முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாழ்வியல்

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.  கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள்!!

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !


- சகோ. முஹம்மது அலாவுதீன்

Comments   
ummu hudhaifa
0 #1 ummu hudhaifa 2009-07-29 19:53
நல்ல சிந்தனை.ஆனால் குரான் வசனத்தைக்கொண்டு ம் நபிமொழியைக்கொண் டும் அதற்கு வலுசேர்த்துருந் தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .அழகாகவும் இருந்துருக்கும் .
Quote | Report to administrator
Rizvi
0 #2 Rizvi 2009-07-30 11:23
அச்சலாமுஅலைக்கு ம் , மிகவும் அருமையன சிந்தனை இன்ஷ அல்ல அனைவரும் யொசிக்கவென்டியது.
ஜசகல்ல கைரன்
Quote | Report to administrator
இராஜகிரியார்
0 #3 இராஜகிரியார் 2009-07-30 21:43
சொல்ல வந்த நற்சிந்தனையை தகுந்த உதாரணத்தோடு சொன்னது எல்லோருக்கும் மனதில் பதியும் படி உள்ளது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி...
Quote | Report to administrator
முனாஸ் சுலைமான்
0 #4 முனாஸ் சுலைமான் 2009-07-30 23:09
பாராட்டுக்கள் நல்ல திறமையான சிந்தனை தொடருங்கள் இறைவன் அருள் புரிவானாக!.
Quote | Report to administrator
Syed
0 #5 Syed 2009-08-01 06:04
உண்மையிலேயே எளிமையான முறையில் கூறப்பட்ட நல்ல சிந்தனைகள். தயவு செய்து இஒதே போன்ற ஆக்கங்களைத் தொடருங்கள்.

உம்மு ஹுதைஃபா கூறியது போன்று "குர்-ஆன்" மற்றும் "ஹதீஸ்களை" இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
Quote | Report to administrator
NoorjahanRahim
0 #6 NoorjahanRahim 2009-08-03 13:56
அஸ்ஸலாமு அலைக்கும், அருமையான ஆக்கம். எளிய நடை,உயர்ந்த படிப்பினை. சிப்பிக்குள் இருக்கும் முத்துப்போல் நல்ல சிந்தனைத்திறன் பெற்ற சகோதாரர் மேன்மேலும் இது போன்ற ஆக்கங்களை அளிக்க அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமின் , ஆமின், யாரப்பில் ஆலமின் !!!

நூர்ஜஹான் ரஹீம்.
Quote | Report to administrator
peacetrain
0 #7 peacetrain 2009-08-04 06:06
நல்ல சிந்தனை.ஆனால் குரான் வசனத்தைக்கொண்டு ம் நபிமொழியைக்கொண் டும் அதற்கு வலுசேர்த்துருந் தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .அழகாகவும் இருந்துருக்கும் .

peacetrain1.blogspot.com/
Quote | Report to administrator
Thaha sait
0 #8 Thaha sait 2009-08-05 13:55
இது போன்று சிந்தனைக்குரிய விஷயங்கள் நிறைய வெளி வர வேண்டும். சுயநலத்துடன் இருப்பவர்களுக்க ுச் சிறந்ததொரு பாடம்.
Quote | Report to administrator
abdul azeez
0 #9 abdul azeez 2009-08-06 03:06
// உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.//

எனும் போது குடித்துவிடலாம் . தவறில்லை பிறகு அந்த இடத்தில மினரல் வாட்டர் ஒரு டஜன் கூட வாங்கி வைக்க முடியும்.

மா சலாம்.
அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
JAINUL_HUSAIN
0 #10 JAINUL_HUSAIN 2010-02-22 21:30
நல்ல சிந்தனை.ஆனால் குரான் வசனத்தைக்கொண்டு ம் நபிமொழியைக்கொண் டும் அதற்கு வலுசேர்த்துருந் தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .அழகாகவும் இருந்துருக்கும்
Quote | Report to administrator
HALEEM
0 #11 HALEEM 2010-08-08 20:32
VERY GOOD
Quote | Report to administrator
sarthaj begam j.k.
0 #12 sarthaj begam j.k. 2010-12-19 15:54
realy superb nala sinthanaiyai thanthatharku
mikka nandri


thaj
Quote | Report to administrator
¹š©Í
0 #13 ¹š©Í 2011-02-11 14:41
மாஷா அல்லாஹ் நல்ல சிந்தனை
Quote | Report to administrator
மோகன்
0 #14 மோகன் 2011-06-29 16:40
வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு நல்ல கருத்துக்கள் சொல்லுபவன் நீண்டகாலம் வாழவேண்டும் இறை பணியே மேலான பணி என நருபித்துள்ளீர் கள்.


தொடர்க உமது சேவை
Quote | Report to administrator
B.rthan
0 #15 B.rthan 2011-08-05 11:05
i like this.
Quote | Report to administrator
PKS
0 #16 PKS 2012-09-09 08:26
Nalla kathaiyodu koodiya karuththu
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்