முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

செய்தி விமர்சனம்

SatyaMargam.comடந்த 27-07-2015 அன்று மாலை, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங் Rajiv Gandhi Indian Institute of Management (RG-IIM)  மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் நாளை (வியாழன்) இராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.

மறைந்த அப்துல் கலாம் நல்லவர்;  வல்லவர் என்று கூறுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதருமல்ல.  ஆனால் அவர்மீது அதீத அன்போ, எல்லையற்ற வெறுப்போ தேவையில்லை என்பதே நம் கருத்து.

"மரணம் அடைந்தபின் இவ்வுலகில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றவாறு கூலியை மறுமையில் அவர் பெற்றுக் கொள்வார்" எனும் நபிமொழி நமக்கு நினைவுபடுத்துவது, மரணித்தவரின் மறுமை நிலை பற்றி பேச இவ்வுலகில் எவருக்கும் அருகதை இல்லை என்பதே. ஆனால், தாங்கள் மட்டுமே சுவர்க்கம் செல்வோர் என்று சொல்லித் திரியும் ஒரு பிரிவினைவாதக் கூட்டம், காண்போரை எல்லாம் 'நரகவாசிகள்' என்று சகட்டுமேனிக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது.

அப் பட்டியலில் மறைந்த அப்துல் கலாமையும் இணைத்து பொதுவெளியில் வைத்து அந்த டாக்டருக்கு போஸ்ட்மார்ட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

SatyaMargam.comஅப்துல் கலாம் உருவாக்கிய, மனிதகுலத்திற்குத் நன்மை தரும் பல்வேறு நலத்திட்டங்களைப் புறம் தள்ளிவிட்டு, அவர் ஏன் இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை? ஏன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை? என்கிற ரீதியில் அடுக்கப்படும் இவர்களின் கேள்விகள், வரம்பைக் கடந்து இவர் முனாஃபிக் ஆகத்தான் மரணித்தார் என்றும் அவருக்காக துஆ செய்வதே கூடாது என்றும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் விவாதித்துக் கொண்டிருப்பது கவலைக்குரிய,  வருத்தத்திற்குரிய செய்தி மட்டுமன்று. மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

ஏன்?

"இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின்பால் சென்று சேர்ந்து விட்டார்கள்" என்ற (புகாரி 1393)  நபிமொழியை நன்கு அறிந்தும், பலர் நினைவுறுத்திய பின்பும் கூட இந்த வசவுகளில் ஈடுபட்டுட்டுள்ளோர் தம் வீரியத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. மூமின்கள் இறந்துவிட்ட மனிதரின் நல்லறங்களை மட்டுமே பேச வேண்டும்; மஃக்பிரத் பெற்றுத் தர மட்டுமே துஆ செய்ய வேண்டும் என்று பல நபி மொழிகள் உலகத்திற்கு அழகாக முன்மொழிந்திருக்க அவையனைத்தையும் புறந்தள்ளி பிணம் தின்னிகளாக மாறி மரணித்தவரைப் பற்றிப் புறம்பேசி அலையும் பெரும் கொடுமையைக் காண முடிகிறது.

காஃபிர்களுடன் நடந்த போரில், வாளை உயர்த்திக் கொல்லப் போகும் நேரத்தில் கலிமாச் சொன்ன ஒருவரை நான் கொன்று விட்டேன் என்ற நபித்தோழரின் கூற்று நபிகளாரின் காதுகளுக்கு வந்தது.  விசாரணையில், "தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எதிரி அவ்வாறு கூறியிருக்கலாம் அல்லவா!" என்று நபித்தோழர் விளக்கம் அளித்தபோது "உயிரைக் காக்கவே அவர் கலீமாச் சொன்னார் என்று அவரது இதயத்தைப் பிளந்து நீர் பார்த்தீரா?" என்ற நபிகளாரின் கடும் கண்டனம் நினைவில் வந்தால் உள்ளம் உதறல் எடுக்கும்.

"அப்துல் கலாம் சங்கராச்சாரியாரோடு அமர்ந்திருக்கிறாரே;  குத்துவிளக்கு ஏற்றியிருக்கிறாரே;   கோயில்களுக்குச் சென்றிருக்கிறாரே;   இது போதாதா இவர் காஃபீர் என்பதற்கு?” எனும் இவர்களின் வியாக்கியானங்கள் மேற்சொன்ன நபிமொழியைத் தூரம் வீசி எறிகின்றன. இத்தனைப் படங்களை இணைத்தவர்கள் அப்துல் கலாம் பள்ளிவாசல்களில் தொழும் பல்வேறு படங்களை ஏனோ இணைப்பதில்லை!

