முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இந்திய செய்திகள்

புதுதில்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முழு ஒத்துழைப்போடும் ஆசிர்வாதத்தோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த குஜராத் முஸ்லிம்களைக் கொன்று குவித்த பயங்கரவாதிகள் வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.


இதைத் தெஹெல்கா புலனாய்வு இதழ் ரகசியமாகப் படம் பிடித்து ஆவணப்படுத்தியுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெஹெல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசியப் புலனாய்வில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில் தீ விபத்து ஆகும். சுமார் 50க்கும் மேற்பட்ட கரசேவக்குகள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் எரிக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் அவ்விடத்திற்கு விரைந்து சென்ற மோடி, இதற்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று 'இரத்தம் கொதிக்க'க் கூறியதாகவும், தான் ஒரு மாநில முதல்வராக இல்லாதிருந்தால் உடனடியாக ஜுஹாபுரா (அஹமதாபாத்தின் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி)-வில் குண்டுகளை வெடிக்கச் செய்து முஸ்லிம்களைக் கொன்றிருப்பதாகக் கூறினார் என குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் அர்விந்த் பாண்டியா தெரிவித்துள்ளது தெஹெல்கா வீடியோவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பாளர்களை அழைத்துப் பேசிய மோடி தாம் அவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அதற்குள் மாநில முழுவதும் முஸ்லிம்களை எல்லா வழியிலும் மூர்க்கத் தனமாக அழிக்க வேண்டும் என்றும் கூறியதாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டம் போட்ட காவிப் பயங்கரவாதிகளின் வழியில் குறுக்கிடக்கூடாது என காவல் துறைக்கு மோடி அரசு கட்டளை இட்டது. மேலும் அடைக்கலம் தேடிவந்த முஸ்லிம்களைப் பிடித்து கலவர வெறியர்களிடம் ஒப்படைத்துத் தான் மேற்கொண்ட பணிக்கு தீரா இழுக்கையும் மோடி அரசின் காவல் துறை தேடிக் கொண்டது.

இக்கலவரங்கள் நடந்த போதே இந்திய உச்சநீதிமன்றம் மோடியைக் கடமையில் இருந்து தவறியதாகக் கண்டித்திருந்தது நினைவுகூரத்தக்கது. முஸ்லிமாக இருந்ததால் சட்டம் இயற்றும் நாடாளுமன்ற உறுப்பினரைக் கூடப் பாதுகாக்க மறுத்தது மோடி அரசு. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஃப்ரி தன்னை நாடிவந்த அப்பாவி முஸ்லிம்களைக் காக்க முயன்ற போது தன் உயிரையும் இழக்க நேரிட்டது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போனதை மட்டுமல்லாது இந்துத்துவாவின் நச்சுக்கரங்கள் புற்றுநோய்போல அரசு இயந்திரத்தினுள்ளும் புரையோடி இருப்பதையும் தான் காட்டுகிறது.

இது குறித்த விரிவான செய்தியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த தெஹெல்கா வீடியோ ஆவணங்கள் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இதில் புதிதாக ஒன்றும் இல்லை என்றும் மோடி தான் இந்தக் கொடூரக் கொலைவெறியாட்டத்தின் சூத்திரதாரி என்பது ஊரறிந்த ரகசியம் என்றும் இப்போது இது ஆவணப்படுத்தப் பட்டுள்ளதால் இந்திய அரசு இக்கயவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் கூறினர்.

இது குறித்து பாஜக கருத்துத் தெரிவிக்கையில், இந்த வீடியோ ஆவணம் காங்கிரஸிடம் கையூட்டு பெற்று தெஹெல்கா உருவாக்கியுள்ளதாகவும், மோடியை இழுக்குச் செய்யும் முயற்சி இது என்றும் வெட்கம் கெட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது.

கோத்ரா ரயில் விபத்துகுறித்து ஆதாரங்களை அழிக்க முயன்ற மோடியின் முயற்சியைக் குறித்த செய்தியை இங்கு காணலாம்.

வீடியோ ஆதாரங்கள்:

பாபு பஜ்ரங்கி - பயங்கரவாதிகளில் ஒருவனும் பஜ்ரங் தள் நிர்வாகியுமான இவனது வாக்குமூலம் கீழே:

அரவிந்த் பாண்டியா - நானாவதி-ஷா நீதிவிசாரணை ஆணையத்தில் ஆஜரான குஜராத் அரசின் வழக்கறிஞரான இவனது வாக்குமூலம் கீழே:

 

 

 

 

ரமேஷ் தவே - காலுப்பூர் விஎச்பி அமைப்பாளனும், தரியாப்பூர் முஸ்லிம்களைக் கருவறுத்தவனுமான இவனது வாக்குமூலம் கீழே:

Comments   

அபூ முஹை
0 #1 அபூ முஹை -0001-11-30 05:21
இந்துத்வ பயங்கரவாதிகளை அடையாளம் காட்டியதற்கு நன்றி!
Quote | Report to administrator
MOHAMED ALI JINNAH
0 #2 MOHAMED ALI JINNAH -0001-11-30 05:21
தெஹல்கா ஆபரேஷன்: டிவி சானல்கள் இருட்டடிப்பு! சனிக்கிழமை, அக்டோபர் 27, 2007
அகமதாபாத்: குஜராத் கலவரம் குறித்த தெஹல்கா பத்திரிக்கையின் ஸ்டிங் ஆபரேஷன் குறித்த செய்தியை ஒளிபரப்பிய ஆங்கில-இந்தி சேனல்களை அம் மாநில அரசு இருட்டடிப்பு செய்துள்ளது.

