முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.  கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது?


இவரது பின்னணியைப் பற்றி சற்று தெரிந்து கொள்வது நல்லது. இறைத்தூதரை இழிவு படுத்தும் நோக்கில் ஃபித்னா எனும் திரைப்படத்தைத் தயாரித்த Geert Wilders-ன் Party for Freedom தலைவர்களில் ஒருவராவார் டோர்ன். விஷமத்தனமான இத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டு வியந்து போனார். "இந்த மனிதர் முஹம்மதுக்கு முஸ்லிம்களிடத்தில் அப்படி என்ன சிறப்பு?" என்று பெரும் ஆச்சரியம் அடைந்து அக் கேள்விக்கு விடை காணும் ஆய்வில் இறங்கி விட்டார்.

"அந்த ஒரு கேள்விக்கான தேடலே இன்று என்னை முஸ்லிம் ஆக்கியது" என்கிறார் டோர்ன். டட்ச் (Dutch) பாராளுமன்ற உறுப்பினரான இவர், தமது மன மாற்றத்தை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியுலகத்திற்கு பகிரங்கமாக அறிவித்தார். "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!" எனும் அவரது டிவிட்டர் ஷஹாதா அரபி மொழியில் அமைந்திருந்தது. 46 வயதான டோர்னின் இந்த மனமாற்றம் நெதர்லாந்தில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

விஷயம் மெல்ல வெளியே கசிந்து பல நாட்களாகியும் இவரின் கட்சி உறுப்பினர்கள் பலருக்கு இது ஒரு வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவையாகவே இருந்தது. பின்னே? "I hate Islam" என்பது இவரது Party of Freedom கட்சியின் பகிரங்க அடிநாதம். அக்கட்சியைச் சேர்ந்த இவரே இப்போது "I follow Islam" என்றால்? சிரித்தார்கள்.

"இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான் முஸ்லிம் ஆகி விட்டேன் என்பதை நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும். ஆனால், நான் கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனத்திலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை முழுமையாக ஆராய்ந்து கொண்டிருந்தேன். அதை எனக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிவர்!" என்கிறார் அல் ஜஸீராவிற்கு பேட்டியளித்த டோர்ன்.

மதீனா நகரின் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் தொழும் டோர்ன்மனம் மாறிய கையோடு, தனது மாநகர மேயருக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதிக் கோரிக்கை விடுத்திருந்தார் டோர்ன். 'தமது பணி நேரத்தினூடாக தொழுது கொள்ள அனுமதி வேண்டும்' என்ற கோரிக்கை.

"இஸ்லாத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை அதிகமதிகம் கேட்டவன் நான். இன்னமும் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் என் கட்சியினர், என்னைத் துரோகி என்றே அழைக்கின்றனர். நல்லது. மனதை விசாலமாக்கி, முன் முடிவுகளை கைவிட்டு, ஆராய்ந்து இம்முடிவை நான் தேர்ந்தெடுத்ததை அறிந்த பலரோ எனக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மற்றவர்களைப் போலவே நானும் வாழ்க்கையில் இதுவரை மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறேன். ஆனால், நான் செய்து வந்த தவறுகளிலிருந்து இப்போது நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் என் பாதை தெளிவாகி விட்டதையும் இதில் நான் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதையும் உணர்கிறேன்!" என்று தமது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?"

அவதூறு மற்றும் பொய்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் பற்றி நினைத்தால் வெட்கித் தலைகுனிவதாகக் கூறும் டோர்ன், நபியவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற மேற்கத்தியப் பொய்ப் பிரச்சாரங்கள் பற்றி உலகமெங்கும் சென்று எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளேன். இப்போது நினைத்தால் என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லை. நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?" என்கிறார்.

இட்டுக் கட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் ஏற்படுத்திய அவநம்பிக்கையை போக்க, டொராண்ட்டோ (Toronto) நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையமான Canadian Dawah Association – CDA வுடன் இணைந்து சர்வதேசத் திரைப்படம் ஒன்றினைத் தயாரிக்கப் போவதாகக் கூறுகிறார்.

"இம்முறை என் திரைப்படம் அப்பட்டமான உண்மையைப் பேசும். இஸ்லாத்தைப் பற்றியும் நபிகளாரின் சிறப்புப் பண்புகளையும் இது எடுத்துரைத்து, மேற்கத்திய நாடுகளிடையே பரப்பப் படும் இஸ்லாமோஃபோபியாவை அகற்றும்!" என்கிறார் உறுதியாக.

