முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

செய்தி விமர்சனம்

சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டது ஏன்; யாரால் என்ற வினாக்களுக்கு  உரிய விடை,  தேர்ந்த  புலனாய்வு மற்றும் தெளிவான, தீர்க்கமான விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்படும் முன்பே, முஸ்லிம்கள்தாம் குற்றவாளிகள் என ஒருபக்கச் சார்புடன் ஊடகங்கள் காட்டிய வழியில் காவல்துறையும் முன்னேறுகிறது.

ஆடிட்டர் கொலையில் அவசரம் அவசரமாக அரசியல் ஆதாயம் தேட அத்வானியும் வந்து சென்று விட்டார். அகில இந்திய அளவில் ரமேஷ் கொலை பேசப்படுவதால் ரவுடிகளும் கட்டப் பஞ்சாயத்துக் காரர்களும் அப்பழுக்கற்ற தேச பக்தர்களாகி விட்டனர்.

அப்பழுக்கற்றவர்களில் ஒரு தேசபக்தரான நாகை புகழேந்தியை முஸ்லிம்கள் கொன்று விட்டதாக தொலைக்காட்சியில்  'ஸவுண்டு' விடும் தமிழிசை 'சவுண்ட'ரராஜன், நாகை புகழேந்தியைப் போன்றவர்களைப் பற்றி, தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் ராமானுஜம் வெளியிட்ட அறிக்கையை வசதியாக மறந்து விட்டார்.

நாகை புகழேந்தி போலிப் பத்திரம் தயார் செய்து  ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை அபகரித்து அதன் மூலம் சிறைக்குச் சென்றவர். இதுபற்றிய பத்திரிகைச் செய்தி:-

நாகை தெற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (38). ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். அவர் தமக்குச் சொந்தமான ரூ.ஒரு  கோடி மதிப்புள்ள வீட்டை, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி (52)  போலியான ஆவணங்கள் தயார் செய்து அபகரித்துக் கொண்டதாகக் கடந்த 2011ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் புகழேந்தி மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தத் தகவல் அறிந்த புகழேந்தியின் மகன்கள் ரகுராமன், சிவராமன், புகழேந்தியின் நண்பர் கீவளூரைச் சேர்ந்த தினேஷ்பாபு ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப்பிரிவு போலீசார் புகழேந்தியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்தபோது முனீஸ்வரன் என்பவரால் கொல்லப்பட்டார்.

நன்றி: ஒன் இண்டியா

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc3/p480x480/970979_516997165038682_622909635_n.jpg"படுகொலைகளைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் தாம்!" என்று போராட்டம் நடத்திய ஹிந்துத்துவா இயக்கங்களே வெட்கப்பட்டு தலைகுனியும் படியாக, அக் கொலைகளுக்கான காரணம் முன் விரோதம், தொழிலில் போட்டி, கொடுக்கல் வாங்கல், பெண் தொடர்பு, கந்து வட்டி, அரசியல் இலாபம் என்று பல்வேறு பரிமாணங்கள் தொடர் விசாரணைகளில் வெளிவந்து பல் இளிக்கும் சூழலில், Facebook போன்ற சமூக வலைத் தளங்களில் ஆடிட்டர் ரமேஷின் படத்தைப் போட்டு மதவெறி வியாபாரம் அமோகமாக சூடு பறக்கிறது.

மேற்கண்டவையே இக்கொலைகளுக்குக் காரணம் எனக் காவல்துறை, புலனாய்வு அமைப்பு, நீதிமன்றம் ஆகியவை தீர விசாரித்துச் சொன்னாலும், ஹிந்துத்துவாவினர் ஒப்புக் கொள்ளத் தயாரில்லை என்றால், அமைதிப்பூங்காவான தமிழகத்தில் அடுத்து பெரிதாக "எதையோ" எதிர்பார்த்து இதைச் செய்கின்றனர் என்பதைச் சாதாரணப் பொது மக்களும் புரிந்து கொண்டுள்ளனர்.

 தொடர்புடைய செய்திகள்:

பா.ஜ.க., பிரமுகர் கொலையில், மூன்று இந்துக்கள் கைது (தினமலர்)

ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !

பாஜக டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை - ரவுடி வசூர் ராஜா கைது

இச் செய்தி தொடர்பாக, எழுத்தாளர் அருணன் அவர்களின் கருத்துக்கள் (சன் நியூஸ்)

பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் கொலையின் பின்னணி - டி.ஜி.பி.விளக்கம்!

ஆடிட்டர் ரமேஷ் கொலையின் காரணமாக இந்துத்துவ பிரமுகர்களுக்குக் காவல்துறை பாதுகாப்புக் கொடுக்கப்படும் என அறிவித்து அதன்படி பாதுகாப்புக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஹிந்துத்துவப் பிரமுகர்கள் என்ற பெயரில் ரவுடிகளும் கட்டப்பஞ்சாயத்து ஆசாமிகளும் காவல்துறை பாதுகாப்புப் பெற்றுத் தம் உள்ளூர்ச் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முயல்கின்றனர்.

அதற்குச் சான்று நேற்று அம்பலமான 'பானிபூரி வியாபாரி'யின் கடத்தல் நாடகம்

வலப்பக்கம் வெளியாகியுள்ளது, ஹிந்துத்துவ ஆதரவுப் பத்திரிகையான தினமலரில் ஆகஸ்ட் 2, 2013 அன்று வெளிவந்த செய்தி.