இந்தியா போன்ற பல்சமூகக் கட்டமைப்பினூடே வாழும் மக்கள் அனைவருக்குமான ஜனாதிபதி அவர் என்பதை மறந்து விட்டு, முஸ்லிம்களுக்கான ஜனாதிபதியாக மட்டுமே அவர் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற ரீதியில் கேள்வி எழுப்புவது வேடிக்கையானது. அவரது இறை நம்பிக்கையில் பிழை இருந்தால் அதை நியாயத் தீர்ப்பு நாளில் அவரிடம் சரிபார்ப்பவன் இறைவன் மட்டுமே!

இறைத் தூதர் போதித்த சதக்கத்துல் ஜாரியாவாக Green Kalam திட்டத்தில் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நடுவதிலிருந்து ஏழை எளியோருக்கு பயன் தரும் பல்வேறு வாழ்க்கை மேம்பாட்டுத் திட்டங்களை துவங்கி நிறைவேற்றியவர்;  நபிகளாரின் உன்னத போதனையான சமத்துவத்தினைப் பின்பற்றி மிக உயர்ந்த பதவியிலும் மிக எளிமையாக வாழ்ந்து காட்டியவர்;  கிரிக்கெட்டுக்கு கைதட்டி விசில் அடித்தால்தான் நாட்டை நேசிப்பவன் என்ற கீழ்த்தர மனோநிலையை மாற்றி, நாட்டுப்பற்று என்றால் என்னவென்று இந்தியர்களுக்கு பாடம் நடத்திய முன்னோடி இந்தியர்;  தன்கீழ் பணியாற்றுபவர்களிடம் அன்பாய்ப் பழகியவர்; - சிறந்த தமிழ் மொழிப்பற்றாளர்; உலக அரங்கில் இந்தியர்களைத் தலை நிமிரச் செய்த அறிவியலாளர்; ஜமாஅத் தொழுகையின்போது அவரது பாதுகாப்பிற்காக பள்ளிவாசலுக்குள்ளே பிரத்தியேக இடத்தை ராணுவம் தேர்வு செய்தபோது அதை மறுத்து பிறரைப் போல நானும் இறைவனின் அடிமையே என்று உரைத்து மக்களோடு மக்களாக நின்று தொழுதவர்; இளைஞர்கள்,  மாணவர்கள், குழந்தைகள்தாம் இந்திய முன்னேற்றத்தின் அடிப்படை என்றுரைத்து 'கனவு கண்டு அதை நோக்கி முயற்சி செய்யுங்கள்' என்ற சித்தாந்தத்தை பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்தவர்; சிறந்த கவிஞர்; அகந்தை அற்ற நற்குணத்தை பல்வேறு இடங்களில் நிரூபித்தவர்; தன்னடக்கத்திற்குச் சொந்தக்காரர்; தகுதியற்றவர்களுக்குப் பரிந்துரை என்று தம் அதிகாரத்தை துர்பிரயோகம் செய்யாதவர்;  1950 களில் திருச்சி செஞ்ஜோசப் கல்லூரியில் படித்தபோது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்ற வறுமையின் காரணத்தால் சைவத்தை சாப்பிட ஆரம்பித்து அதனையே வாழ்நாள் முழுக்க கடைபிடித்தவர் - மறுமை நாள் சிந்தனைகள் பற்றியும், குர்ஆன் வாசிக்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை என்றும் தனது உரைகளில் விளக்கியவர்; பூசணி உடைப்பது போன்ற பிற மத கலாச்சாரங்களை எள்ளி நகையாடாமல் அது அவரவர் நம்பிக்கை என்று கூறியதன் மூலம் தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாசூக்காகக் கூறியவர் என இவரைப் பற்றிய சிறப்பம்சங்கள் ஏராளம். (www.satyaMargam.com)

இத்தகைய பண்புகளே, மதம் கடந்த இந்திய மக்களின் அன்பை டாக்டர் அப்துல் கலாமுக்குப் பெற்றுத் தந்தன.

9:84   وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖ ؕ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ  அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.

