முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தமிழக செய்திகள்

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரையொருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும் மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (ஆல இம்ரான், வசனம் 200)

ருலக வெற்றியைக் குறிகோளாகக் கொண்டிருக்கும் தனது அடியார்களுக்கு இறைவன் இடும் மகத்தான கட்டளையிது. அல்லாஹ்வின் அடியார்கள் தம்மை ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொள்வதில்தான் ஈருலக வெற்றியும் அடங்கியுள்ளது என படைத்த இறைவனே தெளிவாக கூறிய நிலையில், முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்குத் தடையாக இருப்பது எது?

மனிதர்கள் ஒன்றிணைந்து விடாமல் அவர்கள் மனதில் ஈகோ, தற்பெருமை, கர்வம், அகங்காரம், தலைக்கனம் முதலான எல்லாவித தீய குணங்களையும் விதைத்து விரிசலை ஏற்படுத்திக் கொண்டிருப்பவனே ஷைத்தான். அதற்காக அவன் ஒரு நிமிடம்கூட இடைவெளி விடாமல் ஓயாது களமாற்றிக் கொண்டிருக்கிறான். இதனைச் சரியாக உணர்ந்து கொண்டவர்கள், தம் மனதில் மேற்கண்ட தீய குணங்கள் வருவதற்கு ஒரு சிறிதும் இடம் நல்க மாட்டார்கள். இவ்வாறு கவனமாக இருப்பவர்களிடையேதாம் பாசமும் இணக்கமும் ஏற்படும். அதுவே தம்மை ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொள்வதற்கு வித்திடும்.

ஒரு சமுதாயத்தின் எதிர்காலமே அச்சமுதாயத்தின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது. கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் என அனைத்திலும் மிக மோசமான நிலையில் பின் தங்கியுள்ள முஸ்லிம் சமூகம், மிகத் தாமதமாக இதனை உணர்ந்து தற்போதுதான் சிறு அளவில் விழிப்புணர்வு பெற்று கல்வியை நோக்கி தம் சிந்தனையைத் திசை திருப்பத் தொடங்கியுள்ளது.

சமீப காலங்களில் தமிழக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் மிக முக்கியமானவை, காவல்துறை மற்றும் உளவுத்துறையால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்மீது புனையப்படும் பொய் வழக்குகள். படித்துக் கொண்டிருக்கும், படித்து முடித்து வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருக்கும் மாணவர்களைக் குறிவைத்து, அவர்களை அநியாயமாக சிறையிலடைக்கும் அக்கிரமத்தை உளவுத்துறை மற்றும் காவல்துறையிலிருக்கும் சில விஷமத்தனம் கொண்ட அதிகாரிகள் செய்துவருகின்றனர்.

இவ்வாறு இளைய தலைமுறை முஸ்லிம்களை குற்றவாளிகளாகக் கட்டமைத்து, கல்வி - வேலைவாய்ப்புகளை பறித்துக் கொண்டு, நீதிமன்றத்துக்கு அலைய வைப்பதன் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தையும் அதலப்பாதாளத்தினுள் தள்ளுவதற்கு இத்தகைய அதிகாரிகள் திட்டமிட்டே செயலாற்றி வருகின்றனர் என்பது நிரூபணமாகிக் கொண்டே வருகிறது.

இத்தகைய அநியாயங்களைக் கண்டித்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய தமிழக முஸ்லிம்களோ பல்வேறு பெயர்களில் தனித்தனிக் குழுக்களாக பிரிந்து நின்று தத்தம் குழுக்களின் வளர்ச்சியை மட்டும் மையமாக்கிச் செயல்பட்டு வருகின்றனர்.

ஆளும் அரசு இயந்திரங்கள், முஸ்லிம்களுக்கு எதிராக இழைத்துவரும் இன்னல்களை எதிர்கொள்ள, தனித்தனியாகப் பிரிந்து நின்று போராடுவது எவ்வகையிலும் பலனைத் தராது; பிரிவினை தரும் வலுவற்ற நிலையினால் திட்டமிட்ட சதிகளை எதிர்கொள்வதற்குச் சக்தியற்று போகிறது. இதனால், "தமிழக முஸ்லிம்கள்" என்ற பெரும்பான்மை சமூகம் பெறவேண்டிய அரசியல் சக்தியும் பெற முடியாமல் ஏதாவது பெரிய அரசியல் கட்சிகளின் பின்னால் ஒன்றோ இரண்டோ சீட்டுகளுக்காக அலையும் துர்பாக்கிய நிலையும் ஏற்படுகிறது.

இந்த அவல நிலையிலிருந்து மீள்வதற்கான வழிதான் என்ன?

மீண்டும் இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அல்லாஹ்வின் கட்டளையினை நினைவுகூர்வோம்.

அல்லாஹ்வின் கட்டளை ஒன்றாக இருக்க, அதனை மீறி தத்தம் விருப்பத்துக்குச் செயல்படும்போதே ஷைத்தான் வெற்றிபெறுகிறான். மீண்டும் அவனிடமிருந்து மீண்டு வெற்றிப்பாதை நோக்கி செல்ல, அல்லாஹ்வின் கட்டளைக்கு  மீள்வது மட்டும்தான் ஒரே வழி!

ஆம், "ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொள்வோம்!"

அல்லாஹ்வின் இந்தக் கட்டளையினைச் செயல்படுத்த தமிழகத்தின் தென் எல்லை குமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு முஸ்லிம்கள் தயாராகிவிட்டனர்.