இதற்கு முன்தினம் இதே தினமலரில் வெளியான செய்தி:--

//அங்கு, நிருபர்களிடம் கூறியதாவது: நான், கோத்தகிரியில் இருந்து திரும்பி வந்து, கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாண்டில், நிறுத்தப்பட்டிருந்த பைக்கை எடுக்கச் சென்றேன். அப்போது, ஒருவர் போலீஸ் உடையில் வந்தார். அவர், பாதுகாப்புக்காக வந்திருப்பதாகக் கூறி, காரில் ஏற்றிக் கொண்டார். அப்போது, இன்னொருவர், கர்சீப்பால் என் மூக்கை அடைத்தார். சிறிது நேரத்தில் நான் மயங்கி விட்டேன். கண் விழித்தபோது, நான் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருப்பதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். கடத்தப்பட்டதை தெரிந்து கொண்ட நான், கண்களை மூடி, பேசாமல் இருந்தேன். அவர்கள், "கல்லைக் கட்டி கடலில், இவனை வீசி விடலாம்' என, பேசிக் கொண்டனர். அதிர்ச்சி அடைந்த நான், மெதுவாகச் சென்ற காரில் இருந்து குதித்து தப்பி, கோவை வந்து விட்டேன்.//

இப்படி இவர்கள் செய்யும் கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து, கள்ளத்தொடர்பு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆற்றும் எதிர்வினை, முஸ்லிம்கள் மேல் பழியாக வந்து குந்திக் கொள்கிறது.

ஒருவேளை, சக்திவேலின் நாடகம் அம்பலமாகி இருக்கா விட்டால்... நினைத்துப் பார்க்கவே குலை நடுங்குகிறது. "இந்து மக்கள் கட்சிப் பிரமுகரைக் கடத்திய முஸ்லிம்கள்" என்று அவரவர் கற்பனைத் திறனுக்கு ஏற்ப, கண்-காது-மூக்கு வைத்து ஊடங்களில் தலைப்பிடப்பட்டுச் செய்திகள் வெளியாகியிருக்கும். இது தான் சாக்கு என்று கண்ணில் கண்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் எல்லாம் பொய்வழக்கில்  சிறை பிடிக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப் பட்டிருப்பார்கள். 

காவல்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகள்  நடுநிலையாக ஆய்வு செய்து   நிகழ்வுகளை அணுகும்போது இவைபோன்ற கள்ளக் கதைகளும் பொய்க் குற்றச்சாட்டுகளும் அம்பலமாகும்; அப்பாவிகள் பாதுகாக்கப் படுவார்கள். தமிழக முஸ்லிம்கள் மீண்டும் ஒருமுறை நிம்மதிப் பெருமூச்சு விடக் காரணமான நேர்மையான, விரைந்த புலனாய்வுக்கு நன்றி!

- மஹ்மூத் அல் ஹஸன்

Comments   

நடராஜன்
+6 #1 நடராஜன் 2013-08-03 08:20
போங்க சார்...

இது போன்று எல்லாம் எடுத்து எழுதி, வர வர தமிழ்நாட்டுல மத யாவாரமே செய்ய விட மாட்டேங்குறீங்க!

இத்தனை பேரை "போட்டும்" - சமூக வலைத் தளங்களில் ஆட்களை நியமித்து பெருமளவு வெறியூட்டியும் இன்னும் தமிழகத்தில் குழப்பங்கள் ஏதும் ஆரம்பிக்கலையே என்ற குழப்பத்தில் ஒரு சில ஈனப் பிறவிகள் முனகுவது கேட்கிறது.

ஹிந்துத்துவாவின் அடுத்த திட்டங்கள் ஆரம்பமாகும் முன் இந்துக்களான நாம் தான் விழித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு நாட்களாக முட்டாள்களாக ஹிந்துத்துவா பின்னால் நம்பி சென்றது போதும்.

நடராஜன், கோவை.
Quote | Report to administrator
பிரம்மபுத்திரன்
0 #2 பிரம்மபுத்திரன் 2013-08-03 12:39
சாம தான பேத தண்டம் எல்லாம் தோற்றுப்போன நிலையில் "ஹிந்து நாட்டில் முஸ்லிம்களூக்கு இடமில்லை, ஓடுங்கள் பாக்கிஸ்தானுக்க ு" என்று போலிசும் ஹிந்துத்வாவும் சேர்ந்து அடித்துவிரட்டின ால் முஸ்லிம்களால் என்ன செய்ய முடியும்?. ராணுவம் வந்து முஸ்லிம்களை காப்பாற்றுமா?
Quote | Report to administrator
முருகேசன்
+3 #3 முருகேசன் 2013-08-03 15:01
Quote:
ஹிந்து நாட்டில் முஸ்லிம்களூக்கு இடமில்லை
ஹிந்து நாடா? எந்த நாட்டைச் சொல்கிறீர்கள்? இந்தியாவை எனில், ஸாரி பிரம்மபுத்திரன் , நீங்கள் வரலாற்றை நிறைய வாசித்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்துள்ளது.

ஹிந்துஸ்தான் என்பதில் உள்ளதைத் தான் சொல்கிறீர்கள் என்றால் உங்கள் மீது பரிதாபம் மட்டுமே வரும். ஏனெனில் மதத்தின் பெயர் அல்ல. சிந்து நதியின் பெயரால் அழைக்கப்பட்ட ஒன்று நாளடைவில் மருவியது.

நல்ல வேளை, முகவரி இல்லாமல் புனைப்பெயரில் வந்தீர்கள். இல்லை என்றால் இந்திய இறையாண்மையையும் இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளையும் மீறி உளறுகிறீர்கள் என்று உங்கள் மீது எவரும் வழக்கு தொடுக்க முடியும் ;-)
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #4 சாணக்கியன் 2013-08-04 14:55
Quoting முருகேசன்:
Quote:
ஹிந்து நாட்டில் முஸ்லிம்களூக்கு இடமில்லை


ஹிந்து நாடா? எந்த நாட்டைச் சொல்கிறீர்கள்? இந்தியாவை எனில், ஸாரி பிரம்மபுத்திரன், நீங்கள் வரலாற்றை நிறைய வாசித்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்துள்ளது.
எனக்கு இந்திய வரலாறு கற்பித்தமைக்கு மிக்க நன்றி. தயவு செய்து உங்களுடைய ஜாதி சான்றிதழை எடுத்து பாருங்கள். அதில் உங்கள் ஜாதி ஹிந்து மதத்தின் கீழ் உள்ள 3500 ஜாதிகளில் ஒன்று என இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு ஜாதியே இல்லையென்றால், நீங்கள் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடிய அப்பாவி பாரதியின் தூய பிராமணாள் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். அல்லது ஷஹாதா சொல்லாத முஸ்லிமாக இருக்க வேண்டும்.

