முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாழ்வியல்

"பாவ மன்னிப்பு" எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஷரஃபுத்தீன் உமரி.

"எவர் ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துஆச் செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது. இதுவும் நமக்கு ரமலானின் துஆக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:

 

"நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது 'ஆமீன்" என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர்.

இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர்(இறையருளை விட்டும்)தூரமாகட்டும்" என்றார்கள், நான் ஆமீன் என்றேன். 'உங்களைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர்(இறையருளை விட்டும்)தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன். 'தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று(அவர்களுக்கு சேவை செய்து)யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும்(இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் அவற்றை மன்னித்திடவே அல்லாஹ் விரும்புகிறான். அலட்சியமாகவோ அல்லது அறியாமையினாலோ ஒருவர் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோராமலேயே மரணித்து விட்டால், அவருடைய பாவங்கள் இறுதிநாள் வரை அழிக்கப்படாமல் நிலையாகப் பதிவு செய்யப்பட்டு விடும் ஆபத்து புரிகிறதா?

தமக்குத்தாமே (அநியாயம் செய்து) வரம்பு மீறிய என் அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்துவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன் என (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:53).

தவ்பாவைப் பற்றிய சத்தியமார்க்கம்.காம் தளப் பதிவையும் கட்டாயம் படித்துக் கொள்ளுங்கள் (www.satyamargam.com/250). அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் பெருகி வழியும் மாதமாகிய இந்த ரமளானில் நம்முடைய தவ்பா எனும் பாவமீட்சியை அவனிடம் அழுது கேட்போம். நிச்சயம் நாம் அனைவரும் பாவங்களிலிருந்து விலகுவதற்கு அவன் அருள் புரிவான், இன்ஷா அல்லாஹ்.

Comments   
SULTHAN SYED IBRAHIM
0 #1 SULTHAN SYED IBRAHIM 2012-08-07 14:42
masha allah
Quote | Report to administrator
Hidayathullah
+1 #2 Hidayathullah 2012-08-07 23:24
மாஷா அல்லாஹ், சிறப்பான உரையை வழங்கிய மெளலவிக்கு இறைவன் நற்கிருபை செய்வானாக!

அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் பெருகி வழியும் மாதமாகிய இந்த ரமளானில் நம்முடைய தவ்பா எனும் பாவமீட்சியை அவனிடம் அழுது கேட்போம். இன்ஷா அல்லாஹ்.
Quote | Report to administrator
வஹிதா
0 #3 வஹிதா 2012-08-08 02:44
நன்றி. பாவ மன்னிபு பற்றி நான் கொண்டிருந்த என்னுடய தவரான எண்ணம் இந்த வீடியோவை பார்த்து மாற்றி கொண்டேன்.

ஜசாகல்லா கைர்.
Quote | Report to administrator
அப்பாஸ்  மந்திரி  M
0 #4 அப்பாஸ் மந்திரி M 2012-08-08 19:15
அல்லாஹ் உங்கள் மீது அருட்செய்வானாக . மென்மேலும் உங்களுக்கு மார்க்கவிளக்கத் தை கொடுப்பானாக . ஆமீன்
Quote | Report to administrator
Shakeela parveen
0 #5 Shakeela parveen 2012-08-19 19:15
This speech increasing my TAkwah
May Allah bless you with more knowledge. Ameen
Quote | Report to administrator
Mohamed Ali jinnah
-1 #6 Mohamed Ali jinnah 2013-08-02 08:23
மாஷா அல்லாஹ், சிறப்பான உரையை வழங்கிய மெளலவிக்கு இறைவன் நற்கிருபை செய்வானாக!

அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் பெருகி வழியும் மாதமாகிய இந்த ரமளானில் நம்முடைய தவ்பா எனும் பாவமீட்சியை அவனிடம் அழுது கேட்போம். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் உங்கள் மீது அருட்செய்வானாக . மென்மேலும் உங்களுக்கு மார்க்கவிளக்கத் தை கொடுப்பானாக . ஆமீன்
Quote | Report to administrator
வஹிதா
0 #7 வஹிதா 2013-08-14 09:26
சிறப்பான உரையை நிகழ்த்திய மெளலவி ஷரஃபுத்தீன் உமரிக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

ஒரு சந்தேகம்.

இந்த உரையில் இஸ்திக்ஃபார் பாவமன்னிப்பு பற்றி நபி(ஸல்) அவர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், லைலத்துர் கத்ர் இது தான் என்று நான் "தெரிந்து கொண்டால்" என்ன ஓத வேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த ஹதீஸின் நிலை என்ன?

நபி(ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப்பட் டு விட்ட நிலையில், இன்று தான் லைலத்துர் கத்ர் இரவு என எப்படி அன்னை ஆயிஷா(ரலி) "தெரிந்து கொண்டார்கள்"?
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்