இருக்கும் பல்வேறு இயக்க - அமைப்பு - ஜமாத் ரீதியிலான பாகுபாடுகளைக் களைந்து ஒன்றாக ஒரே அணியில் திரண்டு தமிழக முஸ்லிம்களுக்கே முன்னுதாரணமாக ஆகிவிட்டனர்.

தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் உள்ளதுபோன்றே திருவிதான்கோடிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இயக்கங்களிலுமாக முஸ்லிம்கள் பிளவுபட்டே கிடந்தனர்.

இயக்கங்களில் பிளவுண்டு சிதறிப்போன இளைஞர் சமூகத்தால் பல்வீனமானது ஊர் ஜமாத்துகளே. இவ்வூரும் அதற்கு விதிவிலக்கல்ல. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட உளவுத்துறை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இவ்வூர் இளைஞர்களைத் தொடர்ந்து பொய் வழக்குகளில் திட்டமிட்டு சிக்கவைத்து வேட்டையாடி வந்தது. இவ்வாறு உளவுத்துறையின் உதவியுடன் காவல்துறை கைது செய்து சிறையிலடைத்த எந்த இளைஞனின் ஒரு வழக்குகூட இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது முக்கியமானது. பல ஆண்டு வழக்கு விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக அல்தாஃப், நஸீர், ஷமீம், கலீமுல்லாஹ் போன்ற பல இளைஞர்களைக் காவல்துறை வேட்டையாடி சிறையிலடைத்தது. இவர்களில் கலீமுல்லாஹ் மார்க்க அறிஞர். ஷமீம், பொறியியல் படித்துக்கொண்டிருந்த மாணவன். காவல்துறையின் அராஜகம் ஒருபக்கம் இவ்வாறு தொடர்ந்து கொண்டே இருந்தாலும் அதற்கு எதிராக வலிமையாக ஒன்று திரளமுடியாத நிலையில் அவரவரால் இயன்ற வகையில் சிறு குழுக்களாகவே இவ்வூர் மக்கள் போராடி வந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் சித்தீக் என்ற பொறியியல் மாணவனை அநியாயமாகக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் மிகக்கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

கடந்த முறை போன்றல்லாமல் இம்முறை திருவிதாங்கோடு முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர். காவல்துறையின் தொடர்ச்சியான அராஜகப் போக்கிற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டுமென்பதை உணர்ந்து கொண்ட ஊர் மக்கள், தனித்தனியாக நின்று எதிர்கொள்வதால் எந்தப் பயனுமில்லை என்பதைப் புரிந்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவது என்ற முடிவுக்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஊரின் இரண்டு ஜமாத்களான திருவை ஜமாஅத் மற்றும் அஞ்சுவன்னம் ஜமாஅத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இயக்கங்கள், கட்சிகள் சாராத மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரவர் ஜமாத் மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய "ஒருங்கிணைந்த முஸ்லிம் ஜமாஅத்" என்ற பெயரில் ஒற்றுமை குழுவினை உருவாக்கியதோடு, காவல்துறையின் அத்துமீறல் அராஜகத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும்முகமாக ஒன்றிணைந்து கல்குளம் தாலுகா அலுவலகம் முன்னிலையில் திரண்டு பெரும் போராட்டத்தை நடத்திக் காட்டியுள்ளனர்.

விசாரணை என்ற பெயரில் மாணவர்கள், இளைஞர்களைக் கடத்திச் சென்று சட்டத்திற்குப் புறம்பான வகையில் கஸ்டடியில் வைத்து கொடுமைபுரிதல், நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து வீடுகளில் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல் புரிவது, தேடும் நபர் கிடைக்கா நிலையில் உறவினர்களைக் கொண்டு சென்று காவல் தடுப்பில் வைப்பது, நள்ளிரவில் வீடு புகுந்து ஆண்கள் இல்லா நிலையில் பெண்களிடம் தகாத வார்த்தைகள் பேசி அட்டூழியம் புரிவது என சொல்லொண்ணா அராஜகங்கள் புரிந்துவரும் காவல்துறை கறுப்பு ஆடுகளின் செயல்களுக்கு எதிராக இனிமேல் ஒன்றாக செயலாற்றுவது என்ற மகத்தான முடிவுக்கு வந்துள்ளதன் மூலம் ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள் எனும் இறை கட்டளைக்குச் செவிசாய்த்த ஊர்களில் முதன்மையானது என்ற மகத்தான அந்தஸ்துக்குத் திருவிதாங்கோடு முஸ்லிம் பெருமக்கள் வந்துள்ளனர்.

அராஜகங்களுக்கு முடிவுகட்ட, நியாயத்திற்காக போராட இயக்க, கட்சி பிளவுகளை மறந்து ஒன்றாக ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தமிழக முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாக, திருவிதாங்கோட்டில் உள்ள அனைத்து இயக்கங்களும் ஊர் ஜமாத்துடன் ஒன்றிணைந்து செயலாற்ற முடிவெடுத்து செயலாற்றத் தொடங்கியுள்ளது மிகச் சிறந்த முன்னுதாரணமாகும்.

இந்த முன்மாதிரியினைத் தமிழகமெங்கும் பிற ஊர் முஸ்லிம்களும் கைக்கொண்டு செயலாற்ற முன்வருவது சமுதாயத்திற்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களை எதிர்கொள்வதற்கான ஆரம்பப்படியாகும். திருவிதாங்கோடு ஊர் தொடங்கி வைத்த இத்தீப்பொறி தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் விரைந்து பரவி மாபெரும் மாற்றத்தை விதைக்கட்டும்.

"ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொள்வோம்; ஈருலக வாழ்விலும் வெற்றியினை ஈட்டுவோம்!"

- அபூ சுமையா

Comments   

Abu hasan
+5 #1 Abu hasan 2016-02-20 17:48
அருமை!

"ஈகோவை விட்டொழித்து இயக்கங்கள் தான் முன் வர வேண்டும்" என்ற கோஷத்தை முதலில் ஒழிப்போம்.

"இயக்கங்கள் எதைச் செய்ய வேண்டுமென்பதை இயக்கத்தில் உள்ள உறுப்பினர்கள் நாம் தீர்மானிப்போம். ஈகோ நிறைந்த இயக்கத் தலைமைகளுக்கு ஒற்றுமைக்கான அழுத்தம் தருவோம்"
Quote | Report to administrator
மருதநாயகம்
+6 #2 மருதநாயகம் 2016-02-20 18:38
நல்லதொரு மாற்றம்.

இதுவரை எந்த அமைப்புகளுடன் இணைந்து செயல்பட முன்வராத டி என் டி ஜே அமைப்பும் இணைந்துகொண்டுள் ளது மிக நிச்சயமாக நல்லதொரு சிந்தனை மாற்றமே.

இது தமிழகம் முழுக்க மிகப் பெரும் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த தூண்டுகோலாக அமையட்டும்.
Quote | Report to administrator
Abdu
+3 #3 Abdu 2016-02-20 18:39
Much appreciated events masha Allah
Quote | Report to administrator
Mushtak Hanif
+3 #4 Mushtak Hanif 2016-02-20 21:15
Alhamdhulillah Allahu Akbar

Muslims have to unite and be united on General ssues with their differences being in different ideological Jamaath should not stop this.

Aameen
Quote | Report to administrator
Shahul hameed
0 #5 Shahul hameed 2016-02-21 00:00
Beyan
Quote | Report to administrator
சஃபி
+2 #6 சஃபி 2016-02-21 08:32
இந்நேரம்.காம் தளத்தில் திருவையில் நடந்த போராட்டத்தின் காணொளி இடம் பெற்றுள்ளது:
inneram.com/.../...
Quote | Report to administrator
Abu Saaliha
+6 #7 Abu Saaliha 2016-02-21 09:30
முஸ்லிம் நல கூட்டணி!

வெவ்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் - ஜாதி அமைப்புகள் எல்லாம் ஒரே அணியில் "மக்கள் நல கூட்டணி" என்ற பெயரில் ஒன்று பட்டுள்ளனர்.

ஆனால் "முஸ்லிம்" சிறைவாசிகளுக்கா ன போராட்டம், "முஸ்லிம்" களுக்கான இட ஒதுக்கீடு, "முஸ்லிம்"களின் பள்ளிவாசல் மீட்பு, போன்ற பல்வேறு போராட்டங்களை வெவ்வேறு நாட்களில் தனித்தனி பேனரில் நடத்தி "யாருக்கான" நலனை நாடுகிறீர்கள்?

கொள்கையே இல்லாதோர், கொள்கை வேறுபட்டோர், எல்லாம் ஒன்று சேர்ந்து அரசியலை நிர்ணயிக்கும் சக்தி பெற ஒன்றுபடும்போது...

ஒரே இறைவன் - இறுதிநபி முஹம்மத் (ஸல்) என்ற தெளிவான, உறுதியான கொள்கை கொண்ட முஸ்லிம்கள் தனித்தனியே பிரிந்து நின்று ஒரே கோரிக்கைக்காக போராடுவது அபத்தமாக படவில்லையா?

அவரவர் இருக்கும் இயக்கத்திலேயே நின்று, ஒரே குரலை உரக்க எழுப்ப, ஒரே குடையின் கீழ் ஒன்றிணையலாமே?

யார் பெரியவர்? யார் தலைமை தாங்குவது? என்ற ஈகோவை புறம் தள்ளி, ஏன் "முஸ்லிம் நலக் கூட்டணி" அமைக்க கூடாது?

மேலும் "முஸ்லிம்" களுக்கு நல்லது செய்யவே நாங்கள் அரசியலில் இறங்கினோம் என்று ஒற்றை கருத்தில் இருக்கும் பல்வேறு இயக்கங்கள் ஏன் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய முடியாது?

இதை நமது வலுவான கோரிக்கையாக நமது இயக்க தலைமைகள் முன்பு வைத்து நிர்ப்பந்திப்போம்.

நம் மனம் முதலில் சிந்திக்க மறுக்கும். ஏற்க மறுக்கும்.

உங்களை நீங்கள் வலுப்படுத்திக் கொள்ளுங்கள் என இறைவன் திருமறையில் கூறும் வழி இதுவே!
Quote | Report to administrator
Firdows
-1 #8 Firdows 2016-02-21 09:56
பல்லின சமூகத்தில் ஒரு சமூகத்தின் நலனுக்காக உழைத்தல் இனத்துவேச செயல் அல்லவா? அனைவருக்கும் அருளாக இருக்கவேண்டிய நாம் இவ்வாறு சிந்திப்பது அடிப்படையில் பொறுத்தமாதாக இல்லையல்லவா?
Quote | Report to administrator
அமீர் அலி.
+2 #9 அமீர் அலி. 2016-02-21 10:47
அல்ஹம்துலில்லாஹ ். ஒற்றுமை பரவட்டும்.
Quote | Report to administrator
மருதநாயகம்
+1 #10 மருதநாயகம் 2016-02-21 10:56
//பல்லின சமூகத்தில் ஒரு சமூகத்தின் நலனுக்காக உழைத்தல் இனத்துவேச செயல் அல்லவா?//