ஜாதியும் கிடையாது ஹிந்துவும் கிடையாது முஸ்லிமும் கிடையாது எந்த மதமும் கிடையாது, நான் ஒரு சாதாரண மனிதனென்றால், இந்திய அரசியல் சாசன சட்டப்படி நீங்கள் இந்த நாட்டை சார்ந்தவரல்ல. எந்த கோர்ட்டில் போய் வேண்டுமானாலும் நிரூபித்து பாருங்கள்.

சாதாரண மனுஷனுக்கெல்லாம ் இந்த நாட்டில் இடம் கிடையாது.
Quote | Report to administrator
A.M.Abdul Khader
0 #5 A.M.Abdul Khader 2013-08-04 17:18
ப்ரமபுத்திரன் போன்றவர்கலால்தா ன் நாட்டின் மத ஒற்ருமை குலைகிறது
Quote | Report to administrator
இனிய திசைகள்
0 #6 இனிய திசைகள் 2013-08-04 18:25
சிறப்பாக எழுதப்பட்டுள்ளத ு இக் கட்டுரை.

அரசியல் கொலையும் சமுதாய நிலையும் என்ற பெயரில் சேமுமு எழுதிய ஆகஸ்ட் 2013 இனிய திசைகள் (பக்கம்-3) இதழில் தொடர்புடைய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளோம்.

அதில், பத்திரிகை தர்மம் பற்றி பேசத் தகுதியற்ற தினமணியின் "ஓராண்டில் 6 கொலைகள்" என்ற மதவெறியூட்டும் கட்டுரை "முதல் பக்கத்தில்" வெளியானதை இணைத்துள்ளோம்.

data.axmag.com/.../index.html

கொல்லப்பட்டவர்கள், கந்துவட்டி, கள்ளத்தொடர்பு என்ற காரணங்கள் நன்கு தெரிந்தும் "குறி வைக்கப்படும் இந்து தலைவர்கள்" என்று எழுதுவது சாதாரண் நிகழ்வே இல்லை. மிகவும் திட்டமிடப் பட்ட ஒன்று என்பது தெளிவாக விளங்குகிறது.
Quote | Report to administrator
முருகேசன்
0 #7 முருகேசன் 2013-08-05 05:49
பிரம்மபுத்திரனு க்கு வரலாற்றை சொல்லிக் கொடுத்தால், நீங்கள் நன்றி சொல்கிறீர்களே சாணக்கியரே... சாணக்கியம் வழுக்கிடுத்தே.. . பார்த்து..! ;-)

அரசியல் லாபத்திற்காக தமிழ்நாட்டில் மதவெறியை கிளப்ப, சொந்த இனத்தையே போட்டுத் தள்ளும் இந்துத்துவா வெறியர்களை விட, மதம் இன்றி இருக்கும் என் போன்ற நாத்திகன் எவ்வளவோ மேல்!

இந்திய வரலாற்றை வாசித்தீர்கள் தானே... ஆமா! ஹிந்து நாட்டில் முசுலிம்களுக்கு இடமில்லை என்று சொன்ன பிரம்மபுத்திரன் அதாவது உங்கள் கேள்விக்கு என்ன பதில்? நீங்கள் வசிக்கும் நாடு ஹிந்து நாடா? வழ வழாவின்றி நேரடி பதில் சொல்லுங்கள்.
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #8 சாணக்கியன் 2013-08-05 11:41
Quoting முருகேசன்:
பிரம்மபுத்திரனுக்கு வரலாற்றை சொல்லிக் கொடுத்தால், நீங்கள் நன்றி சொல்கிறீர்களே சாணக்கியரே... சாணக்கியம் வழுக்கிடுத்தே... பார்த்து..! ;-)

நீங்கள் வசிக்கும் நாடு ஹிந்து நாடா? வழ வழாவின்றி நேரடி பதில் சொல்லுங்கள்.


திரு.பிரம்மபுத் திரன் எனது நன்பர். இந்த தளத்திற்கு அவரை அழைத்து வந்தது நான்தான். அவரிடம் நான் நேரடியாக கேட்ட கேள்வியை உங்களிடம் கேட்டுவிட்டார். அதான் குழம்பிப் போய்விட்டேன்.
----

ஆம். எனது தாய்நாடு நாடு இந்தியா ஒரு ஹிந்து நாடு. இங்கே வாழும் 30 கோடி முஸ்லிம்களின் மூதாதையரும் ஒரு காலத்தில் சிலைவணக்கம் செய்யும் ஹிந்துவாக வாழ்ந்தவர்கள். ஹிந்துக்களூம் முஸ்லிம்களும் சித்தப்பா பெரியப்பா குழந்தைகள்.
Quote | Report to administrator
பிரம்மபுத்திரன்
0 #9 பிரம்மபுத்திரன் 2013-08-05 11:55
Quoting A.M.Abdul Khader:
ப்ரமபுத்திரன் போன்றவர்கலால்தான் நாட்டின் மத ஒற்ருமை குலைகிறது

அப்துல் காதருக்கு அமாவாசை தெரியாவிட்டால் பிரச்னையில்லை. ஆனால் அடுத்து வரும் பெருநாள் பிறையும் தெரியாமல் போனதுதான் வருந்தத்தக்கது.

காலங்காத்தாலே குல் யா அய்யுஹல் காபிரூன் ஓதும் உங்களுக்கு மத ஒற்றுமை பற்றி பேச என்ன அருகதை?
Quote | Report to administrator
பிரம்மபுத்திரன்
0 #10 பிரம்மபுத்திரன் 2013-08-05 12:17
Quoting முருகேசன்:

மதம் இன்றி இருக்கும் என் போன்ற நாத்திகன் எவ்வளவோ மேல்!

