முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தமிழக செய்திகள்

அல்ஹம்து லில்லாஹ்!

சகோ. நூருத்தீன் அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் எழுதிய 'தோழியர்' தொடர், நூல் வடிவம் பெற்றுக் கடந்த 22.8.2014இல் சென்னை எழும்பூரிலுள்ள ஃபாயிஸ் மஹாலில் அதன் வெளியீட்டு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சென்னை ஐமேக்ஸ் பள்ளி மாணவர் முஹாஜிருல் இஸ்லாம், தம் இனிமையான குரலில் இறைமறை வசனங்களை ஓதி மாலை 7.15க்கு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

 

சென்னை மாங்காடு, பெண்கள் நல அறக்கட்டளையின் தலைவி டாக்டர் ஆயிஷா அப்துல் ஹமீது அவர்களின் தலைமையில் தொடங்கிய நிகழ்ச்சியில் முதலாவதாக, சத்தியமார்க்கம்.காம் நிறுவனர்களுள் ஒருவரான சகோ. முஹம்மது ரஃபீக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அடுத்து, அம்மாபட்டினம் அன்னை கதீஜா மளிர் கல்லூரியின் தாளாளர் பேரா. சயீதா பானு M.A., B.Ed அவர்கள் 'தோழியர்' நூலில் தம்மை ஈர்த்த சில வரலாற்று நிகழ்ச்சிகளை எடுத்துரைத்தார்.

இரண்டாவதாக, 'தோழியர்' பற்றிய கவிதையொன்றை சத்தியமார்க்கம்.காம் உறுப்பினரும் கவிஞருமான சகோ. சபீர் அவர்கள் வாசித்தார்.

தோழியர்

புதினத்தின் சுவையில்
போதனைகள்;
புனைவுகளற்ற
புனிதவதிகளின்
வரலாற்றுப் பக்கங்கள்!

சோதனை காலத்தின்
சுவடுகள்;
வலி நிறைந்த
வழித் தடத்தின்
பயணக் குறிப்புகள்!

உயிர்த் தியாகம்
உடல் வருத்தம்
உளத் தூய்மை என
உன்னதத் தோழியரின்
மொத்த அர்ப்பணிப்பைச் சொல்லும்
புத்தகம்!

போர்முனைக்கும்
புலம்பெயர்ந்து போதிக்கவும்
தோழர்கள்;
பின்புலமாய்
பெரும் துணையாய்
ஊழியராய்
தோழியர்!

ஆண் எழுத்தாளரின்
ஆதிக்கத்தில்
பெண்களுக்கான வக்காலத்து!

சஹாபியப் பெண்களின்
இறையச்சம் மெச்சி
சமகாலப் பெண்டிருக்கு
வகுப்பெடுக்கிறார் ஆசிரியர்!

தோழர்களுக்குச்
சளைத்தவர்கள் அல்லர்
தோழியர் -
நூலிலும் நூருத்தீனிலும்!

- சபீர்

 மூன்றாவதாகப் பேச வந்த, மனித உரிமைகளுக்கான மக்கள் கழக நிறுவத் தலைவர் பேரா. அ. மார்க்ஸ் அவர்கள், தாம் ஆய்ந்தளித்த மதிப்புரையில் இடம் பெற்ற தோழியர் குறித்து விளக்கவுரையாற்றினார்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நிறுவனர்களுள் ஒருவரும் தள நிர்வாகியுமான சகோ. முஹம்மது சர்தார் முதல் பிரதியைப் பன்னூலாசிரியர் அதிரை அஹ்மது அவர்களுக்கு வழங்கினார்.

இரண்டாவது பிரதியை சத்தியமார்க்கம்.காம் தள நிறுவனர்களுள் ஒருவரும் கணினி வல்லுநருமான சகோ. முஹம்மது ரஃபீக் அவர்கள் வழங்க, பெண்கள் நல அறக்கட்டளையின் தலைவி டாக்டர் ஆயிஷா அப்துல் ஹமீது பெற்றுக்கொண்டார்.

மூன்றாவது பிரதியை சத்தியமார்க்கம்.காம் தள ஆசிரியர் சகோ. ஜமீல் வழங்க, அன்று மாலை நூலாசிரியர் நூருத்தீனின் மகள் வஸீலாவை மணந்த புது மணமகன் முஹம்மத் ஹாரூன் பெற்றுக்கொண்டார்.

நான்காவது பிரதியை சகோ. முஹம்மது சர்தார் வழங்க, அன்னை கதீஜா மகளிர் கல்லூரித் தாளாளர் பேரா. சயீதா பானு M.A., B.Ed. அவர்கள் பெற்றுக்கொண்டார்.