//அனைவருக்கும் அருளாக இருக்கவேண்டிய நாம் இவ்வாறு சிந்திப்பது அடிப்படையில் பொறுத்தமாதாக இல்லையல்லவா?//

* பொருத்தமில்லை

* இனத்துவேசம்

இரண்டுக்கும் ஏழாம் பொருத்தம். இரண்டில் ஏதாவது ஒரு நிலைப்பாட்டுக்க ு வாருங்கள். பேசுவோம்.
Quote | Report to administrator
Abuaakif
0 #11 Abuaakif 2016-02-21 11:21
Quoting Firdows:
பல்லின சமூகத்தில் ஒரு சமூகத்தின் நலனுக்காக உழைத்தல் இனத்துவேச செயல் அல்லவா? அனைவருக்கும் அருளாக இருக்கவேண்டிய நாம் இவ்வாறு சிந்திப்பது அடிப்படையில் பொறுத்தமாதாக இல்லையல்லவா?
தாங்கள் சொல்ல வருவதை சற்று தெளிவாக பதிவிடுங்கள்.
Quote | Report to administrator
சஃபி
+3 #12 சஃபி 2016-02-21 11:42
ஃபிர்தவ்ஸ் அண்ணே,

பல்லின தீவிரவாதி என்று உலகளாவிய அளவுல யாருமே இல்லீன்களே! இருக்கிறவன் எல்லாரும் "முஸ்லிம் தீவிரவாதி"யாகவு ம் சொல்லி வெச்சா மாதிரி முஸ்லிம் தீவிரவாதி எல்லாருமே படிச்ச / பட்டதாரி இளைஞர்களா இருக்கிறாங்களே!

ஊடகங்களும் உளவுத்துறையும் காவல்துறையும் நீதித்துறைதும் முஸ்லிம்கள் விசியத்துல ஒத்துமையா தீவிர நிலப்பாட்டுல இருக்கிறப்போ முஸ்லிம்கள் மட்டும் ஒத்துமையா இருக்கக் கூடாதுன்றீன்களா ?
Quote | Report to administrator
Firous
-1 #13 Firous 2016-02-21 13:07
பல்லின சமூகத்தில் ஒரு சமூகத்தின் நலனுக்காக உழைத்தல் இனத்துவேச செயல் அல்லவா? அனைவருக்கும் அருளாக இருக்கவேண்டிய நாம் இவ்வாறு சிந்திப்பது அடிப்படையில் பொறுத்தமாதாக இல்லையல்லவா?
Quote | Report to administrator
Firous
-1 #14 Firous 2016-02-21 13:08
உங்கள் மீது அவர்கள் செய்யும் அநீதிகள் அவர்கள் மீது நீங்கள் நீதியாக நடந்துகொள்வதனைத ் தடுக்காதிருக்கட ்டும் என்பது இஸ்லாம் கற்றுத்தருகின்ற உபதேசமல்லவா?

ஒற்றுமை உருவாவதற்கான அடிப்படையே மக்களின் தேவைகளை நிறைவுசெய்வதற்க ாக நாம் பங்களிப்புச்செய ்தல் அல்லவா? அவ்வாறில்லாமால் நாம் ஒன்றுபட்டுவிட்ட ோம் என்று குறிப்பிடுவதால் ஒற்றுமை ஏற்படவாய்பு உள்ளதாகக் கருதலாமா?
Quote | Report to administrator
Firous
-1 #15 Firous 2016-02-21 13:15
தீவிரவாதம் அல்லது தீவிரவாதி என்பது பிரச்சினையின் பக்கவிளைவேயன்றி அதுவே பிரச்சினைக்கான காரணமன்று.

பிரச்சினைக்கான காரணத்தை இணங்கானாது பிரச்சினையின் விளைவாக நாம் ஓரங்கட்டப்படுவத னை வைத்து தனித்து, தனிமைப்பட்டுப் போவதால் பிரச்சினை தீரப்போவதில்லை.
Quote | Report to administrator
Firous
-1 #16 Firous 2016-02-21 13:41
இத்தப் பதிவின் ஆரம்பத்தில் கட்டுரையாளர் பதிந்துள்ள பின்வரும் அல்குர்ஆன் வசனம் இங்கு தவறாக அர்த்ப்படுத்தப் படுகின்றதோ என்று அஞ்சுகின்றேன்.

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரையொருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும் மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள ்! (ஆல இம்ரான், வசனம் 200)

ஒரு நாட்டில் காவல் துறை, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதவனை விடவும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகமாக நடந்துகொள்ளும் போது இனமதபேதமின்றி அதனைக் கண்டிப்பதும் அதற்காகக் குரல்கொடுப்பதும ் அவசியமாகும். காவல் துறையினரின் இச்செயலைக் கண்டிப்பதும் அதற்காகக் குரல்கொடுப்பதில ும் ஏனைய மதச்சகோதரர்களுள ் அநேகரும் நிச்சயம் உடண்படுவார்கள் என்பதனை யாரும் மறுக்க மாட்டீர்கள்.

ஆக இப்பிரச்சினையை முஸ்லிம்களுக்கு எதிரான முஸ்லிமல்லாதவர் களால் கட்டமைக்கப்படுக ின்ற ஒரு பிரச்சினையாக சித்தரிப்பதனை விடவும் இவ்வாறான சட்டம் ஒழுங்குக்கு குந்தமான செயல்களைக் கண்டிக்கும் அனைவரையும் உள்வாங்கியதாக இப்பிரச்சினை அனுகப்படல் சாலச்சிறந்தாகும்.