"உங்களது புனிதப் பயணம் எவ்வாறு இருந்தது?" என்ற கேள்விக்கு, "இதே இடத்திற்கு உம்ரா மற்றும் ஹஜ் செய்யச் செல்பவர்களை கிறுக்குப் பிடித்தவர்கள் (Lunatic) என்றெல்லாம் ஏளனம் செய்துள்ளேன். இப்படி கீழ்த்தரமாக பிறர் மனம் புண்படும்படி நடந்து கொண்ட நான், நபி (ஸல்) அவர்களின் கல்லறைக்கு அருகிலும் ரவ்தா ஷரீஃப்க்கு முன்பு நிற்கும் போதும் என்னுள் பொங்கிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை. இவ்விடங்களில் நான் தொழும் போது, சுவர்க்கத்தின் அருகே நெருங்கி விட்டது போன்ற தூய்மையானதொரு உணர்வு ஏற்பட்டிருந்தது. என் கண்கள் குளமாயின"

"இறைத்தூதர் மீது இத்தனை அன்பை வைத்திருக்கும் உலக முஸ்லிம்களைப் போன்றே நானும் என்னை உணர ஆரம்பித்திருக்கிறேன். அதே நேரத்தில், இறைத்தூதர் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கும் சில மேற்கத்தியவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். எங்களிடையே தான் எவ்வளவு அறியாமை? எத்தனை பாரபட்சம்? இவற்றை எல்லாம் நான் எப்படி களையப் போகிறேன்?" என்று கவலைப்படுகிறார் டோர்ன்.

"உலக அளவில் முஸ்லிம்களுக்கும் பிற மதத்தினருக்குமுள்ள இடைவெளியைக் குறைத்து அவர்களிடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படச் செய்வேன். இஸ்லாம் பற்றிய தெளிவை எனக்கு உணர்த்திய இஸ்லாமிய அழைப்பு மையமான CDA வுடன் இணைந்து, அழைப்புப் பணியினை முழு மூச்சுடன் மேற்கொள்வேன்.  இஸ்லாத்தைப் பற்றியும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல, என்னுடைய வாழ்க்கையை இனி அர்ப்பணிப்பேன்!" என்று Okaz/Saudi Gazette க்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

- அபூ ஸாலிஹா

Comments   

வாஞ்ஜுர்
0 #1 வாஞ்ஜுர் 2013-04-25 11:26
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இப்பதிவு மேலும் பல வாசகர்களை சென்றடையும் பொருட்டு என்னுடைய vanjoor-vanjoor.blogspot.com ல் நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுட்டி: vanjoor-vanjoor.blogspot.sg/2013/04/blog-post_9445.html
Quote | Report to administrator
Muhammad
+2 #2 Muhammad 2013-04-25 13:24
மனசாட்சிக்கு கட்டுப்பட்ட ஒரு பகுத்தறிவுவாதிய ின் இறுதி புகலிடம் இஸ்லாம்தான். சிலைவணக்கம் செய்து கொண்டிருந்த மாவீரர் உமர் கலீஃபா, பெருமானாரின்(ஸல ்) தலையை கொய்து வருகிறேன் என்று சூளுரைத்து உருவிய வாளுடன் கிளம்பினார். போகும் வழியிலே திருக்குரானின் வசங்களை கேட்டு உறைந்து போய்விட்டார். கண்ணீர் மல்க, உடல் நடுங்க பெருமானாரின் கைகளைப்பற்றி "ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. முஹம்மாத்(ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதர்" என்று ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை ஏற்றார்.

சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.
Quote | Report to administrator
mohammed
+3 #3 mohammed 2013-04-26 00:30
சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது
Quote | Report to administrator
முஹம்மது ரஃபி
+1 #4 முஹம்மது ரஃபி 2013-04-26 13:50
Quote:
இஸ்லாம் பற்றிய தெளிவை எனக்கு உணர்த்திய இஸ்லாமிய அழைப்பு மையமான CDA...
தமிழகத்தில் இருப்பவற்றில் எத்தனை அமைப்புகள், இல.கணேசனுக்கும் , இராம. கோபாலனுக்கும் அழகான முறையில் அழைப்பு கொடுத்து ஈர்த்திருக்கின்றன?