குஜராத் கலவரம் குறித்த பல பரபரப்புத் தகவல்களுடன் கூடிய ஸ்டிங் ஆபரேஷனை தெஹல்கா இதழ் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆபரேசனை தெஹல்காவுடன் இணைந்து நடத்திய இந்தியா டுடேவின் ஹெட்லைன்ஸ் டுடே டிவி மற்றும் அதன் இந்தி டிவியான ஆஜ் தக் ஆகியவையும் நேற்று முதல் குஜராத் முழுவதும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

அதே போல இந்த செய்திகளை வெளியிட்ட சிஎன்என்-ஐபிஎன் , டிவி 18 ஆகிய டிவிக்களின் ஒளிபரப்பும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

செய்திகள் இல்லாத பிற சானல்கள் மட்டும் தெரிந்தன.

சர்ச்சைக்குரிய செய்திகள், குறிப்பாக மோடிக்கு எதிரான செய்திகள் வந்தால், உடனடியாக அந்த சேனல்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கட் செய்து விடுவது குஜராத்தில் வழக்கமாக உள்ளது.

சமீபத்தில் கரண் தாப்பர் நரேந்திர மோடியை பேட்டி கண்டபோது கலவரம் குறித்து கேட்க கோபமடைந்த மோடி பாதியில் எழுந்து சென்றுவிட்டார். அந்தப் பேட்டி ஒளிபரப்பானபோது ம் அந்த சேனலின் ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது.

குஜராத்தில் சிட்டி கேபிள் மற்றும் அந்தரிக்ஷ் என இரு பெரிய கேபிள் டிவி நிறுவனங்கள் உள்ளன. இவைதான் குஜராத் முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களைக் கட்டுப்படுத்துகின்றன.

சேனல்கள் தெரியாதது குறித்து அந்த நிறுவனங்கள் கூறுகையில், 'தொழில்நுட்பக் கோளாறு' காரணமாக அந்த சேனல்களை காட்ட முடியாமல் போனதாக கூறியுள்ளனர்.
thatstamil.oneindia.in/.../...
Quote | Report to administrator
haneefm
0 #3 haneefm -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்
என்னதான் இந்துத்துவ பயங்கரவாதிகளை மீடியாக்கள் அடையாலம் காட்டினாலும், அரசங்கமும் ,அதிகரமும் [அவர்கலுக்கு] பக்க துனையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தப்பித்துக்கொள் ள வழிவகுக்கின்றது ,நம் முஸ்லிம் சமுதாயாம் பதில் தரும் வேலையில் அவர்கலை விரல் விட்டு எண்னக்கூடிய நிலை வரும் என்பதனை அவர்கள் மறுக்கமுடியாது,,,
ஹனிஃப்-குவைத்
Quote | Report to administrator
இறை நேசன்
0 #4 இறை நேசன் -0001-11-30 05:21
//நம் முஸ்லிம் சமுதாயாம் பதில் தரும் வேலையில//

Prevention is Better than Cure! என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள்.

நோய் வருவது வரைக் காத்திருந்து வந்தப் பின்னர் அதனுடைய நிவாரணத்திற்காக அலைவதை விட நோய் வருவதற்கு முன்னரே காப்பது சிறந்தது என்பது அதன் அர்த்தம்.

சாதாரண ஒரு பழமொழியே இவ்வளவு ஆழமாக ஒரு கருத்தை வெளியிடும் பொழுது, இவ்வுலகை ஒழுங்குறப் படைத்துப் பரிபாலித்து வரும் படைப்பாளனின் மார்க்கமான இஸ்லாம் இதனைக் குறித்து எதுவும் கூறாமலா இருந்திருக்கும்?

உலகின் சுபிட்சமான, சமாதான வாழ்க்கைக்கு ஏற்ற அனைத்து வழிகளையும் போதிக்கும் இஸ்லாம், அது குறிப்பிடும் இறையை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்வை அமைத்துக் கொள்பவர்களுக்கு இவ்வுலகில் பாதுகாப்பாக வாழ்வதற்குரிய அனைத்து வழிமுறைகளையும் தெளிவாகவே கற்றுத் தருகின்றது.

ஆனால், அதனைத் தெளிவாக முறைப்படி இச்சமுதாயம் நடைமுறைப்படுத்த த் தவறும் பொழுது தான் சமுதாயம் இதுபோன்று மிகப்பெரும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகி ன்றது என்பதை எப்பொழுது தான் உணரப்போகின்றதோ தெரியவில்லை.

'உங்களில் ஒரு சமூகத்தைக் கொண்டு இறைவன் காத்திராவிட்டால ், இறைவனை துதிக்கும் ஆலயங்களும், கோயில்களும், பள்ளிவாசல்களும் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும்',

'நீங்கள் ஈட்டிகளையும், போர்க்குதிரைகளை யும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங ்கள்; அது உங்களின் நேரான எதிரியையும், (இறைவன் மட்டுமே அறிந்த) உங்களின் மறைமுகமான எதிரியையும் பயங்கொள்ள வைக்கும்'

மேற்கண்ட இரு வசனங்களுமே நேரடியாக அக்கிரமம் புரியும் அநியாயக்காரக் கூட்டங்களை அவ்வாறான அநியாயங்களை செய்யவிடாமல் பயங்கொள்ள வைப்பதற்காக எந்நிலையிலும் நீங்கள் தயார் நிலையில் இருங்கள் என வலியுறுத்துகின்றன.