அத்துடன் இங்கு குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனம் அப்போது வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் நீதியையும் சுந்திரத்தை உறுதிப்படுத்துவ தற்கான போராட்டத்தை எதிர்த்த அநீதியாளர்களை எதிர்கொண்ட தரப்பினருக்கான ஆறுதல்வார்தைகளே யன்றி அப்போதிருந்த முஸ்லிமல்லாதவர் களை அநீதியாளர்களாக சுட்டிக்காட்டி தம்மிடையே இணக்கப்பாட்டைக் கோறும் ஒரு வசனமன்று.
Quote | Report to administrator
suhail
+1 #17 suhail 2016-02-21 16:30
anyway muslims have united - coming together is a first step towards unity - if they come together can discuss & differences can go apart. Alhamdulillah This is good pls Bro firous don't discourage people by your theory-paper ideas. This is practical what had happened.
Quote | Report to administrator
சஃபி
+1 #18 சஃபி 2016-02-21 17:41
ஃபிர்தவ்ஸ் அண்ணே,
திருவிதாங்கோடு என்ற ஊர்ல பல குழுவினரா செயல்பட்டுக்கொண ்டிருக்கும் முஸ்லிம்கள், குறைந்த பட்ச திட்ட அடிப்படையிலே ஒன்னு சேர்ந்திருக்காங்க!

அதுல ஒங்களுக்கு என்னண்ணே பிரச்சினை?
Quote | Report to administrator
அபூ சுமையா
+1 #19 அபூ சுமையா 2016-02-21 18:29
//அத்துடன் இங்கு குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனம் அப்போது வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் நீதியையும் சுந்திரத்தை உறுதிப்படுத்துவ தற்கான போராட்டத்தை எதிர்த்த அநீதியாளர்களை எதிர்கொண்ட தரப்பினருக்கான ஆறுதல்வார்தைகளே யன்றி//

சகோ. இக்கட்டுரை நீங்கள் கூறவரும் இக்கருத்துக்கு எதிராக இல்லை.

வசனத்தின் துவக்கத்தில் அமைந்திருக்கும் "முஃமின்களே" என்ற அழைப்பைக் கவனியுங்கள்.

அங்கு அநீதம் இழைக்கப்பட்டவர் களிடம் நீங்கள் பொறுமையாக இருங்கள், ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொ ள்ளுங்கள் என இறைவன் உபதேசம் செய்கிறான். அந்த உபதேசத்தையே இங்கும் கடைபிடிக்க வலியுறுத்தப்பட் டுள்ளது.

// அப்போதிருந்த முஸ்லிமல்லாதவர் களை அநீதியாளர்களாக சுட்டிக்காட்டி தம்மிடையே இணக்கப்பாட்டைக் கோறும் ஒரு வசனமன்று.//

அப்படியாக இப்பதிவில் எங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது?

முஸ்லிமல்லாதவர்கள் எல்லோருமே அநீதியாளர்கள் என்ற கருத்து இங்கு எவருக்குமே இல்லை. இல்லாத கருத்தை நீங்களாகவே அர்த்தப்படுத்திக்கொள்கிறீர்கள்.

* எல்லோருடைய நீதிக்காக போராட வேண்டிய சமூகம், சின்னா பின்னமாக சிதறிக்கிடக்கிற து.

* பிளவுண்டிருக்கு ம் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேலும் மேலும் சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதோ டு, நாளைய சமுதாயத்துக்கான இளைய தலைமுறை தலையெடுக்கவே செய்ய இயலாதவாறு பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்படு கிறது - இதனைச் செய்வது முஸ்லிமல்லாத எல்லோரும் என்றோ, உளவுத்துறை/காவல ்துறை ஒட்டுமொத்தமாக என்றோ கூறவில்லை. அங்குள்ள கறுப்பு ஆடுகள் எனத் தெளிவாகவே கூறப்படுள்ளது.

* அநீதம் இழைக்கப்பட்ட எல்லோருடைய நீதிக்காகவும் போராட வேண்டிய சமூகம் சின்னாபின்னமாக கிடக்கும் நிலையில், தம் இலட்சியத்தைச் செய்வதற்கு மிகக் குறைந்தப்பட்சமா க தம் பிரச்சனைக்காகவா வது குறைந்தப்பட்ச திட்ட அடிப்படையில் ஒருவரையொருவர் பலப்படுத்த முன்வந்தது நல்லதொரு மாற்றம், இம்மாற்றத்திற்க ுரிய சிந்தனையில் முதலில் எல்லோரும் ஒன்றுபடட்டும் என்ற எண்ணத்தில் அதனை ஊக்குவிப்பதே இப்பதிவின் நோக்கம்.

