முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பிற மதத்தினருக்காக

குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே துல்லியமாக அறிவான்!ஐயம்: குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா? என் கேள்வி என்னவெனில் இது உண்மை எனில் சிசேரியன் வகை டெலிவரிகளில், "இன்ன வாரத்தில் இன்ன நாளில் இன்ன நேரத்தில் வாருங்கள். குழந்தையோடு செல்லுங்கள்" என்று டாக்டர்கள் கூறி அதன்படி குழந்தையையும் பெற்றுக்கொண்டு செல்கிறார்கள். இது முரண்பாடு தானே? (மின்னஞ்சல் வழியாக சகோதரர் வேணுகோபாலன்)

தெளிவு: அன்பு சகோதரர் வேணுகோபாலன் அவர்களே!

உங்களது இந்தக் கேள்வி, தங்களால் சத்தியத்தை அறிய, சந்தேக நிவர்த்திக்காக தெளிவு பெற எழுப்பப்பட்ட ஒரு கேள்வி எனும் அடிப்படையில் இதை நாம் அணுகுவதோடு உங்களுக்கு எங்களது பாராட்டுகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம்.

" ... அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதில்லை; பிரசவிப்பதுமில்லை ..." (அல்குர்ஆன் 35:11).

"நிச்சயமாக மறுமை பற்றிய முற்றான அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன்தான் (சூல்கொண்ட மேகத்திலிருந்து) மழையைப் பொழிவிப்பவன். மேலும் கருவறையில் உள்ளவற்றை அறிபவனும் அவனே ..." (அல்குர்ஆன் 31:34).

"ஒவ்வொரு பெண்ணும் (தன் கருவறையில்) சுமந்து கொண்டிருப்பதையும் அவை சுருங்கிக் குறைவதையும் விரிந்து கொடுப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் தீர்மானிக்கப் பட்ட அளவு இருக்கின்றது" (அல்குர்ஆன் 13:8).

"மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி உங்களுக்கு ஐயமிருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்!) நாம் நிச்சயமாக உங்களை (முதன் முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், அடுத்த கட்டத்தில் அலக்கிலிருந்தும், அதையடுத்து அரைகுறைத் தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்). மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறையில் தங்கச் செய்து, பின்பு குழந்தையாக வெளிப்படுத்துகிறோம் ..." (அல்குர்ஆன் 22:5)

போன்ற இறைவசனங்கள் உங்களுடைய ஐயத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறோம்.

முதலாவதாக,

ஒரு பெண் கருத்தரித்தால் அப்பெண்ணுக்கு இயல்பாகக் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான காலக்கெடு என்பது அப்பெண் கருத்தரித்ததிலிருந்து 9 மாதங்கள் 9 நாட்கள் எனப் பொதுவாகக் கூறுவர். இக்கணக்கு அப்பெண்ணுக்குக் கடைசியாக ஏற்பட்ட மாதவிலக்கை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கணக்கைச் சொல்வதற்கு ஒரு மகப்பேறு மருத்துவர்கூட இப்போது தேவையில்லை.
http://www.babycenter.com/pregnancy-due-date-calculator என்ற தளத்தில் கடைசியாக மாதவிலக்கு ஏற்பட்ட நாளைக் குறிப்பிட்டால் குழந்தை பிறக்கப் போகும் தேதி, மாதம், ஆண்டு எல்லாம் சொல்லி விடும். அந்தக் கணக்குச் சரியாகவுமிருக்கும்; சற்றே முன்-பின்னும் இருக்கும்.

"கம்ப்யூட்டரே தெரிந்து கொண்டு சொல்லும்போது கடவுளுக்குத் தெரிந்தாலோ தெரியா விட்டாலோ நமக்கென்ன?" என்ற கேள்வி வரும்.

கம்ப்யூட்டரையும் அதற்கான மென்பொருளையும் உண்டாக்கியவன் மனிதன். அந்த மனிதனையே உண்டாக்கியவன் இறைவன் என்பது முஸ்லிம்கள் மட்டுமின்றி, கடவுளை நம்புகின்ற எல்லா ஆத்திகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

கம்ப்யூட்டருக்கும் மருத்துவருக்கும் ஒரு பெண் கருவடைவதற்கு முன்னர், இன்ன நாளில், இன்ன நேரத்தில், இன்ன இனத்தில், இன்ன இடத்தில், இன்ன வகையில் குழந்தை பெறுவாள் என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால், இறைவனுக்கு அவையனைத்தும் முதல் மனிதனைப் படைக்கும்போதே அவனுடைய எத்தனையாவது தலைமுறையில் இந்தப் பெண் பிறந்து எத்தனை பிள்ளகளை எவ்வாறு, எப்போது பெற்றெடுப்பாள் என்பது துல்லியமாகத் தெரியும் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கையாகும். துல்லியம்தான் இங்குத் தலையாய பேசுபொருள்.

குறிப்பாக, முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு, கி.பி எழுநூறுகளின் தொடக்கத்தில் அருளப்பட்டு, அவர்கள் இறைவேதம் என்று நம்புகின்ற குர்ஆன் அடிப்படையாகத் திகழ்கின்றது. ஒரு குழந்தை கருவுருவதைப் பற்றி அது கூறுவதைக் கேட்போம்:

"(பெண்ணின் சினைமுட்டையோடு) கலவையான விந்திலிருந்து நாமே மனிதனைப் படைத்தோம் ..." (அல்குர்ஆன் 76:2).