ஹிந்து என்பவன் யார்?. வருணதர்ம ஆகம விதிப்படி ஜாதியுடன் பிறந்து தனது கர்மபலனை அனுபவித்து ஜாதியுடன் இறந்து போகிறவனே ஹிந்து. இந்த கோட்பாட்டை மீறியவன் தீண்டத்தகாதவன்.

இப்பொழுது சொல்லுங்கள், உங்கள் முதுகில் குத்தப்பட்ட ஜாதியென்ன?
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #11 சாணக்கியன் 2013-08-05 15:39
முருகேசனென்று பெயர் வைத்துக்கொண்டு "நான் நாத்திகன் நாத்திகனென்று" எவ்வளவு அழுது புரண்டாலும் உங்களை ஒரு ஹிந்து நாத்திகன் என்றுதான் சமுதாயம் பார்க்கும். எங்களைப்போல் திருக்குரானை கையிலெடுத்தாலொழ ிய, உங்களால் ஜாதியெனும் பாழுங்கிணற்றை விட்டு வெளியேறவே முடியாது.

ஒவ்வொரு நாத்திகனும் பாதி முஸ்லிம். ஏனென்றால், ஷஹாதாவின் அர்த்தமே "கடவுள் இல்லை, அல்லாஹ்வைத்தவிர " என்பதுதான். பாதிக்கிணறு தாண்டிவிட்டீர்க ள். மனதுவைத்தால் மீதிப்பாதி பெரிய விஷயமல்ல.

பாழுங்கிணற்றை விட்டு தப்பி வெளியேறிய உங்கள் சகோதரர்கள்தான் நாங்களும். ஏதோ எனக்குத்தெரிந்த து. மற்றபடி உங்கள் இஷ்டம்.
Quote | Report to administrator
அமரன்
0 #12 அமரன் 2013-08-05 16:24
Quoting சாணக்கியன்:

ஆம். எனது தாய்நாடு நாடு இந்தியா ஒரு ஹிந்து நாடு.


இந்தியா ஒரு ஹிந்து நாடா?

இது என்ன புது செய்தியா இருக்கு!

1947 ல் உருவாகிய இந்திய நாடு, பல்சமூக மக்கள் வாழும் ஒரு பல்லின நாடு! திருத்திக்கொள்ள ுங்கள் அய்யா.
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #13 சாணக்கியன் 2013-08-05 20:05
Quoting அமரன்:

1947 ல் உருவாகிய இந்திய நாடு, பல்சமூக மக்கள் வாழும் ஒரு பல்லின நாடு! திருத்திக்கொள்ளுங்கள் அய்யா.


முஸ்லிம், கிருத்துவர், யூதர் தவிர மற்ற அனைவருமே ஹிந்துக்கள்தான் என்று இந்திய சட்டம் சொல்கிறது. இந்தியா ஒரு ஹிந்து நாடில்லாவிட்டால ், பார்லிமெண்டில் ஏன் ஒவ்வொரு கூட்டத் தொடர் முடிவுறும் போதும் ஹிந்துக்களின் வேத மொழி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பக்திபாடல் வந்தே மாதரம் இசைக்கப்படுகிறத ு?. அனைத்து மதத்தினரும் எழுந்து நின்று மரியாதை தரவேண்டும். சமீபத்தில் ஒரு முஸ்லிம் எம்.பி, இது எனது இறைநம்பிக்கைக்க ு எதிரானதென்று சொல்லி வெளியேறினார். அவருடைய கதி என்னவென்று தெரியவில்லை.

இந்திய ராணூவத்திலும், அரசு அலுவலகங்களிலும் ஒவ்வொரு வருடமும் வேத பண்டிதரை வைத்து ஆயுத பூஜை செய்யப்படுகிறது . ஒவ்வொரு நல்ல காரியமும் ஐயர் பூஜை செய்த பிறகுதான் துவங்குகிறது.

பன்மத பல்லின பன்கலாச்சார நாடென்றால் குரான், பைபிள், தோரா, குருகிரந் என்று அனைத்து மதத்தினருக்கும் வாய்ப்பளிக்கலாம ே?. மதச்சார்பற்ற "சாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" என்று அல்லாமா இக்பால் எழுதிய முதல் தேசிய கீதத்தை இசைப்பார்களா?

செக்யூலரிசம் என்பது "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வத ு போல் மற்றொரு வடிகட்டின பொய்.
Quote | Report to administrator
அமரன்
0 #14 அமரன் 2013-08-06 05:04
//முஸ்லிம், கிருத்துவர், யூதர் தவிர மற்ற அனைவருமே ஹிந்துக்கள்தான் என்று இந்திய சட்டம் சொல்கிறது.//

இப்படி சொன்னதால் இந்தியா ஒரு ஹிந்து நாடா? என்னய்யா பேசுகிறீர்கள்? புரிந்துதான் பேசுகிறீர்களா? இல்லை, வேண்டுமென்றே ஹிந்துக்களுக்கு எதிராக பிற மதத்தினரைத் தூண்டி விடுகிறீர்களா? உண்மைக்கு மாறாக பொய்களைப் பரப்பி மதக்கலவரத்திற்க ுத் தூபம் போடாதீர்கள்.

இந்தியா ஒரு "மதச்சார்பற்ற, ஜனனாயக, பன்முக, குடியரசு" என இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது. அப்படி இருக்கும்போது இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பது, "நான் ஒரு ஹிந்து தேசியவாதி" என "மதச்சார்பற்ற இந்திய நாட்டு சட்டப்படி ஆட்சி செய்யும் மோடி" உளறியதற்கு ஒப்பானது.

The Preamble to the Constitution of India[7] grants "liberty of thought, expression, belief, faith and worship" immediately after proclaiming that India is a "SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC." This reading of the constitution suggests that the Constitution of India has a pluralistic interpretation of Secularism.

