முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

செய்தி விமர்சனம்

டந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை, இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அப்போதைய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் இந்த நிகழ்வு குறித்து, "இனிமேல் வெளிநாட்டுத் தலைவர்களை எந்த முகத்துடன் சந்திப்பேன்?" என்று வருத்தப்பட்டிருந்ததும் "ராஜ தர்மத்தைப் பேணுங்கள்" என மோடியிடம் சீறியதும் குறிப்பிடத்தக்கன. இந்திய வரலாற்றில் மோடியைப் போன்று கொடுங்கோல் முதல்வர்கள் எவருமில்லை என்று சொல்லப்படும் அளவுக்கு மோடி தலைமையிலான குஜராத் அரசின் இனச்சுத்திகரிப்பு நிகழ்வு வர்ணிக்கப்பட்டது.

சில வருடங்களுக்குமுன் CNN-IBN தொலைக்காட்சியில் நடந்த கரன் தாப்பரின் Devils Advocate நிகழ்ச்சியில் இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறிய மோடி, நிகழ்ச்சியின்போது தண்ணீர் குடித்தும், நிகழ்ச்சி நடத்துனர்மீது சீறியும் பாதியிலேயே வெளியேறினார். தேர்தல்களின்போது பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையிலும், கூட்டணிக்கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையிலும் மோடியின் நடவடிக்கை இருந்து வருகிறது.

இந்நிலையில், ராய்ட்டர் செய்தி நிறுவன நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில், குஜராத் இனச்சுத்திகரிப்புப் படுகொலைகள் குறித்து வருந்துகிறீர்களா என்ற கேள்விக்கு, "காரில் செல்லும்போது ஓட்டுனர் இருக்கையில் இருந்தாலோ அல்லது பின்னிருக்கையில் இருந்தாலோ, கார் சக்கரத்தில் நாய்க்குட்டி ஒன்று சிக்குண்டு இறக்கும்போது எத்தகைய வருத்தம் ஏற்படுமோ, அதேபோல் தானும் வருந்தியதாகச் சொன்னார்.


ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சின்னாபின்னமாக்கியும், பெண்களை வன்புணர்ந்தும், கர்ப்பிணியின் வயிற்றைக் கீறிக் கருவைத் தீயிலிட்டுப் பொசுக்கியும் மகிழ்ந்ததோடு, அவற்றை தேசப்பற்றின் அடையாளமாகச் சொல்லிப் புளகாங்கிதம் அடைந்த மனிதத் தன்மையற்ற மதவெறியர்களைத் தொண்டர்களாகக் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்திய மோடியின் செயல், ரோம் தீப்பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனின் கொடுங்கோன்மையையும் விஞ்சியது.

மோடியின் நாய்க் கருத்து தேசியளவிலான விமர்சனங்களை மதச்சார்பின்றி ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பாஜக செய்தித் தொடர்பாளர் மோடியின் பேட்டி தவறாகத் திரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் எச். ராஜா, குஜராத் முஸ்லிம்களை நாய்க்குட்டியோடு ஒப்பிட்டதைக் கேவலாமக் கருதாமல் பைரவர் என்ற இந்து சமயக் கடவுளுடன் ஒப்பிட்டதாக எடுத்துக்கொள்ளலாமே என்று வியாக்கியானம் பேசியுள்ளார். எச்.ராஜாவை வெறிநாயோ சொறிநாயோ கடித்தால் பைரவர் கடித்துவிட்டதாக உயர்வாகக் கருதி, தொப்புளைச் சுற்றி ஊசி போடாமல் இருப்பாரா?நாகரிக உலகில் மனித உயிர்களின் மேன்மையைப் போற்றும் எவரும் மோடியின் கீழ்த்தர ஒப்பீட்டை ஏற்கமாட்டார்கள் என்பதோடு கண்டிக்கவும் செய்வர். ஆனால், மோடியைப் பிரதமராக்கி அகண்ட பாரதம் அமைக்கலாம் என்ற கனவில் மிதந்து கொண்டிருக்கும் அவரது பரிவாரங்கள் இதைப் பூசிமெழுகி நியாயப்படுத்துவது வெந்த புண்ணில் சூலாயுதத்தைப் பாய்ச்சுவதாக உள்ளது.