முதன் முதலாகக் கருவுலகைப் பற்றி அறிவியல் உலகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி.1615இல்தான். ஆனால், "பெண்ணுடைய சினை முட்டையோடு ஆணுடைய விந்து கலந்து குழந்தை உருவாகிறது" என்று குர்ஆன் அறிவிப்பது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் என்பது வியக்க வைக்கும் செய்தியன்றோ!

There are a multitude of statements in the Quran on the subject of human reproduction which constitute a challenge to the embryologist seeking a human explanation for them. It was only after the birth of the basic sciences which contributed to our knowledge of biology and the invention of the microscope, that humans were able to understand the depth of those Quranic statements. It was impossible for a human being living in the early seventh century to have accurately expressed such ideas. There is nothing to indicate that people in the Middle-East and Arabia knew anything more about this subject than people living in Europe or anywhere else.

முழுதும் படிக்க
http://www.sultan.org/articles/QScience.html


குர்ஆன் கூறுவதைக் கேட்ட விஞ்ஞானிகளின் வியப்பு ஆவணமாக்கப் பட்டுள்ளது.
http://www.youtube.com/watch?v=XaSfE1DW2-w

http://www.slideshare.net/moralsandethics/scientists-comments-on-h-quran


இரண்டாவதாக,

உங்களுடைய கேள்வியான இயல்புக்கு மாற்றமாக நடைபெறும் சிஸேரியன் விஷயத்துக்கு வருவோம்.

கருவைச் சுமக்கும் தாயின் உயிருக்கோ கருவிலிருக்கும் மகவின் உயிருக்கோ ஆபத்து ஏற்படும் என்ற நிலை ஏற்படும்போது அந்த ஆபத்தைக் களைவதற்கான கடைசியாகக் கையாளும் முயற்சியாகத்தான் சிஸேரியன் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

நாளடைவில், அது நாள்-நட்சத்திரம் மீது மோகம் கொண்ட சிலரால், இயல்பான பேறுநாளைக்கு முன்னதாகத் தேதி நிர்ணயிக்கப்பட்டுச் செயற்கையாக சிஸேரியன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது.

ஆனால், எல்லா சிஸேரியன்களும் பெற்றோர் தேர்ந்தெடுக்கும் நேரத்திலோ மருத்துவர்கள் நிர்ணயிக்கும் நேரத்திலோ துல்லியமாக நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை. காரணம், மகப்பேற்றில் கடைசி நேர இடைஞ்சல்கள் பல உள்ளன. நீங்கள் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் இதை உறுதி செய்து கொள்ளலாம்.

துல்லியத்தில் மனிதர் தோற்பர்; இறைவன் தோற்பதில்லை. ஏனெனில், மனிதனின் அறிவு வரையறுக்கப் பட்டது; இறைவனின் அறிவுக்கு வரையறை இல்லை.

அவனே முற்றாய் அறிந்தவன்.

மேற்கொண்டு ஐயங்களிருப்பின் தவறாமல் எழுதுங்கள்.

Comments   

ஜி என் பரங்கிப்பேட்டை
0 #1 ஜி என் பரங்கிப்பேட்டை -0001-11-30 05:21
ஐந்து விஷயங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்ற கருத்துக்கு ஆதாரமாக 31.34 வது வசனத்தையே அனைவரும் ஆதாரமாகக் கொள்கின்றனர். கியாமத், மழை, கருவறை, நாளை மனிதன் பெறுபவை, மரணம் இந்த ஐந்தையும் இறைவன் மட்டுமே அறிவான் என்ற கருத்தை முஸ்லிம்கள் வைக்கும் போது அதில் பிரதானமாக விவாதிக்கப்படுவ து கர்ப்பத்தைப் பற்றிதான்.

வளர்ந்துள்ள விஞ்ஞான நுட்பத்தில் X Y குரோமோஸோம்கள ் உட்பட கண்டறியப்பட்டு கர்ப்பம் ஆணா - பெண்ணா என்று தீர்மானிக்கப்பட ுவதையெல்லாம் கண்டுவிட்ட பிறகு அதை இறைவன் மட்டும் தான் அறிவான் என்ற வாதம் அடிப்பட்டுப் போகின்றது - குர்ஆன் சில கூற்றுகள் இந்த காலத்துக்கு பொருந்தவில்லை என்றும் பேசப்படுகின்றது .

உண்மையில் அந்த வசனம் கர்ப்பம் தரிப்பதைப் பற்றி பேசவேயில்லை. குறிப்பிட்ட வசனத்தில் 'மன் ஃபில் அர்ஹாம்' என்று வரவில்லை. அதாவது கருவறையில் யார் இருக்கிறார்கள் என்று இறைவன் அறிவான் என்று வரவில்லை. கர்ப்பம் தரித்தவுடன் உள்ள கருவைப் பற்றி அந்த வசனம் பேசவேயில்லை. மாறாக 'மா பில் அர்ஹாம்' 'கருவறையைப் பற்றி அவன் அறிவான்' என்றே வந்துள்ளது.

அதாவது ஒரு பெண்ணின் கருவறை எத்துனைக் குழந்தைகளை சுமக்கும்? எந்தெந்த நேரத்தில் கருதரிக்கும்? அது வளர்ந்து வெளியில் வருமா..? சிதைந்து விடுமா..? போன்ற விபரங்களை அவன் (மட்டும்) அறிவான் என்ற செய்தியையே அந்த வசனம் கூறுகின்றது. அரபு வார்த்தையின் அர்த்தம் புரியாததால் சிறு குழப்பம் அங்கு ஏற்படுகின்றதே தவிர இறைவன் சொன்ன வார்த்தை பொருந்தாமல் போகவில்லை.
Quote | Report to administrator
haneefm
0 #2 haneefm -0001-11-30 05:21
وَلاَ تَلْبِسُواْ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُواْ الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (2:42)///