//இந்தியா ஒரு ஹிந்து நாடில்லாவிட்டால ், பார்லிமெண்டில் ஏன் ஒவ்வொரு கூட்டத் தொடர் முடிவுறும் போதும் ஹிந்துக்களின் வேத மொழி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பக்திபாடல் வந்தே மாதரம் இசைக்கப்படுகிறத ு?. அனைத்து மதத்தினரும் எழுந்து நின்று மரியாதை தரவேண்டும். சமீபத்தில் ஒரு முஸ்லிம் எம்.பி, இது எனது இறைநம்பிக்கைக்க ு எதிரானதென்று சொல்லி வெளியேறினார். அவருடைய கதி என்னவென்று தெரியவில்லை.

இந்திய ராணூவத்திலும், அரசு அலுவலகங்களிலும் ஒவ்வொரு வருடமும் வேத பண்டிதரை வைத்து ஆயுத பூஜை செய்யப்படுகிறது . ஒவ்வொரு நல்ல காரியமும் ஐயர் பூஜை செய்த பிறகுதான் துவங்குகிறது.

பன்மத பல்லின பன்கலாச்சார நாடென்றால் குரான், பைபிள், தோரா, குருகிரந் என்று அனைத்து மதத்தினருக்கும் வாய்ப்பளிக்கலாம ே?. மதச்சார்பற்ற "சாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" என்று அல்லாமா இக்பால் எழுதிய முதல் தேசிய கீதத்தை இசைப்பார்களா?

செக்யூலரிசம் என்பது "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வத ு போல் மற்றொரு வடிகட்டின பொய்.//


இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு எனக்கூறுகிறது. அதன்படி ஆட்சி செய்வேன் என சத்தியப்பிரமாணம ் செய்து ஆட்சி பொறுப்பேற்ற மோடி, தன்னை ஒரு "ஹிந்து தேசியவாதி" என இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேட்டி கொடுக்கிறார். இது அவர் செய்த சத்தியப்பிரமாணத ்துக்கு எதிரானது. ஆனால், இதனை இங்கு எவருமே கேள்வி கேட்கவோ அவரை நீதிமன்றத்துக்க ு இழுக்கவோ செய்யவில்லை.

இது போன்றதுதான் நீங்கள் சுட்டிக்காட்டிய ுள்ள விசயங்களும்!

நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடும்போது எழுந்து நிற்கமாட்டேன் எனக்கூறிய முஸ்லிம் எம்.பிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த விசயம் உங்களுக்குத் தெரியுமா? இந்தியா ஒரு இந்து நாடு எனில், உச்ச நீதிமன்றம் அந்த முஸ்லிம் எம்பியைச் சிறையில் தள்ளியிருக்கவேண்டும்.

அரசு அலுவலகங்கள், காவல்னிலையம், இராணுவம் என எங்கும் நீக்கமற இந்து கோயில்கள் கட்டபட்டு வழிபடுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என நீதிமன்ற உத்தரவுகள் ஏற்கெனவே வந்துள்ளன. அவற்றை நீக்கவேண்டுமெனவ ும் உத்தரவுகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் அந்த நீதிமன்ற உத்தரவுகள் புறக்கணிக்கப்பட ுவதற்கு, அதிகார மட்டங்களில் ஹிந்துத்துவம் ஊடுருவியுள்ளதே காரணம்.

இதனால் இந்தியா ஒரு ஹிந்து நாடு என்று கூறுவது சுத்த பைத்தியக்காரத்தனம்.

இந்தியா ஹிந்து நாடாக வேண்டுமென உங்கள் மனம் நாடுகிறது எனில் அதனைத் தெளிவாக கூறிவிடுங்கள். அதைவிடுத்து, அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாததைக் கூறி குற்றவாளியாக வேண்டாம்.
Quote | Report to administrator
அமரன்
0 #15 அமரன் 2013-08-06 05:07
இந்து தேசியவாதிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த இந்துக்களையே போட்டுதள்ளிவிட் டு முஸ்லிம்கள்மீது பழிபோடுகின்றனர் . இப்பதிவு அதனையே சுட்டுகிறது. சாணக்கியம் இப்பதிவு சார்ந்து தன் கருத்துகளை முன்வையுங்கள்.
Quote | Report to administrator
விஜயபாரதி
+1 #16 விஜயபாரதி 2013-08-06 05:49
போலீசிடம் கடத்தல் நாடகம் : இந்து அமைப்பு பிரமுகர் கைது

கோவை : கடத்தல் நாடகமாடிய, இந்து இயக்க பிரமுகர், சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல்; இந்து மக்கள் கட்சி - அனுமன்சேனா தமிழக இணைத் தலைவர். சேலம் பா.ஜ., பிரமுகர் கொலையை அடுத்து, இவருக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந ்தது. கடந்த ஜூலை, 29ம் தேதி,கோத்தகிரிய ில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நண்பருடன், இரவு கோவை திரும்பிக் கொண்டிருந்தார். இடையில், மேட்டுப்பாளையத் தில் தலைமறைவான இருவரையும், போலீசார் தீவிரமாக தேடினர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன், திடீரென கோவை திரும்பிய சக்திவேல், கலெக்டர் அலுவலக வளாகத்தில் அளித்த பேட்டியில், ""போலீஸ் உடையில் மூன்று பேர், கேரளாவுக்கு, காரில் கடத்தினர்; அவர்களிடம் இருந்து தப்பி வந்து விட்டோம்,'' என, தெரிவித்தார்.

இதற்கிடையில், இவருடன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ராம்ராஜ், கோவை வந்ததும் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் நிருபர்களை சந்தித்து, அவர் அளித்த பேட்டியில், ""கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் வந்து, அங்கிருந்து கன்னியாகுமரி சென்றுவிட்டோம். அருகில் உள்ள சுசீந்தரம், திருவனந்தபுரம் சென்றுவிட்டு, ரயிலில் கோவை வந்தோம்,'' எனறார்.

