முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

டந்த 26.09.2012 முதல் 29.09.2012 வரை, கத்தர் நாட்டில் "கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி" ஒன்றினை, சத்தியமார்க்கம்.காம் ஏற்பாடு செய்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோதரர் CMN சலீம் அவர்களின் கத்தர் வருகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வருகை தந்திருந்தினர்.


மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதல் நாள் 26.09.2012 புதன் கிழமை மாலை 8.30 முதல் 10.30 வரை கத்தர் அவ்காஃப் (FANAR) இஸ்லாமிய தமிழ் பிரிவின் தலைவரும், SLIC இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் தலைவருமான சகோதரர் ஜியாவுத்தீன் மதன- யின் தலைமையுரை மற்றும் சகோதரர் இமாதுத்தீன் உமரி-யின் அறிமுக உரைக்குப் பின், சகோதரர் CMN சலீமின் "கல்வியும், தமிழ் முஸ்லிம்களும்" என்ற தலைப்பிலான சிறப்புரை கத்தர் IQIC மற்றும் SLIC கேட்போர் கூடத்தில் நடந்தது.இந்நிகழ்ச்சியில் உரையாற்றியோர், இஸ்லாமியக் கல்வி மற்றும் உலகக் கல்வி ஆகிய இரண்டும் ஒரு புள்ளியில் இணைந்த கல்விமுறையின் அவசியம் பற்றியும், தற்காலத்தில் உள்ள முஸ்லிம்கள் நிலை பற்றியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடனும் பல்வேறு புள்ளி விபரங்களுடனும் பார்வையாளர்களுக்கு அழகான முறையில் எடுத்துரைத்தார்கள்.

முஸ்லிம் சமூகம் தற்போது சந்தித்து வரும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான மூலக்காரணம் "இஸ்லாமிய வரலாற்றினை மறந்ததும், இஸ்லாமியக் கல்வியை கல்விக் கூடங்களை உதாசீனப் படுத்துவதும்" என்ற சிந்தனை பார்வையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

"வெறுமனே பணத்தை சம்பாதிக்கும் இயந்திரங்களாக, பொருளியல் ஆதாயங்களை மட்டுமே  இலக்காகக் கொண்ட கல்வி முறையே இன்று பரவலாக உள்ளது!" என்பதையும் "இத்தகைய கல்விமுறையை இஸ்லாம் அனுமதிக்க வில்லை!" என சகோதரர் CMN சலீம் சுட்டிக் காட்டினார்.

--oOo--

மறுநாள் நிகழ்ச்சி 27.09.2012 வியாழக்கிழமை அன்று IQIC இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் மாதந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர் முஹம்மத் மீரான் அவர்கள் தலைமையுரை மற்றும் சகோதரர் ஷர்புத்தீன் உமரி அவர்களின் முன்னுரையுடன் சகோதரர் CMN சலீம் அவர்கள் "முஸ்லிம்களின் கல்வி: பிரச்னைகளும் - தீர்வுகளும்" எனும் தலைப்பில் உரையாற்றினார். உரையினைக் கீழே காணலாம்.

உரையின் இறுதியில் சகோதரர் CMN சலீம், தமது சமூக நீதி அறக்கட்டளை பற்றியும், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி அறக் கட்டளையின் சார்பாக துவக்கப் பட்ட அன்னை கதீஜா அறிவியல் கல்லூரி-யை பற்றியும் விளக்கினார். இதில் நூற்றி ஐம்பது உறுப்பினர்களின் கூட்டு முயற்சியுடன் இஸ்லாமியக் கல்வியை மாணவர்களுக்கு போதிக்கும் பெண் கல்வியாளர்களை உருவாக்கும் தங்கள் நோக்கத்தையும் செயல் திட்டத்தையும் விளக்கினார்.

சமுதாயத்தில் ஒழுக்கம் பேணப்படவும், ஒழுக்கக் கேடுகளும் அது சார்ந்த அனைத்து பாலியல் குற்றங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இத்தகைய கூட்டு முயற்சிகள் காலத்தின் கட்டாயம் என்பதை விளக்கினார்.  தனி நபராக தனித்து நின்று சிலர் இவ்வகை கல்லூரிகள் நிறுவ முயன்றாலும், கூட்டு முயற்சி இல்லையேல் இவை சாத்தியமில்லை எனும் அடிப்படையில் இதை அனைவருக்கும் வலியுறுத்தி இது போன்ற செயல்கள் எவர் செய்தாலும் அவற்றில் எனறென்றும் தமது ஒத்துழைப்பு உண்டு என்று கூறினார். மேலும் இந்த கல்லூரிக்கு ஆதரவும் கோரினார்.