அப்துல் கலாமை காஃபீராக்குவோர், மேற்கண்ட சூரா தவ்பாவின் 84 ஆவது வசனத்தை ஆதாரமாகக் கூறி மிகத் தவறான விளக்கத்தை அளிக்கின்றனர்.  தப்ஸீர் இப்னு கஃதீர் விளக்கவுரையின்படி, முனாஃபிக் (நயவஞ்சகன்) தொடர்பாக இறங்கிய வசனம் இது. நயவஞ்சகனுக்கு மன்னிப்பு இல்லை எனும் சட்டங்களை அறிவித்த நபியவர்களே முனாஃபிக் என முன்மொழியப்பட்டவருக்கு தமது ஆடையை போர்த்தியதோடு ஜனாஸாவும் தொழ வைத்தார்கள். தயங்கிய நபித்தோழர்களிடம் 70 தடவை பாவமன்னிப்பு கேட்டாலும் முனாஃபிக் மன்னிக்கப்பட மாட்டான் என்று அல்லாஹ் கூறியதால் எழுபதுக்கு மேற்பட்ட முறைகளில் நான் பாவமன்னிப்பு கேட்பேன் என்று கூறியதன் மூலம் நயவஞ்சகனுக்கும் பாவமன்னிப்பு பெற முயற்சித்தார்கள்.

எவர் சுவர்க்கவாசி, எவர் நரகவாசி என்று அல்லாஹ்வும் இறைத்தூதரும் அறிவித்து விட்டவர்களைத் தவிர்த்து, வேறெவரின் மறுமை நிலையைப் பற்றி தீர்ப்பு உரைக்க நம்மில் யாருக்கும் உரிமையோ, தகுதியோ, அருகதையோ கிடையாது. காஃபிர்களுக்கு நேர்வழியின்பால் அழகிய முறையில் அழைப்பு விடுத்து முஸ்லிம்களாக்க ஒருபுறம் நன்மக்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்க -  இன்னொரு சாரார், இருக்கும் முஸ்லிம்களை காபிர்களாக அறிவிப்புச் செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு சில புகைப்படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு இவர் முஸ்லிம்; - அவர் காஃபிர் என்று தரம் பிரிப்போர் இனியாவது இறைவனுக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும்.

ஏகபோகத்துக்கு பரவும் ஏச்சும் பேச்சும் பொய்யாக இருந்துவிட்டால்? அவரது இவ்வுலக பாவங்கள் மறுமையில் மூட்டையாகத் தங்கள் முதுகில் ஏற்றப்படும் என்பதை புறம் பேசுபவர்கள் உணர வேண்டும்.  இறைக் கட்டளைகளை செயல்படுத்தி வரும்போதே, இறுதி நிலையில் முஸ்லிமாக மரணிப்போமா காஃபிராக மரணிப்போமா -  மறுமையில் தங்களுக்கு கிடைக்கவிருப்பது சுவர்க்கமா? அல்லது நரகமா? என்று உறுதியாகத் தெரியாத நிலையில் இறைவனிடத்தில் பிரார்த்தனைகளுடன் வாழ்கிறோம். இதில், இறந்து போன இன்னொருவரின் மறுமை நிலை பற்றி விவாதம். வேடிக்கை தான் இல்லையா?

 

இந்திய முஸ்லிம்கள் பல்வேறு நிலைகளில் ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் சூழ்நிலையில் ராக்கெட், அணு ஆயுதம், வல்லரசு என்று உச்ச நிலையில் இந்தியாவைக் கொண்டு சென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு முஸ்லிமைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்ப்போம்.  மனம் போன போக்கில் எவரையும் முஷ்ரிக்காகவோ காஃபிராகவோ ஆக்கி அழகு பார்க்கும் விஷமக் கிருமிகளை அடையாளம் கண்டு தூர விலகி இருப்போம். இத்தகையோரிடம், இவர்களால் அநியாயமாக முஷ்ரிக் / காஃபீர் என இவ்வுலகில் அறிவிக்கப்பட்டவர்கள் மறுமையில் இறைவனிடம் முறையிட்டு தம் கணக்கைத் தீர்த்துக் கொள்வர்.

முஸ்லிமாகப் பிறந்து வாழ்ந்து மறைந்த ஒருவரைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்ப்போம். இறைவனுக்கு அஞ்சுவோம். இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி அவனே! அவன் ஒருவனே!