இருவரும் தனித்தனியாக அளித்த பேட்டியில், மாறுபட்ட கருத்து இருந்ததால், போலீசார் சந்தேகம் அடைந்தனர்; ராம்ராஜை விசாரித்தனர். அவர், மாஜிஸ்திரேட் முன்னிலையில், ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

இதை அடுத்து, போலீசாரை அலைக்கழித்த சக்திவேல், நேற்று கைது செய்யப்பட்டார். சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்டு, தீவிரமாக விசாரிக்கப்பட்ட ார். நேற்று மாலை, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

www.dinamalar.com/.../
Quote | Report to administrator
பிரம்மபுத்திரன்
-2 #17 பிரம்மபுத்திரன் 2013-08-06 09:30
இஸ்லாம், கிருத்துவம், பௌத்தம் என்று அனைவருக்கும் பல நாடுகள் உள்ளன. அனைத்து மதங்களின் தாயான ஹிந்து மதத்துக்கென்று ஒரு நாடில்லியே, அய்யகோ. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி 80 கோடி ஹிந்துக்களுக்கு அவர்களது ஒரே நாடான ஹிந்துஸ்தானை ஹிந்து நாடு என்று சொல்லக்கூட அருகதையில்லையா?

வெறுங்கையோடு வந்த பாபர், கஜினி முகமதுவெல்லாம் எனது நாட்டை ஆண்டு அனுபவித்து கூறு போட்டு பாக்கிஸ்தான் பங்களாதேஷ் என்று முஸ்லிம் நாடுகளை உருவாக்கி விட்டான். எங்கள் ராமர் கோவில் கட்ட அந்த துண்டு நிலத்தை விட்டு கொடு என்றால், 500 வருடமாக கேஸ் மேல் கேஸ் போட்டு மிரட்டுகிறான். இது தவிர, எமது காபிர் மண்ணில் விளைந்த உணவை உண்டு பல்கிப்பெருகும் 30 கோடி முசல்மான்கள், எப்படா பாரதமாதவுக்கு புர்கா போட்டு மும்தாஜ் பேகமாக்கி ஹஜ்ஜுக்கு அனுப்புவதென்று கனவு காண்கிறார்கள்.

என்னிடமே நேரடியாக வந்து "சகோதரா, கல்லையும் மண்ணையும் வணங்குகிறாயே. மாட்டின் மூ*** குடிக்கிறாயே. உனக்கு அறிவிருக்கா?" என்று கேட்கிறார்கள். எவ்வளவு திமிர். வரவர முசல்மான்களுக்க ு ரொம்பத்தான் தைரியம் வந்துவிட்டது.

எனது நாடு ஹிந்து நாடு என்று சொன்னால், நெருப்பை மிதித்தது போல் அலறுகிறார்கள். இவர்களை நாட்டை விட்டு அடித்து விரட்டினால்தான் ஹிந்துக்கள் நிம்மதியாக வாழமுடியுமென்று எங்கள் மஹாத்மா மோடி சொல்லுவதில் தவறென்ன?
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #18 சாணக்கியன் 2013-08-06 10:33
அமரனைப்போன்ற மனசாட்சிக்கு பயந்த நல்ல ஹிந்து சகோதரர்கள் பெரும்பான்மையாக இருப்பதால்தான் இன்னமும் இந்தியா ஒரே நாடாக இருக்கிறதென்பதி ல் எந்த சந்தேகமுமில்லை. அயோக்கியன் மோடிக்கு எதிராக முதன்முதலில் எழுந்து நின்றவர்கள் நேர்மையான பிராமின் அதிகாரிகள்தான் என்றால் மிகையாகாது.

யா அல்லாஹ். எங்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்கும் ஹிந்து சகோதரர்களை நல்ல படியா வை.
Quote | Report to administrator
முருகேசன்
0 #19 முருகேசன் 2013-08-06 14:31
விடுங்க அமரன்,

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்வதை எதிர்த்து, ஹிந்து நாடு தான் இது என்று "நிறுவ" முயற்சிக்கும் சாணக்கியத்துவம் இங்கே வேகாது என்று சிலருக்கு தெரியும்.

விஜயபாரதி, தினமலர் செய்தியை அளித்தமைக்கு நன்றி.

ஆடிட்டர் ரமேஷை கொலை தொடர்புடைய ரவுடி முரளி பற்றி இந்நேரம் தளமும் , தினத்தந்தியும் வெளியிட்டுள்ள செய்தி:

inneram.com/.../...
(அங்கேயும் சாணக்கியமா ;-)

www.dailythanthi.com/.../
Quote | Report to administrator
சிராஜுத்தீன்
0 #20 சிராஜுத்தீன் 2013-08-06 17:35
Quote:
யா அல்லாஹ். எங்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்கும் ஹிந்து சகோதரர்களை நல்ல படியா வை.
சரியா சொன்னீங்க சாணக்கியன். ஹிந்துக்களுக்கு அரணாக முஸ்லிம்களும் - முஸ்லிம்களுக்கு அரணாக ஹிந்துக்களும் இந்தியாவில் இருப்பதால் தான் கொஞ்ச நஞ்ச மனித நேயம் மிச்சம் இருக்கிறது.

இந்த ஆக்கத்தில் இருக்கும் ஹிந்துத்துவா மதவெறியர்கள் பற்றி ஒருவார்த்தை பேசாமல் # 17 எண்ணில் கமெண்ட் போட்டு இருக்கும் பிரம்மனின் புத்திரனுக்கு புரியற மாதிரி விளக்கம் கொடுங்க சாணக்கியன்.
Quote | Report to administrator
அமரன்
0 #21 அமரன் 2013-08-06 23:07
//அனைத்து மதங்களின் தாயான ஹிந்து மதத்துக்கென்று ஒரு நாடில்லியே,//

அப்போ நேபாளம் ஹிந்து நாடில்லையா? அது ஹிந்துநாடு என அங்குச் சென்றுவிடலாமென நினைத்திருந்தேன ே! அய்யகோ! இனி நான் என் செய்வேன்!

