முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தமிழக செய்திகள்

நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (45). இவர் குமரி மாவட்ட பா.ஜ. வர்த்தக அணியின் முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு சொந்தமான தோட்டம் வள்ளியூர் அருகே உள்ள மடப்புரத்தில் உள்ளது.

இவர் கடந்த புதன்கிழமை மாலை தனது காரில் தோட்டத்திற்கு சென்று விட்டு, நாகர்கோவில் வந்து கொண்டிருந்தார். மடப்புரம் விலக்கில் வரும் போது பைக்கில் வந்த 2 பேர் காரை வழி மறித்து தன்னை வெட்டியதாக அவர் புகார் தெரிவித்தார். சிகிச்சைக்காகவும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார்.

தினகரன் (ஜனவரி 5, 2014)

இது குறித்து தகவல் அறிந்ததும் பா.ஜ. நிர்வாகிகள் மற்றும் வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மருத்துவமனையிலும் வந்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக ஜெயச்சந்திரனின் டிரைவரிடம் விசாரணை நடந்தது. தொடக்கத்தில் இருந்தே அவர் முன்னுக்கு பின் சில தகவல்களை கூறினார். எனவே போலீஸ் தரப்பில் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், போலீஸ் பாதுகாப்புக்கு ஆசைப்பட்டு ஜெயசந்திரன் நடத்திய நாடகமே இந்த கொலை முயற்சி என்பது தெரிய வந்துள்ளது. டிரைவரிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் ஜெயசந்திரன் பிளேடு வாங்கிய கடை, சம்பவம் நடந்த இடம் உள்ளிட்டவையும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி, ஜெயச்சந்திரன் தரப்பில் டிஜிபி உள்ளிட்டவர்களுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்காதல், கந்து வட்டி, தொழில் போட்டி, முன் விரோதம், குடும்பத் தகராறு ஆகிய காரணங்களால் கொல்லப்படும் பாஜக தலைவர்களை வைத்து மத வெறி வியாபாரம் செய்ய முனையும் ஹிந்துத்துவாவின் ஊதுகுழலாக செயல்படும் தினமலர், இவர்கள் அனைவரும் குறி வைத்து கொல்லப்படுவதாக செய்தியைப் பொய்யாக எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய முந்தைய செய்திகள்:

போலீஸ் பாதுகாப்புக்காக தன்னைத் தானே கத்தியால் குத்தி நாடகமாடிய பா.ஜனதா பிரமுகர்

விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!

பா.ஜ.க வேட்பாளர் கடத்தப்பட்டதாக பொய் தகவல்!

பா.ஜனதா நிர்வாகி மர்மச்சாவு: கள்ளக் காதலியிடம் போலீசார் விசாரணை

''ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!'' - விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்!

பா.ஜ.க., பிரமுகர் கொலையில், மூன்று இந்துக்கள் கைது (தினமலர்)

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!

பாஜக டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை - ரவுடி வசூர் ராஜா கைது

Comments   

மனோகரன்
0 #1 மனோகரன் 2015-02-25 17:51
நல்லவேளை! போலீஸார் இதை கண்டு பிடித்ததால் பாஜகவின் மற்றொரு நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது.

இல்லா விட்டால், தமிழ்நாட்டில் உள்ள பலிகடா முசுலிம்களின் கதி? அதோ கதி!
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்