இந்த இரு நாட்கள் நிகழ்ச்சியில் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய IQIC (இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை), SLIC (இலங்கை இஸ்லாமிய நிலையம்) , KWAQ (காயல் பேரவை) மற்றும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சத்தியமார்க்கம்.காம் தமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

--oOo--

கடந்த 28.09.2012 அன்று (வெள்ளிக்கிழமை) மூன்றாவது நாள் சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன. முந்தைய இரு நாட்களில் தமது பெயர்களை முன்பதிவு செய்தவர்களுக்கான இந்த அமர்வுகள், கத்தரில் உள்ள Entelyst  அலுவலகத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இதில், துவங்கப்படவுள்ள அன்னை கதீஜா கல்லூரி தொடர்புடைய விபரப் படங்கள், கட்டுமான பணியின் இறுதி நிலை பணிகள், அடுத்தக் கல்வியாண்டு 2013 -14 முதல் இதன் துவக்கம் பற்றிய விபரங்களுடன் நடைபெற்றன. இத் திட்டத்தில் ஏற்கனவே பங்கு பெற்றுள்ளவர்களின் பங்குத் தொகை, எஞ்சியுள்ள பங்குகள் மற்றும் அதற்குரிய பதிவு வழிமுறைகளையும் CMN சலீம் விளக்கினார்.

கல்லூரி பற்றிய தொடர்புக்கு:

 

சகோதரர் CMN சலீம்

தலைவர், சமூக நீதி அறக்கட்டளை,

129/64 - தம்பு செட்டித் தெரு,

மண்ணடி, சென்னை -1

தொலைபேசி : +91-44-25225784

அலைபேசி : +91-9382155780

மின்னஞ்சல் : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.';document.getElementById('cloak45e72ec69e1c0a89a0148974cfd10d59').innerHTML += ''+addy_text45e72ec69e1c0a89a0148974cfd10d59+'<\/a>';

நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரையாற்றிய சத்தியமார்க்கம் தளத்தின் உறுப்பினரான சகோதரர் முஷ்தாக், "முஸ்லிம்களின் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டுக்காக "இஸ்லாமிய அறிவுடன் கூடிய கல்வி"-யைப் போதிக்கும் கல்விக் கூடங்கள் ஆயிரக்கணக்கில் உருவாக வேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் அதற்கு முயற்சி செய்ய வேண்டும்.  அனைவராலும் ஆளுக்கொரு கல்விநிலையம் உருவாக்குவது சாத்தியம் இல்லை என்றாலும் இது போன்ற முயற்சிக்கு துணை நின்று ஆதரவு அளிக்க வேண்டும்!" எனும் சத்தியமார்க்கம்.காமின் நிலைபாட்டினை முன்வைத்து அனைவரிடம் இதற்கு ஆதரவு நல்க உறுதி எடுக்க கேட்டுக் கொண்டபின், நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இத்தூய பணியில் தம்மை அர்ப்பணித்துள்ள சகோதர் CMN சலீம் அவர்களுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும்  தெரிவித்துக் கொள்கிறது.

Comments   

Mohamed ilyas
0 #1 Mohamed ilyas 2012-10-07 11:32
Assalamu Alaikum......

Alhamdulilah.......

Can u upload CMN Salim Speech.....
Quote | Report to administrator
Ansari
0 #2 Ansari 2012-10-07 14:50
//இந்த இரு நாட்கள் நிகழ்ச்சியில் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய IQIC (இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை), SLIC (இலங்கை இஸ்லாமிய நிலையம்) , KWAQ (காயல் பேரவை) மற்றும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சத்தியமார்க்கம் .காம் தமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.//

