முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இலங்கை செய்திகள்

மத்திய ஆசியாவில் இஸ்லாம் மதம் இராணுவ ரீதியாக பரப்பப்பட்டது என்றும் மத்திய ஆசியாவில் புத்தமதம் அழிக்கப்பட அதுவே காரணம் என்றும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ள இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்காவை அகில இலங்கை முஸ்லிம் உலமாக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

அகில இலங்கை முஸ்லிம் உலமாக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இஸ்லாம் இராணுவ ரீதியாக பரப்பப்பட்டதாலேயே மத்திய ஆசியாவில் பௌத்த மதம் அழிந்தது" என பொறுப்பற்ற முறையில் உண்மையை திரித்து ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கா பேசியுள்ளதன் மூலம் முஸ்லிம்களை மட்டுமல்ல, பௌத்த மக்களையும் அவமதித்துள்ளார். வெறுமனே இராணுத்திற்குப் பயந்து தமது மதத்தை விட்டுக்கொடுத்தவர்களாக பண்டைய ஆசிய, பௌத்த மக்களை இவர் சித்தரித்துள்ளதன் மூலம் அவர்களை அவமதித்துள்ளார்.

இஸ்லாம் எந்தவொரு காலத்திலும் இராணுவ ரீதியாகப் பரப்பப்படவில்லை என்பதை வரலாறு மிகத் தெளிவாகச் சொல்கிறது. அந்நிய சக்திகள் முஸ்லிம் நாடுகள் மீது போர்முரசு கொட்டியதன் காரணமாகவே முஸ்லிம் ஆட்சியாளர்களும் சில நாடுகள் மீது படையெடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். தமது நாட்டையும் தமது மக்களையும் பாதுகாக்க நாட்டின் தலைவர்கள் படையெடுப்பதென்பது அதர்மமாகாது. ஆனாலும் சமர்கந்த் முதல் சீனா வரை எந்தவொரு இஸ்லாமிய இராணுவமும் இஸ்லாத்தை பரப்புவதற்காக அனுப்பப்பட்டதாக வரலாறு இல்லை.

முஸ்லிம்கள் இந்திய உபகண்டத்தை சுமார் 800 வருடங்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் இராணுவத்தைக் கொண்டு இஸ்லாத்தைப் பரப்ப நினைத்திருந்தால் முழு இந்தியாவை மட்டமல்ல சின்னஞ்சிறிய தீவான இலங்கையிலும் இஸ்லாத்தை இராணுவ ரீதியாக பரப்பியிருக்க முடியும். ஆனாலும் எந்த ஓர் இஸ்லாமிய போர் வீரனும் இங்கு வராமலேயே இஸ்லாம் இங்கு பரவியதன் காரணம் அதன் கொள்கை கோட்பாடும் அன்றைய முஸ்லிம்களின் நல்ல பண்புகளுமாகும்.

அதே போல் மாலத்தீவு, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து பொன்ற நாடுகளின் வரலாற்றை ஆராயும்போது அந்நாடுகளுக்கு முஸ்லிம்கள் இராணுவ ரீதியில் படையெடுத்ததாக வரலாறு இல்லை. மாறாக மகான் அப்துல் காதர் ஜீலானி போன்ற பெரியார்களின் நல்வழிகாட்டல்கள் மூலமே அந்நாடுகளின் மன்னர்கள் கூட இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை வரலாற்றில் நாம் காண முடிவதோடு இன்றும் அம்மக்கள் இதனை பெருமையாகச் சொல்லிக் கொள்வதையும் காணலாம்.

ஆயுதத்திற்கு பயந்து தமது சமயத்தை விடக்கூடியவர்களாக அம்மக்கள் இருப்பார்களாயின் வெள்ளையர்கள் மற்றும் ஜப்பானியர்களின் காலனித்துவத்தின் கீழ் இருந்தபொழுது தமது இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேறியிருப்பார்கள். ஆகவே அம்மக்கள் ஆயுதத்துக்குப் பணிந்து சமயத்தை விட்டுக்கொடுக்கும் அளவுக்கு கோழைகள் அல்லர். மாறாக கொள்கையை சரிவர உணர்ந்து ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர்.

வரலாற்று உண்மைகள் இவ்வாறு இருக்க, வெறுமனே தான்தோன்றித்தனமாக, கற்பனையாக சில மேற்கத்திய யூத, கிறிஸ்தவ எழுத்தாளர்களின் பொய்யான குறிப்புக்களை படித்து விட்டு சிறிதும் சிந்திக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பற்ற முறையில் இவ்வாறு கூறியிருப்பது முஸ்லிம்களை புண்படுத்துவதாகும்.