அதனை முஸ்லிமல்லாத எல்லோருக்கும் எதிரான இனவாத சிந்தனையாக எடுத்துக்கொள்வத ு புரிதல் பிரச்சனை.
Quote | Report to administrator
அபூ சுமையா
+1 #20 அபூ சுமையா 2016-02-21 18:31
//coming together is a first step towards unity - if they come together can discuss & differences can go apart.//

அல்ஹம்துலில்லாஹ். பதிவின் நோக்கத்தைச் சரியாக புரிந்துள்ளீர்க ள். ஜஸாக்கல்லாஹ் சகோ
Quote | Report to administrator
அபூ சுமையா
+2 #21 அபூ சுமையா 2016-02-21 18:36
//பிரச்சினைக்கா ன காரணத்தை இணங்கானாது பிரச்சினையின் விளைவாக நாம் ஓரங்கட்டப்படுவத னை வைத்து தனித்து, தனிமைப்பட்டுப் போவதால் பிரச்சினை தீரப்போவதில்லை.//

தங்களுக்குள் யார் பெரியவன், யாருக்குக் கூடுதல் தொண்டர்கள் உள்ளனர், யாருக்குக் கூடுதல் ஆதரவு உள்ளது, யார் சரியான கொள்கையில் இருக்கிறார், உள்ளூர் ஜமாத், வெளியூர் ஜமாத் என ஆயிரத்தெட்டு விசயங்களை முன்னிறுத்தி பல கூறுகளாக சின்னா பின்னமாக கிடப்பவர்கள் அட்லீஸ்ட் தம்முடைய பிரச்சனைக்காகவா வது சேர்ந்து போராடும் சிந்தனைக்கு முதலில் வரட்டும். என்றால் அல்லவா யதார்த்த பிரச்சனை என்ன என்பது குறித்த ஆய்வுக்கு அவர்களைக் கொண்டு செல்ல முடியும்?

இருட்டினுள் கிடப்பவன் முதலில் வெளிச்சத்துக்கு வரட்டும். பின்னர் தாமாகவே வெளிச்சம் வரும் திசையினை அடையாளம் காண்பான். இருட்டினுள்ளேயே முடங்கிக்கிடப்ப வனிடம் போய், வெளிச்சம் எங்கிருக்கிறது தெரியுமா என ஆய்வு செய்யச் சொன்னால் எப்படியிருக்கும ்?
Quote | Report to administrator
Furous
-2 #22 Furous 2016-02-21 19:52
குறித்த நிகழ்வை நான் மட்டம் தட்டி எழுதவில்லை. மாற்றாமக் மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே வேலியை மேயும் பொழுது எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பொதுவான முன்மாதிரிகள் அவசியமல்லவா? காவல் துறையினருள் விதிவிலக்காக ஒரு சிலர் தமக்கு விருப்பிமில்லாத அல்லது தான் சாரந்தவர்களுடன் பிரச்சினைப்படுவ வர்கள் என்று கருதுவோரை இவ்வாறு நிகழத்துவது அவ்வப்போது பல இடங்களிலும் நாம் கேற்கின்ற விடயங்கள் அல்லவா?

இதனை எதிர்கொள்வதற்கா ன ஒரு பொது முன்மாதிரியாக நாம் செயற்பட முனையவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் முன்மாதிரி சமூகமாக நாம் ஏனைய சகோதரர்களுக்கும ் இருப்பதனை உறுதிப்படுத்தும ் விதத்தில் எமது எழுத்தும் போக்கும் அமைதல் சிறப்பா இருக்கும் அல்லவா?

இந்த நிகழ்வை மெச்சக்கூடிய விதத்தில் நிறையக் குர்ஆன் வசனங்கள் இங்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம். நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் சமூகமாக நீங்கள் இருங்கள், நீதிக்காக நிற்பதன் மூலம் வெகுமதிகளுக்குச ் சொந்தக்காரர்களா க இருங்கள்... போன்ற பல உபதேசங்களை இங்கு முன்வைக்கலாம்.

அதற்கும் மேலால் இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டத்திற ்கு பொதுவாக ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கும் விதத்தில் எமது நடைமுறையை மாற்றியமைப்பதும ் இந்ந நாட்டில் மக்களின் பாதுகாப்பு, கண்ணியம், சட்டம் ஒழுங்கு என்பன சிதைக்கப்படுதல் அனைத்து மக்களதும் பொதுபிரச்சினை என்ற விதத்திலான கருத்துருவாக்கல ் அனுகுமுறை மூலம்தான் இத்தகைய பிரச்சினைளுக்கா ன தீர்வை அனைத்து மக்களுக்கும் துரிதமாகப் பெறுவதற்கான ஒரு முன்மாதிரியாக இருந்து காட்டலாம். இவ்வாறான ஒரு பொதுப்பிரச்சினை யை ஒரு சிறுபான்மைக்கான தனியான பிரச்சினையாகவும ் இப்போராட்டம் சிறுபான்மை சமூகத்தின் வெற்றியாகவும் முன்வைக்கும் போது மறுபக்கத்தில் அதனை பெரும்பான்மை சமூகத்தின் தோல்வியாகக் கருதுவதற்கு இடம்பாடாகமல் பார்த்துக்கொள்வ து அவசியமாகும்.
Quote | Report to administrator
Firous
-1 #23 Firous 2016-02-21 20:24
இந்நிகழ்வு பாராட்டத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. கட்டுரையாசிரியர ின் இக்கட்டுரை எதிர்பார்ப்பதும ் இத்தகைய நற்செயல்களைத்தா ன் என்பதில் மாற்றுக்கருத்தி ல்லை.

