முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தமிழக செய்திகள்

மாற்று ஊடகத்திற்கான முயற்சியில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகப் பேரவை மற்றும் இந்நேரம்.காம் தயாரித்திருக்கும் "ஈரம்" ஆவணப்படத்திற்கான டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான ஆவணப்படம் இம்மாதத்திற்குள் வெளியாக உள்ளது.

மக்கள் மனதை வென்ற ஈரம் - டிரைலர்!

வெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது.

யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என எந்தப் பாகுபாடும் இன்றி கண்முன் கண்ட உயிர்களுக்காக தலைக்கு மேலே ஓடிய வெள்ளத்திலும் தம் உயிரைத் துச்சமாக எண்ணி களமிறங்கி பணியாற்றியவர்களின் தியாகங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை.

எங்களின் மன ஈரத்தின் முன்னிலையில் நிலத்தில் இறங்கிய வெள்ளத்தின் ஈரம் எதுவுமே இல்லை எனத் தெளிவித்த நல்உள்ளங்களுக்காக "ஈரம்" என்ற தலைப்பிலேயே தமிழ் ஊடகப் பேரவை(Tamil Media Forum) மற்றும் இந்நேரம்.காம்(www.inneram.com) இணைந்து சென்னை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்த ஆவணப்படம் தயார் செய்துள்ளது. அதன் டிரைலர் இங்கே... முழு ஆவணப்படம் விரைவில்!

தொடர்புடைய செய்திக்கு: http://inneram.com/videos/6220-eeram-documentary-teaser.html

தமிழ் ஊடகப் பேரவையின் பக்கம்: https://www.facebook.com/tamilmediaforum/photos/a.896569203727626.1073741828.896238070427406/1030163397034872/?type=3

Comments   

Abu Muhai
+1 #1 Abu Muhai 2016-01-03 08:10
மழை விழுந்தது மனிதம் எழுந்தது!
Quote | Report to administrator
mandapam Aliakbar
+1 #2 mandapam Aliakbar 2016-01-03 10:33
பொது சமுகத்தில் இஸ்லாமியர்கள் முன்மாதிரி யாக யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என எந்தப் பாகுபாடும் இன்றி கண்முன் கண்ட உயிர்களுக்காக களமிறங்கி பணியாற்றியவர்கள ின் தியாகங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை.குறிப ்பாக உயிர்தியாகம் செய்த இளவல் இம்ரானின் இழப்பு கல் நெஞ்சையும் கரைய வைக்கும் நிகழ்வு
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்