இதனைத் தான் நான் மேலே குறிப்பிட்ட படி, Prevention is Better than Cure எனக் கூறுகின்றார்கள்.

இறைவனின் இந்தக் கட்டளையை மறந்த சமுதாயம் அல்லது இஸ்லாம் முழுமைப்படுத்தப ்பட்டு இன்று முழு குர்ஆனும் உலகில் இருக்கும் நிலையில் இது மக்கா காலகட்டம், இது அபிசீனியா காலகட்டம், இது மதீனா காலகட்டம்(நாம் மதீனா காலகட்டத்தை தற்பொழுது அடைந்துள்ளோம் என எந்த அறிஞர் கூறியும் நான் கேட்டதில்லை) என இஸ்லாமிய வாழ்வைப் பிரித்து வைத்துக் கொண்டு மக்களை மடையர்களாக்கும் ஒரு சில அறிஞர்களின் அறியாமைக் கருத்துக்களில் மூழ்கி மேற்கண்ட இறைக்கட்டளையைப் பேணுவதில் ஆர்வம் காட்டாமல் இருக்கும் சமுதாயம் இரத்தவெறிப்பிடி த்த இந்த அநியாயக்கார மோடிகளின் அராஜகங்கள் நடந்த பின்னர் பதிலடி எனக் கூறிக் கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

அது இழந்து போன எம் சகோதரிகளின் மானங்களையும், உயிர்களையும் திருப்பித் தருமா?

கர்ப்பத்திலேயே வெட்டி எடுத்து எரிக்கப்பட்ட ஒரு பாவமும் அறியாத எம் பச்சிளம் குழந்தைகளை மீட்டுத் தருமா?

இல்லை. நிகழ்ந்து விட்ட அநியாயங்களுக்கு முறைப்படி நியாயம் கிடைத்திடவும், அந்த அநியாயக்காரர்கள ை வெட்டிக் கழுவில் ஏற்றும் படியான தண்டனைகள் கிடைத்திடவும் போராடும் அதேவேளை, இவ்வெறிச் செயல்களை மேலும் தொடர்வதைக் குறித்து எந்த ஒரு இரத்தக்காட்டேறி யின் மனதிலும் ஒரு சிறு எண்ணம் கூடத் தோன்றி விடாதபடியிலான தற்காப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி எதற்கும் தயார் நிலையில் இருக்க சமுதாயம் முன்வர வேண்டும்.

இதுவே இரத்த மோடிகளின் வெறிச்செயல்களில ிருந்து பாதுகாப்புப் பெற ஒரே வழியாகும்.

இறை நேசன்.
Quote | Report to administrator
இறை நேசன்
0 #5 இறை நேசன் -0001-11-30 05:21
கண்ணைக் கட்டிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதாகக் கூறினால் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் உள்ளவர்கள் வேண்டுமானால் அதை நம்பலாம். மற்றவர்களும் நம்ப வேண்டுமா என்ன?

கீழ்கண்ட தளங்களிலிருந்து வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து சென்று சேராத இடங்களுக்குக் கொண்டு சேர்க்க முயலுங்கள்.

அது இன்றில்லா விட்டாலும் மற்றொரு நாள் ஏதாவது ஒரு வடிவில் இந்த மனித இரத்தத்தை உண்டு வாழும் இரத்தக்காட்டேறி களைக் கவ்விப்பிடிக்கு ம். அப்பொழுது இவர்களுக்கு உதவச் சட்டமும் அரசாங்கமும் என்ன இந்த உலகமே திரண்டு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

www.downloadyoutubevideos.com

www.stealvideo.com

இறை நேசன்
Quote | Report to administrator
MOHAMED ALI JINNAH
0 #6 MOHAMED ALI JINNAH -0001-11-30 05:21
குஜராத் கலவரம் பற்றிய
`தெகல்கா' புலனாய்வு குழுவின் ஆதாரங்களை ஆராய வேண்டும்;

சுப்ரீம் கோர்ட்டில் தன்னார்வ அமைப்பு மனு

மும்பை, அக்.28-

குஜராத் கலவரம் பற்றி தெகல்கா புலனாய்வு குழு வெளியிட்ட அனைத்து ஆதாரங்களையும் ஆராய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குஜராத்தில் 2002-ல் நடந்த கலவரம் பற்றி தெகல்கா ரகசிய புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது . அதில், அப்பாவி மக்களை படுகொலை செய்ததாக ஒப்புக் கொண்ட கலவரக்காரர்கள், வெளியில் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். இதனால் இந்த கலவரம் தொடர்பான 193 சாட்சிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

ஆராய வேண்டும்

தெகல்கா வசம் இருக்கும் வீடியோ காட்சிக ள்அடங்கிய ஒரிஜினல் சி.டி.க்கள் உள்பட அனைத்து ஆதாரங்களையும் ஆராய வேண்டும். அந்த ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். குஜராத் கலவரம் பற்றிய 13 வழக்குகளை, வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே மனு தாக்கல் செய்து உள்ளோம். அதன் மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டு உள்ளது.

www.dailythanthi.com/.../2007

''குஜராத்தில் நடந்த சம்பவங்கள் இந்திய ஜனநாயகத்தில் கறை படிந்த நிகழ்வாகும். திட்டமிட்டு கொலை வெறியாட்டம் நடத்திய மோடி, அதற்கு ஆதரவளித்த அத்வானி ஆகியோரையும் கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும்''(ரயில ்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்) thatstamil.oneindia.in/
Quote | Report to administrator
MOHAMED ALI JINNAH
0 #7 MOHAMED ALI JINNAH -0001-11-30 05:21
மோடி தொகல்காவிடம் சிக்கியது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறதா ?
---------------------------------
மோடியிசமும் - இந்திய மதச்சார்பின்மை முகமூடியும் !