சரி, அதிருக்கட்டும்! "ஹிந்து மதம்" அப்டின்னா என்ன? அப்படி ஒரு மதம் உள்ளதா? வரையறுங்கள் ப்ளீஸ்! அந்த மதம் எங்குள்ளது?

//அய்யகோ. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி 80 கோடி ஹிந்துக்களுக்கு //

அய்யகோ! கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி என தமிழ் மொழியினையல்லவா நினைத்திருந்தேன ். அதையும் மாற்றிவிட்டார்க ளா? சொல்லவேயில்ல! சொல்லிட்டு மாத்துங்கப்பா! வரலாற்று திரிபுக்குச் சொந்தக்காரர்கள் , மொழியின் வரலாற்றைக்கூட விட்டுவைக்கமாட் டேன்கிறார்களே! அய்யகோ என் செய்வேன்!

//எமது காபிர் மண்ணில் விளைந்த உணவை உண்டு பல்கிப்பெருகும் 30 கோடி முசல்மான்கள், எப்படா பாரதமாதவுக்கு புர்கா போட்டு மும்தாஜ் பேகமாக்கி ஹஜ்ஜுக்கு அனுப்புவதென்று கனவு காண்கிறார்கள்./ /

கணக்கு கொஞ்சம் இடிக்குதே! 110 கோடியில் 80 கோடி ஹிந்துக்கள்; 30 கோடி முஸ்லிம்கள் எனில், கிறிஸ்தவர்களும் சீக்கியர்களும் யூதர்களும் புத்தமதத்தினரும ் எங்கே போயினரப்பா? ஓ, அவுகளையும் அந்த 80 கோடி லிஸ்டுல சேத்துட்டீங்களா ? சொல்லவேயில்ல! ஹிந்து என அடையாளப்படுத்தா த என்னையும் அந்த 80 கோடில உட்படுத்திவிட்ட ீர்களேய்யா. என்ன நியாயம் இது? அசந்தா, ஜட்டிய உருவிட்டு டவுசர் போட்டு விட்டுவிடுவீர்க ள் போலுள்ளதே!

சரி அதிருக்கட்டும்;

இந்திய மண்ணில் விளைவது இந்தியர்களுக்கு மட்டும்தான் சொந்தமெனில், கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு இந்தியாமீது படையெடுத்து வந்த "ஹிந்து மதத்தை உருவாக்கிய" ஆரிய பார்ப்பனர்கள் சாப்பாடில்லாமல் செத்துப் போயிருவானுகளே? என்ன செய்வது?

//என்னிடமே நேரடியாக வந்து "சகோதரா, கல்லையும் மண்ணையும் வணங்குகிறாயே. மாட்டின் மூ*** குடிக்கிறாயே. உனக்கு அறிவிருக்கா?" என்று கேட்கிறார்கள். எவ்வளவு திமிர். வரவர முசல்மான்களுக்க ு ரொம்பத்தான் தைரியம் வந்துவிட்டது.//

கேள்வி நியாயமாத்தானே இருக்கு? ஏம்பா பிரம்மபுத்திரரே , நீர் படித்தவர்தானே? எதனுடைய சிறுநீரையாவது மனுசன் சாப்பிடுவானா? யூரியா என்ற கொடிய அசுத்தம் நிறைந்த சிறுநீரைக் குடிப்பவன் மறை கழண்டவனாகத்தான் இருக்கவேண்டும். இன்னும் எத்தனை பெரியார்கள் வந்தாலும் நான் மறை கழண்ட மூடனாகவேதான் இருப்பேன்னு அடம்பிடிக்கிறீர ்களே!
Quote | Report to administrator
அமரன்
0 #22 அமரன் 2013-08-06 23:16
//அமரனைப்போன்ற மனசாட்சிக்கு பயந்த நல்ல ஹிந்து சகோதரர்கள் பெரும்பான்மையாக இருப்பதால்தான் இன்னமும் இந்தியா ஒரே நாடாக இருக்கிறதென்பதி ல் எந்த சந்தேகமுமில்லை. //

அய்யா சாணக்கியன்,

நான் எப்போ ஹிந்துவானேன்? எனக்கே தெரியாமல் எப்போப்பா எனக்கு பூணூல் சுற்றிவிட்டீர்க ள்? ஆமாம், சக்கிலியனான எனக்கு பூணூல் போட்டுவிடுவீர்களா?

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவே முடியாதப்பா!

"ஹிந்து" என அடையாளப்படுத்து வதிலேயே குறியாக இருக்கும் சாணக்கியரே, "ஹிந்து" என்றால் திருடன் என்றர்த்தமாம். என்னை ஏன் திருடனாக்குகிறீ ர்கள்? நீங்கள் வேண்டுமெனில் திருடனாகவே இருங்கள். ஆளை விடுங்கள்.
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #23 சாணக்கியன் 2013-08-07 11:50
திரு.பிரம்ம புத்திரரே, 30 கோடி முஸ்லிம்களை அடித்து விரட்டுவது சாத்தியமா?. 1947ல் ஜின்னா, பாக்கிஸ்தானை உருவாக்கிவிட்டா ர். 65 வருடங்களாக பாக்கிஸ்தானை அழித்து விடுவோமென்று மிரட்டிய மிரட்டலில், அவர்கள் அணுகுண்டை கண்டுபிடித்து உங்களுடைய ஆரியக்கூத்துக்க ு ஆப்படித்துவிட்டார்கள்.

சிங்கள வெறியனுடன் கூட்டு சேர்ந்து இலங்கைத்தமிழனை அகதியாக்கிவிட்ட மமதையில், இப்பொழுது 30 கோடி முஸ்லிம்களை அடித்து விரட்டி இந்தியாவை ஆரியவர்த்தா தேசமாக மாற்ற மனப்பால் குடிக்கிறீரா?.