ஆயிரக்கணக்கான குடிமக்களை உள்நாட்டு அகதிகளாக்கி, தேர்தலில் வாக்களிக்க முடியாமல் நாடோடிகளாக்கி விட்டு மூன்றாவது முறையாக முதலமைச்சராக மத வெறியர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மோடியின் ஆசிர்வாதத்துடன்தான் இனச் சுத்திகரிப்பு நடத்தப்பட்டதாக குற்றவாளிகளின் வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன. எனினும், மோடி பொறுப்பான பதவியில் இருப்பதால் நடந்த தவறைக் கண்டித்து, கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தித் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெயரளவிலாவது சொல்லியிருக்கலாம். ஆனால், இன்னும் மேட்டுக்குடி ஆதிக்க மனப்பான்மையில் மிதப்பதையே மோடியின் கருத்து உறுதி செய்கிறது.

தப்பித் தவறி அடுத்த வருடம் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வென்று சாபக் கேடாக மோடி பிரதமராகும் பட்சத்தில் நாய்க்குட்டிகள் அடிபட்டு இறந்தால் வருத்தப்படும் பிரதமரைக் கொண்டிருப்பதற்காக நாய்கள் வேண்டுமானால் சந்தோசப்படலாம்.

-எழில் பிரகாசம் (நன்றி: இந்நேரம்.காம்)

தொடர்புடைய ஆக்கங்கள்:

மாநில முதல்வராக ஒரு கொலைகார வெறிநாய் - குமுதம்!

"குஜராத் கொலைகளுக்கு அனுமதியளித்தவர் மோடி" EX-DGP, Gujarat

குஜராத் : உடைந்து நொறுங்கும் வளர்ச்சி பிம்பம்

நரவேட்டை நரேந்திர மோடியைத் தூக்கில் போடுவது எப்போது?

விலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : "இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்" SIT

மோடிக்கு அஜ்மல் கசாப் ஈடாவானா?

அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்!

அதிர வைத்த ஓர் ஆவணப்படம்!

பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?

நீதி நின்று கொல்லும்?

Comments   

சாணக்கியன்
+3 #1 சாணக்கியன் 2013-07-19 23:05
பைரவன் என்பது நாய்க்கடவுளை குறிக்குமென்றால ், சிந்து பைரவி என்பது சிந்து நதிக்கரையில் வாழ்ந்த பெண் நாயை குறிக்குமா?
Quote | Report to administrator
Dr.A.Anburaj
-1 #2 Dr.A.Anburaj 2013-07-20 18:30
பங்களாதேஷ் என்று ஒருநாடு உண்டு.அங்கேயும் இந்துக்கள் என்று ஒரு மக்கள் கூட்டம் வாழ்கின்றது. அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளதா? அந்தநாட்டில் உள்ள குரான் படித்த மக்களால் அவர்களுக்கு கடந்த 100 வருடங்களாக செய்யப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து அதற்கு நிரந்தர தீர்வுஎன்ன என்பதை தாங்கள் எதும் அறிவீர்களா ? தங்களிடம் ஏதேனும் தீர்வு உள்ளதா? வாசகர்கள் அறிய தெரிவிக்கலாமா.
Quote | Report to administrator
sanakkiyan
+1 #3 sanakkiyan 2013-07-21 05:42
Quoting Dr.A.Anburaj:
அந்தநாட்டில் உள்ள குரான் படித்த மக்களால் அவர்களுக்கு கடந்த 100 வருடங்களாக செய்யப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து அதற்கு நிரந்தர தீர்வுஎன்ன என்பதை தாங்கள் எதும் அறிவீர்களா ? தங்களிடம் ஏதேனும் தீர்வு உள்ளதா? வாசகர்கள் அறிய தெரிவிக்கலாமா.


