முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பிற மதத்தினருக்காக

மேலும் இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?  இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன?

பதில்:

786  என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை.  "நியூமராலஜி" என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் "நியூமராலஜி" அறிந்த  முஸ்லிம்களில் சிலர் அரபு எழுத்துக்களுக்கும் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உதாரணத்திற்கு அரபு எடுத்துக்களான அலீஃப் ற்கு 1, பே விற்கு 2, ஜீம் மிற்கு 3 தால் லிற்கு 4.

முஸ்லிம்கள் எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் பொழுது தன்னைப் படைத்த இறைவனின் பெயர் கொண்டு("பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்") ஆரம்பிக்க வேண்டும் என இஸ்லாம் கற்றுத்தருகிறது. இதனை தமிழில்  "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்" என்று பொருள் கொள்ளலாம். இதனை நியூமராலஜி முறைப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் எண்களைக் கொடுத்து அதனை கூட்டினால்  786 என்று வரும். இதனைத் தான் சில முஸ்லிம்கள் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று கூறுவதாக நினைத்துக் கொண்டு  786-ஐ  பயன்படுத்தலாயினர்.

இஸ்லாமிய அடிப்படையில் இது தவறான ஒரு செயலாகும். முஸ்லிம்கள் எந்த ஓர் செயலைச் செய்வதற்கும் முன்னுதாரணத்தை குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தே அடிப்படையில் இவ்வுலகத்திலுள்ள எல்லாப்பொருள்களுக்கும் எண்களை கொடுக்க முடியும். அது போலவே ஒவ்வொருவருடைய பெயரையும் இவ்வாறு எண்களாக மாற்ற முடியும். உதாரணமாக கண்ணதாசன் என்று பெயருள்ள ஒருவரை ஒரு பேச்சுக்காக 431 என்று அழைத்தால் எவ்வாறு இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காவல் நிலையங்களில் காவலரை மேலதிகாரிகள் இவ்வாறு எண்களைக் கொண்டு அழைப்பதை காணலாம் (இது நியூமராலஜி முறைப்படி வைத்தல்லாது அவர்களின் பணியாளர் எண்களையே அடையாளத்திற்குப் பயன்படுத்துகின்றனர்). அதே எண்ணைக் கொண்டு மற்றவர்களும் அழைப்பதை எந்தக் காவலரும் விரும்ப மாட்டார். அதனை அவர் மரியாதைக் குறைவாகத் தான் கருதுவார்.

இஸ்லாம் தனி மனிதருடைய மரியாதையையும் கண்ணியத்தையும் மதிக்கும் விசயத்தில் மிகுந்த கவனம் செலுத்துகின்றது. எனவே இஸ்லாத்தைச் சரியாக அறிந்த எந்த முஸ்லிமும் மற்றவரை இது போன்று எண்களைக் கொண்டு அழைக்கத் துணிய மாட்டார் .

அதுபோலவே "அஸ்ஸலாமு அலைக்கும்" என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அவர் முகமன் கூறியதாகவோஒருவர் குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதில் வரும் வசனங்களின் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினாலோ அவர் குர்ஆனை ஓதியவர் என்றோ எந்த முஸ்லிமும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.  அது போல் தான் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்ற சொல்லும்.  786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று சொன்னவராகவும் எழுதியவராகவும் ஆக மாட்டார் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஒவ்வொரு செயலுக்கும் முன்மாதிரி இஸ்லாத்தில் இருக்கும் போது இஸ்லாம் காட்டித் தந்த முறையில் முஸ்லிம்கள் வாழ்வது இன்றியமையாததாகும்.

முஸ்லிமல்லாத  ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று தான் எழுதியுள்ளார்கள். (பார்க்க அல்குர்ஆன் 27.30)

நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்றே எழுதியுள்ளனர். (பார்க்க புகாரி 7,2941,4553)

எனவே 786 என்ற அடையாளம் பயன் படுத்துவதற்கு இஸ்லாத்தில் எந்த ஓர் ஆதாரமும் இல்லை என்பதையும், அதனைப் பயன்படுத்துவது இஸ்லாத்திற்கு முரணான செயல் என்பதையும் இதிலிருந்து விளங்கலாம்.