சரிந்துவரும் தமது அரசியல் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்காக ரணில் விக்ரமசிங்கா இவ்வாறு இனவாதத்தைப் பேசுவது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

அகில இலங்கை முஸ்லிம் உலமாக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

Comments   

Shuhail
0 #1 Shuhail -0001-11-30 05:21
Ranil Wickramasinghe dosnt know anything even the Politics, that is why he coudnt win the election up to now if he know politic he didnt talk like this, and he didnt talk about Beetle and Chuwingam story to public ha ha ha...
Quote | Report to administrator
Careem - Dehiwala - Colombo
0 #2 Careem - Dehiwala - Colombo -0001-11-30 05:21
This clip did not appear in the local newspapers, however, assuming he made this allegation, it only shows his ignorance of Islamic history, though a degree holder in Law & an Advocate he is basically a Mr. Bean, who's no PR or ability to win elections for the 18th time, President R is so lucky to have him as the leader of the Opp & the leader of the UNP, his attitude - feudalistic and pedantic doesnt suit Sri Lanka, he should be down to earth, he's escaped from the axe since he's his henchmen in the working committee of the UNP, still there are misgivings in the party and with those who supported him earlier to expel him after the defeat of the recent PC elections.

Ranil is said to be an anti Muslim even by his own party men who are Municipal & provincial [Muslim] members, he does not have the knack to take this country forward, a former stalwart of the party, AHM. Azwer's [a former minister] denied a position in the Sri Kotha the HQ of the party, hence his switch over to te ruling PA.

By the way can any one shed light as to when & where this speech's made.
Quote | Report to administrator
aslam
0 #3 aslam 2014-04-28 02:07
திரு ரணில்விக்க்ரமசி ங்க ஒரு மிகத்திறமையான கல்வியாளர் சட்டவாளர் அரசியலாளர் முற்போக்காளர் எல்லாவற்றையும் தாண்டிய ஓர் ஜனநாயகவாதி.ஜனநா யக அரசின் துறைகளை சுதந்திரமாக இயங்கச்செய்ய வேண்டும் என்பதே அவரின் பேரவா என்றாலும் அது மிகையானதல்ல! சட்டத்துறை சட்டவாக்கத்துறை நிர்வாகத்துறை என்பவற்றின் மீளாய்வுக்கும் தடையற்ற இயக்கத்திற்கும் ஏழு சுதந்திர ஆணைக்குழுக்களை தாபிக்க இவர் மேற்கொண்ட முயற்சியே இவரது அரசியல் பயணத்திற்கு முட்டுக்கட்டையா க இருந்தது.இவருடை ய பொருளாதார திட்டங்கள் நாட்டுக்கு நன்மை அளிப்பவையாகும். இந்த தீவை அவர் இராணுவ மயமாக்களற்ற ஒரு ஐரோப்பாவுக்கு நிகரான ஊழல் அற்ற நாடாக இவர் திட்டமிட்டார்.2 000 ஆம் ஆண்டில் இவர் பிரதமராக இருந்த 02 வருடங்களும் பொருளாதாரம் ஆர்முடுகலை ஆரம்பித்த போதே இவரின் ஆட்சி துடைதெரியப்பட்ட து!!!மாறி மாறி வந்த அரசுகளில் முஸ்லிம்களுக்கு பொர்க்காலமை அமைந்தது ஐ தே க ஆட்சிக்காலமேயாக ும்.அதன் பின்னர் மர்ஹூம் அஷ்ராப்ப் அவர்களின் காலம் முஸ்லிம்களின் உச்சகட்டமாகும். இப்போது இறங்குமுகமாகும் .இந்த இறங்குமுகதிர்க் கும் திரு ரணில் அவர்களின் அண்மைய கருத்ஹடளுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு.உள்ளவன் சொற்படி காலை கிளப்பியடி என்பது முதுமொழி.சுமார் 20 தேர்தல்களில் தோல்வியை தழுவினாலும் கட்சியின் தலைமைதுவதினை விட்டுக்கொடுக்க ாத mr ரணில் தேசியவாத சேற்றில் குளிக்க வேண்டிய நீந்த வேண்டிய சுழியோட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளா ர்.அதன் வெளிப்பாடே இந்தக்கூற்று.அத ில் தப்பில்லை என்றாலும் நாளை அதுவும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு வரலாராகிப்போகலா ம்
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்