பங்களாதேஷ் கிழக்கு பாக்கிஸ்தானாக 1947ல் இந்தியாவிலிருந் து பிரிக்கப்பட்டட் டு 65 வருடங்கள்தான் ஆகிறது. கடந்த 100 வருடங்கள் என்று சொல்வது சரித்திர தவறு.

இலங்கையில் பௌத்த தீவீரவாதிகளால் தினந்தோறும் கொல்லப்படும் தமிழன் உங்கள் கண்களுக்கு ஏன் புலப்படவில்லை? அவர்களுக்கு என்ன தீர்வென்று நீங்கள் சொன்னால், அதே தீர்வை பங்களாதேஷ் ஹிந்துக்களுக்கு ம் நீங்கள் தாராளமாக தரலாம். உங்கள் தீர்வு என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
Quote | Report to administrator
அப்துல் ரஹ்மான்
-1 #4 அப்துல் ரஹ்மான் 2013-07-21 16:13
//பங்களாதேஷ் கிழக்கு பாக்கிஸ்தானாக 1947ல் இந்தியாவிலிருந் து பிரிக்கப்பட்டட் டு 65 வருடங்கள்தான் ஆகிறது. கடந்த 100 வருடங்கள் என்று சொல்வது சரித்திர தவறு.//

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை நடந்தது 1947 ல். அதாவது பாகிஸ்தான் உருவாகி 65 ஆண்டுகள் ஆகிறது.

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக, மேற்கு பாகிஸ்தானாக அறியப்பட்டிருந் த இன்றைய பங்களாதேஷில் உள்நாட்டு கலகங்களுக்கு ஆயுத உதவிகள் செய்து தனிநாடு கோரிக்கைக்குப் பின்புலமாக விளங்கியது இந்திரா காந்தி அம்மையார்.

பாகிஸ்தானுக்கு எதிராக தனிநாடு கேட்டு உள்நாட்டு கலகம் வெடித்த இன்றைய பங்களாதேஷில் கலகக்காரர்களை அடக்க பாகிஸ்தான் இராணுவம் அனுப்ப தயாரான வேளையில், இந்தியா மீது பாகிஸ்தான் விமானங்கள் பறக்கக்கூடாது என தடை விதித்து, பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவைச் சுற்றி வந்து இன்றைய பங்களாதேஷில் இறங்குவதற்குக் காலதாமதத்தை ஏற்படுத்தி கொடுத்த புண்ணியவதி இந்திரா அம்மையாரின் உதவியாலேயே இன்றைய பங்களாதேஷ் உருவானது!

அதாவது பங்களாதேஷ் உருவாகி அதிகப்பட்சம் 50 ஆண்டுகள்தாம் ஆகிறது.

டாக்டரான நண்பர் அன்புராஜிற்கு வரலாறு தெரியாது போலும்! இவர்தாம் அங்குள்ள இந்துக்கள் கொடுமைபடுத்தப்ப டுகிறார்கள் என தகவல் தருகிறார். நம்புவோம்!