அன்பு சகோதரர் வேணுகோபாலன்
அவர்களுக்கு இன்னும் பல கேள்விகளை இஸ்லாத்தின்லாலு ம் திருகுர்ஆன் வழியிலும் நிரைய கேள்விகளை கேட்டு நல்வழியில் செல்ல வல்லமையிடைய அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும் ஆமின்
ஹனீஃப்-குவைத்
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #3 சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
அன்புச் சகோதரர் ஜி என்,

'வ யஃலமு மா ஃபில் அர்ஹாம்' என்ற வசனத்திற்கு, நீங்கள் எழுதியிருக்கும் , 'கருவறையைப் பற்றி அவன் அறிவான்' என்று நேரடியாகப் பொருள் கொள்ளவியலாது. 'மன்' என்ற சொல் உயர்திணையையும் 'மா' என்ற சொல் அஃறிணையையும் குறிக்கப் பயன் படுத்தப் படும் சொற்களாகும்.

எனவே, கட்டுரையில் கண்டுள்ள '... மேலும் கருவறையில் உள்ளவற்றை அறிபவனும் அவனே' என்பது 31:34 வசனத்தின் அந்த வரிகளுக்குச் சரியான தமிழாக்கமாகும்.

//உண்மையில் அந்த வசனம் கர்ப்பம் தரிப்பதைப் பற்றி பேசவேயில்லை// என்று எழுதியிருக்கின் றீர்கள். அவ்வாறு இங்கு நாம் நிறுவ முயலவில்லை. கருவுருவதை விளக்குவது இங்கு முதன்மை நோக்கமில்லை.

எனினும், நீங்கள் கூறியுள்ள கருத்துகள், 'இறைவனுக்கு அவையனைத்தும் முதல் மனிதனைப் படைக்கும்போதே அவனுடைய எத்தனையாவது தலைமுறையில் இந்தப் பெண் பிறந்து எத்தனை பிள்ளகளை எவ்வாறு, எப்போது பெற்றெடுப்பாள் என்பது துல்லியமாகத் தெரியும்' என இங்குத் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.

பிழை என்று நீங்கள் கருதுபவற்றைத் தகுந்த சான்றுகளுடன் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.
Quote | Report to administrator
Fahmita
0 #4 Fahmita -0001-11-30 05:21
//எல்லா சிஸேரியன்களும் பெற்றோர் தேர்ந்தெடுக்கும ் நேரத்திலோ மருத்துவர்கள் நிர்ணயிக்கும் நேரத்திலோ துல்லியமாக நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை.//

Very true... My second child was born by Caesarian section..

The doctor (Gynec) quoted some health reasons and fixed the time of delivery at 9:30 AM. All the prerequisites had been carried out. During last half hour, I wanted to clarify a few doubts and asked a few questions with the Gynec. She burst into anger thinking that my questions were an insult to her judgement.

She challenged to check with any doctor around but told firmly to us that if she allowed to dischage on our own accord, she will not entertain us again, however serious the condition be..

Alhamdulillaah, we managed to get our daughter born healthily eventhough by C-section but after about 12 hours from the original stipulated time by the first doctor.

Only Allah knows the EXACT birth time of the child.

Jazakkallah Khair
Quote | Report to administrator
மும்பைகர்
0 #5 மும்பைகர் -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே

மேற்கண்ட 31 : 34 வசனத்திற்கு பதில் அளித்த டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ''கருவரையில் உள்ளதையும் அவனே அறிவான்'' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்..

சில மொழிபெயர்ப்பாளர ்கள் இது கருவரையில் உள்ள குழந்தை ஆண் பாலா பெண்பாலா என்று இறைவனே அறிவான் என்று மொழிபெயர்த்துள் ளனர் அதனால் இது முரண்பாடு போல் தோன்றுகிறது.

ஆனால் இது கருவறையில் உள்ள குழந்தையின் பண்பையும் குணத்தையும் அதாவது அது வளர்ந்து பிறந்த பின்னர் நல்லதாக வாழுமா அல்லது தீயதாக வாழுமா (அதனால் பலன்கள் உண்டா, கேடுகள் உண்டா) போன்ற குணாதசியங்களை குறித்து கூறப்படுவதாக கருதினால் இதில் முரண்பாடு இல்லை என்று பதிலளித்தார் என்பதையும் இங்கு கவனத்தில் கொண்டுவருகிறேன் .
Quote | Report to administrator
அப்துல்லாஹ் M
0 #6 அப்துல்லாஹ் M -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே

//குழந்தைபிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா?//

//Alhamdulillaah, we managed to get our daughter born healthily eventhough by C-section but after about 12 hours from the original stipulated time by the first doctor.

Only Allah knows the EXACT birth time of the child.//

ஆக குழந்தை பிறக்கும் நேரம் உட்பட இப்பேரண்டத்தில் உள்ள அனைத்தையும்(துல ்லியமாக) அதை படைத்து போஷித்து நிர்வகிக்கும் அல்லாஹ் ஒருவனே அறிவான், என்பது இஸ்லாம் எனும் இயற்கையான இறைக்கோட்பாட்டி ன் முக்கிய அடிப்படையாகும்.

சகோதரர் வேணுகோபால் அவர்கள் இந்த கேள்வியை இந்த தேதியில் கேட்பார் அதற்கு சத்தியமார்க்கம் சார்பில் இந்த தேதியில் பதில் வரும் அதற்கு இந்த நேரத்தில் பின்னூட்டம் வரும் என்பது உட்பட அனைத்தும் அறிந்தவன அறிபவன் நம் அனைவரின் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவன் என்பதில் ஏதும் சந்தேகமில்லை.