இதனைவிடவும் அதிகம் செய்வதற்கும் பல்லின சமூகமாக வாழும் இந்நாட்டில் நமது எழுத்து மூலம் இதுபோன்று அனைத்து சமூகங்களும் ஒன்று சேர்ந்து எங்கெல்லாம் அநீதி இடம்பெறுகின்றதோ அதெற்கெதிராகக் குரல்கொடுப்போம் .
Quote | Report to administrator
அபூ சுமையா
+2 #24 அபூ சுமையா 2016-02-21 20:39
பாடசாலை என்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பவனிடம் சென்று பி ஹெச் டி குறித்து பேசலாம். செயலுக்கு வரும்போது படிப்படியாகத்தா ன் அவன் வந்தாக வேண்டும். தம் பிரச்சனை என்னவென்றே தெரியாமல் இருப்பவனைப் பொதுப்பிரச்சனைக ்காக இறங்க வைக்க வேண்டும். கூடுதலாக ஒத்தக்கருத்துடை யவர்களை ஒன்றிணைக்க வேண்டும். நீண்ட ப்ராஸஸ். இதற்காக முயற்சி நடக்காமல் இல்லை. அது நடக்கும்வரை சொந்த வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
Quote | Report to administrator
S. Basha
+1 #25 S. Basha 2016-02-22 11:20
brother Firous is confusing and diverting the whole scenes with a specific manners, he want to fight for the whole oppressed and whole worlds, (that we know) now only we started to unite, which means started LKG, but brother Firous want to read IIT syllabus immediately.... ...
Quote | Report to administrator
S. Basha
+2 #26 S. Basha 2016-02-22 13:22
Firous wants to make confuse the whole scenes same like what RSS & BJP doing - FIRST THEY WILL DIVERTS US FROM THE MAINSTREAM. We do not need your clever plans for 1000 years, we need now breads for the Hungry Muslims.

Firous you dream as you like but dont divert the scene with your brilliancy????
Quote | Report to administrator
Mushtak Hanif
0 #27 Mushtak Hanif 2016-02-25 12:03
Assalamu Alaikum
Brother Firdous

It's not important what we think is correct or not...
Of course we need to think correctly ....but to achieve it we have to be flexible and practical without leaving to practice preach and sinserely implementing than being rigid and setting bad shape of Islam at the cost of disunity on common issues...
Coming together on common issues will lead way to the real unity we desire though not 100%...and immediately but be effective enough to face the challenges against our Ummah being plotted on daily basis..
In Sha Allah ...
Quote | Report to administrator
கனி
+1 #28 கனி 2016-03-15 20:50
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
திருவிதாங்கோடு முஸ்லிம்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லுதவி செய்வானாக.

தமிழகத்தில் செயல்படும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து ஒரே குடையின் கீழ் தேர்தலில் நிற்க வேண்டிய நேரம் இதுவாகும்.

ஆனால் இரண்டு பெரிய கட்சிகளுடன் பல இயக்கங்கள் ஆதரவுக்காக காத்துக்கொண்டு இருப்பதைப் பார்க்கும் பொழுது எப்பொழுது திருந்துவார்கள் இந்த இயக்கத் தலைவர்கள் என்றே தோன்றுகிறது.

தமிழகத்தின் திருவிதாங்கோடு முஸ்லிம்களின் முயற்சி அனைத்து ஊர்களிலும் பரவட்டும். இணைந்து செயல்படுவோம். வல்ல அல்லாஹ் உதவி செய்வான். ஆமீன்
Quote | Report to administrator
MOHAMED YOOSUF
0 #29 MOHAMED YOOSUF 2016-04-23 19:36
Quoting Firdows:
பல்லின சமூகத்தில் ஒரு சமூகத்தின் நலனுக்காக உழைத்தல் இனத்துவேச செயல் அல்லவா? அனைவருக்கும் அருளாக இருக்கவேண்டிய நாம் இவ்வாறு சிந்திப்பது அடிப்படையில் பொறுத்தமாதாக இல்லையல்லவா?
பல்லியின சமூகத்தில் இது பொறுத்தமில்லைதா ன் பொதுசன பிரேமியே... வாள்க உங்கள் பொதுநல நன்னோக்கு
Quote | Report to administrator
MOHAMED YOOSUF
0 #30 MOHAMED YOOSUF 2016-04-23 19:43
Quoting Firous:
உங்கள் மீது அவர்கள் செய்யும் அநீதிகள் அவர்கள் மீது நீங்கள் நீதியாக நடந்துகொள்வதனைத் தடுக்காதிருக்கட்டும் என்பது இஸ்லாம் கற்றுத்தருகின்ற உபதேசமல்லவா? (எங்களுக்கு அநீதி இழைக்காதீர்கள் என்று சொல்வது அல்லது போராடுவது அநீதியா மிஸ்டர் ஃபிர்தௌஸ்வாள்?)

ஒற்றுமை உருவாவதற்கான அடிப்படையே மக்களின் தேவைகளை நிறைவுசெய்வதற்காக நாம் பங்களிப்புச்செய்தல் அல்லவா? அவ்வாறில்லாமால் நாம் ஒன்றுபட்டுவிட்டோம் என்று குறிப்பிடுவதால் ஒற்றுமை ஏற்படவாய்பு உள்ளதாகக் கருதலாமா? இயலாது
ஒன்று பட்டு விடக்கூடாது என்பது உங்கள் விருப்பமா அல்லது ஒன்றுபடவே இயலாது என்று முடிவே செய்து விட்டீர்களா? புகைப்படம் போலியா?
Quote | Report to administrator
அபு பக்கர்
0 #31 அபு பக்கர் 2017-04-12 18:48
// காவல்துறை மற்றும் உளவுத்துறையால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்மீது புனையப்படும் பொய் வழக்குகள். //
-------------------

ஜாகிர் நாயக் சாஹிபின் இஸ்லாமிய பிரச்சாரத்தல் ஈர்க்கப்பட்டு, லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட ஹிந்துக்கள் அலைஅலையாக இஸ்லாம் நோக்கி வர ஆரம்பித்துவிட்ட னர். “இந்த ஆளை இப்படியே விட்டால், சில வருடங்களில் இந்தியா இஸ்லாமிஸ்தானாகி விடும். ஹிந்து மதம் அழிந்துவிடும். இதனை தடுத்து நிறுத்த ஒரே வழி ஜாகிர் நாயக்கை கொல்வதே” என பார்ப்பன தீவீரவாதிகள் முடிவு செய்துவிட்டனர். ஆகையால்தான் அவர் மீது பொய் வழக்குகள் புனைந்து நாட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.