ஹி...ஹி... கத்தாரில் உள்ள மாபெரும் இயக்கமான TNTJ வை இதில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையே? வாழ்க சத்யமார்க்க தளத்தின் பரந்த(!) நோக்கு... வளர்க... உங்கள் காழ்ப்புணர்ச்சி !
Quote | Report to administrator
M Muhammad
0 #3 M Muhammad 2012-10-07 16:50
//"முஸ்லிம்களின ் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டுக்காக "இஸ்லாமிய அறிவுடன் கூடிய கல்வி"-யைப் போதிக்கும் கல்விக் கூடங்கள் ஆயிரக்கணக்கில் உருவாக வேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் அதற்கு முயற்சி செய்ய வேண்டும். அனைவராலும் ஆளுக்கொரு கல்விநிலையம் உருவாக்குவது சாத்தியம் இல்லை என்றாலும் இது போன்ற முயற்சிக்கு துணை நின்று ஆதரவு அளிக்க வேண்டும்!" //
Quote | Report to administrator
a ahmed
0 #4 a ahmed 2012-10-07 17:05
alhamdulillah //இந்நிகழ்ச்சிய ில் உரையாற்றியோர், இஸ்லாமியக் கல்வி மற்றும் உலகக் கல்வி ஆகிய இரண்டும் ஒரு புள்ளியில் இணைந்த கல்விமுறையின் அவசியம் பற்றியும், தற்காலத்தில் உள்ள முஸ்லிம்கள் நிலை பற்றியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடனும் பல்வேறு புள்ளி விபரங்களுடனும் பார்வையாளர்களுக ்கு அழகான முறையில் எடுத்துரைத்தார் கள்.

முஸ்லிம் சமூகம் தற்போது சந்தித்து வரும் பெரும்பாலான பிரச்சினைகளுக்க ான மூலக்காரணம் "இஸ்லாமிய வரலாற்றினை மறந்ததும், இஸ்லாமியக் கல்வியை கல்விக் கூடங்களை உதாசீனப் படுத்துவதும்" என்ற சிந்தனை பார்வையாளர்களிட ையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

"வெறுமனே பணத்தை சம்பாதிக்கும் இயந்திரங்களாக, பொருளியல் ஆதாயங்களை மட்டுமே இலக்காகக் கொண்ட கல்வி முறையே இன்று பரவலாக உள்ளது!" என்பதையும் "இத்தகைய கல்விமுறையை இஸ்லாம் அனுமதிக்க வில்லை!" என சகோதரர் CMN சலீம் சுட்டிக் காட்டினார்.
Quote | Report to administrator
முஷ்தாக். M.H.
0 #5 முஷ்தாக். M.H. 2012-10-08 12:56
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் அன்ஸார் அவர்களே

தங்கள் கேள்விக்கு பதில் தருகிறோம், ஆனால் அதற்கும் முன்னர் தங்களுக்கு ஒரு வேண்டுகோள். தாங்கள் சத்தியமார்க்கம் தள நோக்கத்தை www.satyamargam.com/0082
படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதை மீண்டும் ஒரு முறை பொறுமையாக படிக்கவும்.

// கத்தாரில் உள்ள மாபெரும் இயக்கமான TNTJ வை இதில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையே? வாழ்க சத்யமார்க்க தளத்தின் பரந்த(!) நோக்கு... வளர்க... உங்கள் காழ்ப்புணர்ச்சி ! //

மேலும் தங்கள் பின்னூட்டத்தை இவ்வாரு அமைக்காமல் அதை முறையாக அமைத்து இருந்தால் நலமாக இருக்கும். அல்லது கத்தர் இந்திய தவ்ஹீத் ஜமாத்தோடும் இணைந்து இவ்வாரு நிகழ்ச்சியை நடத்தியிருந்தால ் நல்லதாக இருக்கும் என்று கூறினால் ,அது சமுதாய நலன், மற்றும் ஒற்றுமைக்கான ஆவல் அல்லது ஆதங்கம் எனலாம் , காழ்ப்புணர்ச்சி க்கு எதிரான கருத்து எனலாம்.

ஆனால் தாங்கள் எங்களை காழ்ப்புணர்ச்சி உள்ளவர் என்று குற்றம் சுமத்தியுள்ளீர் கள் ,இது மிகவும் தவற்றான கருத்து, உண்மையை அறியாமல் இருக்கும் அனைவருக்கும் எங்கள் மௌனம் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பதால் இதற்கு நாங்கள் பதிலளிக்க கடமைப் பட்டுள்ளோம்.

எங்களை பொறுத்தமட்டில் எண்ணிக்கையோ கூட்டம் சேர்ப்பதோ பெரிய காரியம் அல்ல அதை நாங்கள் நாடவில்லை, அல்லாஹ் நாடினால் இயலாத ஒன்றுமில்லை. சமுதாய நலன் விளைவிக்கும் சத்தியம் அதிகமானோருக்கு செல்ல வேண்டும் அது யார் கூறினாலும் அதற்கு துணை ஆதரவு என்பதே எங்கள் நிலைபாடு.