- அபூ ஸாலிஹா

 


Comments   

ABDUL HAMEED
+2 #1 ABDUL HAMEED 2015-07-30 09:26
Alhamdulillah
very nice article and very useful to create awareness among our brothers and sisters
FANTASTIC ARTICLE ABOUT
MARHUM ABDUL KALAM SAHEB
Quote | Report to administrator
ABDUL HAMEED
+2 #2 ABDUL HAMEED 2015-07-30 09:33
Alahmdulillah very useful to create awareness
among our brothers and sisters
FANTASTIC ARTICLE ABOUT
MARHUM ABDUL KALAM SAHEB
Quote | Report to administrator
Mohamed Imran Khan
0 #3 Mohamed Imran Khan 2015-07-30 10:57
அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும் சிந்தித்து செயலாற்ற வேண்டியது கடமை ஆகும்
Quote | Report to administrator
Fakhrudeen Ibnu Hamd
+3 #4 Fakhrudeen Ibnu Hamd 2015-07-30 11:28
MaaShaa Allah.

நான் இதையே தான் எழுத நினைத்தேன். யதார்த்தத்தையும ் என்னைப் போன்றோரின் உள்ளக் கிடக்கையையும் கூடுதல் குறைவின்றி இங்கே காண்கிறேன்.

ஜஸாக்கல்லாஹ் கைர் சகோ. அபூசாலிஹா.
Quote | Report to administrator
sabeer
0 #5 sabeer 2015-07-30 11:49
தர்க்கம் வேண்டாம் எல்லாம் வல்ல அல்லா மிக பெரியவன்
Quote | Report to administrator
Mohamed Farook
+2 #6 Mohamed Farook 2015-07-30 12:52
Really explained very well those who are making mistakes. They have to learn and change them self
Allah will forgive all of us.
Quote | Report to administrator
Mubarak
0 #7 Mubarak 2015-07-30 13:42
அடுத்தவருக்கு காபீர் / முனாபிக் ஃபத்வா குடுத்தே சிரழிந்து கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு சரியான சூடு போட்டிருக்கிறது இந்த கட்டுரை.

இத்தகையோரை என்னுடைய முகநூல் நட்பில் ஒருசிலர் இருந்தனர்.

இந்த செய்தி பார்த்து அவர்களை நட்பில் இருந்து நீக்கி உள்ளேன். (காரனத்தையும் எழுதி அனுப்பி விட்டேன்)

ஜசாக்கல்லாஹ்.
Quote | Report to administrator
கத்தீபு முஹம்மது முஹ
+3 #8 கத்தீபு முஹம்மது முஹ 2015-07-30 14:22
என் உள்ளக்கிடைக்கை இதுவே!

அதை அழகுற இத்தளத்தின் மூலம் வெளிப்படுத்திய அபூ ஸாலிஹாவுக்கு நன்றி!
Quote | Report to administrator
Fahad
-6 #9 Fahad 2015-07-30 15:57
சங்பரிவாரத்தின் இன்னொரு பிரதி தான் அப்துல் கலாம், தீவிர சங்கராச்சாரிய பக்தர்,

குர் ஆன் ஓதும் குழந்தைகளை பார்த்து நேரத்தை காலத்தையும் ஏன் வீண் அடிக்கிறீர்கள் என்றவர்.

குஜராத் படுகொலையின் போது ராஜ தர்மத்துடன் நேர்மையாக நடந்துக்கொள்ளுங ்கள் என ஒப்புக்காவது வாஜ்பாய் கண்டித்தார். பிறகு குஜராத் கலவரத்தை மறக்கடிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். பாஜக சார்பாக அப்துல்கலாம் வேட்பாளராக நியமிக்கப்பட்டா ர். பின் அப்துல் கலாம் ஜனதிபதியாக ஆன பின் வாய் கூட திறக்கவில்லை.

எம்மக்களை கொன்ற உங்களுக்கு ஆதாரவாக நிற்க்க முடியாது என சொல்லி இருக்கலாம் அதையும் சொல்ல வில்லை. பதவிக்காக அதை பற்றி மூச்சு விடவில்லை, ஒப்புக்காக சுற்றி பார்க்க சென்றார் தவிர அதன் பின் கூட பாசிச பாஜக ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகளை மறந்தும் கூட விமர்சிக்கவில்ல ை.

தமிழக மீனவர்களை சுட்டு கொன்ற இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை சொல்ல சென்ற தமிழ குழுவை சந்திக்க கூட வில்லை டெல்லியில்.

ஆனால் ஈழ தமிழர்களை கொன்ற ராஜபச்சேவுடன் விருந்துக்கு மட்டும் செல்வார்.