உலகில் எங்கு என்றாலும் அநியாயமாக மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டால் , அவ்வாறு செய்யும் எவரையும் முஸ்லிம்கள் ஆதரிப்பதில்லை என்பதை நண்பர் அன்புராஜ் புரிந்துகொள்ளட் டும்!
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #5 Dr.A.Anburaj 2013-07-22 15:21
வாசிப்பவன் கேணயன் என்றால் வாசப்படியிலும் நெய் வடியும்.நண்பர்க ளே !
ஜின்னா பாக்கிஸ்தான் கேட்டார் வன்முறையில் பெற்றுக் கொண்டார். அதற்குப் பிறகாவது நிம்மதியாக வாழ்ந்தார்களா ? கிழக்கு பாக்கிஸதான் மக்கள் (முஸ்லீம்- இந்து )வங்க மொழி பேசுகின்றவர்கள் . மேற்கு பாக்கிஸ்தான் மக்கள் உருது பேசுகின்றவர்கள் . உருது பேசுகின்றவன் உயர்ந்தவன் பெங்காலி பேசுகின்றவன் தாழ்ந்தவன் என்ற கொள்கை மேற்கு பாக்கிஸ்தானின் ஆட்சியாளர்களால் எழுதாத சட்டமாக இருந்து, அரசு பதிவிகளிலும் பிற விசயங்களிலும் வங்க மக்கள் வஞசிக்கப்பட்டனர ். உருதுமொழி வங்க மக்கள் மீது திணிக்கப்பட்டது . An Islamic state can have only one offiicial Language.That only could be Urdu Urdu only. என்று ரேடியாவில் முழுங்கினார் ராணுவ தளபதி-ஆட்சியாளர ் யாகியாகான். தேர்தலில் பெரும்பான்மை பெற்ற முஜிபுர் ரகமானுக்கு பதவி பிரமாணம் செய்யாமல் சிறையில் அடைத்த சமாதான வள்ளல் யாகியாகான். யாகியாகானின் பொல்லாத நடவடிக்கைகள் கண்டு கிளர்ந்து எழுந்தனர்-கிழக் கு பாக்கிஸதான் மக்கள். இந்து-முஸ்லீம் என்ற பேதம் போராட்டத்தில் இல்லை. யாகியாகான் வங்க மக்களுக்கு அளித்த அநீதியை எதிர்த்தே கிளர்ச்சி துவங்கி உள்நாட்டுப் போரில் முடிந்தது. அதில் கொல்லப்பட்டவர்க ள் - முஸ்லீம்களம் இந்துக்களும் சேர்த்து 5 மில்லியன். கற்பழிக்கப்பட்ட பெண்கள் மட்டும் 20 லட்சம். இந்துகளும் முஸ்லீம்குளம் சேர்ந்த கூட்டுத் தொகைதான் அது.கற்பழிப்பதி ல் இந்துக்களுக்கு முன்னுரிமை என்பது தனிக்கதை. அகதியாய் இந்தியா வந்த மக்கள் 1கோடி. 1கோடிபேருக்கு 1 வருடம் சோறு போட்டது இந்தியா. யாகியாகானகொடுமை யிலிருந்து வங்க மக்களை உயிர் தியாகம் செய்து காப்பாற்றியது இந்திய ராணுவம். இந்திரா காந்தி அம்மாயார் என்ற வீர மங்கை. பாக்கிஸ்தான் தளபதி நியாசின் இந்திய ராணுவ தளபதியிடம் சரண் அடைந்தார். இந்திய தளபதி லெட்டினட் ஜெனரல் ஜெகத்சிங் ஆரோரா வை வங்க மக்கள் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் அழைத்து கௌரவித்து வந்தனர் என்பதை வாசகர்கள் அறிய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆரோரா அமரராகிவிட்டார் . கலகத்தை அடக்க இந்திரா உதவிட வில்லை என்பது ... மிகக் கடுமையான பொய்யான நயவஞசகமாக பொய். இப்படியும் பொய் சொல்ல முடியாமா! ஆச்சரியமாக உள்ளது.போர் சுழல் ஏற்பட்டப்பிறகே வங்க விமானங்கள் இந்தியாவின் மிது பறக்கத் தடைவிதிக்கப்பட் டது. இந்தியாவிடம் சரண் ஆன 96000 பாக்.முஸ்லீம் வீரர்களை கிழக்கு பாக்கிஸ்தானில் முஸ்லீம்களையும் இந்தக்களையும் கொன்று கற்பளித்து பெரும் கொடுமை செய்ய கயவர்களை -மன்னித்து கௌரமாக பாதுகாப்பாக மேற்கு பாக்கிஸ்தான் செல்ல இந்திய ராணுவம் உதவியது என்பது இந்துக்களின் பண்பாட்டிற்கு ஒரு வைரக்கல்.பொய்கள ை மனதில் இருந்து அகற்றுங்கள் நண்பர்களே.
Quote | Report to administrator
sharaf
0 #6 sharaf 2013-07-23 02:33
மும்பையில் 11 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள்,குற ிப்பீட்ட இடத்தை அடையுமுன்னரே மாலேகான் குண்டுவெடிப்புக ளின் உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ஏ.டி.எஸ்.தலைவர் மற்றும் மூத்த இரண்டு அதிகாரிகள் சுட்டுக்கொல்லப் பட்டது,10 தீவிரவாதிகள் 65 மணி நேரம் நம் நாட்டின் அனைத்துப்பாதுகா ப்பு படைகளையும்,11 இடங்களில் திணற வைத்தது மாறுபட்ட அறிவிப்புகளை ஊடகங்கள் மாறி மாறி அறிவித்தது,ஆகிய இவை அனைத்தும் ஆதிக்க காவி வெறியர்கள் யூத கிறிஸ்தவர்களின் துணையோடு அரங்கேற்றிய ஒரு கொடூர சதிச்செயல் என்பதை உணர்த்தப் போதிய சான்றுகளாக இருக்கின்றன.இதெ ல்லாம் ஆதிக்க வெறி பிடித்த அன்பு ராஜ் போன்ற மனிதர்களுக்கு எங்கே புலப்படப்போகிறத ு.ஹிந்துக்கள் பண்பாளர்கள் தான்.ஆனால் அந்த மதத்தை வைத்து குளிர்காயும் ஆதிக்க வெறிபிடித்த rss தீவிரவாதிகள் தான் படு மோசமானவர்கள்
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #7 சாணக்கியன் 2013-07-23 08:34
Quoting Dr.A.Anburaj:

