முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இந்திய செய்திகள்

 ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன்: பாஜக எம்.பி. பேச்சுவாரணாசி: வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன் என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் விஷ்வ இந்து பரிஷத்தின் விராத் இந்து சம்மேளனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவ்ரங்கஜீப் கியான்வாபி மசூதியை கட்டினார். இது எங்காவது நடந்துள்ளதா? இந்து சமாஜ் ஆட்கள் விஸ்வநாதரை தரிசிக்க செல்லும்போது எல்லாம் அந்த கியான்வாபி மசூதி நம்மை எரிச்சல் அடைய வைக்கிறது. அனுமதி கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர், கௌரி மற்றும் நந்தி சிலைகளை வைப்பேன்.

காசிக்கு அனைவரும் வரலாம். ஆனால் மக்கா, மதீனாவுக்கு முஸ்லீம்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இது இந்துத்துவத்தின் நூற்றாண்டு. இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் இந்துத்துவத்தின் நூற்றாண்டு நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் நமக்கு உபதேசம் செய்வதை விட்டுவிட்டு அவரது நாட்டில் உள்ள இன பிரச்சனையை கவனிக்கட்டும் என்றார்.

சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதற்கு பெயர் போனவர் யோகி ஆதித்யநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

- One India (10-02-2015)

Comments   

ராம்குமார்
0 #1 ராம்குமார் 2015-03-14 16:31
பெரும் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் ஒரு எம்.பியே இவ்வாறு சொல்கிறார் என்றால் மோடி அரசில் என்ன நடக்கிறது?

என் ஆட்சியில் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவேன் என்று ஒபாமாவுக்காக ஒரு ஸ்டேட்மெண்ட் விட்ட மோடியை நினைத்தால் வாயால் சிரிக்க முடியவில்லை.

மோடியின் ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு அவரின் எம்.பிக்களும் கூட்டாளிகளுமே காரணமாக இருப்பர்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்