மோடி வகையறாக்கள் தொகல்காவிடம் சிக்கியது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறதா ? என்று பார்த்தால் அப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் மோடிவகையறாக்கள் அப்படி செய்யக் கூடியவர்கள், அவர்கள் தான் செய்திருக்கிறார ்கள் என்பதை எல்லோருமே ஊகித்தி இருக்கிறார்கள்,

தற்போது கிடைத்திருக்கும ் ஆதாரம் மதவெறியில் அவர்கள் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்ற சான்றிதழ் மாட்டுமே.

குஜராத் கலவரம் தொடர்புடைய சாட்சி அடைப்படையில் வழங்கப்பட்ட நீதிகள்(?), தெகல்கா ஆதாரத்துக்கு முன்பு வெட்கி தலைகுனிகிறது.

இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்தியர்களே, குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் வெளியில் இருந்து வந்தேறவில்லை.
முன்னாள் குடிமக்களான அவர்கள் தீண்டாமை கொடுமைகளில் விடுபட மதம் மாறி சுயமரியாதை மற்றும் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொண்டனர். இதில் என்ன தவறு இருக்கிறது ?

எந்த ஒரு குடிமகனுக்கும் அவன் விரும்பிய மதத்தில் இணைய உரிமை உண்டு. ஒருவர் இஸ்லாமியராகவோ, கிறித்துவராகவோ இருப்பதை வைத்து அவர்களை சிறுபாண்மையினர் என்று சிறுமைபடுத்தி பார்ப்பது எதற்கு ?

மதம் அன்பை போதிக்கிறது, இந்து மதமே எல்லா மதங்களுக்கும் 'மூலம்',, அனைத்து மதங்ககளும் கலந்த இந்து மதம் கங்கையைப் போல் ஒரு புனித(?) சாக்கடை என்று புனிதம்(?) பேசிக் கொண்டே, இந்து மதத்தின் பெயரால் தீவிரவாதம் ஒருபக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது .

காந்தியை கொன்ற கோமான்களின் இரத்த வேட்டை காந்தி பிறந்த பூமியில் வீறுநடை போட்டு இருக்கிறது.

குஜராத் நிகழ்வுகளுக்கு பின்னால், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று பெருமை பேசினால் காக்கை கூட பேசுபவனின் நாக்கில் எச்சமிட்டு எள்ளிவிட்டு செல்லும்.

குடிமகன் அடிப்படை தகுதிக்கு முன்பு மதத்தின் பெயரால் மைனாரிட்டி மசுரு(நன்றி அசுரன்) பேசுவதெல்லாம் எதற்கு ?

அவனும் மற்றும் எல்லோரும் இந்திய தாய்க்கு பிறந்தவன் தானே ? மைனாரிட்டி என்பதால் இராணுவத்தில் இல்லாமல் இருக்கிறார்களா ? மைனாரிட்டி என்பதால் இலவசமாக எல்லாமும் கிடைக்கறதா ?

'அரசியலில் மைனாரிட்டியிஸத் தை புகுத்துவதைத் தான் நான் எதிர்க்கிறேன்' - மோடி.
திங்கள்கிழமை, அக்டோபர் 29, 2007

மோடி வெளிப்படையாக சிறுபாண்மையினரு க்கு எந்த உரிமையும் இல்லை என்று கருத்து சொல்லும் அளவுக்கு இந்தியர்கள் மதவெறிகளை சகித்துக் கொள்ளுகிறார்களா ? அல்லது விரும்புகிறர்கள ா ?

பதில் எப்படி இருந்தாலும் மோடியின் கருத்துக்கள் சிறுபாண்மையினரி டையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன,

மோடியின் மைனாரிட்டி பேச்சு இன்னும் பல பாகிஸ்தான்களை இந்தியாவுக்குள் ளேயே உருவாக்கும் ஆபத்து இருக்கிறது.

இந்திய மதச்சார்பற்ற முகமூடி அழுகிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் இந்துத்துவ கோரப்பற்கள் தெரிய ஆரம்பித்திருப்ப து கவலை அளிக்கிறது.

தொட்டதற்கெல்லாம் கருத்து கூறும் நீதிமன்றம் மோடி உதிர்த்தவைகளுக் கு மெளனம் காப்பது ஏன் ?

நன்றி: கோவி.கண்ணன் govikannan.blog
Quote | Report to administrator
Mohamed Faize
0 #8 Mohamed Faize -0001-11-30 05:21
சகோதரர் இறைநேசன் கூறியதை வரவேற்கிரேன்.இற ை வசனம் 4.75 இல் கூறியது போல் நாம் செயல் பட தவறியதால் தான் சமுதாயத்துக்கு இந்த இழி நிலை.இனியாவது இறைமறையின் பால் திரும்புவோம் .
Quote | Report to administrator
MOHAMED ALI JINNAH
0 #9 MOHAMED ALI JINNAH -0001-11-30 05:21
மனித உரிமை கமிஷன் தெகெல்கா படக்காட்சியை பார்த்தது

தேசிய மனித உரிமை கமிஷன் தெகெல்கா பத்திரிகையின் குஜராத் கலவரம் குறித்த துப்பாய்வறிக்கை படக் கோப்பை புதன் மாலை பார்வையிட்டது. இரண்டு மணி நேர படக்காட்சியை மனித உரிமை கமிஷனின் அனைத்து உறுப்பினர்களும் பார்த்தனர்.