ஜின்னா பாக்கிஸ்தான் கேட்டார் வன்முறையில் பெற்றுக் கொண்டார். அதற்குப் பிறகாவது நிம்மதியாக வாழ்ந்தார்களா ?

பாக்கிஸ்தான் பற்றியும் பங்களாதேஷ் பற்றியும் புலம்புகிறாரே தவிர அங்கே வதைபடும் ஹிந்துக்களுக்கு என்ன தீர்வென்று சொல்லத்தெரியவில ்லை. இலங்கை தமிழருக்கு என்ன தீர்வென்று கேட்ட கேள்விக்கும் பதிலில்லை. இஸ்லாமும் தெரியாது, ஹிந்து மதமும் தெரியாது, கிருத்துவமும் புரியாது, சரித்திரமும் அறியாது குட்டிச்சுவற்றி ல் முட்டிக்கொண்டால ் யாரால் என்ன செய்யமுடியும்?. பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடாது.
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #8 Dr.A.Anburaj 2013-07-23 13:37
உலகில் எங்கு என்றாலும் அநியாயமாக மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டால் , அவ்வாறு செய்யும் எவரையும் முஸ்லிம்கள் ஆதரிப்பதில்லை என்பதை நண்பர் அன்புராஜ் புரிந்துகொள்ளட் டும்!
-------------------------------------------பச்சை பொய். வங்க தேசத்தில் மதசார்பற்றதன்மை நிலவ எல்லா மக்களும் நேசிக்கப்பட சமஉரிமை பெற்று வாழ இந்திய முஸ்லீம்கள் என்ன செய்தார்கள் .அண்ணல்நபி சமாதானபிரவு மகம்து பிறந்த நாடடடவர்கள் என்ன செய்தார்கள் என்றுச் சொல்ல முடியுமா கண்மணிகளே ! வங்க தேசத்தில்ஒருதலை பட்சமாக இஸ்லாமிய ஆட்சி அமைக்க பல கோடி ரூவாய் நிதி உதவி செய்து இந்துக்கள அழிக்க உதவி வருவது அரபுநாட்டு காடையர்களே! வாகாபிகள் இன்றும் செய்து வரும் அட்டுழியங்களை தாங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #9 Dr.A.Anburaj 2013-07-25 09:10
பாக்கிஸ்தான் பற்றியும் பங்களாதேஷ் பற்றியும் புலம்புகிறாரே தவிர அங்கே வதைபடும் ஹிந்துக்களுக்கு என்ன தீர்வென்று சொல்லத்தெரியவில ்லை..ஆம் உண்மைதான்.மனித உரிமைகள் ஆர்வலர் என்ற முறையில் எனக்கு இது குறித்து அறிந்தும் ” தீர்வு ” என்ன என்பது குறித்து கருத்துக்கள் எதையும் உருவாக்க இயலவில்லைதான்.த ாங்களாவது சொல்லலாமே. இந்துக்கள் அனைவரும் முஸ்லீம்களாகிவி ட வேண்டும் என்ற கருத்தைத் தவிர வேறு கருத்து இருந்தால் நான் அறியவேண்டும். பதிவு செய்ய வேண்டும்.
Quote | Report to administrator
அப்துல் ரஹ்மான்
+2 #10 அப்துல் ரஹ்மான் 2013-07-28 23:07
//வங்க தேசத்தில்ஒருதலை பட்சமாக இஸ்லாமிய ஆட்சி அமைக்க பல கோடி ரூவாய் நிதி உதவி செய்து இந்துக்கள அழிக்க உதவி வருவது அரபுநாட்டு காடையர்களே!//