ஐந்தாவது பிரதியைப் பேரா. அ.மார்க்ஸ் அவர்கள் ஊடகவியலாளர் சகோ. ஆளூர் ஷா நவாஸ் அவர்களுக்கு வழங்கினார்.

இறுதியாக, நூலாசிரியர் நூருத்தீன் அவர்களின் சுருக்கமான ஏற்புரையை அடுத்து அமர்வுப் பிரார்த்தனையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை க்ராஃபிக் பார்க் நிறுவனர் சகோ. முஹம்மது ஸாதிக்கும் 'டீக்கடை குழும' உறுப்பினர்களுள் சிலரும்  மிகச் சிறப்பாகச் செய்தனர்.

சத்தியமார்க்கம்.காம் தள ஆசிரியர் ஜமீல் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியிலும் விருந்திலும் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னையிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஆண்களும் பெண்களும் குடும்ப சகிதம் நிகழ்ச்சிக்குத் திரளாக வருகை தந்து கண்ணியப்படுத்தினர்.

அல்ஹம்து லில்லாஹ்!

oOo

தோழியர் நூல் கிடைக்குமிடங்கள்:

Shajidha Book Center
248 Thambu Chetty Street,
Mannady, Chennai - 600 001
Tel : +91 44-25224821
Mobile : +91 9840977758

Aysha Publications
78 Big Street
Triplicane, Chennai - 600 005
Tel : 91 44-43568745

Salamath Pathippagam
95, Linghi Chetty Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25211981; 42167320

Basharath Publishers
83, Angappa Naicken Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25225028
Mobile : +91-9444240535

Darussalam India
324, Triplicane High Road
Triplicane, Chennai - 600 005
Tel : +91-44-45566249
Mobile : +91-9176022299/+91-9884112041

 

தமிழகம்
ஜமீல் முஹம்மது ஸாலிஹ்
Mobile : +91 9043727525

அமீரகம்
அப்துர் ரஹீம்
Mobile : +971 556164540

Comments   

M Muhammad
+1 #1 M Muhammad 2014-08-28 01:08
ALHAMDULILLAH

TAQABBALALLAH MINNA WA MINKUM
Quote | Report to administrator
சஃபி
0 #2 சஃபி 2014-08-28 07:44
மாஷா அல்லாஹ்.

நூலாசிரியருக்கும் சத்திய மார்க்கம் குழுவினருக்கும் வாழ்த்துகள்!
Quote | Report to administrator
Mandapam Aliakbar
0 #3 Mandapam Aliakbar 2014-08-28 11:27
சஹாபியப் பெண்களின்
இறையச்சம் மெச்சி
சமகாலப் பெண்டிருக்கு
வகுப்பெடுக்கிறார் ஆசிரியர்!

தோழர்களுக்குச்
சளைத்தவர்கள் அல்லர்
தோழியர்
Quote | Report to administrator
டாக்டர் யூசுப் ஆதம்
0 #4 டாக்டர் யூசுப் ஆதம் 2014-08-28 12:29
மாஷா அல்லாஹ், மிக அழகிய முறையில் தோழியர் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைப் பெற்றது.

சஹாபி பெண்களை பற்றி ஆசிரியர் நூருதீன் அழகிய முறையில் நல்ல உரைநடையில் வழங்கி உள்ளார். எல்லாரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்
Quote | Report to administrator
முகம்மது அலி ஜின்னா
0 #5 முகம்மது அலி ஜின்னா 2014-08-28 13:50
அஸ்ஸலாமு அலைக்கும்.
தோழியர் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருவதற்கு மிகவும் ஆர்வமாய் இருந்தேன்
அந்தக் குறையை இக கட்டுரை ஓரளவு மன நிறைவைக் கொடுத்தது
அனைவரையும் பார்த்து இருக்கலாம்
வஸ்ஸலாம்
Quote | Report to administrator
Ebrahim Ansari
0 #6 Ebrahim Ansari 2014-08-29 06:49
அழைப்பு வந்திருந்தால் கலந்து கொண்டிருக்கலாமே என்று ஏங்க வைத்துள்ள நிகழ்ச்சி.

அருமையான தொகுப்பு. சிறப்பான தம்பி சபீரின் கவிதை வரிகள்.
Quote | Report to administrator
syed
0 #7 syed 2014-08-31 11:17
Asslamu alaikum

This is not criticism. If you could mind these things that would be better. First of all, the time management is not observed properly.

Second the event is not controlled proper. The children were running here and there. No one is paying any notice to the speech of Mr. Marx. He is delivering a good speech about empowering muslim women. OK. He is a non muslim and communist. But he is one of the person who is having a soft corner about muslims.