NHRC views Tehelka tapes on Gujarat riots

New Delhi, (PTI): The National Human Rights Commission on Wednesday viewed the Tehelka expose on Gujarat riots aired recently in a private news channel and is likely to take a decision on the future course of action Thursday.

'The full Commission of the human rights panel viewed the two-hour-long sting operation Wednesday evening,' an NHRC official said.

Asked whether the seven-member panel has taken a decision on the next course of action, he said a decision is likely to be taken Thursday.

Taking suo motu cognizance of the sting operation, the NHRC had asked 'Aaj Tak' news channel to submit the two tapes before it and the panel received it on Tuesday.

The official said the panel had not asked for the original tapes, but may ask for it if the need arises.

The Tehelka magazine had claimed that it had 'irrefutable' evidence that the killings of Muslims in post-Godhra train carnage in Gujarat was 'not a spontaneous swell of anger, but a genocide' planned and executed by top functionaries of the Sangh Parivar and state authorities 'with the sanction' of Chief Minister, Narendra Modi.

The weekly claimed that it had done a sting operation over the last six months by talking to a number of Sangh Parivar leaders, including Godhra BJP MLA, Haresh Bhatt, Shiv Sena leader Babu Bajrangi, who was earlier in VHP, and VHP leaders Anil Patel and Dhawal Jayanti Patel to bring out the truth.

hinduonnet.com/.../...
Quote | Report to administrator
Sherif
0 #10 Sherif -0001-11-30 05:21
Excellent Media work (Thelka showed media power)
Blood boiling Articles ...in 4th quarter 2007.

May Allah bless all true believers who brutialy/inhum murdere, ... Amen
Quote | Report to administrator
M.S.K
0 #11 M.S.K -0001-11-30 05:21
ALHAMDULILLAH

//New Delhi, (PTI): The National Human Rights Commission on Wednesday viewed the Tehelka expose on Gujarat riots aired recently in a private news channel and is likely to take a decision on the future course of action Thursday//

BETTER LATE THAN NEVER

LET THIS ACTION BE A LESSON TO ALL.
Quote | Report to administrator
Musalman
0 #12 Musalman -0001-11-30 05:21
இந்துத்துவாவின் வக்கிரமுகம் உலகிற்கு வெளிக்கொணரப்பட் டுள்ளது. நாஜிக்களின் வக்கிரமனோபாவத்த ைவிட இது உக்கிரமானதாக உள்ளது.பாஸிஸமனோ பாவம் மனிதகுலத்திற்கு எத்தனை தீங்கு தரும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.இந் த இந்துதுவவாதிகள் மனிதகுலத்திற்கு எதிரான நரமாமிச மனிதர்கள் என்பதும் மறுக்கமுடியாத நிஜம்.முஸ்லிம்க ளுக்கு எதிரான இந்த இந்துத்துவ மனோபாவம் பல காலம் தொட்டே வளர்த்து விடப்பட்டுள்ளதா க தெரிகிறது. இதில் ஈடுப்பட்டவர்கள் எவ்வித குற்ற உணர்வின்றி செயல்பட்டுள்ளனர ். இஸ்லாமியர்களை அழிப்பது இவர்களுக்கு பெருமிதமான செயலாக மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள து இதிலிருந்து நாம் அறியமுடிகிறது. இந்துமதத்தை முன்னிருத்தியே கலவரமிருகங்கள் ஒன்றிணைக்கப்பட் டுள்ளனர்.வேட்டை நாய்களைப் போல, முஸ்லிம்களை தேடி தேடி கொன்று அழித்துள்ளார்கள ்.உயிரோடு எரிப்பது, வெட்டுவது, குத்துவது, ஆயுதங்களுடன் கொன்று தீர்ப்பது, ராக்கெட் லாஞ்சர், கேஸ் சிலின்டர் போன்ற சாதனங்களுடன் என்று சகலவிதமான யுக்திகளும் பயன்படுத்தப்பட் டுள்ளன. குஜராத்தில் நடைப்பெற்ற இந்த முஸ்லிம் இன ஒழிப்பிற்கு அரசாங்கமே துணை நின்றது மனித குல வரலாற்றில் மாறாத வடுவாக இருக்கும்.
இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் வாழக்கூடாதா? இந்துக்களை ஒன்றினைக்க முஸ்லிம்களை பலியிட வேண்டுமா? இந்துத்துவம் பேசும் காவி மிருகங்களை இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் என்ன செய்யப்போகிறது? மூளை செல்களிலும், ரத்த நாளங்களிலும் முஸ்லிம் எதிர்ப்புணர்வை கொண்டு திரியும் பயங்கரவாத காவிமிருகங்கள் இருக்கும் இந்த தேசத்தில் என் சகோதரர்களுக்கு என்ன பாதுகாப்பை மத்திய அரசாங்கம் கொடுக்கப்போகிறத ு? இத்தனை உயிர்களை ஈவு இரக்கமின்றி கொன்று ஒழிக்க காரணமாக இருந்த 'மோடி' என்ற மனிதனுக்கு என்ன தண்டனை? இஸ்லாமியர்களை அழிப்பதையே கொள்கையாக கொண்டிருக்கும் சங்பரிவாரங்களுக ்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் எப்படி பாதுக்காக்கப்பட போகிறது?இந்த கொடுமைகள் குஜராத்தில் மட்டுமா மற்ற இடங்களிலும் தொடருமா? இஸ்லாமியர்களை அழித்தொழிக்கும் இந்த வக்கிர கூட்டுமனோபாவம் எப்படி விதைக்கப்பட்டது ? இப்பேரழிவை செயல்படுத்திய இயக்கங்கள் தடை செய்யப்படுமா? 'தெகல்கா' கொண்டு வந்த இப்பேருண்மைகள் ஊடகங்களில் விவாத பொருளாக விவாதிக்கப்படாத து ஏன்? எதிர்கட்சிகள் இதை எப்படி எதிர்கொள்ளப்போக ிறது குறிப்பாக காங்கிரஸ்?உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் 'கூட்டு மனசாட்சி' எப்படி இதை அனுகப்போகிறது? எத்தனை எத்தனை கேள்விகள் நம் மனங்களில்....