அதே அடிப்ப்டையில் நாங்கள் சகோதரர் CMN சலீம் வருகையின் எங்கள் நிகழ்ச்சி அல்லாமல், பொது நிகழ்ச்சி மூலம் இந்த செய்தியை பரவலாகக் வேன்டும் எனும் நோக்கத்தில் கத்தரில் இருந்த நான்கு ஜமாத்துக்களுக்க ும் IQIC, SLIC, KWA & QITC - கத்தர் தவ்ஹீத் ஜமாத் உட்பட அவரவர் கேட்போர் கூடத்தில் சகோதரருடைய நிகழ்ச்சி நடத்திடக் கோரி மெயில் மூலம் அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு மூன்று ஜமாத்துக்களும் இசைந்தனர் ஆனால் QITC கத்தர் இந்திய தவ்ஹீத் ஜமாத்திடமிருந்த ு (சந்திக்க அவகாசம் கேட்டும்) ஏதும் பதில் வர வில்லை .

ஏதும் நிர்வாக பிரச்சினையாக இருக்கலாம் என்று கருதி அதை நாங்கள் பெரிது படுத்தாமல் அவர்களுக்கும் நிகழ்ச்சியின் அழைப்பிதழும் அனுப்பியிள்ளோம் . வழமையாக அவர்கள் நிகழ்ச்சிகளில் நாங்கள் கலந்து கொள்வோம் என்பதை அறியவும் மேலும் கடந்த வெள்ளியன்று நடந்த அவர்கள் நிகழ்ச்சியிலும் கலந்துள்ளோம்.

ஆக இது போன்று கருத்துக்கள் வெளியிடுவதை விட ஆக்கபூர்வமான காரியங்கள் செய்வது சமுதாயத்திற்கு நாம் செய்யும் நற்பணி என்பதை உணரவும் மேலும் அவர்கள் இசைந்தால் அவர்களோடு இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்திட எங்களுக்கு எந்த ஒரு தயக்கமும் இருக்காது என்பது மட்டுமல்லாமல், அவர்கள் அடுத்த நிகழ்ச்சிகளிலும ் நாங்கள் கலந்து கொள்வோம்.

மார்க்கம் அனுமத்தித்த பணிகளில் எங்கள் நிலைபாடு அனைவரோடும் இதுவாகவே இருக்கும் என்பதை தன்னிலை விளக்கமாக கூறிக் கொள்கிறோம்.
Quote | Report to administrator
Sheik
0 #6 Sheik 2012-10-08 13:54
சகோதரர் அன்சார் சொல்வது சரியே... கத்தார் QITC க்கும் நீங்கள் அழைப்பு கொடுத்திருந்தால ், அவர்கள் மூலம் இன்னும் பல நூறு பேருக்கு இந்த விஷயம் போய் சேர்ந்திருக்கும ். தஃவா விஷயங்களுக்கும் பாரபட்சம் பார்க்கிரீர்களே ?
Quote | Report to administrator
ššசத்தியமார்க்கம்.காம்
0 #7 ššசத்தியமார்க்கம்.காம் 2012-10-08 21:58
அன்பான சகோதரர் ஷேக்,
அஸ்ஸலாமு அலைக்கும்.

//பொது நிகழ்ச்சி மூலம் இந்த செய்தியை பரவலாகக் வேன்டும் எனும் நோக்கத்தில் கத்தரில் இருந்த நான்கு ஜமாத்துக்களுக்க ும் IQIC, SLIC, KWA & QITC - கத்தர் தவ்ஹீத் ஜமாத் உட்பட அவரவர் கேட்போர் கூடத்தில் சகோதரருடைய நிகழ்ச்சி நடத்திடக் கோரி மெயில் மூலம் அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு மூன்று ஜமாத்துக்களும் இசைந்தனர் ஆனால் QITC கத்தர் இந்திய தவ்ஹீத் ஜமாத்திடமிருந்த ு (சந்திக்க அவகாசம் கேட்டும்) ஏதும் பதில் வர வில்லை//

QITC அமைப்பினருக்கு முறைப்படியான அழைப்பு அனுப்பப்பட்டது. சகோ. சலீம் அவர்களுடனுனான நேரடி சந்திப்புக்கு எங்களின் கத்தர் பிரதிநிதிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது. அங்கிருந்துதான் எதிரொலி ஏதும் இல்லை.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்