அன்புடன்
அப்துல்லாஹ் M
Quote | Report to administrator
முஸ்லிம்
0 #7 முஸ்லிம் -0001-11-30 05:21
திருமறை 31:34 வசனத் தொடரைச் சிந்தித்தால் 'மா பில் அர்ஹாம்' - ''கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான்'' என்று பொருள் கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது.

நபிமொழியும் இப்பொருளையே உறுதிப்படுத்துக ின்றது.

''அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், 'யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது 'அலக்' (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது' என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்க ும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அனஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி, 318)

(இன்னும் இதே கருத்தில் விஞ்ஞான ரீதியில் விரிவாக, ''குழந்தை தாயின் சாயலில் ஏன் பிறக்கிறது? என்பதன் விளக்கமாகவும் மேலும் சில அறிவிப்புகள் உள்ளன விரிவஞ்சி இங்கு எழுதவில்லை)

ஒரு துளி விந்திலிருந்து உருவாகும் ஒரு குழந்தை அது உருவாகி, பிறந்து வளர்ந்து, மரணிக்கும் வரை அதன் நல்லது கெட்டது அனைத்து செயல்பாடுகளும் இறைவனால் நிர்ணயிக்கப்படு கின்றன. (இது வேறு எவருக்கும் சாத்தியமில்லை) சிந்திக்கும் போது இதையே, ''தான் நாளை சம்பாதிக்க உள்ளதை எவரும் அறியமாட்டார்'' என்ற வசனத் தொடரும் உறுதிப்படுத்துக ின்றது.

கருவறையை அறிவதை விட கருவறையில் உள்ளதை அறிவது தான் பேராற்றல் என்பதற்கு பொருத்தமாகத் தோன்றுகிறது.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)
Quote | Report to administrator
kavianban KALAM, Adirampattinam
0 #8 kavianban KALAM, Adirampattinam -0001-11-30 05:21
I appreciate sister Fahmita's strong EEMAAN as well as her good style of English writing. Really I am so proud that our community's women are getting highly qualified education now-a-days. ALHAMDULILLAH. Moreover, her points are absolutely correct as I have heard the same miscalculation from doctor while my wife was delivering our first daughter. The doctor told that my wife would give birth the child on 15th August. But, my wife gave birth our daughter on 26th August. So, this is the truth that ALLAAH ONLY KNOWS all.
Quote | Report to administrator
abdul azeez
0 #9 abdul azeez -0001-11-30 05:21
மனிதர்களை அல்லாது பிற வகைக்கும் நாம் கரு என்கிறோம். உதாரணமாக முட்டை அதில் வெள்ளை பாகத்திற்கு வெள்ளைக்கரு நடுவில் உள்ளது மஞ்சள் கரு காரணம் அதுவும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் உள்ள ஒரு படைப்பாகும். அதிலிருந்து வெளிவருவது சேவலா ? அல்லது கோழியா ? என்பதையும் அல்லாவை தவிர யாரும் அறிய முடியாது. அது குஞ்சாக இருக்கும் பொழுது எல்லாம் ஒன்றாக தான் தெரியும் வளர்ந்த பிறகு தான் தலையில் பெரிய சிவப்பு கொண்டும் பெரிய வால் இறகோடும் சேவல் என்கிறோம். இன்னும் அதன் இன உற்ப்பத்தி உறுப்புகளெல்லாம ் மனிதர்களுக்கு அமைந்தது போல் இல்லை.நமக்கு வெளிப்படையாக இருப்பதைக்கொண்ட ு மருத்துவர்கள் இரு பாளர்களை சுலபமாக கண்டு பிடித்துவிடுகிற ார்கள். இன்னும் ஈ, கொசு, நுன்னுயிர்க்கிர ுமி, கடலில் வாழும் அனைத்து உயிரினங்களும் கரு கொள்கிறது. இவற்றுக்கெல்லாம ் எந்த மருத்துவர்களும் ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே போன்ற நூதனக்கருவிகள் கொண்டு பரிசோதித்து பார்ப்பது என்பது கனவு தான் காண முடியும். வாட்டர் ப்ரூப் ஸ்கேன் கருவிகள் எல்லாம் தயாரிக்கணும். இன்னும் அவைகளெல்லாம் எத்தனை நாள் சுமக்கும் பிறகு எப்பொழுது ஈன்றெடுக்கும்.வ ெளிவருவது ஆண் வர்க்கமா ? அல்லது பெண் வர்க்கமா ? அதில் ஊனம் உள்ளது எது ? இன்னும் இறந்து பிறப்பது எது ? என்பதும் அல்லாஹ் நன்கறிவான். மேலும் கீழ் காணும் வசனம் அனைத்து உயிரினத்திற்கும ் பொதுவாக தான் உள்ளது மனிதர்களை உட்கொண்டு.

// 'நிச்சயமாக மறுமை பற்றிய முற்றான அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன்தான் (சூல்கொண்ட மேகத்திலிருந்து ) மழையைப் பொழிவிப்பவன். மேலும் கருவறையில் உள்ளவற்றை அறிபவனும் அவனே ...' (அல்குர்ஆன் 31:34). //

இன்னும் கடல் குதிரை என்ற மீன் இனம் அது தன் குஞ்சுகளை வெளிப்படுத்தும் பொழுது ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் ஸ்ப்ரே செய்துவிடும் அதன் நேரம் துல்லியம் எல்லாம் வல்ல அல்லாஹ்வை தவிர யார் அறிவார்.