எம் மக்களை கொன்றவனுடன் நட்புக்கொண்டு மவுன சாட்சியாய் வேடிக்கை பார்த்தவரை மன்னிக்க மனம் ஒப்புக்கொள்ளவே இல்லை.

மாணவர்கள் மீது அன்பு கொண்டவர் என்ற பிம்பம் கூட போலியானது, “வித்யா மந்திர்” போன்ற ஆர்.எஸ்.எஸ்., சங்க பரிவாரங்களால் நடத்தப்படும் பள்ளி மாணவர்களைத்தான் இவர் அதிகம் சந்தித்தார்.

ஒடுக்கப்பட்ட தலீத் மாணவர்களுக்காகவ ும், முஸ்லிம் மாணவர்களுக்காகவ ும் இவர் சிறு துரும்பையும் நகரத்தியது இல்லை.

உங்களுக்கு வேண்டுமானால் அப்துல் கலாம் முஸ்லிமாகவும் இந்தியராகவும் தமிழனாகவும் பார்த்து பெருமை அடிக்க ஆயிரம் காரணம் இருக்கலாம்.

ஆனால் மனிதனாக மனித நேயனாக இல்லாமல் பாசிச வெறியர்களின் கூட்டத்தில் அங்கம் வகிப்பவரை மனிதனாக கூட என்னால் ஏற்க்க முடியாது.

தயவு செய்து அப்துல்கலாமின் பெருமைகள் என டேக் செய்ய வேண்டாம்.
Quote | Report to administrator
JAFAR
0 #10 JAFAR 2015-07-31 01:28
பலரது எண்ண ஓட்டங்களை பிரதிபலித்திருக ்கும் மிகச்சிறந்த கட்டுரை

அப்துல் கலாம் குறித்து பலர் முகம் சுழிக்கும் வகையில் எழுதியதும், படங்களை பகிர்ந்ததும். அதனைப்பார்த்து என் நட்பில் உள்ள பிறமதத்தினர் சிலர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் விழி பிதுங்கி நின்றேன்.

இஸ்லாம் குறித்து இவ்வளவுதான் என்று நினைக்கும் நிலையில்தான் சில அறிவற்றவர்களின் நிலை.

இவர்களையெல்லாம் நினைத்தால் நம் வீட்டில் உள்ள புத்தி சுவாதீனமில்லாதவ ர்களைப் பார்த்தால் எப்படி இரக்கப் படுவோமோ அதைத்தான் நாமும் செய்ய வேண்டும்.
Quote | Report to administrator
Ameer Ali
+1 #11 Ameer Ali 2015-07-31 05:16
Thanks brother Abu Salih.
Quote | Report to administrator
அப்பாஸ்
+3 #12 அப்பாஸ் 2015-07-31 12:51
அப்துல்கலாம் மறைவையொட்டி நான்கு நாட்களாக நான்கு "தமிழ்த் தொலைக்காட்சிக் குழுமங்கள்" நேரலை ஒளிபரப்பு வழங்கின.

அவ்வப்போது பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அப்துல்கலாம் பற்றிப் புகழாரங்கள் சூட்டப் பட்டன.

தமிழ் முஸ்லிம் சமுதாயம் அவரைத் தள்ளி வைத்துப் பாரத்திருக்கிறத ோ என்ற பச்சாதாபம் ஏற்பட்டது.

சமாவில் வெளியான ஆக்கம் ஓரளவு ஆறுதல் தந்தது.

நான்கு நாட்கள் நேரலையில் பங்கு கொண்டு பேசியவர்களின் கருத்தின் திரட்சி:- "கலாம் எளிமையானவர் , பண்பாளர், சிறந்த ஆசிரியர், செல்லுமிடமெல்லா ம் திருக்குறளையும் தமிழையும் கொண்டு சென்றவர்" ..

அவர் முஸ்லிம் என்பதை ஏனோ சொல்ல மறந்தனர்.

நேற்று அவரது உடலடக்கம் நடைபெற்ற போது தந்தி டி வி யில் , " இஸ்லாமியரான அவர் இஸ்லாம் வழங்கிய அன்பை அனைவருக்கும் வழங்கினார்" என்றனர்..

நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் - ஏன் இந்தியாவில் - இப்படி ஒரு கூட்டம் அரசியல் கட்சி சாராத ஒருவரின் - அதுவும் பதவியில் இல்லாத ஒருவரின் - நல்லடக்கத்துக்க ு வந்ததில்லை. மக்கள் தாமாக வந்து கலந்து கொண்டனர். சாலையோரங்களில் ஆங்காங்கே அப்துல்கலாமின் படத்தை வைத்து சாதி மத வேறுபாடின்றி அஞ்சலி செலுத்தினர்.