பிற மதத்தவர் என்றாலே இஸ்லாத்தின் மீது தெளிவான புரிதல் இல்லாதவர் என்று தானே அர்த்தம்?

வாஞ்சையோடு அவர்களை அரவணைப்பதை விடுத்து "விவாதம் செய்ய வர்றியா...?" என்று தத்தம் ஈகோவை நிலை நிறுத்த போராடி - அவர்களைப் "பின்னங்கால் பிடறியில் அடிக்க" "வெறுத்து ஓடவைக்கும் தஃவா" பணி புரியும் அமைப்புகள், மேற்கண்ட Quote ஐ நிச்சயம் கோபப்படாமல் சிந்திக்க வேண்டும்.
Quote | Report to administrator
Muhammad
+1 #5 Muhammad 2013-04-26 18:13
Quoting முஹம்மது ரஃபி:

வாஞ்சையோடு அவர்களை அரவணைப்பதை விடுத்து "விவாதம் செய்ய வர்றியா...?" என்று தத்தம் ஈகோவை நிலை நிறுத்த போராடி - அவர்களைப் "பின்னங்கால் பிடறியில் அடிக்க" "வெறுத்து ஓடவைக்கும் தஃவா" பணி புரியும் அமைப்புகள், மேற்கண்ட Quote ஐ நிச்சயம் கோபப்படாமல் சிந்திக்க வேண்டும்.

அருமையான கருத்து. வெறுப்பை முறியடிக்க அழைப்பு.
Quote | Report to administrator
M Muhammad
-1 #6 M Muhammad 2013-04-26 20:35
Alhamdulillah ... Allah has again by this incident made it clear and surely ...Its time to be reminded that there are only two type of people in the world first one is "Practising Muslims" and the second "Prospective Muslims"...... we need to invite the not practising Muslims with this polite and positive attitude, kind hearted real concern deep in mind and presented well to others .......that we are "Practising Muslims" and others whether they are enemies of Islam or not practising name sake Muslims,or Muslims with diffrence of opinion and belief on Islam... they are the one who have a chance always to become "Practising Muslims" as well.. In Sha Allah... See Al Quran Ch 16 : 125 ,,
Quote | Report to administrator
abdulaleem
-1 #7 abdulaleem 2013-04-28 23:27
karananidi, j jayalalitha ,kavigyar vali, vaira muttu ,rss; pjp, thozarkal.,l.ka nesan, sinima thayarippoor arasiyal vatihkal manavarkal pattam perravarkalukku intha seythiyai anuppi azakana murail islattai arimukam seyya aavana seyya ventukiren .allah ,ivarkalukkum islattai vazanguvanaka.
Quote | Report to administrator
Mahavai Maithan
-1 #8 Mahavai Maithan 2013-05-04 13:12
துரிதமாகவும், முழு விபரங்களுடனும் வெளியிட்டுள்ளீர ்கள். இதனை என் வலைத்தளத்தில் நன்றியுடன் வெளியிட்டுள்ளேன்.

mahavai.blogspot.com/.../...
Quote | Report to administrator
நீடூர் நெய்வாசல்
-1 #9 நீடூர் நெய்வாசல் 2013-05-04 13:21
நன்றி.

எங்கள் ஊர் இணைய தளத்தில் இந்த ஆக்கத்தை வெளியிட்டுள்ளோம்.

nidurneivasal.org/.../...
Quote | Report to administrator
Nagore Flash
0 #10 Nagore Flash 2013-05-08 19:22
மாஷா அல்லாஹ். அருமையான பதிவு. சத்தியமார்க்கம் சகோதரர்களுக்கு இறைவன் நிறைவான நலம் விளைவிக்கட்டும்.

தெளிவடைந்த ஃபித்னா - "உள்ளத்தை புரட்டிய இறைவன்" என்ற தலைப்பில் எங்கள் ஊர் தளத்தில் நன்றியோடு வெளியிட்டுள்ளோம ்.

nagoreflash.blogspot.com/.../. ..
Quote | Report to administrator
அழைப்புப் பணி
-1 #11 அழைப்புப் பணி 2013-05-08 19:27
We have published the above news with courtesty to satyamargam.com

alaipupani.blogspot.com/.../.. .

Thanks.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்