மனித இனங்களை மட்டும் வைத்து பிரசவ நேரத்தை எடை போடும் விசயத்தில் டாக்டர்கள் படாத பாடு என்றால் மேற்குறிப்பிட்ட உயிரினத்திற்கு என்ன செய்ய முடியும் ? அனைத்து முஸ்லிம்களுக்கு ம் அஸ்ஸலாமு அலைக்கும்
மா சலாம்.
அப்துல் அசீஸ்..
Quote | Report to administrator
M.Muhammad
0 #10 M.Muhammad -0001-11-30 05:21
ASSALAMU ALAIKKUM
DEAR ALL A RELATED NEWS ARTICLE :
Woman delivers baby on clinic floor
Publish Date: Tuesday,13 May, 2008, at 01:15 AM Doha TimeBy Arvind Nair

IF ALL is well that ends well is true, this is a happy story. Both the mother and the baby she delivered on the floor of a doctor's consultation room are doing well. But, had something gone wrong, it could have been a disaster.
Bibi Durra, a 26-year-old Pakistani, gave birth to a bony baby boy on Sunday evening in the gynecologist's consultation room.

What is more surprising is that the Women's Hospital allegedly sent her back less than an hour earlier, saying her baby was not due that day.

According to Mohamed Kalam, 32, the father of the baby, he had taken his full-term pregnant wife, who was in labour, to the emergency department of the Women's Hospital at around 4pm on Sunday. After an ultrasound scan she was sent back, an agitated Mohamed told Gulf Times.

Mohamed was told that it was not time yet. He was asked to bring his wife back the following day.

Mohamed told the hospital that his wife was in pain and that he couldn't possibly take her back home. Rather, he would take her to a private clinic if the hospital did not admit her.
According to Mohamed, the hospital personnel stuck to their stand and the his wife was eventually taken to a private lady gynecologist.
On reaching the clinic, the woman barged into the consultation room even though the doctor was attending to another patient, who happened to be a nurse.

'Before anybody could do anything, she delivered the baby,' the gynecologist, who did not want to be named, told Gulf Times yesterday. The woman couldn't reach the bed.

The young mother was helped by the doctor, the nurses of the clinic and the patient.
They immediately called an ambulance and transferred the mother and the baby, who weighed 'approximately 3.5kg' to the Women's Hospital. They will be discharged today.
The gynecologist, who earlier worked for 10 years at Doha Clinic, confirmed that the pregnancy was full-term.

'Though I have attended to a number of deliveries at Doha Clinic, this is the first such experience at my private clinic', said the amused doctor. 'It was totally unexpected'.

For Bibi Durra, who has been in Qatar for just a year, it is her fifth child. She and Mohamed, who belong to S R Bannu in North West Frontier Province, have two boys and two girls.
Mohamed has been working in Qatar for eight years.
Quote | Report to administrator
M.Muhammad
0 #11 M.Muhammad -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பர்களே இதே தொடர்பிலான ஒரு செய்தியிதழில் வந்த செய்தி கீழே :

தனியார் பிரசவ விடுதியின் தரையில் குழந்தை பிரசுவித்த பெண்மனி.
பதிவு தேதி : செவ்வாய் , 13 மே . 2008 நேரம் 01.15 தோஹா,

செய்தி : அர்விந்த் நாயர்.

நல்லவிதமாக முடிவுறும் அனைத்தும் நலம் என்பது உண்மையெனில், இது ஒரு நல்ல சந்தோஷமான விஷயம். ஏனெனில் தாயும் (பிரசவ ஆலோசகரின் அ றையின் தரையில் பிரசுவித்த குழந்தையும்) சேயும் நலமாக உள்ளார்கள்.ஆனால ் ஏதும் சிறிய தவறு நிகழ்ந்திருந்தா ல் மிகப்பெரிய ஆபத்தாக அது மாறியிருக்கலாம்.

பீபீ துர்ரா எனும் 26 வயது பாகிஸ்தானிய பெண்மணி ஞாயிரு மாலை பிரசவ மருத்துவ ஆலோசகரின் அறையின் தரையிலேயே ஒரு அழகான ஆண் குழந்தையை பிரசவித்தார்.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் பெண்கள் மருத்துவமனையிலி ருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்னரே இன்று குழந்தை பிரசவிக்க சாத்தியம் இல்லை என்று கூறி அவர்களை திருப்பியனுப்பியுள்ளனர்.

குழந்தையின் தந்தை முஹம்மத் கலாமின் (வயது 32 ) கூற்றுப்படி அவர் தனது நிறைமாத கர்பிணியான மனைவியை பிரசவ வேதனையோடு பெண்கள் மருத்தவமனையின் அவசர பிரசவப் பிரிவுக்கு சுமார் மாலை 4 மணியளவில் கொண்டு சென்றார். ஆனால் அல்ட்ரா ஸவுண்ட் ஸ்கேன் செய்தபின்னர் அவளை திருப்பியனுப்பி விட்டனர் என்று அவர் ஆவேசத்துடன் கூறினார்.

இன்னும் நேரம் ஆக வில்லை நாளை மீண்டும் அழைத்து வாருங்கள் என்று அவரிடம் கூறப்பட்டது.