அவர் தம்மை முஸ்லிமாக முன்னிறுத்தாதது கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

மோடியும் ராகுலும் ராமேஸ்வரம் வந்தது கலாமின் மீது அவர்கள் கொண்டிருந்த மதிப்பை வெளிக்காட்டியது.

ஆனால் தமிழ் முஸ்லிம்களின் ஒரு கூட்டம் கலாம் இறந்த பின்னும் அவர் மீது வெறுப்பைக் காட்டியது பண்பற்ற செயலாகத் தோன்றியது.

அல்லாஹ் அனைவர்க்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.


அப்பாஸ்
Quote | Report to administrator
அப்பாஸ்
+1 #13 அப்பாஸ் 2015-07-31 12:55
அப்துல்கலாம் மறைவையொட்டி நான்கு நாட்களாக நான்கு "தமிழ்த் தொலைக்காட்சிக் குழுமங்கள்" நேரலை ஒளிபரப்பு வழங்கின.

அவ்வப்போது பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அப்துல்கலாம் பற்றிப் புகழாரங்கள் சூட்டப் பட்டன.

தமிழ் முஸ்லிம் சமுதாயம் அவரைத் தள்ளி வைத்துப் பாரத்திருக்கிறத ோ என்ற பச்சாதாபம் ஏற்பட்டது.

சமாவில் வெளியான ஆக்கம் ஓரளவு ஆறுதல் தந்தது.

நான்கு நாட்கள் நேரலையில் பங்கு கொண்டு பேசியவர்களின் கருத்தின் திரட்சி:- "கலாம் எளிமையானவர் , பண்பாளர், சிறந்த ஆசிரியர், செல்லுமிடமெல்லா ம் திருக்குறளையும் தமிழையும் கொண்டு சென்றவர்" ..

அவர் முஸ்லிம் என்பதை ஏனோ சொல்ல மறந்தனர்.

நேற்று அவரது உடலடக்கம் நடைபெற்ற போது தந்தி டி வி யில் , " இஸ்லாமியரான அவர் இஸ்லாம் வழங்கிய அன்பை அனைவருக்கும் வழங்கினார்" என்றனர் .

நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் -ஏன் இந்தியாவில் - இப்படி ஒரு கூட்டம் அரசியல் கட்சி சாராத ஒருவரின் - அதுவும் பதவியில் இல்லாத ஒருவரின் - நல்லடக்கத்துக்க ு வந்ததில்லை. மக்கள் தாமாக வந்து கலந்து கொண்டனர். சாலையோரங்களில் ஆங்காங்கே அப்துல்கலாமின் படத்தை வைத்து சாதி மத வேறுபாடின்றி அஞ்சலி செலுத்தினர்.

அவர் தம்மை முஸ்லிமாக முன்னிறுத்தாதது கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

மோடியும் ராகுலும் ராமேஸ்வரம் வந்தது கலாமின் மீது அவர்கள் கொண்டிருந்த மதிப்பை வெளிக்காட்டியது.

ஆனால் தமிழ் முஸ்லிம்களின் ஒரு கூட்டம் கலாம் இறந்த பின்னும் அவர் மீது வெறுப்பைக் காட்டியது பண்பற்ற செயலாகத் தோன்றியது.

அல்லாஹ் அனைவர்க்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.
Quote | Report to administrator
aboobakkar
0 #14 aboobakkar 2015-07-31 13:27
Super news. Alhadu lillah.
Quote | Report to administrator
Er.A.U.Sultan
0 #15 Er.A.U.Sultan 2015-07-31 16:58
அடுத்தவருக்கு காபீர் / முனாபிக் ஃபத்வா குடுத்தே சிரழிந்து கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு சரியான சூடு போட்டிருக்கிறது இந்த கட்டுரை.
Quote | Report to administrator
ஜெயமோகன்
+4 #16 ஜெயமோகன் 2015-07-31 17:17
கலாம் தன்னை என்றும் இஸ்லாமியராக உணர்ந்தவர். வட்டி வாங்கும் வங்கியில் கணக்கு வைக்கக்கூட மறுத்தவர் என என் உறவினர் சொல்லி அறிந்திருக்கிறே ன்.முஸ்லீமாக வாழ்ந்து முஸ்லீமாகவே மறைந்தார்.