என் சகோதரர்களே... அஞ்சவும் துஞ்சவும் வேண்டாம். நீதி உறங்காது அது தண்டிக்கும் உரிய நேரம் வரும்போது. நடு நிலையான இந்து மத சகோதரர்கள் இன்னமும் இருக்கிறார்கள். மனிதனேயம் கொண்ட எமது இந்து மத சகோதரர்களால் இந்த மனித இழிபிறவிகள் இனங்கன்டு கொள்ளப்பட்டிருக ்கிறார்கள். மாற்றம் வரும் என்று நம்புவோமாக...
Quote | Report to administrator
மும்பைகர்
0 #13 மும்பைகர் -0001-11-30 05:21
அன்பிற்கினிய முஸல்மான் அவர்களே

//என் சகோதரர்களே... அஞ்சவும் துஞ்சவும் வேண்டாம். நீதி உறங்காது அது தண்டிக்கும் உரிய நேரம் வரும்போது. நடு நிலையான இந்து மத சகோதரர்கள் இன்னமும் இருக்கிறார்கள். மனிதனேயம் கொண்ட எமது இந்து மத சகோதரர்களால் இந்த மனித இழிபிறவிகள் இனங்கன்டு கொள்ளப்பட்டிருக ்கிறார்கள். மாற்றம் வரும் என்று நம்புவோமாக...//

உங்கள் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்

ஒரு அறிஞர் கூறினார்

சிலரை சில நேரங்களில் ஏமாற்றலாம்
சிலரை எந்நேரமும் ஏமாற்றலாம்
ஆனால் எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது.

இந்த அரசியல்வாதிகள் தமது சுய நலத்திற்காக நேர்வழியில் ஆட்சி அமைக்க இயலாது எனும் அச்சத்தால் இப்படி மதத்துவேஷம் எனும் விஷம் கலந்த பாலூட்டி அப்பாவி இந்து சகோதரர்களையும் அதிக நாள் ஏமாற்ற முடியாது.

இது போன்ற அரசியல் கபட வேஷதாரிகளின் வேஷம் கலைந்து அவர்கள் இழுவுக்குள்ளாவத ு உறுதி.ம்னிதாபிம ானமும் மனசாட்சியும் உள்ள எந்த சகோதரரும் இது போன்ற பாவங்களுக்கு தெரிந்து துணை போக மாட்டார்கள்.விஷ க் கருத்துக்கள் நீண்ட நாட்கள் நிலைக்காது.

''மனிதன் இன்று கொல்வான் இறைவன் நின்று கொல்வான்'' என்பார்கள். நிச்சயமாக இறைவன் இது போன்றவர்களை இவ்வுலகிலேயே இழிவு படும் தண்டனையை வணங்குவான், இவர்கள் இதே நிலையில் மரணித்தார்கள் என்றால் நரகத்திலும் இவர்கள் தண்டிக்கப் படுவார்கள்.
Quote | Report to administrator
MOHAMED ALI JINNAH
0 #14 MOHAMED ALI JINNAH -0001-11-30 05:21
மோடியின் ராம ராஜ்ஜியம்.

சில நேரங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வார்த்தைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இந்துத்துவ பாசிஸ்டுகளை கண்டித்தும் அம்பலப்படுத்திய ும் எழுதப்பட்டிருக் கும்.. ஆனாலும் உண்மைகளை ஒவ்வொரு முறை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகள் செத்துப் போகிறது. இதை எழுதும் போதோ கைகள் நடுங்குகிறது. இந்த பாசிஸ்ட் நாய்களின் குடலை உருவும் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஆற்றாமையில் தொண்டை விம்முகிறது.

இந்த நாய்களைப் பாதுகாத்து நிற்கும் இந்த நீதி மன்றங்களையும், அரசு இயந்திரத்தையும் நொறுக்கித் தள்ள முடியவில்லை இன்னும் என்கிற உண்மையால் வெட்கம் வருகிறது.

எல்லோருக்கும் தெரியும் நரேந்திர மோடி என்னும் கொலைகாரன் இரண்டாயிரத்தியி ரண்டில் எப்படியெல்லாம் முஸ்லிம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தான் என்று. எத்தனையோ கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டது. எத்தனையோ முறை காறித்துப்பியாக ி விட்டது.