முஹம்மத் தம் மனவி மிகுந்த வேதனையில் உள்ளார் அவரை வீடு அழைத்து செல்வது இயலாது வேறு தனியார் பிரசவ மருத்துவ மனைக்குதான் கொண்டு செல்ல நேரிடும் ஆகையால் மருத்தவமனையிலாவ து அனுமதிக்குமாரு கேட்டுக்கொண்டார ்.ஆயினும் மருத்துவமனையினர ் தமது கூற்றில் உறுதியாக இருந்ததால் அவர் தம் மனைவியுடன் இந்த தனியார் பெண் டாக்டருடைய பிரசவ மனைக்கு அழைத்து செல்ல நேர்ந்தது. இந்த மருத்துவ மனையை அடைந்ததும் அவள் நேரே இந்த பெண் டாக்டர் இருந்த அறைக்குள் வேதனையோடு விரைவாக சென்றார். டாக்டர் வேறு ஒரு நோயாளியை கவனித்து கொண்டிருந்தார் அவளும் ஒரு நர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரும் எதுவும் செய்யும் முன்னரே அவள் தமது குழந்தையை பிரசவித்தாள் என்று பேர் கூற விரும்பாத அனத பெண் டாக்டர் கல்ஃப் டைம்ஸ் பத்திரிக்கையாளர ்களிடம் தெரிவித்தார்.அந ்த பெண்ணை படுக்கைவரை கொண்டு செல்ல இயலுமுன்பே இது நிகழ்ந்து விட்டது.

அந்த இளம் பெண்ணிற்கு மருத்துவ மனையின் டாக்டர் மற்றும் நர்ஸ்கள் உதவினர்.

பின்னர் மருத்துவவாகனம் ( ஆம்புலென்ஸ்) வரவழைக்கப்பட்டு அவள் மீண்டும் பெண்கள் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். குழந்தை சுமார் 3.5 கிலோ எடையுடையதாக இருந்தது. அவர்கள் இன்று வீடு செல்வார்கள்.

அந்த பெண் டாக்டர் இது நிறை பிரசவம் தான் என்பதை உறுதி படுத்தினார், அவர் இதற்கு முன்பு 10 ஆண்டுகள் தோஹா கிளினிக்கில் பிரசவ டாக்டராக பணி புரிந்துள்ளார்.

நான் பத்து ஆண்டுகள் தோஹா கிளினிக்கில் பல பிரசவங்கள் பார்த்துள்ளேன் ஆயினும் இது எனது தனியார் மருத்துவமனையில் ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்படுத்திய சம்பவம் என்று அவர் கூறினார். இது சிறிதும் எதிர்பார்க்காத ஒன்று என்றும் அவர் கூறினார்.

பீபீ துர்ரா கத்தரில் வந்து ஒரு ஆண்டு தான் ஆகிறது, அவருக்கு இது ஐந்தாவது குழந்தையாகும். முஹம்மத் மற்றும் பீபீ துர்ரா தம்பதிகள் எஸ் ஆர் பன்னூ எனும் வட பிராந்திய மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இதற்கு முன்பு இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முஹம்மத் கடந்த எட்டு ஆண்டுகளாக கத்தரில் பணி புரிந்து வருகிறார்.
Quote | Report to administrator
ஜி என் பரங்கிப்பேட்டை
0 #12 ஜி என் பரங்கிப்பேட்டை -0001-11-30 05:21
அன்பின் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைத்தையும் இறைவன் அறிகிறான் என்பதற்கும், இறைவனைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

இறைவனைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள் என்பதில் கியாமத், மழை, கருவறை, மனிதன் நாளை அடைவது, மரணம் போன்றவை அடங்கும்.

இறைவனைத் தவிர வேறு யாரும் அறியமுடியாது எனும் போது 'கருவறையில் உள்ளவற்றை..' என்று மொழியாக்கம் செய்தால்.. (இந்தக் கருத்தைத்தான் சகோதரர் முஸ்லிமும் சரிகண்டுள்ளார் ஹதீஸ் துணையுடன்) அதாவது உயிரணுவின் மூலக்கூறுகள், அதன் நிமிடக்கணக்கான வளர்ச்சி, நிலைமாற்றங்கள் என்று 'கருவறையில் உள்ளவற்றை' லட்சக்கணக்கான விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் அறிந்து விடுகிறார்கள். இறைவன் மட்டுமே அறிவான், இறைவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்ற நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் 'கருவறையில் உள்ளவற்றை..' என்று மொழியாக்கம் செய்யும் போது 'உள்ளவற்றை' பிறரும் அறிந்து விடும் நிலை ஏற்படத்தான் செய்கின்றது.

'மா.ஃபில் அர்ஹாம்' என்பதற்கு 'கருவறையில் உள்ளவற்றை' என்று மொழி பெயர்க்கும் போது நிச்சயம் கர்ப்பம் தரித்த நிலையையே அது குறிக்கும். அனைத்தையும் அறிவது போன்று இதையும் இறைவன் அறிகிறான் என்ற கருத்தை நாம் முன் வைப்பதாக இருந்தால் 'கருவறையில் உள்ளவற்றை' என்று சொல்லி விட்டுப் போகலாம். இறைவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்ற இறைத் தன்மையை நிலைநாட்ட இந்த வசனத்தை முன் வைத்தால் 'கருவறையில் உள்ளவற்றை... என்ற மொழியாக்கம் சரியாகத் தெரியவில்லை. 'மாஃபில் என்ற அஃ.றிணையான வார்த்தையை சிந்திக்கும் போது அது இன்னும் நுணுக்கமான அறிதல்களை குறிக்கவே பயன்படுத்தப்பட் டுள்ளது.

கருவறையின் அறிதல் என்பது இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத ஒன்றாகும். கருவறையில் உள்ளவற்றை அறிதல் என்பது கொஞ்சம் விஞ்ஞானத்துக்கு ம் தெரியத்தான் செய்கின்றது.

(அல்லாஹ் மிக்க அறிந்தவன்)
Quote | Report to administrator
M.S,K.
0 #13 M.S,K. -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர்களே

//மேற்கண்ட 31 : 34 வசனத்திற்கு பதில் அளித்த டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ''கருவறையில் உள்ளதையும் அவனே அறிவான்'' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்ற ான்..