கேக்குறவன் கேனயனா இருந்தா கேப்பையில் நெய் மட்டுமல்ல அமிர்தமே வடிகிறது என்பர் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள்!

அரபு நாட்டு காடையர்கள் பெட்ரோ டாலர்களை வாரி வீசுவது வாங்கியவர்களுக் குத்தான் நன்கு தெரியும்! இவ்வளவு உறுதியாக கூறும் அன்புராஜ் அவர்களே, பணத்தை வீசி அப்பாவிகளை(கவனி யுங்கள்: இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் என பிரிக்கவில்லை)க ் கொல்லத் துடிப்பவன் எவனாக இருந்தாலும் அக்கொடிய காடையர்களுக்கு எதிராக இணைந்தே குரல் கொடுப்போம் வாருங்கள். அவ்வாறு கொடுங்கோன்மை புரிபவர்கள் அரபு காடையர்களாக இருந்தால் என்ன; ஹிந்துத்துவ வெறியர்களாக இருந்தால் என்ன! எல்லாம் ஒரே ரகம்தான்!

நாம் பதிவுக்கு வருவோம்!

இப்பதிவில் கூறப்பட்டிருக்க ும் மையக்கருத்து குறித்து உங்கள் கருத்தென்ன? "நாய்ப்பயல்(பைர வர்) மோடி" 2000 க்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்றொழித்தது குறித்த உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்களேன்.
Quote | Report to administrator
Mugilan Swamiyathal
0 #11 Mugilan Swamiyathal 2013-08-07 18:04
இந்திய அரசே நடத்திய தாக்குதல்:
====================================

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ மற்றும் ஐபி-க்கு இடையே நடைபெறும் மோதலில் புதிய திருப்பமாக ...
நாடாளுமன்ற தாக்குதல் மற்றும்
மும்பை 26/11 தாக்குதல் ஆகியவற்றை இந்திய அரசே நடத்தியது என்று
சிபிஐ அதிகாரி தெரிவித்ததுள்ளார்.

தூ...பிணம் தின்னும் நாய்கள்

(இது புதிதல்ல. பஞ்சாபை காரணம் காட்டி
தடா சட்டம் கொண்டு வர 'பரிசுத்தம்' ராஜீவ் காந்தி ஆட்சியில், இரண்டு பள்ளி பேருந்துகளுக்கு ஐபி அதிகாரிகளே குண்டு வைத்து வெடிக்க வைத்து, அறுபதுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை கொன்றனர்.
பஞ்சாப் தீவிரவாதி குண்டு வைத்தனர் எனக் கூறி தடா சட்டம் கொண்டு வரப்பட்டது:
சொன்னவர் ; ஜார்ஜ் பெர்னாண்டஸ்,
1988 - ஈரோடு பாசிச எதிர்ப்பு இயக்க மாநாடு உரை)

facebook.com/.../...
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்