ஆனால் நம்மால் இது மட்டும் தான் முடிந்திருக்கிற து என்பது எத்தனைக் குறைவானதொன்று என்பது நேற்று தெகல்கா பத்திரிக்கை குஜராத்தின் கொலைகாரர்களின் பெருமிதம் ததும்பும் பேச்சுக்களை அம்பலத்திற்கு கொண்டுவந்தபோது புரிந்தது.

அந்தக் கொலைகள் வெறும் ஆத்திரத்திலோ சொந்த விவகாரங்களுக்கா கவோ நடத்தப்பட்ட கொலைகள் அல்ல. அது ஒரு இன அழிப்பு! நேற்றுக் காண நேர்ந்த வீடியோக் காட்சி ஒன்றில் இந்துத்துவ வெறியன் ஒருவன் எப்படி கர்பவதியான ஒரு முஸ்லிம் பெண்மணியின் வயிற்றைக் கிழித்து இன்னும் உலகத்தைக் கூட காணாமல் உறங்கிக் கிடந்த கருவை வெளியே எடுத்து கிழித்து எறிந்தோம் என்று சொன்னதைக் கேட்ட போது இந்த பாசிஸ்டுகளையும் இவர்கள் இந்த முறையில் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கு ம் இராம ராஜ்ஜியத்தையும் இவர்கள் நாயகனான இராமனையும் இவர்கள் காட்டிய கொடூரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கொடூரத்தைக் காட்டி எதிர்த்தழிக்க வேண்டியதன் அவசியம் மண்டையில் உறைக்கிறது.

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸைச் சேர்ந்த ஒரு வயதான முஸ்லிம் பிரமுகரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர் சில முஸ்லிம்கள். அந்த வீட்டை நாலாபுறமும் இருந்து சுற்றி வளைத்துக் கொண்ட இந்து வெறியர்கள், சுற்றிலும் தீ மூட்டி இருக்கிறார்கள். அந்தப் பிரமுகர் “வேண்டுமானால் பணம் கொடுக்கிறேன். தயவு செய்து எங்களைக் கொல்ல வேண்டாம்” என்று கெஞ்சி இருக்கிறார். “சரி பணத்தைக் கொடு விட்டு விடுகிறோம்” என்று கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின் றனர். அவர் வெளியே வந்ததும் ஒருவன் அவரை உதைத்துக் கீழே தள்ளி இருக்கிறான். ஒருவன் அவர் கால்களை வெட்டியிருக்கிற ான். நான்கைந்து பேர் சேர்ந்து அவரை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். ஒருவன் அவன் இரண்டு கைகளையும் வாளால் துண்டித்திருக்க ிறான். பின்னர் அவருடைய பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட் டிருக்கிறது…. கடைசியில் அவரை உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறார ்கள். இத்தனையையும் செய்தவர்கள், தெகல்காவின் காண்டிட் காமெராவின் முன் மிகவும் பெருமிதமாகச் சொல்லிப் பூரித்துப் போகிறார்கள்.

ஒருவன் தன்னுடைய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு சொல்கிறான், “முஸ்லிம் பெண்கள் பழங்களைப் போன்று இருந்தார்கள்… நாங்களெல்லாம் சுவைத்தோம்… வேண்டுமானால் வி.ஹெச்.பி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைக் கேட்டுப் பாருங்களேன்; அவர்களும் கூடத்தான் சுவைத்தார்கள். இதோ என் எதிரே சாமிப் படம் இருக்கிறது, என் அருகே என் மனைவி இருக்கிறாள்.. நான் பொய் சொல்ல மாட்டேன்; நானும் கூட ஒருத்தியை சுவைத்தேன்.. பின் அவளைக் கொன்றேன்” இவர்களுக்கு நல்ல சாவு வருமா? இவர்கள் இன்னும் உயிரோடு அலைவது என்பது மானமும் ரோஷமும் உள்ள நாகரீக மனிதன் எவனால் பொருத்துக் கொண்டிருக்க முடியும்? இவர்கள் இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகும் முறை இது தான்.

இதோ இது தான் ராம ராஜ்ஜியம்! இதைத்தான் இந்துத்துவ இயக்கங்கள் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். இவர்களின் நாயகன் தான் ராமன். இவர்களைத்தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆதரிக்கிறாள். இவர்களைத்தான் ஒரு மாநிலத்தின் அத்துனை அரசு இயந்திரமும், அரசாங்கமும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது. இவர்களில் ஒருவனான பாபு பஜ்ரங்கி என்பவனுக்குத் தான் நரேந்திர மோடி மவுண்ட் அபு என்னும் இடத்தில் இருக்கும் குஜராத்தி பவனில் ஐந்து மாதம் அடைக்கலமும் கொடுத்து, பின்னர் மூன்று நீதிபதிகளை மாற்றி விடுதலை செய்வித்தான். மேலே விவரிக்கப்பட்டி ருக்கும் சம்பவங்கள் நூறில் ஒரு சதவீதம் கூடக் கிடையாது. மேற்கொண்டு விவரிக்க எனக்கு மனதிடமும் கிடையாது.. ஆனால் இதைத்தான் இந்துக்களின் பதிலடி என்று அன்றைக்கு ஜெயலலிதா சொன்னதோடு மோடியை ஆதரித்து அறிக்கையும் விடுத்தாள்!