ஆனால் அவரது இஸ்லாம் என்பது வெறுப்பால் ஆனதாக இருக்கவில்லை. அவர் பிறமதங்களை, பிற மதநூல்களை, பிற மதத்தலைவர்களை இழிவுசெய்யவில்ல ை, வெறுக்கவில்லை. அந்தச் சமநிலைக்காகவே இஸ்லாமிய வெறியர்களால் அவர் வெறுக்கப்படுகிறார்.

www.jeyamohan.in/.../
Quote | Report to administrator
RAFIA
+1 #17 RAFIA 2015-08-01 02:00
Netthiyadi !

Arumaiyaana vilakkam!!!
Quote | Report to administrator
suhail
+1 #18 suhail 2015-08-01 12:04
Quoting Fahad:
சங்பரிவாரத்தின் இன்னொரு பிரதி தான் அப்துல் கலாம், தீவிர சங்கராச்சாரிய பக்தர்,

குர் ஆன் ஓதும் குழந்தைகளை பார்த்து நேரத்தை காலத்தையும் ஏன் வீண் அடிக்கிறீர்கள் என்றவர்.

குஜராத் படுகொலையின் போது ராஜ தர்மத்துடன் நேர்மையாக நடந்துக்கொள்ளுங்கள் என ஒப்புக்காவது வாஜ்பாய் கண்டித்தார். பிறகு குஜராத் கலவரத்தை மறக்கடிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். பாஜக சார்பாக அப்துல்கலாம் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். பின் அப்துல் கலாம் ஜனதிபதியாக ஆன பின் வாய் கூட திறக்கவில்லை.

எம்மக்களை கொன்ற உங்களுக்கு ஆதாரவாக நிற்க்க முடியாது என சொல்லி இருக்கலாம் அதையும் சொல்ல வில்லை. பதவிக்காக அதை பற்றி மூச்சு விடவில்லை, ஒப்புக்காக சுற்றி பார்க்க சென்றார் தவிர அதன் பின் கூட பாசிச பாஜக ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகளை மறந்தும் கூட விமர்சிக்கவில்லை.

தமிழக மீனவர்களை சுட்டு கொன்ற இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை சொல்ல சென்ற தமிழ குழுவை சந்திக்க கூட வில்லை டெல்லியில்.

ஆனால் ஈழ தமிழர்களை கொன்ற ராஜபச்சேவுடன் விருந்துக்கு மட்டும் செல்வார்.

எம் மக்களை கொன்றவனுடன் நட்புக்கொண்டு மவுன சாட்சியாய் வேடிக்கை பார்த்தவரை மன்னிக்க மனம் ஒப்புக்கொள்ளவே இல்லை.

மாணவர்கள் மீது அன்பு கொண்டவர் என்ற பிம்பம் கூட போலியானது, “வித்யா மந்திர்” போன்ற ஆர்.எஸ்.எஸ்., சங்க பரிவாரங்களால் நடத்தப்படும் பள்ளி மாணவர்களைத்தான் இவர் அதிகம் சந்தித்தார்.

ஒடுக்கப்பட்ட தலீத் மாணவர்களுக்காகவும், முஸ்லிம் மாணவர்களுக்காகவும் இவர் சிறு துரும்பையும் நகரத்தியது இல்லை.

உங்களுக்கு வேண்டுமானால் அப்துல் கலாம் முஸ்லிமாகவும் இந்தியராகவும் தமிழனாகவும் பார்த்து பெருமை அடிக்க ஆயிரம் காரணம் இருக்கலாம்.

ஆனால் மனிதனாக மனித நேயனாக இல்லாமல் பாசிச வெறியர்களின் கூட்டத்தில் அங்கம் வகிப்பவரை மனிதனாக கூட என்னால் ஏற்க்க முடியாது.

தயவு செய்து அப்துல்கலாமின் பெருமைகள் என டேக் செய்ய வேண்டாம்.

avar sariyillai ok anna neegal yar avarai munfiq or kafir ena declare seyya? Rasoolullalvirk ae Allah vahi anupadhavarai thannudan madinavil eruppavaril yaar munafiq ena theriyavillai Appo ungalukko vahi vandhathaa? yen eppadi matravar nammai kevalamaga paarka nadanthu kolla vendum pesavendum
Quote | Report to administrator
M Muhammad
+1 #19 M Muhammad 2015-08-01 14:27
கலாம் முஸ்லிமா? மேமன் ஷஹீதா? போன்ற வாதி பிரதிவாதங்களில் தமது பொன்னான நேரங்களையும் அமல்களையும் பாழாக்கிக் கொண்டிருப்பவர்க ளுக்கு அழகான ஒரு அறிவுறை, எச்சறிக்கை, நல்லுபதேசம்.

