ளைகள் இங்கிலீஷ் பேச கற்றுத்தரும் காட்சி வீட்டுக்குவீடு நடக்கிறது.

9/11க்கு பிறகு, அதோ முஸ்லிம் தீவீரவாதி வரான் வரான் என்று இவர்கள் பூச்சாண்டி காட்டியதும், அரபு நாட்டு முஸ்லிம்கள் பயந்துபோய் அமெரிக்கா செல்வதைவிட்டு தங்களது நாட்டிலேயே உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள ை உருவாக்கிவிட்டன ர்.

பெட்ரோல் காசு இல்லாமல் காத்துவாங்கும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள ை தூக்கி நிறுத்த இது ஒரு ட்ராமா. அரபு வசந்தம் போட்ட போட்டில், தூங்கிக்கொண்டிர ுந்த அரபிகள் விழித்துக்கொண்ட ு விட்டனர். இனி அமெரிக்காவின் பப்பு வேகாது.
Quote | Report to administrator
Muhammad
0 #2 Muhammad 2013-06-07 00:56
அவனவன் பட்டத்துக்கு மேல் பட்டமும், பிஎச்.டியும் வாங்கிக்கொண்டு கொளுத்தும் வெயிலில் தெருத்தெருவாக அலையும் நேரத்தில், இந்த செய்தியை படித்துவிட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
Quote | Report to administrator
Mubarak
0 #3 Mubarak 2013-06-08 03:37
Quoting Muhammad:
அவனவன் பட்டத்துக்கு மேல் பட்டமும், பிஎச்.டியும் வாங்கிக்கொண்டு கொளுத்தும் வெயிலில் தெருத்தெருவாக அலையும் நேரத்தில், இந்த செய்தியை படித்துவிட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.


Is the glass half empty or half full? என்று சொல்வார்கள். முதிய வயதிலும், இளைஞர் போன்று நம்பிக்கையுடன் படித்து வென்றுள்ளாரே அந்த தாய் என்று என் பார்வைக்கு தெரியும் ஆக்கம், இன்னொருவருக்கு நொந்து போகச் செய்கிறது.

என்ன உலகம் ஸார் இது?
Quote | Report to administrator
Muhammad
0 #4 Muhammad 2013-06-08 08:14
சவுதி அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு காசு கொடுத்து அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ போய் படிக்க சொல்கிறது, இந்த தாயார் படிப்பது வெறும் அறிவு வேட்கையால் மட்டுமல்ல. படித்து முடித்ததும் கை நிறைய சம்பளம் தரும் வேலை காத்திருக்கிறது.

எவ்வளவு மார்க் வாங்கினாலும், ரேஷன் கார்டு இல்லாவிட்டால் உனக்கு ஜாதி சான்றிதழும் கிடையாது, பூர்வீக சான்றிதழும் கிடையாது, ஓட்டுரிமையும் கிடையாது, நாட்டைவிட்டு ஓடுவதற்கு பாஸ்போர்ட்டும் கிடையாது, நீ இந்த நாட்டின் குடிமகன் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாதென்று நமது நாட்டின் சட்டம் சொல்கிறது.

எத்தனுக்கு எத்தனையெல்லாம் கவனித்து, தொலைந்து போன ரேஷன் கார்டுக்கு அப்ளிகேஷன் போட்டு வந்து சேர்ந்து ஜாதி, பூர்வீக சான்றிதழ் வாங்குவதற்குள் அட்மிஷன் முடிந்து உயிர் போய்விடுகிறது. சிறிது குறைவாக மார்க் வாங்கிவிட்டால் "இனிமே உனக்கு ப்யூச்சர் கிடையாது" என்று 17 வயதிலேயே விளக்கை அணைத்து விடுகிறது நமது இறையாண்மை மிக்க அரசு.

அய்யகோ, இந்த செய்தியை படித்து விட்டு எங்கே போய் முட்டிக்கொள்வது ?
Quote | Report to administrator
irfan
0 #5 irfan 2013-08-12 10:00
girat son & mother
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்