Even the elders present there were also chatting with each other. The meal is served in between the speech without any anouncement and some went to eat there. Many or atleast some outsiders came and ate. Ok That's not a big deal. But I hope a good amount is spent on meal and the hall. The biriyani in my opinion no need at all. A cup of tea with some biscuits is enough.

Well, I wasted much of my time over there. I took permission in my office and I came there. I disappointed. In the site it was said the program is starting at 6:00 pm and I arrived before that.

Apart from all these the author's book is good and worth read.
Assalamu alaikum.
Syed
Quote | Report to administrator
அப்துல் காதிர்
0 #8 அப்துல் காதிர் 2014-09-01 12:20
அல்ஹம்துலில்லாஹ்!
தோழியர் கட்டுரையை அது வெளியிடும்போது தவறாமல் படிப்பதுண்டு, அது புத்தகமாக வந்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இன்னும் பல பயனுள்ள தகவல்களை சகோதரர் நூர்தீன் தருவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக!
Quote | Report to administrator
அபூ ஹுதைபா
0 #9 அபூ ஹுதைபா 2014-09-02 01:37
//தாம்பத்யம், இல்லறம், மரணம் என்பதன் இலக்கணமெல்லாம் வேறாக வாழ்ந்து கொண்டிருந்த சமூகம் அது//

//ஆணோ, பெண்ணோ ஈமானிய வலுவில் பால் வேற்றுமையின்றி வாழ்ந்திருக்கிற ார்கள் அவர்கள்//

//இறைவனுக்காகவும் அவன் தூதருக்காகவும் தம் உடல், பொருள், உயிர், என்பதெல்லாம் மட்டுமல்லாமல் தம் பிள்ளைகளையும் அணிவகுத்து அனுப்பி மகிழ்ந்திருக்கி றார்கள் அந்த அன்னையர். பிள்ளைகளின் மனத்திலும் உடலிலும் வீரத்தைப் பூசிப்பூசி உரமேற்றியிருக்கிறார்கள்//

//ஆண்கள் களத்திற்கு ஓடிவருவது இருக்கட்டும். ஒரு பெண் தாம் அல்லாஹ்வுக்காக உயிர்துறப்பதை ஏதோ பந்தயத்தில் முதல் பரிசு கிடைப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என்பதுபோல் வந்து சொல்கிறார் என்றால், அதற்கு ஆழ் மனத்தில் தைரியம் அப்பியிருக்க வேண்டும்//

நான் மேலே பதிவு செய்தது எல்லாமே ஆசிரியர் அவர்களின் வைர கருத்துக்கள்.ஒவ ்வொரு தோழியரின் செய்தியிலும் இந்த மாதிரி வைர வரிகளை நாம் வெகுவாக காண முடியும்.நான் ரசித்து ருசித்து அனுபவித்து படித்த வரிகள்.ஆனாலும் அதற்கு அப்பால் இருக்கும் வலிகளையும் அதன பின்னணியில் இருக்கும் தாக்கங்களையும் என்னால் உணர முடியவில்லை.அந் த அளவுக்கு அந்த உத்தமர்களின் தியாகங்களால் இப்பூமியின் இருள்கள் பிரகாசம் அடைந்தன.அது படிக்க மட்டுமல்ல சிந்தித்து படிப்பினை பெறவும் தான்.
Quote | Report to administrator
Ibrahim
0 #10 Ibrahim 2014-09-09 23:09
நிகழ்ச்சியில் உரை சரிவர கேட்க முடியாமல் இரைச்சலாக் இருந்தது.

நிகழ்ச்சியின் ஆடியோவை இங்கே இணைத்து அக்குறையை நீக்கியமைக்கு நன்றி.

ஜசாக்கல்லாஹ்.
Quote | Report to administrator
நூருத்தீன்.
0 #11 நூருத்தீன். 2014-09-09 23:43
அன்புச் சகோதரர் சயீத்.

வஅலைக்குமுஸ் ஸலாம். தங்களது ஆதங்கமும் குறையும் சரியே! தங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மகளின் திருமணத்தையொட்ட ி மாலையில் நடைபெற்ற நிகழ்வும் நூல் வெளியீடும் ஒன்றிணைந்தது தாங்கள் குறிப்பிட்டுள்ள அசௌகரியங்களுக்க ுக் காரணமாக அமைந்துவிட்டன. எதிர்வரும் காலங்களில் நூல் வெளியீடுகளில் இவ்விதமான இடையூறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

குறைகளில் நிறை காணும் தங்களது குணம் இறுதி வரிகளில் வெளிப்பட்டு என்னைக் கவர்ந்தது. மிக்க நன்றி.

தோழியரை பிறருக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

அன்புடன்,
-நூருத்தீன்
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்