முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தமிழக செய்திகள்

மிழகத்தில் மது ஒழிப்பு பிரச்சாரம் சமூக ஆர்வலர்களால் சமீப காலமாக தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.  

அண்மையில், மது ஒழிப்பை வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவருடைய தந்தை ஆனந்தன் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இது தொடர்பாக மது ஒழிப்பில் ஆர்வமுடைய சமூக ஆர்வலர்கள் சட்ட பஞ்சாயத்து இயக்கம் என்ற அமைப்பின் வழியாக தமிழகமெங்கும் மது ஒழிப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.  

இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று மார்ச் 16ஆம் தியதி மாலை 3:30 மணி முதல் 7:30 மணி வரை  சென்னை நந்தனம் சிக்னல் அருகிலுள்ள வினோபா அரங்கில் நடக்க இருக்கிறது.  

இக்கூட்டத்தில்  பெண்ணுரிமை இயக்கத்தைச் சார்ந்த லீலாவதி, பத்திரிகையாளர்கள் ஞானி, சாவித்திரி கண்ணன், ராஜதுரை,  காந்தியவாதி சசிபெருமாள், கல்வியாளர் டாக்டர் வசந்திதேவி, பாடம் நாராயணன், மகசூல் ஜெயராம் உட்பட இன்னும் பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இது குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆறுமுகம் கூறும் போது, "மது ஒழிப்பிற்காகச் செயல்பட்டுவரும் அமைப்புகளும் ஆர்வலர்களும் தாங்களின் செயல்திட்டத்தைப் பகிர்ந்து கொண்டு ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் அரசுக்கு அழுத்தம் தருவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

மேலும், ஓய்வு பெற்ற நீதிபதியும் "விழி" அமைப்பின் தலைவருமான திரு சந்துரு அவர்கள் எழுதிய ”சட்டப்படி மதுக்கடைகளை ஒழிப்பது எப்படி?”  என்ற புத்தகத்தைத் தமிழகமெங்கும் எடுத்துச் சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுவது குறித்தும் விவாதிக்கப்படும். பின்னர், மது ஒழிப்புத் தொடர்பான சமூக ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 81441-66099 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் அவர்களை நாம் தொடர்பு கொண்டு செயல்பாடுகள் குறித்து தகவல் தெரிவிப்பதற்கும், SMS மூலம் நினைவுபடுத்தவும் உதவியாக இருக்கும். மது ஒழிப்பில் ஆர்வமுள்ள அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி நிரல்

நாள் & நேரம் : 16-03-2014 ( ஞாயிறு), மாலை 3.30 - 7.30

இடம் : வினோபா அரங்கம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம்
58, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்( நந்தனம் சிக்னல் அருகில் )

கலந்து கொண்டு ஆதரவளிக்க மிஸ்டு கால் கொடுக்க: 8144166099  

மேலும், விவரங்கள் அறிய:  செந்தில் ஆறுமுகம், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274

இணையம்    : www.sattapanchayat.org
மின் அஞ்சல் : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. 
முகநூல்       : www.facebook.com/sattapanchayath

நன்றி : இந்நேரம்.காம்

Comments   

மருதன்
0 #1 மருதன் 2014-03-16 15:31
// இக்கூட்டத்தில் பெண்ணுரிமை இயக்கத்தைச் சார்ந்த லீலாவதி, பத்திரிகையாளர்க ள் ஞானி, சாவித்திரி கண்ணன், ராஜதுரை, காந்தியவாதி சசிபெருமாள், கல்வியாளர் டாக்டர் வசந்திதேவி, பாடம் நாராயணன், மகசூல் ஜெயராம் உட்பட இன்னும் பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். //

முசுலிம்களுக்கு மது ஹலாலாகி விட்டதா என்ன?

மது ஒழிப்பு போராட்டத்தில் மருந்துக்குக் கூட ஒரு முசுலிம் கலந்து கொள்ள வில்லையே?
Quote | Report to administrator
abdul azeez
0 #2 abdul azeez 2014-03-17 23:32
hi dear marudhan,
oru naalil verum 2 mani neram mic pottu kuraithaal. appadiye madhu ozhindhu ellarum thirundhiduvang alo. hitler range il adavadiya seyal pattaal kooda ippa eppadi kudikkirano appadiye thaan naalaikkum irukkum konjam kooda kuraiyadhu. kaaranam nam arasu adhil thaan vaazhgiradhu. vera varuvaai edhilum illai
maa salaam.
abdul azeez
Quote | Report to administrator
ap safiya
0 #3 ap safiya 2014-03-23 00:06
Quoting மருதன்:
// இக்கூட்டத்தில் பெண்ணுரிமை இயக்கத்தைச் சார்ந்த லீலாவதி, பத்திரிகையாளர்கள் ஞானி, சாவித்திரி கண்ணன், ராஜதுரை, காந்தியவாதி சசிபெருமாள், கல்வியாளர் டாக்டர் வசந்திதேவி, பாடம் நாராயணன், மகசூல் ஜெயராம் உட்பட இன்னும் பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். //

முசுலிம்களுக்கு மது ஹலாலாகி விட்டதா என்ன?

மது ஒழிப்பு போராட்டத்தில் மருந்துக்குக் கூட ஒரு முசுலிம் கலந்து கொள்ள வில்லையே?

அஸ்ஸலாமுஅலைக்கும்,

முஸ்லிம்களுக்கு மது பற்றிய கவலை இல்லை, அது ஹராம் என்று தெரியும், எனவே அவர்கள் அதை பற்றி அலட்டிக்கொள்ள தேவை இல்லை. வெறும் மேடை பேச்சில் மது அழிந்துவிடும் என்பது பொய். வருமானத்தை மட்டும்தான் நோக்கம் என்னும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்