Comments   

sadiq N
0 #1 sadiq N 2010-05-22 11:54
naal aalamaana answer.
Quote | Report to administrator
shara
0 #2 shara 2010-10-03 21:19
A GREAT ANSWER......... ............ BUT MOST OF THE MUSLIMS R USING THIS ESPECIALLY WHEN THEY WRITE LETTERS, HAVE TO GIVE UP THIS ACTIVITY.....................
ALLAH KNOWS EVERYTHING BETTER THAN US
:-)
Quote | Report to administrator
madhan
0 #3 madhan 2010-11-26 17:13
இதை ஏன் அனைத்து முஸ்லீம் களும் அறிய வில்லை??
Quote | Report to administrator
akbar
-1 #4 akbar 2010-12-04 13:16
முகம்மது பின் அப்துல் வஹாப் கொள்கையை பின்பற்றுபவர்கள ் தவ்ஹீத் என்ற பெயரில் உலாவந்து இஸ்லாத்தை இஸ்லாமியரை எவ்வளவு கொச்சை படுத்த முடியுமோ அவ்வளவு கொச்சை படுத்துகிறார்கள ் உதாரனம் 786 எந்த இஸ்லாமியனும் பெயரை என்னை கொன்டு அழைப்பது இல்லை அது போல குரானை சூராவை ஓதும் போது நம்பரை சொல்லி ஓதுவது இல்லை இவர்களாகவே கற்பனையாகவே கருத்தை சொல்லி மக்களை குழப்பி வருகிறார்கள்
Quote | Report to administrator
S.S.K
+1 #5 S.S.K 2010-12-04 19:08
சகோதரர் அக்பர்
தங்கள் கருத்துக்கு மாற்றமாக ஒருவர் கருத்துக் கூறினால் உடனே அவர்களை வஹ்ஹாபி என்று பூச்சாண்டி காட்டுவது முஹம்மத் மின் அப்துல் வஹ்ஹாபுடைய கொள்கையை பின் பற்றுவதாக கூறுவது, தவ்ஹீத் எனும் பெயரில் உலா வருவதாக கூறுவது......
இதை இன்னுமா கைவிட மனம் வரவில்லை தங்களுக்கும் தங்களை போன்றவர்களுக்கு ம்.

இந்த விளக்கத்தில் இஸ்லாத்தையோ முஸ்லிம்களையோ எங்கு கொச்சை படுத்தியுள்ளார் கள்.எது தவறோ நபி வழியில் ஆதாரமில்லாததோ அதை கைவிட சொல்வதில் என்ன தவறு காண முடியும். .
.இப்போக்கை கைவிட்டு தூய்மையான அறிவு பூர்வமான இஸ்லாத்தை நபிவழியில் பின்பற்றுங்கள் மேலும் மக்களுக்கு அறிமுகப் படுத்துங்கள் அதுவே தங்களுக்கும் நல்லது.
Quote | Report to administrator
ABDULLAH M
0 #6 ABDULLAH M 2010-12-05 09:08
ALHAMDULILLAH

Nalla aalamaana answer.

// மேலும் ஒவ்வொரு செயலுக்கும் முன்மாதிரி இஸ்லாத்தில் இருக்கும் போது இஸ்லாம் காட்டித் தந்த முறையில் முஸ்லிம்கள் வாழ்வது இன்றியமையாததாகு ம்.

முஸ்லிமல்லாத ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று தான் எழுதியுள்ளார்கள ். (பார்க்க அல்குர்ஆன் 27.30)

நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்றே எழுதியுள்ளனர். (பார்க்க புகாரி 7,2941,4553)

எனவே 786 என்ற அடையாளம் பயன் படுத்துவதற்கு இஸ்லாத்தில் எந்த ஓர் ஆதாரமும் இல்லை என்பதையும், அதனைப் பயன்படுத்துவது இஸ்லாத்திற்கு முரணான செயல் என்பதையும் இதிலிருந்து விளங்கலாம் //.
Quote | Report to administrator
kannan
-1 #7 kannan 2013-02-12 21:01
எனக்கு தமிழில் குர்ஆன் படிக்கவேண்டும் என மிகுந்த ஆர்வம் உள்ளது. தயவுசெய்து சிறந்த தமிழ் விளக்கத்துடன் கூடிய ஒரு புத்தகம் ஒன்று அனுப்புங்களேன்
Quote | Report to administrator
Muhammad M
+1 #8 Muhammad M 2013-02-13 00:23
Br Kannan

தமிழில் குர்ஆன் விளக்கத்துடன் படிக்க : www.tamililquran.com/.../
Quote | Report to administrator
Muhammad M
0 #9 Muhammad M 2013-02-13 03:13
Br Kannan

தமிழில் குர்ஆன் விளக்கத்துடன் படிக்க www.tamililquran.com/.../

தமிழில் குர்ஆன் விளக்க AUDIO www.tamililquran.com/.../
Quote | Report to administrator
kannan
0 #10 kannan 2013-02-14 23:38
மிகவும் நன்றி, உதவி செய்த அனைவருக்கும்..அ ருமையான இணையதளம்
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்