போய் உங்கள் கண்கண்ட பெருமாள் மோடியிடம் சொல்லி அழுங்கள். தலைக்கு மேல் வெள்ளம். ஜான் போனாலென்ன, முழம் போனாலென்ன?. குல் யா அய்யுஹல் காஃபிரூன்.
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #24 சாணக்கியன் 2013-08-07 12:26
ஓ பிரம்மபுத்திரா! . உறங்கும் எங்கள் தந்தை பெரியாரை தட்டியெழுப்புவத ு எப்படி என தயங்கிக்கொண்டிருந்தேன்
தடுக்கி அவர் மேல் நீயே விழுந்துவிட்டாய்
அதோ தடியுடன் வருகிறார் தாத்தா
ஓடு ஓடு.
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #25 சாணக்கியன் 2013-08-07 13:28
அமரன்
//கணக்கு கொஞ்சம் இடிக்குதே! 110 கோடியில் 80 கோடி ஹிந்துக்கள்; 30 கோடி முஸ்லிம்கள் எனில்//
-----

இன்றைய இந்தியாவின் ஜனத்தொகை 128 கோடி. என்னுடைய கணக்குப்படி 80 கோடி ஜாதி ஹிந்துக்கள், 30 கோடி முஸ்லிம்கள், 18 கோடி கிருத்துவர், சீக்கியர், பௌத்தர், ஜைனர் etc.

இந்திய அரசாங்கம் முஸ்லிம்களின் ஜனத்தொகை 15 கோடி என சொல்கிறது. இது மற்றொரு அண்டப்புளுகு. இந்தியா-பாக்கிஸ ்தான் பிரிவினை போது, 40 சதவீத முஸ்லிம்கள் வாழும் பகுதி பாக்கிஸ்தானாக பிரித்து தரப்பட்டது. மீதி 60 சதவீத முஸ்லிம்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்ததால் அவர்களுடைய நிலப்பங்கை பிரிக்க முடியவில்லை.

இன்று "பாக்கிஸ்தான் + பங்களாதேஷ்" ஜனத்தொகை 40 கோடி. ஆக 40 சதவீத முஸ்லிம் ஜனத்தொகை 40 கோடியாக உயர்ந்திருக்கைய ில், 60 சதவீத முஸ்லிம் ஜனத்தொகை எவ்வளவாக பல்கி பெருகியிருக்கும ் என்பதை கனிதமேதை திரு.பிரம்ம புத்திரன் கண்டுபிடித்து நமக்கு சொல்வாரா?
Quote | Report to administrator
Senthil Nathan
0 #26 Senthil Nathan 2013-08-07 17:54
ஆடிட்டர் ரமேஷின் கொலையானது அவருடைய ஏதோ ஒரு தனிப்பட்ட "அந்தரங்க" விஷயத்திற்காகவே என்பதாகவே
தெரிகிறது.

விசாரணையின் முழு உண்மையும் கூடிய விரைவில் வெளிவரும் அப்போது தெரியும்.

சுமார் 200 பஸ்களை அடித்து உடைத்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எமது தமிழ் தேசத்தின் சொத்துக்களை அழித்து நாசப்படுத்திய இந்த அதி பயங்கவாதிகளான ஆர்.எஸ்.எஸ். இந்து முண்ணனி, பி.ஜே.பி. ஆகியவற்றின் படு பயங்கர கோரமுகம்
அப்பதான் இருக்கு கச்சேரி...

Senthil Nathan
facebook.com/.../...
Quote | Report to administrator
தமிழன்பன்
0 #27 தமிழன்பன் 2013-08-16 08:38
இறுதியாக உள்ள செய்தி:

வேலூர்: சேலம் பா.ஜ., பிரமுகர், ஆடிட்டர் ரமேஷ் கொலையில் முக்கியக் குற்றவாளியைத் தேடி, சி.பி.சி.ஐ.டி., போலீசார், வேலூரில் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர்.

வழக்கில் முக்கியக் குற்றவாளி மதுரை வீரன், வேலூர், காந்தி ரோட்டில் லாட்ஜில் பதுங்கி இருப்பதாக, சேலம், போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து, நான்கு பேர் கொண்ட போலீஸ் குழு, வேலூரில் பல பகுதி தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். வருகைப் பதிவேடு மற்றும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

காந்தி ரோட்டில், வீடுகள் போன்று உள்ள தங்கும் விடுதிகளையும் சோதனை செய்தனர். குற்றவாளி மதுரை வீரன், காந்தி ரோட்டில், ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

www.dinamalar.com/.../
Quote | Report to administrator
கார்த்திக்
0 #28 கார்த்திக் 2013-09-04 01:14
கேவலம், மதவெறியைத் தூண்டிவிட்டு நாட்டை துண்டாடியா தேர்தலில் வெற்றி பெற நினைப்பது?

இதற்குப் பிச்சை எடுத்து பிழைக்கலாம். அது எவ்வளவோ மேல்.

இந்து மக்களே, ஹிந்துத்துவாவின ் ஃபாசிச வெறியை கண்டுகொண்டு இந்த தகவலை பரப்பி வருகின்றனர்.

oi39.tinypic.com/28svr4w.jpg

நன்றி.
Quote | Report to administrator
சிதம்பரநாதன்
0 #29 சிதம்பரநாதன் 2014-05-21 15:13
முன் விரோதக் கொலை, கள்ளத் தொடர்பு கொலை, கட்டப்பஞ்சாயத்த ு கொலை, கந்து வட்டிக் கொலை; ஆனா பழி மட்டும் முசுலிம் மேலே!

நீங்க என்ன எடுத்துச் சொல்லி என்ன ஆச்சு?

ஊட்டப்பட்ட மதவெறி ஜெயித்து விட்டதே? தேர்தலுக்கான மத வியாபாரம் வென்று விட்டதே?
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்