முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இந்திய செய்திகள்

ஜ்-2015 (ஹிஜ்ரி 1436) குறித்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 2015 ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழக முஸ்லிம்கள், தமக்குரிய விண்ணப்பப் படிவங்களை எண்.13 (பழைய எண் 7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து இன்று (19-01-2015) முதல் பெற்றுக் கொள்ளலாம். (தொலைபேசி எண் 044-28227617)

இவ்விண்ணப்பங்களை இந்திய ஹஜ் குழுவின் பிரத்தியேகமான www.hajcommittee.com இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் தேதி 20-02-2015 ஆகும்.

படிவத்தைப் பூர்த்தி செய்யும் முறை உள்ளிட்ட ஹஜ் 2015 பற்றிய பல்வேறு விவரங்கள் இந்த இணைய தளத்தில் கிடைக்கும். (முழுமையான செயல் திட்டம் http://www.hajcommittee.com/Files/Circular/2015/circular_2015_01.pdf)

இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பவர்கள் தாமதமின்றி விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும் சமர்ப்பிக்கக் கோருகிறோம்.

- சத்தியமார்க்கம்.காம்

எவர்கள் அங்கு யாத்திரை செய்யச் சக்தியுடையவர்களாக உள்ளார்களோ, அப்படிப்பட்ட மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று அவ்) வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்.  (அல்குர்ஆன் 3:97)

கடமையான ஹஜ்ஜை விரைவாக நிறைவேற்றி விடுங்கள்! ஏனெனில், உங்களில் ஒருவருக்கு என்ன தடை நேரும் என்பதை அவர் அறியமாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அஹ்மத்)

 

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்