இது கருவறையில் உள்ள குழந்தையின் பண்பையும் குணத்தையும் அதாவது அது வளர்ந்து பிறந்த பின்னர் நல்லதாக வாழுமா அல்லது தீயதாக வாழுமா (அதனால் பலன்கள் உண்டா, கேடுகள் உண்டா) போன்ற குணாதசியங்களை குறித்து கூறப்படுவதாக கருதினால் இதில் முரண்பாடு இல்லை என்று பதிலளித்தார் என்பதையும் இங்கு கவனத்தில் கொண்டுவருகிறேன்.//

இதன் அடிப்படையில் கருவறையில் உள்ள குழந்தை நாளை நல்லவனாக அல்லது நல்லவளாக வாழ்வார்களா? தீயவனாக தீயவர்களாக வாழ்வார்களா என்பதை அல்லாஹ்வைத் தவிர எந்த விஞ்ஞானத்தாலும் கூற இயலாது என்பது பொருத்தமாக உள்ளது.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
Quote | Report to administrator
முஸ்லிம்
0 #14 முஸ்லிம் -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புச் சகோதரர் ஜீ.என்
''ஒவ்வொரு பெண்ணும் (கருவறையில்) சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும் , விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான்''. (திருமறை 13:8) அல்லாஹ் அறிந்ததை விஞ்ஞானமும் அறிந்து வைத்துள்ளதே.

''அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதில்லை, ஈன்றெடுப்பதுமில ்லை'' (திருமறை 35:11) இந்த வசனம் பெண் கருவுறுவதையும், பிரசவிப்பதையும் பிறர் அறியமாட்டார் என்ற கருத்தைத் தரவில்லையே.

(நமது கருத்துப்படி) கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான் என்பது மற்றவர்கள் அறியமாட்டார்கள் என்பதை மறுக்கவில்லையே.

அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்.

அவன் அறிகிறான்.

இரண்டு வாசகங்களுக்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. கருவறையில் உள்ள கருவையும், கருவின் உருமாற்றத்தையும ் அணுவணுவாக இன்றைய விஞ்ஞானம் அறிந்திருக்கிறத ு. நாளைய விஞ்ஞானம் இன்னும் முன்னேற்றமடையலா ம். ஆனால் எந்தக் காலத்திலும் எவரும் அறிய முடியாத, இறைவன் மட்டுமே அறிந்தது அந்தக் கருவின் விதி. என்றும் கொள்ளலாமே.

எழுதியதில் தவறு இருந்தால் மேலதிக விளக்கம் தரவும்.
Quote | Report to administrator
நல்லடியார்
0 #15 நல்லடியார் -0001-11-30 05:21
நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தி ல் கருவிலிருக்கும் குழந்தை பிறக்கும் நேரத்தைக் கணிக்க முடியும்போது, குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது முரண்பாடாகத் தெரிவதாகக் கேட்டிருக்கிறார ்.

திருக்குர்ஆன் வசனம் 31:34 இல் இறுதிநாள், மழை, கரு, நாளை, மரணிக்கும் இடம் குறித்தவை பேசப்படுகின்றன. நவீன அறிவியல் நுட்பத்தில் உலக இறுதிநாள் தவிர மற்ற அனைத்தையும் ஓரளவுக்குக் கணிக்கலாம் என்பது உண்மையே! அத்தகையக் கணிப்புகளின் துல்லியத் தன்மைக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

அதேசமயம், நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிகுந்தவன் என்றும் அதே (31:34 ) வசனத்தில் சொல்லப்பட்டுள்ள து. நுண்பெருக்கிகள் கண்டுபிடிக்கப்ப டும்வரை மனிதக் கருவைப் பற்றியத் தெளிவான ஆய்வு முடிவுகள் எதுவுமில்லை.குர ்ஆனுக்கு முற்பட்ட கிரேக்கத் தத்துவங்களில் முழுமையடைந்த மனிதத் தோற்றத்தின் மிகச்சிறிய வடிவமாகவே கருவும் இருப்பதாக நம்பப்பட்டது!

ஆனால், குர்ஆன் மட்டுமே எவ்வித உபகரணமுமின்றி மனிதக் கருவின் வெவ்வேறு படிநிலைகளை மிகத்துல்லியமாக ச் சொன்னது. ஏறத்தாழ 14 நூற்றாண்டுகளுக் குப் பின்னரே அறிவியல் ஆய்வுகளில் இவை கண்டு பிடிக்கப்பட்டன!

ஆக, கருவறை, கரு குறித்த துல்லியத்திலும் நுட்பறிவிலும் அல்லாஹ்வே இதுவரை விஞ்சி நிற்கிறான்! இனிமேலும்தான்!! !
Quote | Report to administrator
Tiravidan
0 #16 Tiravidan -0001-11-30 05:21
பீஜிங்: சீனாவை சேர்ந்த 92 வயது மூதாட்டி, இறந்துபோன சிசுவை 60 ஆண்டுகளாக தன் வயிற்றில் சுமந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள து. சீனாவின் ஹுவாங்கிலவோடன் பகுதியை சேர்ந்தவர் ஹுவாங் யிஜுன்; 92 வயது மூதாட்டி. இவர் 60 ஆண்டுகளுக்கு முன்,1948ல் கர்ப்பம் தரித்தார். அதன் பிறகு குழந்தை பிறக்கவே இல்லை. தொடர்ந்து உப்பிய வயிற்றுடனே வசித்து வந்தார் சமீபகாலமாக அவருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது.