1400 வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை எடுத்து சொன்னதால், பெருமானாரை(ஸல்) மெக்கா பார்ப்பனர் கொல்ல முடிவு செய்தனர். உயிரைக்காப்பாற் ற மெக்காவிலிருந்த ு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார். அதன் பிறகு ஏழே வருடங்களில் ஒட்டு மொத்த அரேபியாவும் இஸ்லாத்தை தழுவியது.

இஸ்லாமிய சரித்திரத்தில் இந்த ஹிஜ்ரத் நிகழ்ச்சிதான் முக்கியமான திருப்பு முனை என அறிஞர்கள் முடிவு செய்து, இஸ்லாமிய காலண்டருக்கு ஹிஜ்ரி என பெயர் வைத்தனர். இன்ஷா அல்லாஹ், சரித்திரம் திரும்பும்.
Quote | Report to administrator
பாமரன்
0 #32 பாமரன் 2017-04-12 23:19
பல்லினம்னா...? இது எந்த மொழி பிர்தவ்ஸ்? மொழியை ரொம்பத் திருகி எழுதுனா மட்டும் அறிவுஜீவி ஆயிட முடியாதுங்குறதை முதல்ல புரிஞ்சுக்குங்க ஃபிர்தவ்ஸ். நீங்க ஃபிர்தவ்ஸ்தானாங ்குறது வேற விஷயம் ஃபிர்தவ்ஸ். திருவிதாங்கோட்ட ுல அப்பாவி இளைஞர்களைப் பிடித்து, சித்திரவதை செய்துட்டு நீங்க நிரபராதின்னு விட்டுடுறாங்க. அந்த இளைஞர்களோட படிப்பு என்னாகும்? அவனை நம்பி இருக்குற அந்தக் குடும்பம் என்னாகும்? இதையெல்லாம் யோசிச்சு அவுங்க ஒண்ணா சேர்ந்துருக்காங ்க. இதில உங்க ”பல்லின” சிந்தனை மூலம் குறிப்பா ஒரு தீர்வைச் சொன்னீங்கன்னா அதைப் பற்றியும் யோசிக்கலாம். சொல்வீங்களா ”பல்லின” சகோ?
Quote | Report to administrator
அப்பாவி
0 #33 அப்பாவி 2017-04-13 11:22
// உங்க ”பல்லின” சிந்தனை மூலம் குறிப்பா ஒரு தீர்வைச் சொன்னீங்கன்னா அதைப் பற்றியும் யோசிக்கலாம். சொல்வீங்களா ”பல்லின” சகோ? //
----------------

சமீபத்தில் ஸ்ரீமான் தருண் விஜய் திருவாய் மலர்ந்தது போல் “கருப்பர் வெள்ளையர், ஆரியர் திராவிடர், பார்ப்பனர் தேவர், செட்டியார் கள்ளர், கவுண்டர் பள்ளர், பறையர் நாடார், வன்னியர் தலித்” போன்ற பல இனத்தவரும், நிறத்தவரும், ஜாதிகளும், மாமன் மச்சானாக அண்ணன் தம்பியாக தந்தையும் தாயுமாக “ஜாதிகள் இல்லையடி பாப்பா" என ஆனந்தபள்ளு பாடி கொஞ்சிக்குலாவி சமநீதி சமத்துவத்துடன் வாழும் எங்கள் தூய ஹிந்து ராஷ்டிரத்தில், இஸ்லாமியர்-காபி ர் என சமுதாயத்தை இரண்டு துண்டாக திருக்குரான் உடைப்பது நியாயமா என கேட்கிறார்.
Quote | Report to administrator
பாமரன்
0 #34 பாமரன் 2017-04-13 14:38
“ஜாதிகள் இல்லையடி பாப்பா" என ஆனந்தபள்ளு பாடி கொஞ்சிக்குலாவி சமநீதி சமத்துவத்துடன் வாழும் எங்கள் தூய ஹிந்து ராஷ்டிரத்தில், இஸ்லாமியர்-காபி ர் என சமுதாயத்தை இரண்டு துண்டாக திருக்குரான் உடைப்பது நியாயமா என கேட்கிறார். (ஓ… குறிப்பான தீர்வுங்குறது இதுதானா? அது சரி, எங்க இந்து ராஷ்ட்ரம்னா? யார் அந்த “எங்க?” அப்பாவி இளைஞர்களை போலீஸ் பிடிக்கிறதை தடுக்குறதுக்கு ஊர் மக்கள் ஒண்ணா சேர்ந்தா, “பல்லின”த்துக்க ு என்ன இடையூறு?) மாமன் மச்சானாக அண்ணன் தம்பியாக தந்தையும் தாயுமாக ஆனந்தபள்ளு பாடி (நிரபராதி இளைஞர்களை போலீஸ் பிடிக்கிறது தவறுன்னு சொன்னா மாமன் மச்சான் அண்ணன் தம்பி தந்தை தாய் உறவு இல்லேன்னு ஆகி ஆனந்தப் பள்ளுக்குப் பாதகம் நிகழ்ந்துடுமா?)
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்