ஒட்டுமொத்த கொலைகளையும் பின்னிருந்து இயக்கியது மோடி. அத்தனைக் கொலைகளையும் மூடி மறைத்தது அம்மாநிலத்தின் அரசு இயந்திரங்களான நீதித்துறை, காவல்துறை. பொய் சாட்சிகளை உருவாக்கியது அரசு வழக்கறிஞர்கள்.. அதனை ஊக்குவித்தது நீதிபதிகள். தெளிவாகத் தெரிகிறது இந்த அரசு இயந்திரங்கள் யாருக்கானது என்று. ஒழித்துக்கட்டப் பட வேண்டியது பாஜாகா ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிஸ்டுகள் மட்டுமல்ல; மாறாக இவர்களுக்கு இந்த தைரியம் உண்டாவதற்குக் மூல காரணமான அரசு இயந்திரமும் தான்!

மக்களுக்கான நீதியை இந்த அமைப்புக்குள் தேடுவது எப்பேர்பட்ட மடத்தனம் என்பதை நேற்றுப் பார்த்த காட்சிகள் உணர்த்துகிறது. உயிரைக்காப்பாற் றிக் கொள்ள மறைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களை வி.ஹெச்.பியினரு க்கு அடையாளம் காட்டிக் கொடுத்து ஆள்காட்டி வேலை செய்தது காவல் துறை. இவர்களைத் தான் நாம் இன்னும் நாம் நம்பப் போகிறோமா? “நீதி தேவைதையின்” முன்னே குற்றவாளிகளுக்க ு தண்டனை பெற்றுத்தர வேண்டிய அரசு வக்கீலும், நீதிபதியும் தான் பொய் சாட்சிகளைத் தயார்படுத்தியது .. இவர்களைத் தான் நாம் நம்பப் போகிறோமா?

இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கா ன தண்டனையை இந்திய அரசு அமைப்பு கொடுக்காது. அதற்கான அருகதையோ யோக்கியதையோ அதற்குக் கிடையாது. கோவை குண்டு வெடிப்புக்காக முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கிய அதே நீதித்துறை, அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்த நவம்பர் கலவரத்திற்குக் காரணமான பார்ப்பனத் பயங்கரவாதிகளுக் கும், அவர்களுக்கு இதே குஜராத் பாணியில் எங்கேயெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கேயெல்லாம் அவர்களின் கடைகள் இருக்கின்றன என்பதை காட்டிக் கொடுத்து உதவிய காவல் துறையையும் ஏன் தண்டிக்கவில்லை?

அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். தண்டிக்கவும் முடியாது. இந்திய ஆளும் வர்கம் என்பது பார்ப்பன பயங்கரவாதிகளுக் குக் கொட்டை தாங்கும் வர்க்கம் என்பதைக் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தியிருக்க ிறது நேற்றைய தெகல்கா வீடியோக்கள்.

ஒரே நம்பிக்கை மக்கள் தான்! உழைக்கும் மக்கள் தான் இவர்களுக்கான தண்டனையை, இவர்களுக்கான தீர்ப்பை வழங்குவார்கள். இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். அதில் முதல் கல்லை நக்சல்பாரிகளே வீசுவார்கள்!

நன்றி: கார்கி KARGIPAGES
Quote | Report to administrator
அபூ ஸாலிஹா
0 #15 அபூ ஸாலிஹா -0001-11-30 05:21
You-tube அல்லது பிற ஆன்லைன் வீடியோக்களை டவுன்லோட் செய்ய இன்னொரு எளிய வழி: -

www.realplayer.com/ சென்று அதில் தற்போது புதிதாய் தரப்படும் RealPlayer11BET A.exe எனும் ஃபைலை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து விட்டால் பிரச்னைகள் முடிந்தது.

அதன் பின் நீங்கள் ஆன்லைனின் காணும் எந்த ஒரு யூடியூப் வீடியோவின் மேற்புறம் மவுஸை நகர்த்தினாலே டவுன்லோட் செய்யும் ஆப்ஷன் தானாக வந்துவிடும்.

நன்றி!
Quote | Report to administrator
இப்னுஅமீர்
0 #16 இப்னுஅமீர் -0001-11-30 05:21
கொடுமையான குஜராத் இனச்சுத்திகரிப் பு நிகழ்வு பற்றிய வீடியோ பதிவில், அதனை மனித நேயமுள்ள அனைவரும் பதிவிறக்கி சேமிக்கும் டிப்ஸ் பற்றிய ஒரு அருமையான தகவலுக்கு நன்றி அபூ ஸாலிஹா!

YouTube இல் சில தரமான வீடியோக்களைக் கூட சில நாடுகள், அரசியல் நோக்கங்களினால் அதைத் தடை செய்திருக்கக்கூ டும். இத்தகையவர்கள் www.keepvid.com எனும் தளத்தினுள் சென்று அங்கேயுள்ள URL பகுதியில் வீடியோவின் முழு சுட்டியையும் இட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

and, Firefox பயன்பாட்டாளர்கள ுக்கான இன்னொரு டிப்ஸ் - Install the VideoDownloader Extension from Mozilla Addons website (addons.mozilla.org/.../2390 )- It downloads all embedded objects on a webpage including the video clips.

கவனிக்க வேண்டிய விஷயம் தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ கோப்பு .flv என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதனை ரியல்பிளேயர் உட்பட பலவற்றில் காண முடியும்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்