பரிசோதனைக்காக டாக்டர்களிடம் சென்றார். அப்போது ஹுவாங்கின் கருப்பையில், இறந்த நிலையில் சிசு இருப்பதைப் பார்த்து டாக்டர்கள் அதிர்ந்தனர் அதை ஏன் அகற்றவில்லை?' என்று டாக்டர்கள் கேட்ட போது, ஹுவாங்
சொன்ன பதில் டாக்டர்களை மேலும் அதிர வைத்தது.
'கர்ப்பத்தில் இறந்த சிசுவை அகற்ற சென்ற போது, அதற்கு கட்டணமாக, 60 ஆண்டுக்கு முந்தைய மதிப்பில், 4,000 ரூபாய் கேட்டதாகவும், அவ்வளவு பெரிய தொகையை தன்னால் செலுத்த முடியாது என்பதால், அந்த முயற்சியை கைவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மீது இரக்கப்பட்ட டாக்டர்கள், இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்து, கருப்பையில் 60 ஆண்டுகளாக இறந்த நிலையில் இருந்த சிசுவின் உடலை அகற்றினர் தற்போது உடல் நிலை தேறி வருகிறார் ஹுவாங்.
Quote | Report to administrator
அஸ்கர்
0 #17 அஸ்கர் 2009-07-10 20:19
மனிதர்கள் துல்லியமாக கூறமுடியாது, இறைவனால் துல்லியமாக கூறமுடியும் என்று கூறுகிறீர்கள். மனிதர்கள் கூறுவது நமக்கு தெரிகிறது, இறைவன் எங்கே நம்மிடம் கூறுகின்றான். மேலும் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்று இக்காலத்தில் தெரிந்துவிடுகிற து. மேலும் மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களை மனிதனின் தேவைக்கேற்ப உயிராக்குகின்றன ர்
Quote | Report to administrator
abdul azeez
0 #18 abdul azeez 2009-07-11 02:29
அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து முஸ்லிம்களுக்கு ம்.
சகோதரர் அஸ்கர் அவர்கள் ஆக்கங்களின் வார்த்தைகளை நன்றாக படித்து பாருங்கள். இதில் கூட உங்களால் துல்லியமாக பார்க்க முடியாமல் போனதால். மனிதர்கள் தான் அதற்க்கு மேல் மனிதர்களுக்கும் துல்லியத்திற்கு ம் எந்த சம்பந்தமும் இல்லை என்பது நன்கு விளங்கும்.

// மனிதர்கள் துல்லியமாக கூறமுடியாது, இறைவனால் துல்லியமாக கூறமுடியும் என்று கூறுகிறீர்கள். மனிதர்கள் கூறுவது நமக்கு தெரிகிறது, இறைவன் எங்கே நம்மிடம் கூறுகின்றான். //

மேலும் கட்டுரையில் துல்லியமாக இறைவனுக்கு '' தெரியும் '' என்றுள்ளது. தவிர கூறமுடியும் என்று நீங்கலாக நினைத்து கொண்டது போல் கிடையாது.

அவ்வளவு துல்லிய கால அளவையும் ரப்புல் ஆலமீன் நமக்கு தெரியப் படுத்தியாகவேண்ட ும் என்ற நிர்பந்தமும் அவனுக்கு கிடையாது. அப்படியே கூறினாலும் அதனால் நமக்கு எந்த பயனும் கிடையாது வேனும் என்றால் பிறப்பு சான்றிதல் தான் அடித்து கொள்ளமுடியும். அதில் கூட துல்லிய நேரத்தை போட மாட்டோம்.

ஒரு முட்டையை எடுத்து தருகிறேன். நீங்கள் துல்லியம் அறிவிக்கும் என்று நம்புகின்ற நிபுணரிடம் கேட்டு சொல்லமுடியுமா ? அந்த முட்டையிலிருந்த ு சேவல் வருமா அல்லது பெட்டை வருமா ? என்றும் இன்னும் அந்த முட்டையின் மூலம் எத்தனை சந்ததிகள் வரும் அவைகள் எத்தனை முட்டைகள் மூலம் இனப்பெருக்கம் உருவாக்கும் எத்தனை முட்டைகள அழுகிவிடும் என்றெல்லாம் கணிக்க முடியுமா ? எவன் அவைகளைப் படைத்தானோ அவனுக்கு தான் தெரியும்.

மா சலாம்.
அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
அப்துல்லாஹ்
0 #19 அப்துல்லாஹ் 2009-07-11 19:57
அல்ஹம்துலில்லாஹ்.

அருமையான பதில்.

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.
Quote | Report to administrator
ziath rahiman
0 #20 ziath rahiman 2009-12-19 17:12
சலாம்." ... அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதில்லை; பிரசவிப்பதுமில் லை ..." (அல்குர்ஆன் 35:11).இந்த வசனத்திற்கு அல்லாஹுடைய பார்வையில் இருந்து ஏதும் தப்பாது என்ற பொருள்தானே வருகிறது.இதில் எங்கே முரண்பாடு உள்ளது.இதில் அல்லா அவனுடைய ஆற்றலை பற்றிதானே வருகிறது.ஒரு திருமணம் ஆகாத ஒரு பெண் எப்போது கருவுருவாள் என்பதை சொல்ல முடியுமா.அனால் அல்லாஹ் அவளுக்கு எப்போது திருமணம் ஆகும் என்பதையும்,அவள் எப்போது பிரசவிப்பாள் என்பதையும் முன்கூட்டியே அறிவான்.
Quote | Report to administrator
ibnu shah
0 #21 ibnu shah 2009-12-26 00:15
ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட தஃப்ஸீர் இப்னு கஸீரிலும்"மாஃபி ல் அர்ஹாம்"என்பதற் கு .....and knows that which is in the wombs என்று தான் சொல்லப்பட்டுள்ள து.பர்க்க:www.q uran4u.com/thaf siribnkathir/in dex.htm.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்