இவ்வுலக வாழ்க்கை என்பது சோதனை அது முஸ்லிம்களானாலு ம் முஸ்லிம் அல்லாதவராயினும் தான், மேலும் முஸ்லிம்களின் இவ்வுலக பலன்களோ இழப்புகளோ பொருட்டல்ல மறுமை எனும் நிலையான மரணத்திற்கு பின்னர் உள்ள வாழ்க்கையின் வெற்றியே முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும், எவரும் தமது அமல்களுக்கு பகரமாக மறுமையில் வெற்றி பெற்று சொர்க்கம் செல்ல இயலாது அல்லாஹ்வின் கருணையிருந்தால் தவிற, 'நானுட்பட' என்று எடுத்துரைத்த பெருமானார் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூற்றை மறக்கடிக்கப் பட்டு தமது நிலை பற்றி கவலை படுவதை மறந்து பிறரை பெயர் தாங்கிகள் என்றும் முஷ்ரிக் முனாஃபிக காபிர் என்றும் சான்றுகள் விநியோகிக்கும் அதிகாரம் நமக்கு உண்டா ? என்று சிந்திக்க வேண்டும் சகோதரர்களே.

கலாமோ மேமனோ இனி ஏதும் இழக்காத நிலையை அடைந்து விட்டார்கள் அவர்களை மன்னிப்பதும் தண்டிப்பதும் அவர்களுடைய செயல்களுக்கும் இறுதி நிலைக்கும் ஏற்ப அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது, உலக மாந்தர்கள் அனைவரும் ஒரு சேர மன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும ் அவர்களுக்கு தான் நாடியதி வழ்ங்கிட அல்லாஹ் போதுமானவன், அவர்களை பற்றி தவறான கருத்துக்களை கூறினால் நமது நன்மைகளை இழக்கும் அச்சம் நமக்குள்ளது என்பதில் சந்தேகம் உண்டா ?

தமது வாதங்களை நிலை நாட்ட ஒரு சில புகைப் படங்கள் சம்பவங்களை மட்டும் குறிப்பிடுபவர்க ள் தமது நாட்டத்தை நிறைவேற்றிட காவல் துறை மற்றும் நீத்துறையை துணைக்கு எடுத்து அநீதியாக செயல் பட்டார்கள் என்பவர்களின் கூற்றிர்க்கும் செயலுக்கும் ஒப்பாக செயல்படுவதற்கு சமம் என்றால் மிகையாகாது.

இவ்வுலகில் உயிரோடு உள்ள எத்தனையோ கலாம்களும் மேமன்களும் அப்துல்லாக்களும ் அப்துர் ரஹ்மான்களும் நம்மோடு உயிர் வாழ்கிறார்கள் அவர்களைப் பற்றியும் நம்மைப் பற்றியும் இன்னும் சத்தியத்தின் சுவை அறியாமல் வாழும் நமது கோடானு கோடி உடன் பிறப்புகளைப் பற்றியும் கவலை கொண்டு செயலாற்ற அவர்களின் மற்றும் நம் மறுமை வாழ்க்கை வெற்றிக்கு வழி கோல அல்லாஹ் அருள் புரிவானாக.
Quote | Report to administrator
Sabeer Ahmed
0 #20 Sabeer Ahmed 2015-08-09 00:48
அற்புதமாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை.

என் மனநிலையும் இதுதான், சகோ அபுஸாலிஹா

மாஷா அல்லாஹ்!
Quote | Report to administrator
Sreedhar
+1 #21 Sreedhar 2015-08-09 12:12
Very well written. Couldn't understand why kalam's faith has to be questioned after his death. I have many Muslim friends who comes to temple with me. That has not changed their faith in anyway.
Quote | Report to administrator
rahmath  nisa
0 #22 rahmath nisa 2015-08-12 09:22
Assalamu Alaikum
I,m not in India at the moment , but I watched Abdul kalam,s legacy everything . as you said we cannot decaide who is good muslim who is not . those who is not with us , Allah has to decaide how was their life ends. and during their life time how they spend it . many question people asked about Abdul Kalam ji I ,m not good enough to answer these . but as a gteat human and he spends his life for people.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்